Wednesday, June 17, 2009

பொன்னியின் செல்வன் வரலாற்று படத்தின் Trailer

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படித்தவர்களுக்கு எல்லாம் அதை திரைப்படமாக பார்ப்பது என்பது வாழ்வின் முக்கிய ஆசையாக இருக்கும்.

இந்த கதையை கமல் படமாக எடுக்க போவதாகவும் சீரியலாக வர போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது நாமும் ஆவலுடன் கத்திருந்ததுதான் மிச்சம்.

ஆனால் தற்போது Rewinda Movietoons என்ற கார்டூன் பட தயாரிப்பு நிறுவனம், பொன்னியின் செல்வன் கதையை கார்டூன் படமாக எடுக்கின்றனர்.
டிரெய்லரையும் வெளியிட்டுள்ளனர். டிரெய்லர் மிகவும் நன்றாக வந்துள்ளது. நீங்களும் பாருங்களேன்
தமிழக வரலாற்று செய்திகளை விவாதிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் பொன்னியின் செல்வன் என்னும் யாகு குழுமத்தில் இணைந்தால் உங்கள் ஆர்வத்திற்கு நல்ல தீனி கிடைக்கும்


--

Monday, June 15, 2009

அபாயத்தில் இந்தியா-டோகா பேச்சுவார்த்தை?

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக இந்தியாவின் அடிப்படை உரிமைகளையும், ஏழை இந்தியர்களையும்,விவசாயிகளையும் காப்பாற்ற மிக கடினமான பேச்சுவார்த்தை உலக வர்த்தக அமைப்போடு நடைபெற்று வருகிறது. முரசொலி மாறன் வர்த்தக அமைச்சராக இருந்த போது, தன்னுடைய சொல்லாற்றலாலும் அறிவு கூர்மையாலும் இந்தியாவுக்காக மிக கடுமையாக வாதாடி இந்தியாவின் பக்கம் ஏற்பட இருந்த மிக பெரிய இழப்பை தவிர்த்திருந்தார்.முந்தய அமைச்சரவையில் இருந்த கமல் நாத் கூட அந்த பொருப்பை திறமையாக எடுத்து நடத்தினார். ஆனால் தற்போது புதிய அமைச்சராக இருக்கும் ஆனந்த் சர்மா உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதை பற்றிய விவரங்களை வெளியிட வில்லை.

இந்த முன்னேற்றம் இந்தியவின் முக்கிய நலன்களை விட்டு கொடுக்காமல் வந்திருந்தால் நல்லதுதான். ஆனால் அதற்கான சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளதாக நம்பமுடியவில்லை. இந்திய நலன்களை விட்டு கொடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால் அது மிக பயங்கர அபாயகரமான விளைவுகளை பிற்கால சந்ததியினருக்கு ஏற்படுத்தலாம்.

இந்தியாவின் எதிர்காலத்தை பெரிய அளவில் பாதிக்க கூடிய உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தும் வர்த்தக அமைச்சர் பதவியை , இத்துறையில் அந்த அளவு அனுபவம் இல்லாத ஆனந்த் சர்மாவிடம் கொடுத்த போதே, புதிய அரசின் உண்மையான நோக்கம் பற்றி சந்தேகத்தை எழுப்பியது.

மற்ற பொதுதுறைகளை குறைந்த விலைக்கு விற்று ஒரு சில தனி நபர்கள் சம்பாதிக்க திட்டமிடுவதை போல், உலக வர்த்தக அமைப்பிலும் ஒரு சில தனி நபர்களின் நன்மைக்காக இந்தியாவின் எதிர்காலத்தை அடகு வைத்து விடாமல் இருந்தால் நல்லது.

அதே நேரம் இந்தியாவின் முக்கிய தேவைகளை விட்டு கொடுக்காமல் ஒரு சில சிறு இழப்போடு இதனை நிறைவேற்றினால், நிச்சயம் வரவேற்க தக்கதே.

ஒரு துப்பாக்கி சுட்டால் ஒருவர் மட்டும் இறப்பார்
ஒரு தீவிரவாத தாக்குதலில் சில நூறு பேர் மட்டும் இறப்பார்கள்
ஒரு போரில்(அணு ஆயுதம் ஈடுபடுத்தாத) சில ஆயிரம் பேர் இறப்பார்கள்.

ஆனால் தற்போதயை நிலையில் உள்ள உலக வர்த்தக ஒப்பந்தத்தினால் பல லட்சம் விவசாயிகளும்,கூலி தொழிலாளர்களும்,சிறு தொழிலாளர்களும் இறக்க வாய்ப்புள்ளது!


இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் தவறு ஏற்பட்டால் அதை எதிர்த்து கேட்கும் நிலையில் முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.கவும் இல்லை.இடது சாரிகளும் இல்லை.

சாதாராண மக்களுக்கும் அது பற்றி கவலை இல்லை.


