திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது. சினிமா மற்றும் மீடியா போன்ற ஊடகங்களை பொருத்த வரை, கடந்த 40 வருடத்தில் ஒட்டு மொத்த தமிழகமே மாபெரும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு கொண்டு உள்ளனர். திராவிட கட்சிகளோ தன் எதிர் (திராவிட) கட்சிகளின் தவறை கூறுவதில் முக்கியத்துவம் காட்டுகிறார்கள்.
வாரிசு அரசியல் மற்றும் ஊழல் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் ஒட்டு மொத்த தமிழகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மற்றும் வீழ்ச்சிக்கு திராவிட ஆட்சியின் பங்களிப்பை பற்றிய் பார்வையை எங்குமே காணுவது அரிதாக உள்ளது. அனைத்து துறைகளிலும் திராவிட ஆட்சி ஏற்படுத்தி உள்ள தாக்கத்தை பற்றி பார்ப்போம்.
மக்களாட்சி
1.காங்கிரஸ் ஆட்சிக்கும் திராவிட ஆட்சிக்கும் இடையில் உள்ள மிக பெரிய வேறுபாடு, அரசியல் அதிகாரத்தில் சாதாரண மக்களின் பங்களிப்பை கொண்டு வந்தது எனலாம். காங்கிரஸ் ஆட்சியில் MLA மற்றும் MPக்கள் மிக பெரிய பணக்காரர்களாகவே இருந்தார்கள்(காமராஜர் மற்றும் கக்கன் போன்ற ஒரு சில விதி விலக்கு இருந்தாலும்). அது மட்டுமன்றி அரசியல் அதிகாரத்தில் இருந்தோரில் பெரும்பாலானோர் ஆதிக்க சாதியை சார்ந்தவர்கள். திராவிட கட்சி ஆட்சியை பிடித்த போது பின் தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள் மற்றும் ஏழை/நடுத்தர வகுப்பை சார்ந்தவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தது.அடித்தளத்தில்/ களத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரம் கிடைத்ததால், அவர்கள் அன்றாடம் பார்க்கும், தங்களை சுற்றி உள்ள மகக்ளின் தேவை சிலவற்றையாவது நிறைவேற்றினார்கள். சாதாரண மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பும் பலமானது. MGR ஆட்சியில் இருக்கும் போது MLAக்கள் சட்டசபை நடக்காத காலத்தில் கட்டாயம் தங்களது தொகுதியில் இருக்க பணித்திருந்தார்.மிக பெரிய மிராசுதாரர்கள் பதவியில் இருந்திருந்தால் அவர்கள் அடிமட்ட மக்களின் தேவையை உணர்ந்து அடிமட்ட கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவியிருப்பார்களா எனபது கேள்வி குறியே
2 MGR அட்சி காலத்தில் கிராம அளவில் பட்டாமணியார்களாக இருந்த ஆதிக்க சாதியினரை பதவியில் இருந்து நீக்கி ஆதிக்க சாதியினரின் கட்டுபாட்டை ஓரளவு குறைத்தார். ஆனால் ஒரு சிலர் இதனால் கிராம புறங்களில் மக்களிடமிருந்த கட்டுபாடு குறைந்து விட்டது என்று கூறுவார்கள்.
3.அரசியலில் அடிமட்ட மக்களின் பங்களிப்பு அதிகமானதால், அது சாதி அரசியலுக்கு கொண்டு சென்று விட்டதாக ஒரு குற்றசாட்டு உள்ளது.தற்போது நடக்கும் தேர்தலில் எல்லாம் அந்தந்த் தொகுதியில் இருக்கும் பெரும்பான்மை சாதியினரை நிறுத்தினால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. இதை ஒரு சிலர் தமிழகம் சாதியத்தை நோக்கி தள்ளபட்டு விட்டதாக பெரும் பாலோனோர் கூறுவார்கள்.ஆனால் பிற மாநிலங்களை பார்த்தால் அங்கு அரசியல் அதிகாரத்தில் ஒரு சில ஆதிக்க சாதியினர் மட்டும் இருப்பது தெரிய வரும்.உதாரணமாக ஆந்திராவில் ரெட்டிகள், நாயுடுக்கள் மற்றும் ஒரு சில ஆதிக சாதியினர் 25 சதத்துக்கு குறைவாக இருந்தாலும் அவர்களின் அரசியல் அதிகாரம் பெரும்பான்மையாக இருக்கிறது.பெரும்பான்மை பிற்படுத்தபட்ட மக்கள் சிறுபான்மை அதிகாரம் மட்டுமே கொண்டுள்ளார்கள்.உண்மையில் இது சாதி ரீதியாக மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநித்துவம் கிடைப்பதாக எடுத்து கொள்ளலாம்.ஆனால் அவ்வாறு அதிகாரம் பெறுபவர்கள் உண்மையில் எந்த அளவுக்கு அடிமட்ட மக்களின் வளர்ச்சிக்கு பாடு படுகிறார்கள் என்பது கேள்வி குறி.
