Wednesday, April 18, 2007

சென்னையில் மெட்ரோ விமானச்சேவை-இந்த வருட சூடான செய்திகள்-1

(சென்ற வருடம் நமக்கு கிடைத்த சூடான செய்திகள் போல இந்த வருடம்
நமக்கு கிடைக்க போகும் சூடான செய்திகள் குறித்து கற்பனை செய்த போது
கிடைத்த செய்திகள்)கடந்த சில வருடங்களாக சென்னையில் பூமி்க்கு மேல், பூமி்க்கு கீழ்,ஆகாயத்தில் என அனைத்து வகையிலும் ரயில்கள் வரப் போவதாக வருடத்திற்கு ஒரு நான்கு முறையாவது புது புது செய்திகளாக வந்து சென்னை வாசிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி கொண்டிருந்தது. இனி சென்னையின் அனைத்து பகுதிகளையும் தாண்டி அனைத்து வீடுகளையும் ரயிலின் மூலம் இணைக்க போவதாக வதந்திகளும் பத்திரிக்கையில் உலவி வந்தது(ஆனால் ஏனோ தெரியலிங்க, இந்த வேளச்சேரி project மட்டும் தான் முடியவே மாட்டேங்குது!). இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக தமி்ழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே முதன் முறையாக METRO விமான சேவை சென்னையில் தொடங்க உள்ளதாக தமி்ழக அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி் சட்ட சபையில் அறிவித்துள்ளார்.முதற் கட்டமாக இந்த விமான சேவை சோழிங்கநல்லூர்,மகேந்திரா சிட்டி மற்றும் அம்பத்தூர் இடையே இயக்கப்படும் என்றார். பிறகு இந்த சேவை பிற பகுதிகளுக்கும் விரிவு படுத்த படும் என்றார்.இது குறித்த ஆய்வு பணி இன்னும் 5 வருடத்தில் ஆரம்பிக்கும் எனவும், இந்த பணி அடுத்த நூற்றாண்டில் முடிந்து விடும் என்றும் அமைச்சர் கூறினார்.

Wednesday, April 11, 2007

ஷக்கீரா பாடலை தேசியகீதமாக்க நாரயணமூர்த்தி கோரிக்கை

ஷக்கீராவின் "Hips Don't Lie" பாடலை தேசியகீதமாக்க நாரயணமூர்த்தி கோரிக்கை விட இருப்பதாக கூறப்படுகிறது.
தன்னுடைய companyக்கு வரும் பன்னாட்டு கம்பெனியின் உரிமையாளர்கலுக்கு தற்போதைய தேசியகீதம் பிடிக்கவில்லை என்றும்
அவர்கள் விரும்பும் ஷக்கீராவின் "Hips Don't Lie" பாடலை தேசியகீதமாக்க அவர் விரும்புவதாகவும் தெரிகிறது.இதன் மூலம் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் போன்ற தலைவர்கள் வரும் போது அவமானமின்றி வெளி நாட்டினருக்கு பிடித்த பாடலை தேசியகீதம் என்ற பெயரில் பாட விடலாம் என்றார்.இது பற்றி பத்திரிக்கையாளர் "Cho" அவர்களிடம் கேட்டதற்கு,அவர் "Hips Dont Lie" பாடலை சமசுகிரதத்தில் மொழி பெயர்த்து அதை தேசியகீதமாக்கினால், நாட்டுபற்று பிரச்சினையும் வராது என்றார்.