--

Wednesday, June 10, 2009

கலக்கும் Virtual Conference

வழக்கமாக ஒரு பெரிய கம்பெனியின் கான்பெரென்ஸ் நடத்தி முடிப்பதற்கு பல மில்லியன்கள் செலவாகிறது. அதில் கலந்து கொள்ள வருபவர்களுக்கும் ஏர் டிக்கெட் மற்றும் லாட்ஜ் என்று பல்லாயிரம் செலவாகிறது.அதுவுமின்றி ஒரே நேரத்தில் பல செசன்கள் நடப்பதால் சிலவற்றை பார்க்க முடியாமலும் போய் விடுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வாக தான் இப்போது Virtual conference வந்துள்ளது.

முதலில் Virtual conference என்றால் என்ன என்று பார்ப்போம். நிஜத்தில் நடக்கும் கான்பெரன்ஸில் என்னன்ன இருக்குமோ அத்தனையும் Virtual conference லும் உண்டு.சமீபத்தில் VMWare நடத்திய Virtual conferenceலிருந்து சிலவற்றை பார்ப்போம்.முழு conferenceம் flashல் அழகாக வடிவமைக்க பட்டிருந்தது. முதலில் வெளியிலிருந்து உள்ளே வரும் போது கட்டடத்தின் வெளியே ரிசப்ஸன் இருக்கிறது. அங்கு இந்த கான்பெரென்ஸ் பற்றிய விவரங்கள் சொல்ல படுகிறது.உள்ளே நுழைந்தவுடன் அனைத்து கம்பெனிகளின் ஸ்டால்களும் உள்ளன. நாம் விரும்பிய ஸ்டாலுக்கு நாம் செல்லலாம். ஸ்டாலுக்குள் நுழைந்தவுடன் அங்கு அப்போது நடக்கும் பிரசன்டேசனை பார்க்கலாம்.இந்த ஸ்டாலில் அந்த கம்பெனியின் அலுவலர் இருப்பார். அவரிடம் நமக்கு தேவையான தகவலை Chat மூலம் கேட்டு தெரிந்து கொள்ளளாம். அங்கு அதற்கு முன் நடந்த செமினார்களின் வீடியோ தொகுப்பு மற்றும் தேவையான அனைத்து ரிசோர்ஸ்களும் இருக்கும். தேவையானவற்றை நாம் தரவிறக்கி(Download) கொள்ளளாம்.
அதுபோல முக்கிய கான்பெரன்ஸ் அறைக்கு செல்லலாம். அங்கு அனைத்து கான்பெரன்ஸ் தலைப்புகளும், அது நடக்கும் நேரத்தோடு வரிசை படுத்த பட்டிருக்கும். நமக்கு விரும்பிய தலைப்பை அங்கு தெரிவிக்க பட்டுள்ள நேரத்தில் கலந்து கொள்ளளாம். அங்கு நமக்கு தேவையான கேள்விகளையும் கேட்டு கொள்ளளாம். நடந்து முடிந்த செமினார்களின் வீடியோ ரெக்கார்டிங் இருக்கும். தேவையானால் நாம் அவற்றை தரவிறக்கி கொள்ளளாம். அது முடிந்த பின் தகவலை கொடுத்தவர் சாட் அறைக்கு வருவார். அங்கு அனைத்து கேள்விகளையும் கேட்டு கொள்ளளாம். அது ரெக்கார்டிங்காகவும் இருக்கும்.

இது தவிர அங்கு வந்திருக்கும் அனைவரையும் சாட் மூலம் சந்தித்து தகவல் பறிமாரி கொள்ளளாம்.மொத்தத்தில் கான்பெரன்ஸில் நடக்கும் எல்லாம் இருக்கும் ஆனால் இறுதியில் ஓசியாக கிடைக்கும் பேனா,நோட்டு,கை பை போன்றவை மட்டுமே மிஸ்ஸிங்.


--

Wednesday, June 03, 2009

உலகம் இவர்கள் கையில்!- பில்டெர்பெர்க் குழுமம்

உலகில் நடக்கும் மற்றும் நடைபெற போகும் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்கு யார் காரணம்? இந்த கேள்வியை சாதாரண மக்களிடம் கேட்டால் பொது மக்கள் என்ற விடை தான் கிடைக்கும். இடது சாரி சார்புடைய மக்களிடம் கேட்டால் அமெரிக்கா மற்றும் மேலை நாட்டு அரசாங்கம் என்பார்கள். சோஷியலிஸ்டுகளிடம் கேட்டால் பணத்தாசை பிடித்த பன்னாட்டு கம்பெனியினர் என்பார்கள். ஆனால் சர்வ தேச நடப்புகளை உன்னிப்பாக கவனித்து வருபவர்களை கேட்டால் அவர்களது பதில் புதுமையானதாக இருக்கும். அந்த புதுமையான பதில் தான் பில்டெர்பெர்க் குழுமம். என்ன இது உங்களுக்கு புதுமையான பெயராக இருக்கிறதா?

