Saturday, January 22, 2011

தமிழ்மணம் நட்சத்திர வாரம்

இந்த வாரம் நட்சத்திரமாக என்னை தமிழ்மணம் அறிவித்துள்ளது. பதிவுலகத்துக்கு நான் வந்ததுக்கும், என் பதிவு பலரை சென்றடைந்ததுக்கும் தமிழ்மணத்தின் பங்கு முக்கியமானது. தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்கு உரிய செய்தி.பேரியல் பொருளாதாரம்(Macroeconomics) மற்றும் விவசாயம் பற்றிய செய்திகள் தமிழ் பதிவுகள் மூலமாக தமிழர்கள் பலரை சென்றடைய வேண்டும் என்ற ஆசையில் பதிவை ஆரம்பித்தேன். நாம் இன்று விவாதித்து கொண்டிருக்கும் அரசியல் சமூக பிரச்சனைகளின் ஆணிவேர் உலகளாவிய Money Supply,Debt Creation போன்ற பல macroeconomics(பேரியல் பொருளாதாரம்) சம்பந்தமான துறைகளில் உள்ளது. நம்மில் பெரும்பாலோனோர் உலக பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பின் அடிப்படையான macroeconomics(பேரியல் பொருளாதாரம்) பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புவது இல்லை. இதற்கு காரணம் அந்த துறை மிகவும் dryயாக இருப்பதோ அல்லது நம்மால் அது பற்றிய எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாததாலோ இருக்கலாம்.என் பதிவுகளில் ஓரளவு உலக பொருளாதார நிகழ்வுகள் பற்றி எழுத முயற்சி செய்து கொண்டு உள்ளேன்.

இந்தியா விவசாய நாடு என்றாலும் தகவல் தொழில்நுட்பத்தின் பயன் விவசாயிகளை சென்றடையவில்லை. அதனால் விவசாயம் சார்ந்த பதிவுகள் மிகவும் அறிதாகவே உள்ளது.இன்னும் சில வருடங்களில் இந்த நிலை மாறும் என்னும் நம்பிக்கை உள்ளது. விவசாய தொழில்நுட்பத்திற்கு ஒரு பதிவு ஆரம்பிக்கவேண்டும் என்ற ஆசை வெகு நாளாக இருந்தது. என் கல்லுரி(நான் விவசாய கல்லூரியில் படித்தவன்) தோழர்கள் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,ஆராய்ச்சி,வேளாண் தொழில் என பல துறைகளில் முக்கிய நிலைகளில் இருப்பதால் அனைவரையும் ஒன்றினைத்து மருதம் என்ற வேளாண் தொழில் நுட்பம் சார்ந்த பதிவை ஆரம்பித்தோம். ஆனால் அனைவராலும் வாரத்திற்கு சில நேரம் செலவு செய்து நல்ல பதிவுகளை தொடர்ந்து இட முடியவில்லை.உண்மையிலேயே விவசாயிகளை தகவல் தொழில்நுட்பம் சென்றடையும் போது பதிவுகளின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. அது வரை விவேக் சொல்வது போல் "யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு டீ ஆத்துர" என்கிற கதைதான்!

இந்த பதிவில் என் முந்தைய பதிவுகளில் அதிகம் பேர் படித்த ஒரு சில பதிவுகளின் தொடுப்பை கொடுக்கிறேன்.

1.பெட்ரோடாலர் பற்றி சில வருடங்களுக்கு முன் எழுதிய டாலர் அரசியல் என்ற பதிவு

2.சீனாவின் வளர்ச்சி பற்றி எழுதிய பதிவு

3.மெக்காலே கல்வி திட்டம் பற்றி எழுதிய பதிவு

4.கிழக்கு இந்திய கம்பெனி பற்றிய பதிவு

5.இந்திய வேளாண்மையை எதிர் நோக்கும் பிரச்சனை பற்றி பற்றி மருதத்தில் என் நண்பர்களின் அலசல்

6.எந்திரன் படம் பற்றிய நகைச்சுவை பதிவு

--

28 comments:

உமர் | Umar said...