4.மேற் சொன்ன கூற்றுகள் எல்லாம் கடந்த சில வருடங்களாக மாறிவிட்டன. தற்போது முன்பு போல் அடிமட்டத்திலிருந்து தலைவர்கள் வருவது நின்றுவிட்டது. வாரிசு அரசியலும், அரசியலை வியாபாரமாக கொள்பவர்களும் தான் அரசியல் தலைவர்களாக வரும் நிலை ஏற்பட்டுள்ளது. உணர்வு ரீதியான தொண்டர்கள் தலைவர்கள் ஆவது சாத்தியமில்லாதது ஆகிவிட்டது. இது திராவிட கட்சிகளுக்கு மிக பெரிய பின்னடைவு அல்லது அழிவின் ஆரம்பம் என்று கூட கூறலாம். இதன் விளைவாக திராவிட கட்சிகளுக்கும் பிற கட்சிகளுக்கும் இருந்த வேறுபாடு குறைந்து விட்டது.
சமூகநீதி
1. திராவிட ஆட்சியின் முக்கிய சாதனையாக கருதபடுவது சமூக நீதியை நிலைநாட்ட எடுக்கும் முயற்சி. இட ஒதுக்கீடு என்பது நீதி கட்சி காலத்தில் அறிமுகபடுத்த பட்டாலும் திராவிட ஆட்சிகாலத்தில் அது முழுமையாக கடை பிடிக்க பட்டு சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் முன்னேற வழி வகுத்தனர் என்றால் மிகையாகாது. (காமராஜர் காலத்தில் இந்த முயற்சி பலவிதமாக நடை முறைபடுத்தபட்டது. உதாரணமாக கிண்டி பொறியியல் கல்லூரி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் G.R. தாமோதரன், ராஜகோபால், முத்தையன் போன்ற பிராமணரல்லாதவர்களை கொண்டு நேர்முக தேர்வு நடத்த பணித்தார்.).இட ஒதுக்கீடு ஆரம்ப காலத்திலே நடைமுறை படுத்த பட்டதால் ஒவ்வொரு கிராமத்திலும் முதல் தலைமுறையில் வேலைக்கு போவோரை கண்டு சுற்று புறத்தில் இருப்பவர்களும் படிக்க ஆவல் காட்டியதால், அனைத்து தரப்பினரும் பரவலாக முன்னேற வாய்ப்பு கிடைத்தது.
2.உண்மையில் சொல்ல போனால் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வந்ததன் மூலம் முன்னேறிய வகுப்பினரின் வளர்ச்சியும் அதிகமானது எனலாம்.முன்னேறிய வகுப்பினரின் போட்டியிடும் தன்மை அதிகமானது.அரசு வேலை வாய்ப்பு கிடைக்காததால் தனியார் துறையில் வேலைக்கு சென்ற முதல் தலைமுறையினரின் குழைந்தைகளுக்கு விழிப்புணர்வும், உலகளாவிய நோக்கும் அதிகமானது.
3.பெண்களுக்கான அரசியல் மற்றும் வேலை வாய்ப்பு ஒதுக்கீடு பெண்களின் மேம்பாடுக்கு பெருமளவு உதவியது என கூறலாம்.
4.தற்போது முதல் தலைமுறையில் இட ஒதுக்கீடை அனுபவித்தவர்களால் அதன் பயன் தேவையானவர்களை சென்றடைவது முற்றிலுமாக தடை பட்டுவிட்டது. அரசியல்வாதிகளுக்கும் பாமர ஓட்டு வங்கி தேவை என்பதால் உணமையில் உதவி தேவை படுவர்களுக்கு உதவ எந்த முயற்சியும் எடுக்க படுவது இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் ஒடுக்க பட்ட மக்கள் நக்சல்பாரி இயக்கம் நோக்கி செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. இது பற்றி தற்போதைய திராவிட ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாமல் இருப்பது பிற்காலத்தில் தமிழகத்தை பேரழிவுக்கு இட்டு செல்லும்.(M.G.R ஆட்சி காலத்தில் இதை தடுக்க முயற்சி எடுத்தாலும் கடுமையான எதிர்ப்பினால் அவர் கை விட்டு விட்டார்.)