முதலில் பில்டெர்பெர்க் குழுமம் என்றால் என்ன என்று பார்ப்போம். இது மேலை நாட்டு அரசாங்கம், மிகபெரிய வங்கி,கம்பெனிகள் மற்றும் பிற சக்தி வாய்ந்த அதிகார வர்க்கங்களில் இருக்கும் ஒரு சில முக்கியமான புள்ளிகளின் அதிகார பூர்வமற்ற குழுமம். 1954ல் மேற்கு அய்ரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அமெரிக்க எதிர்ப்பு அலைகளை பற்றி ஆராய முதன் முதலாக நெதர்லாந்து நாட்டில் உள்ள பில்டெர்பெர்க் என்ற உணவகத்தில் கூட்டபட்டதால் இதற்கு பில்டெர்பெர்க் குழுமம் என்ற பெயர் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,வங்கி நிறுவனர்கள்,அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பன்னாட்டு கம்பெனியை சேர்ந்தவர்கள் என சுமார் 150 பேரை கொண்ட குழுமம் இது.இதன் கூட்டத்தில் நடைபெறும் விவாதங்களும், கூட்டத்தில் கலந்து கொள்பவர்களும் மிகவும் ரகசியமாக வைக்க படுகிறது.இதில் கலந்து கொள்வர்களின் முக்கியத்துவமும்,அதன் ரகசியம் காக்கும் தன்மையாலும் அந்த கூட்டத்தில் நடைபறும் செய்தி பற்றி பலவாறாக ஊகங்களும், புரளிகளும் வெளிவரும். பில்டெர்பெர்க் குழுமம் என்பது அதிகார பூர்வமற்ற குழுமமாதலால் அது பற்றி வரும் செய்திகள் பற்றி யாரும் மறுப்பு தெரிவிப்பதில்லை .

இந்த வருடத்திற்கான பில்டெர்பெர்க் கூட்டம் மே மாதம் 14 - 17 வரை கிரீஸ் நாட்டில் நடந்தது. இந்த கூட்டத்தின் கரு பொருள் உலகின் தற்போதய பொருளாதார மந்த நிலையை குறுகிய காலத்தில் முடிப்பதா? அல்லது இதனை நீண்ட நாட்களுக்கு இழுப்பதா? என்பதுதான் என்று கூறபடுகிறது. உலகில் உள்ள முக்கியமான அறிவு ஜீவிகள் ஒன்று கூடி உலகில் உள்ள பிரச்சனைகளை நாடுகளின் எல்லைகளை தாண்டி சிந்திப்பதன் மூலம் தெளிவான முடிவை எடுக்க முடியும் என்பது இவர்களின் கருத்தாக கூறபடுகிறது.ஆனால் பெரும்பான்மையானோரின் கருத்தோ, அதிகாரம் மற்றும் பொருளாதாரத்தை நாடுகளை தாண்டி உலக அளவில் குவித்து அவற்றை தங்கள் கட்டு பாட்டில் எடுப்பதுதான் இவர்களது நோக்கம் என்கிறார்கள். ஐரோப்பிய யூனியனை உருவாக்கி ஐய்ரோப்பிய நாடுகளிடமிருந்து அதிகாரத்தை இந்த யூனியனுக்கு மாற்ற முயற்சி செய்வது இக்குழுவின் முயற்சி என்றும் பேச்சு உள்ளது.

இந்த வருட கூட்டத்தில் உலக அளவில் மத்திய வங்கி உருவாக்குவது, IMF இன் பங்கை விரிவாக்குவது மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை அதிகரிப்பது போன்றவற்றை பற்றியும் பேசியதாக செய்திகள் கசிய தொடங்கி உள்ளன.
“உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்‘ என்ற புதிய முழக்கம் எந்த அளவு வெற்றி பெரும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.


--

Monday, June 01, 2009

கையிருப்பு தங்கத்தை விற்று தீர்க்கும் அமெரிக்கா?

அமெரிக்க நிதி நெருக்கடியை தொடர்ந்து, நிலமையை சரி செய்ய பெடரல் ரிசர்வ் வங்கி அதிக அளவு பணத்தை வெளியிட தொடங்கியது அனைவரும் அறிந்ததே. அதனால் டாலருக்கு மாற்றாக வேறு நாணயமோ அல்லது தங்கம் போன்ற பொருட்களோ அதிக முக்கியதுவம் பெறும் என்று பரவலாக எதிர் பார்க்க பட்டது .பெரும்பாலோனோரின் கணிப்பு தங்கம் அதிக விலை போகும் என்பதாயிருந்தது. ஆனால் தற்போது இன்னொரு உண்மை வெளியாக தொடங்கி உள்ளது. அமெரிக்கா தன்னிடம் உள்ள தங்கத்தை மிக வேகமாக விற்க தொடங்கி உள்ளது. கடந்த 2007 - 2008 ஆம் ஆண்டு மட்டும் 5000 மெட்ரிக் டன் எடையுள்ள தங்கத்தை விற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சுமார் 62% கையிருப்பு தங்கம் என்று கூறபடுகிறது. இதற்கு பின்னனியில் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை.

--