Tuesday, January 25, 2011

பள்ளி மேம்பாட்டிற்கு $10 ல் ஓர் புரட்சி

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழகத்தின் பின் தங்கிய பகுதியில் இருக்கும் கிராம புற பள்ளிகளின் மேம்பாட்டிற்காக சிறிய பங்களிப்பில் பெரிய அளவில் எதாவது செய்ய நினைப்பவர்கள் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். இது ஒரு மீள் பதிவு. நல்ல விஷயம் பலரை தமிழ்மணம் நட்சத்திர வாரம் மூலம் சென்றடைய மீள்பதிவிடுகிறேன்.

இது வெறும் donation பெறும் இயக்கமல்ல. ஈடுபடும் நீங்கள் ஒவ்வொருவரும் அணி சேர்ந்து கிராம புற வளர்ச்சிக்கு பங்களிக்கும் கூட்டு முயற்சி.

கீழே உள்ள சுட்டியை பார்த்துவிட்டு பதிவை தொடர்ந்து படியுங்கள்.

எங்கள் கிராம பள்ளிக்கு கிடைத்த கட்டமைப்பு வசதி


வெளி நாடுகளில் தமிழர்கள் பொது இடத்தில் கூடி பேசும் போது தவறாமல் விவாதிக்க படும் விஷயம் தாயகத்தில் நடக்கும் லஞ்சம் ஊழல் பற்றிய பேச்சாக இருந்தாலும்
தமிழ் நாட்டின் ஆக்க பூர்வமான வளர்ச்சிக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற விவாதமும் சில சமயங்களில் இருக்கும்.ஆனால் பெரும் பாலான நேரம் அது பேச்சோடே முடிந்து விடும்.
தாய் நாட்டு வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதை எப்படி செய்ய முடியும் என்ற மலைப்போடு மறந்து விடுவோம். இந்தியாவில் இருக்கும் ஒரு சில
சேவை நிறுவனங்களுக்கு பண உதவி செய்ய முடிந்தாலும் அது எந்த அளவு வளர்ச்சிப்பணியை அடையும் என்ற கேள்விக்குறி தான் முன் நிற்கும்.
.தனியே நாமே எதாவது உருப்படியாக செய்யலாம் என்றால் மிக பெரிய தொகை செலவாகுமே என்ற மலைப்பு ஏற்படும். என்வே இது போன்ற சிந்தனைகள் பேச்சோடு முடிந்து விடும்.
10 வருடங்களுக்கு முன் இதே போன்ற விஷயம் ஒரு குழுவினரிடம் விவாதிக்க பட்டது. ஆனால் அது பேச்சோடு நிற்காமல் ஒரு திட்டமாக தீட்டப்பட்டு
இன்று வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதோடு மிக வேகமாக வளர்ச்சி அடையவும் செய்கிறது.

அது என்ன முயற்சி என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா?இந்தியாவில் கல்வி வளர்ச்சி மிக வேகமாக இருந்தாலும் கிராமப்புற மற்றும் நகர்புற பள்ளிகளில் உள் கட்டமைப்பின்
நிலை மிக மோசமாகவே உள்ளது.பெரும்பாலான பள்ளிகளுக்கு கட்டிடம் சரியாக இல்லை. உட்கார மேஜை வசதி சரியாக இருக்காது.மேலும் பிற வசதிகளும் ஒழுங்காக இருக்காது.
கி.பி 2000 ஆண்டில் ஏப்ரல் மாதம் ஏழைப்பள்ளிகளின் வளர்ச்சி பற்றி ஒரு சிலரிடையே விவாதிக்கப்பட்டு பின் தொலை பேசியிலும் மின்னஞ்சலிலும் விவாதத்தில் வளர்ந்து விதையாக வித்திடப் பட்டது தான்
TEAM(TEAM for Educational Activities in Motherland)(http://www.IndiaTEAM.org)
என்ற அமைப்பு..மிகப்பெரிய தொகையை தாயகக்கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்குவது என்பது நடைமுறையில் கடினம். எனவே இத்திட்டதின் படி ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குறுந்தொகையை
,அதாவது $10 ஒவ்வொரு மாதமும் குழுவிடம் செலுத்துவார்கள். உதாரணமாக 100 பேர் மூன்று மாதம் $10 கொடுத்தால் ,அது $3000 டாலராக பெருகும். குலுக்கல் முறையில்
6 பேரை தேர்ந்தெடுத்து ஆளுக்கு $500 டாலர் பிரித்து கொடுக்க படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரும் இந்தியாவில் உள்ள ஏழைப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து $500 டாலருக்குண்டான
பள்ளி உட்கட்டமைப்புக்கான பணிகளை மேற்கொள்ளுவார்கள். பணிகள் செவ்வனே முடிந்த பின், ரசீது மற்றும் புகைப்படங்களை அமைப்பிடம் சமர்பிப்பர். 50 மாதங்களில்
ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு பள்ளியையாவது மேம்படுத்தி இருப்பார்கள்.