5.கிராமபுற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கருணாநிதி ஆட்சி காலத்தில் முயற்சி எடுத்தாலும் அது நீதி மன்றத்தால் தடைசெய்ய பட்டது வருத்தமான செய்தி
6.M.G.R காலத்து மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான நேர்முக தேர்வு தடை, கருணாநிதி காலத்து நுழைவு தேர்வு தடை போன்றவை அனைவருக்கும் உயர் கல்வி கிடைக்க வாய்ப்பளித்தது எனலாம்.
7.இட ஒதுக்கீடு காரணமாக தரம் குறைகிறது என்பது ஒரு சிலரின் குற்றசாட்டு. ஆனால் தற்போது பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான மார்க்கை ஒவ்வொரு பிரிவிலும் பார்த்தால் பெரிய அளவில் தரம் இல்லாதவர்களுக்கு சீட்டு கிடைப்பதாக தெரியவில்லை.அதிக மார்க் எடுத்த முன்னேறிய பிரிவினருக்கு முக்கிய கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினம் என்பதும் உண்மை)
கல்வி
1.காமராஜர் கிராம புற கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் திரவிட கட்சிகள் அரசு பள்ளிகளை மிக அதிக அளவில் அனைத்து கிராமங்களிலும் திறந்து ஒரு அறிவு புரட்சி ஏற்படுத்தினார்கள் என்றால் அது மிகையாகது.
2.கிராம பள்ளிகளின் தரம் மிகவும் கவலை கூறியதாக இருக்கிறது. அதை உயர்த்த திராவிட ஆட்சிகள் எடுக்கும் முயற்சி மிக குறைவே.
3.அரசு பொறியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் பலவற்றை தற்போதைய தி.மு.க அரசு திறப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது. தமிழகத்தில் தான் இது போன்ற அரசு உயர் கல்லூரிகள் அதிகம் உள்ளது என்பது குறிபிடதக்கது.
4.தமிழகத்தின் இட ஒதுக்கீட்டின் பயானால் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், தனியார் கல்லூரிகள் அதிகம் எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்க பட்டு தற்போது ஊருக்கு பல கல்லூரிகள் திறக்க பட்டுள்ளன. கல்வி பெருமளவு வணிகமயமாக்க பட்டுள்ளது என்ற நிலை ஏற்பட்டாலும், பணம் இருந்து படிக்க விரும்புவர்கள் தாங்கள் படிக்க விரும்புவதை படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதே சமயம் அரசு கல்லூரிகளும் பல திறக்கபட்டுள்ளதை கணக்கில் கொள்ள வேண்டும்
5.எம்ஜிஆரின் சத்துணவு திட்டம் கிராம கல்வி வளர்ச்சியில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை கூட இதை மாதிரி திட்டமாக அறிவித்துள்ளது.
6.பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், புத்தகம், முட்டை என பல திட்டங்கள் நல்ல விளைவையே ஏற்படுத்து உள்ளன.தமிழகத்தில் அனைத்து குழைந்தைகளும் தற்போது பள்ளியில் சேர்க்க படுகிறார்கள் எனபது குறிப்பிட தக்கது.
போக்குவரத்து
1.தி.மு.க ஆட்சி காலத்தில் தனியார் பஸ்களை அரசுடமை ஆக்கியதன் விளைவாக கிராமங்களுக்கும் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி கிடைத்தது(இதற்கு முக்கிய காரணம் அந்த காலத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களில் பெரும்பான்மையானோர் காங்கிரஸ்காரர்கள் தான். உதாரணம் - TVS, பொள்ளாச்சி மகாலிங்கம், காசி ராமன்,சிம்சன்,சக்திவிலாஸ் etc).மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகம் பஸ் வசதியில் எவ்வளவோ முன்னேறி உள்ளது.
2.போக்குவரத்து கழகங்களை ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு கார்ப்பரேசனாக பிரித்து இருப்பதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி ஓரளவு சீராக வளர்ச்சி அடைந்து உள்ளது.
3..தி.மு.க ஆட்சி காலத்தில் கிராமபுறங்களில் அறிமுக படுத்திய மினி பஸ் திட்டம் கிராம மக்களுக்கு ஒரு வர பிரசாதம்.
