Saturday, January 15, 2011

பாதை மாறும் MicroCredit

Microcredit - இது சிலகாலம் வரை உலகில் ஏழ்மையை அழிக்க போகும் ஆயுதமாக அனைவராலும் கருத பட்டது. பங்களாதேஷை சேர்ந்த முகமது யூனசால் 1970களில் தொடங்கபட்ட ஒரு ரத்தமில்லா புரட்சி இந்த மைக்ரோகிரடிட். கிராமங்களில் ஏழ்மையில் வாடி வறுமை சக்கரத்தில் உழன்று கொண்டிருக்கும் ஏழை மக்களுக்கு தொழில் தொடங்க முதலீடு கொடுத்து, சேமிப்பை ஊக்க படுத்தி, தொழில் தொடங்கும் திறனை வளர்த்து, தலைமை பண்பை வளர்த்து மக்களை வறுமையின் பிடியில் இருந்து விடிவிப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். பசுமை புரட்சிக்கு பின் மாபெரும் வறுமை ஒழிப்பு திட்டமாக வெற்றி பெற்றது இந்த திட்டம். ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்த பட்டது.

நன்றாக போய் கொண்டிருந்த இந்த திட்டத்திற்கு தற்போது மாபெரும் நெருக்கடி வர ஆரம்பித்துள்ளது. இது வரை லாப நோக்கில்லாமல் நடந்து கொண்டிருந்த இந்த திட்டத்தின் மீது காளை மாட்டில் கூட பாலை கறக்கும் முதலாளிகளின் பார்வை விழுந்து விட்டது. அதன் விளைவு பெருமளவு லாபத்தை ஈட்ட மற்றும் லாபத்தை மட்டும் நோக்கமாக பெரிய அளவில் பணம் பெரு முதலாளிகளால் முதலீட்டாக அளிக்க பட்டது.அவர்களின் நோக்கமெல்லாம் லாபத்தை பார்ப்பது தான். அது மட்டுமன்றி இந்தியா மெக்ஸிகோ போன்ற நாடுகளில் பங்கு சந்தையின் மூலமும் மூலதனம் திரட்ட பட்டு புதிய மைக்ரோகிரடிட் கம்பெனிகள் ஆரம்பிக்க பட்டன. இதற்கு பின்னனியில் உலகின் பெரும் பணக்காரர்கள் கூட இருந்தார்கள். தங்கள் லாபத்தை அதிகரிக்க பெருமளவு வட்டிக்கு பணம் கொடுத்தனர். அதை வசூலிக்க அடியாள் பலத்தை உபயோகிக்க ஆரம்பித்தனர். அதன் விளைவு கந்து வட்டி வாங்கும் ரவுடிகளின் கடனுக்கு இணையாக இது மாறியது.

அது மட்டுமல்ல. மக்களின் தேவை அறியாமல் , மக்களால் திருப்பி கொடுக்க முடியாத அளவு பணத்தை கடனாக கொடுத்தனர். அந்த பணத்தை கொண்டு தொழில் தொடங்கி லாபம் அடையவும் வழி காட்டுவது இல்லை. அதன் விளைவு கடன் வாங்கியவர்களால் பெருமளவு திருப்பி கொடுக்க முடியவில்லை. ஆனால் அந்த நிறுவனங்கள் கடனை வன்முறையை ஏவி திருப்பி பெற முயன்றனர்.

அந்த நிறுவனங்களின் லாபம் பல மடங்கு பெருகியது. கடன் வாங்கிய ஏழைகளின் நிலையோ பரிதாபமாக மாறியது. ஒரு சில மாநில அரசுகள் கடுமையான முறையை பின் பற்றி பணத்தை வசூலிப்பதை தடை செய்யும் நிலைக்கு வந்தது.அதுமட்டுமன்றி பல பன்னாட்டு கம்பெனிகள் இந்த மைக்ரோகிரடிட் மற்றும் சுய உதவி குழுக்கள் கொண்டு தன் வளர்ச்சியை பெருக்கி கிராமம் மற்றும் சிறு நகரம் சார்ந்த தொழில்களை அழித்து வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டு உள்ளது கவனிக்க தக்கது.

இதில் முக்கியமாக கவனிக்க பட வேண்டிய செய்தி இந்தியாவில் தான் இந்த திட்டம் அதிக அளவு லாப நோக்கில் வணிகமயமாக்க பட்டுள்ளது.லாப நோக்கமுள்ள தனியார் நிறுவனங்களை ஏழை மக்களுக்கு கடன் உதவி தரும் வங்கி துறையில் ஈடு படுத்தினால் என்ன விளைவு ஏற்படும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.இந்த மாதம் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள குறிப்பு படி இனி வரும் காலங்களில் இந்தியாவின் தனியார் துறையை வங்கி துறையில் ஈடுபடுத்தி கிராம புற மக்களின் கடன் தேவையை பூர்த்தி செய்ய போவதாக கூறியுள்ளது.

அமெரிக்காவில் தனியார் வங்கி துறையின் மூலம் வீட்டு கடன் கொடுக்க முயன்றதன் விளைவு சப் பிரைம் பிரச்சனை வந்தது. இந்தியாவில் லாப நோக்கிளான தனியார் துறையை மைக்ரோ கிரடிட்டில் ஈடுபடுத்தியதன் விளைவாக வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டிய திட்டம், ஏழைகளை வறுமையின் பிடியில் மாட்ட வைத்துள்ளது. வரலாற்றை மறந்து மீண்டும் ஒரு தவறு செய்வது நல்லதா? அல்லது தவறை திருத்த நினைப்பது நல்லதா என்பதை பற்றி ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் சிந்திக்க வேண்டும்.

4 comments:

யாசவி said...

மைக்ரோ பைனான்ஸ் = கந்து வட்டி

அநியாயன் பண்றாங்க ஊரில்

சதுக்க பூதம் said...

வாங்க யாசவி. உங்கள் ஊரில் நடைபெரும் கொள்ளையை பின்னூட்டத்தில் தெரிவித்தால் நிறையெ பேருக்கு உண்மை சென்றடையும்

தேடல் said...

//காளை மாட்டில் கூட பாலை கறக்கும் முதலாளிகளின் பார்வை விழுந்து விட்டது//

இதற்கு நம் அரசாங்கமும் உடந்தையாக இருப்பது வேதனைக்குரியது.

நன்றி நண்பா...........

சதுக்க பூதம் said...

வாங்க தேடல். இந்த மைக்ரோகிரடிட் உண்மையிலேயே ஏழை மக்களை வறுமையிலிருந்து மீட்டு கொண்டிருந்தது. தொடர்ந்து இது மட்டுமாவது நன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்.