இதை படிக்கும் போது ஒருவர் மாதம் $10 டாலர் கொடுப்பதால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட போகிறது என்று தோன்றும். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இவ்வமைப்பினர்
தாயகக்கல்வி வளர்ச்சிக்காக செய்த மொத்த தொகை அரை மில்லியன் டாலரையும் தாண்டி விட்டது .ஆச்சரியமாக இருக்கிறதா? தமிழ் நாட்டுப்பள்ளிகளுக்கு இவ்வமைப்பினரால் செய்ய பட்ட உதவிகளை
காண இந்தச் சுட்டியை(http://www.indiateam.org/projects/Pub_PrjList.php?state=TamilNadu) அழுத்திப்பாருங்கள்.
.இந்த அமைப்பின் மூலம் பயனடைந்ததில் தமிழகப்பள்ளிகள் முதலிடம் வகிக்கிறது. நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
அமர மேஜை, கட்டிடங்கள் மற்றும் பிற அடிப்படை தேவைகள் நிறைவேறியுள்ளன.\\
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இந்த அமைப்பின் மூலம் பயன் பெற்றுள்ள பள்ளிகளை இங்கு

(http://www.indiateam.org/projects/Pub_PrjList.php?state=All)காணலாம்.(இந்த சுட்டியில் 6 பக்கங்கள் உள்ளது.கவனம்).இந்த அமைப்பின் உறுப்பினர்களால் தற்போது செயல்
படுத்த பட்டு வரும் பணிகளை காண இங்கு
http://www.indiateam.org/projects/Pub_qCurrent_PrjList.php சுட்டுங்கள்

இந்த அமைப்பின் சிறப்பம்சமே இந்த அமைப்பு நிறைவேற்றும் பணிகள் யாவும் யாரோ ஒரு தெரியாதவர்கள் மூலம் நடை பெறாமல் இந்த அமைப்பில் உள்ளவர்கள் மூலம் செயல்படுத்துவது தான்.
இந்த அணுகுமுறையே இந்த அமைப்பிற்கும் அதன் செயல் பாட்டிற்குமான வெற்றியை ஈட்டிக்கொடுத்து வருகிறது என்று கூறலாம்.

இதைப்படிக்கும் வெளி நாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் தமிழக பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதை ஒரு சமுதாயக்கடமையாக ஏற்று கொண்டு இவ்வமைப்பில்
தங்களையும் ஈடுபடுத்தி சேவை மனப்பன்மையோடு பணி செய்தால் தாய் நாட்டின் கல்வி வளர்ச்சியில் ஒரு புரட்சியே ஏற்படுத்த முடியும்..இதை படிக்கும் உங்களுக்கும்
இது போன்ற சமூகப்பணியை ஆற்ற ஆர்வமாக இருந்தால் info@indiateam.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

--

7 comments:

அன்புடன் அருணா said...

அருமையான திட்டம்!பூங்கொத்து!

இடி முழக்கம் said...

நண்பர்களே உலகில் உள்ள எல்லா தொலைக்காட்சிகளையும் (1207 சனல்கள்) ஒரே இணையத்தில் பார்க்க http://iditv.blogspot.com/

சாய் said...

தமிழ்மணம் மூலம் இந்த இடுகையை பார்த்தேன்.

நானும் இப்படித்தான் என் பள்ளி (திரு.வி.கா. மேல் நிலை பள்ளி, ஷெனாய் நகர், சென்னை) இங்கிருந்து போனபோது அங்கிருந்த சுகாதாரமற்ற கழிவறையை பார்த்தேன். எங்கள் பழைய மாணவர்கள் அமைப்பு சேர்ந்து புதியதாக கட்டிக்கொடுத்தோம். நானும் என்னால் முடிந்த அளவு பணம் கொடுத்தேன்.

என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல. நீங்கள் சொல்வது போல் இந்த சிறிய தொகை பெரியதாக தெரியாது. கொடுக்கும் பணம் சரியானவர்கள் கைக்கு செல்லவேண்டும். அது தான் ப்ரோப்ளேம்.

சதுக்க பூதம் said...

வாங்க அன்புடன் அருணா,சாய்
நல்ல காரியம் செய்துள்ளீர்கள் சாய்

// நீங்கள் சொல்வது போல் இந்த சிறிய தொகை பெரியதாக தெரியாது. கொடுக்கும் பணம் சரியானவர்கள் கைக்கு செல்லவேண்டும். அது தான் ப்ரோப்ளேம்.

//
இந்த திட்டத்தின் படி பணத்தை நீங்கள் யாருக்கோ கொடுக்க வேண்டியது இல்லை. உங்கள் அணியில்(20 பேர் கொண்டதாக இருக்களாம்) உள்ள ஒருவர் ஒரு கிராம பள்ளிக்கு உதவி செய்ய போகிறார். நீங்களும் உங்கள் சுற்று வரும் போது நீங்கள் விரும்பும் பள்ளிக்கு நீங்களே செலவிட போகிறீற்கள். நான் இது பற்றி ஒழுங்காக இந்த பதிவில் விளக்கி உள்ளேன் என்று நினைக்கிறேன்

புருனோ Bruno said...

பகிர்விற்கு நன்றி சார்

shanthamoorthi said...

Very good.

bpr said...

I am amazed on seeing this.Only a few has helping tendency & organising it was a meritorious job.I wish successs for the TEAM always.It should be encouraged.