4.திராவிட கட்சிகள் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்காததால் தமிழகத்தில் ரயில்வே துறை மிகவும் பின் தங்கியுள்ளது குறிப்பிட தக்கது.இது தமிழகத்துக்கு மிக பெரிய இழப்பு ஆகும்.
முக்கியமான அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள சாதக பாதக அம்சங்களை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம். அதே போல் இந்திய அளவிலான மாநிலங்களுக்கு இடையேயான வளர்ச்சி குறியீடுகளின் (Human Development Index,GDP,Industrialization, Agriculture growth rate etc) மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பீடுகளையும் பார்ப்போம்..
மேலே உள்ள தலைப்புகளில் விடுபட்ட சாதக/பாதக அம்சங்களை பின்னூட்டத்தில் இட்டால் நன்றாக இருக்கும்.
--
10 comments:
Very Nice Research... Now the fact is proven that all are equally dangerous :-)
http://anubhudhi.blogspot.com/
வெற்று அலங்கார பேச்சினால் எளிதில் மக்கள் உணர்வை மட்டும் தூண்டி சிந்திக்கும் திறனை அடியோடு அழித்தது, தெருவெங்கும் ஓடும் சாராயம் - In any form it is called -, சாதிகளுக்கிடையே பெரும் வெறுப்பை வளர்த்தது (வளர்த்துக்கொண்டே இருப்பது), கொஞ்சமும் கூச்சமின்றி அருவருக்கும் அளவுக்கு புகழ்ச்சி, எந்த வித கூச்சமும் இல்லாமல் கலைஞர், புரட்சி தலைவர், புரட்சி தலைவி, தளபதி, அஞ்சா நெஞ்சன், அன்னை, அம்மா என்று பட்டப்பெயர் சூட்டுவது, சூட்டிக்கொள்வது, அந்த பட்ட பெயரில்லாமல் உண்மையான பெயரை கூப்பிடுவது கூட பாவம் என்ற நிலைக்கு மக்களை பழக்க படுத்தியுள்ளது, அருகில் உள்ள கேரளாவில் தடை செய்யப்பட்டிருக்கும் மணல் கொள்ளை சட்ட ரீதியாக அங்கீகரித்துள்ளது, தமிழகத்தின் உரிமைகளை தட்டி கேட்கும் துணிச்சல் இல்லாதது, விஞ்ஞான ரீதியாகவும், இந்தியாவே அலறும் வகையிலும் ஊழல் செய்து காட்டுவது (தமிழன்டா!) என்று எவ்வளவோ இருக்கிறது இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில்!
1\10 என்ற அளவில் தானே பாதகங்களை சொல்லியிருக்கிங்க.
நிறைய தோணுது. எல்லாம் சொல்றதுக்கு தனி இடுகையே போடனும். இஃகி
கல்லூரிகள் அதிகரித்தால் போதுமா? கல்வியின் தரம்??
தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து தமிழ் வழி கல்வி நசிந்து ஆங்கில வழி கல்வி அல்லவா மரியாதைக்குரியது என்று ஆகிவிட்டது. அதில் இருந்து வருபவர்களுக்கு சரியாக ஆங்கிலமும் தெரியவில்லை தமிழும் தெரியவில்லை.
your view about dravida parties a realistic. their reach on primary health,industrialisation,higher education is far better than any other states in india.you must elaborate in this sector.
பகிர்விற்கு நன்றி சங்கர் குருசாமி,bandhu ,குறும்பன்
//நிறைய தோணுது. எல்லாம் சொல்றதுக்கு தனி இடுகையே போடனும். இஃகி
//
அனைத்து கருத்துகளையும் தொகுத்து இடுக்கை இடுங்கள்
//கல்லூரிகள் அதிகரித்தால் போதுமா? கல்வியின் தரம்??
//
தமிழகத்தில் மட்டுமா பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தரம் தாழ்ந்துள்ளது?
//தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து தமிழ் வழி கல்வி நசிந்து ஆங்கில வழி கல்வி அல்லவா மரியாதைக்குரியது என்று ஆகிவிட்டது.//
ஆங்கிலத்தின் தேவைக்கு உலகமயமாதல் மற்றும் பல காரணிகள் உள்ளது. அரசு இது குறித்து செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று தோன்றுகிறது
நம்ம மாநிலத்தில் தரம் கெட்டு போச்சு என்பது தான் என் வருத்தம்/கவலை. மற்ற மாநிலத்தில் இதை விட தரம் மோசமா இருந்தா நம் இளைய சமுதாயம் பாவம் :-(( .