தமிழ்மணம் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் நண்பா.

சமுத்ரா said...

வாழ்த்துக்கள்..

சதுக்க பூதம் said...

நன்றி கும்மி மற்றும் Samudra

சந்தனமுல்லை said...

நட்சத்திர வாழ்த்துகள்

சதுக்க பூதம் said...

நன்றி சந்தனமுல்லை

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள்

Bruno said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்

அசத்துங்கள்

வாசிக்க ஆவலக உள்ளோம்

சதுக்க பூதம் said...

நன்றி கோவி.கண்ணன் மற்றும் புருனோ.

//வாசிக்க ஆவலக உள்ளோம்

//
முடிந்தவரை நன்றாக எழுத முயற்சி செய்கிறேன்

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

நல்லஆக்கமும்,சரியானஉழைப்பும்,
பதிவில் செலுத்தியதன் காரணமாக தாங்கள் தமிழ்மணம் நட்சத்திரமாக தேர்வுசெய்யப்பட்டுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்!வாழ்க வளமுடன்!
தீரன்சின்னமலை-புலனாய்வு செய்திஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி

சதுக்க பூதம் said...

நன்றி டி.கே.தீரன்சாமி.

Rajasurian said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்

சதுக்க பூதம் said...

நன்றி Rajasurian

க.பாலாசி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அன்பரே...

சதுக்க பூதம் said...

நன்றி பாலாசி

ஆயில்யன் said...

தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள் :)

மயிலாடுதுறை
திருமணஞ்சேரி ! சூப்பர்

நேரில் காணும் நாளை எதிர்பார்த்திருக்கின்றேன்:)

Unknown said...

வாழ்த்துக்கள் நண்பரே...

ஜோதிஜி said...

உங்களுக்கு வாழ்த்துகள். தேர்ந்தெடுத்த தமிழ்மணத்திற்கும் வாழ்த்துகள்.

Unknown said...

நட்சத்திரப் பதிவுகளுக்கும்,
தங்கள் விழிப்புணர்ச்சியூட்டும் பணி தொடரவும் வாழ்த்துக்கள், சகோ!

அஞ்சா சிங்கம் said...

தரமான பதிவுகளையே எழுதும் நீங்கள் தமிழ்மணத்தில் இடம் பிடித்தது மகிழ்ச்சி ......
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ....................

vasu said...

மட்டற்ற மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள்.... இந்த பதிவுலும் கூட பொறுப்பு உணர்வையே வெளிப்படுத்தி உள்ளீர்கள் நன்றி....

சதுக்க பூதம் said...

நன்றி ஆயில்யன்.

//நேரில் காணும் நாளை எதிர்பார்த்திருக்கின்றேன்:)

//
நானும்!

சதுக்க பூதம் said...

நன்றி நந்தா ஆண்டாள்மகன்,ஜோதிஜி

சதுக்க பூதம் said...

நன்றி தஞ்சாவூரான்

//தங்கள் விழிப்புணர்ச்சியூட்டும் பணி தொடரவும் வாழ்த்துக்கள், சகோ!//

தொடர்ந்து இது போலே எழுத முயற்சி செய்கிறேன்

சதுக்க பூதம் said...

வாங்க அஞ்சா சிங்கம்
தொடர்ந்து இது போலே எழுத முயற்சி செய்கிறேன்

சதுக்க பூதம் said...

நன்றி vasu .நீங்கள் தொடர்ந்து என் பதிவை படித்து விமர்சனத்தை தருபவர்.

எம்.எம்.அப்துல்லா said...

நட்சத்திர வாழ்த்துகள் அண்ணே.மிகவும் மகிழ்ச்சியாக உணரிறேன்.


// உலக பொருளாதாரம்(Macroeconomics) //

பேரியல் பொருளாதாரம் என்று அழகு தமிழில் சொல்லலாம் :)

சதுக்க பூதம் said...

நன்றி அப்துல்லா. தவறை திருத்திவிட்டேன்

Unknown said...

Excellent sadhuka poodam. Keep it up