ஆங்கில வழி கல்வி தவறு என்று சொல்லவில்லை. தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தமிழ் வழி கல்விக்கு ஒன்றும் செய்யவில்லையே என்பது தான் வருத்தத்திற்குரியது. அரசு இதில் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
இப்போ உள்ள திராவிட கட்சிகள் மக்கள் நலனுக்காக போராடவில்லை என்பது வருத்ததிற்குரிய உண்மை.
பள்ளி கல்வி பற்றி மட்டும் நான் குறிபிட்டுள்ளேன். உங்கள் கருத்தை கூறியதற்கு நன்றி. இது போன்ற விட்டு போன பிற செய்திகளை கூறினாலும் நன்றாக இருக்கும். நீங்கள் இது பற்றி கூட பதிவிடுங்கள். தலைவர்களை பற்றிய தனி மனித தாக்குதல் இல்லாமல் நீங்கள் கூறும் நியாயமான கருத்துக்கள். விமர்சனங்கள் மீடியா முழுதும் பரவினால் தீர்வு கிடைக்க 0.1% ஆவது காரணமாக இருக்கும் அல்லவா?
//தமிழ் வழி கல்விக்கு ஒன்றும் செய்யவில்லையே என்பது தான் வருத்தத்திற்குரியது. அரசு இதில் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
//
உண்மை தான். குணா புத்தகத்தில்(திராவிடத்தால் வீழ்ந்தோம்) கூறி உள்ளது போல் திராவிட - தமிழ் என்ற கூற்றில் உண்மை இருக்குமோ?
ஈழ தமிழர்களை கை விட்டது கூட இது தான் காரணமோ?
//இப்போ உள்ள திராவிட கட்சிகள் மக்கள் நலனுக்காக போராடவில்லை என்பது வருத்ததிற்குரிய உண்மை//
அரசு என்ன செய்திருக்களாம்? என்ன செய்துள்ளார்கள்? மற்ற மாநிலங்களின் நிலை என்ன என்று விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும் அல்லவா? போதுவாக இப்படி சொல்லாமல், குறிப்பாக கூறினால் நன்றாக இருக்கும். முடிந்தால் இது பற்றி கூட பதிவிடுங்கள். ஆரோக்கியமான விவாதம் இணையத்தில் பரவினால் நல்லது தானே?
The basic Character, Quality of Education & TASMAC Liquor shop ruined the entire state. Hence DMK or ADMK ruling spoiled the state. This is like selling eyes getting a picture which is not benefit for the society. All DMK &ADMK leaders are loose in character
//basic Character, Quality of Education & TASMAC Liquor shop//
வாங்க ரவிகுமார். மேற் சொன்ன மூன்றும் கவனிக்கபடவேண்டியவையே.கல்வியின் தரத்தை உயர்த்த அரசால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள். அது உங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும். மதுவை பொருத்த வரை அரசு விற்பதா? அரசு அனுமதியுடன் தனியார் விற்பதா? கள்ள தனமாக தனியார் விற்பதா எனபதே கேள்வி குறி. அடிப்படை தேவையான அரிசி, உணவு பொருள்கள், மின்சாரம் என அனைத்தும் குறைவான விலைக்கு ரேசனில் கிடைப்பதால், தனக்கு கிடைக்கும் உபரி வருமானத்தை அனைவரும் டாஸ்மாக்கில் செலவிடுகிறார்களோ என்பது என் சந்தேகம்
the tasmac culture? is literally ruining our state's social fabric.since it is run by government the stalls are placed anywhere and everywhere.for example there are atleast 4-5 stalls around any busstand.drunk and drive is causing a menace that is not estimated properly.all of us know the monetary gain of tasmac but we are ignorant about the financial loss tothe whole society.the lives lost in RTA (ROAD TRAFFIC ACCIDENTS) are all breadwinners of some family.when children lose thier father invariably they end up as childlabourers.the traffic police are not provided machines to check alcohol level in blood.helmet rule is not implemented.so we are losing many lives who would have benefited the society in future.without studying the impact they are just increasing the sale of alcohol so there is no way to counter the sideeffects of the scheme.when wineshops were private those were placed in quite remote places and few in number.our state doesn't have dr:patient ratio,nurse:patient ratio,to WHO standard but we have more shops per customers, thanks to successive govts.tragedy is that no party is willing to have a different policy in this issue.
Post a Comment