Sunday, January 23, 2011

அமெரிக்காவை தாக்க தயாராகும் அணுகுண்டு

இந்த தலைப்பை பார்த்தவுடன் ஏதோ அமெரிக்காவை தாக்க சீனாவோ, வட கொரியாவோ அல்லது ஈரானோ தாக்க திட்டமிட்டுள்ளதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த தாக்குதலை அமெரிக்காவின் மேல் நடத்த போவது அமெரிக்கர்கள் தான். இது ஒரு போர் தாக்குதல் அல்ல. ஆனால் அதைவிட வலிமையான பொருளாதார தாக்குதல். இந்த தாக்குதலை நடத்த இருப்பவர்கள் அமெரிக்காவில் பணி மூப்படைந்த முதியவர்கள்.புரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள் இந்த பதிவை!

அமெரிக்காவில் Baby Boomers என்று அழைக்க படும் தலைமுறை 1946 முதல் 1964 வரை பிறந்த மக்களை குறிப்பதாகும்.76 மில்லியன் குழந்தைகள் அந்த காலத்தில் பிறந்துள்ளனர். இரண்டாம் உலக போருக்கு பிந்தய அந்த கால கட்டத்தில் மக்கள் தொகை பெருக்க விகிதமும் பொருளாதார மேம்பாடும் அதிகம் இருந்த காலம். அந்த பேபி பூமர் தலைமுறையினர் தற்போது பணி மூப்படைந்து பென்ஷன் தொகையையும், அரசின் இலவச மருத்துவ சேவையையும் நம்பி பணி ஓய்வு வாழ்க்கையை தொடரபோகிறார்கள்.

பணி ஓய்வு பெற்றவர்களுக்காக அரசு அளிக்கும் இலவச மருத்துவ உதவியை(medicare) நம்பி இருக்கும் மக்களின் எண்ணிக்கை 4.7 கோடியிலிருந்து 8 கோடியை இன்னும் சில வருடங்களில் கடக்கும்.மத்திய அரசின் முதியோருக்கான உதவி தொகையை(Social Security) பெருபவர்கள் எண்ணிக்கை 4.4 கோடியிலிருந்து 7.7 கோடியை இன்னும் சில வருடங்களில் கடக்க இருக்கிறது. இந்த உதவிக்கெள்ளாம் பணியில் இருக்கும் போது மத்திய அரசிடம் பணத்தை கொடுத்தாலும், பெரும்பான்மையான பணத்தை அரசு வாங்கி நாட்டின் அடிப்படை கட்டமைப்பு, போர், பெரிய அரசாங்கம் போன்றவற்றிற்கு செலவிட்டு விட்டது.எனவே இந்த நிதியை அரசு தனது வருவாயிலிருந்து தான் செலவிடமுடியும். தற்போது அமெரிக்காவில் மக்கள் தொகை பிறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது. அதன் விளைவு அரசின் வருமானம் குறைவாக வாய்ப்புள்ளது. அதாவது குறைவான மக்களின் உழைப்பில் அதிக மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.இதன் விளைவாக அரசின் பற்றாக்குறை விண்ணை நோக்கி எகிற வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் மருத்துவ துறை முழுதும் தனியார் வசம் உள்ளதால் இந்த செலவினங்களை குறைப்பதும் மிக கடினம்.(தமிழகத்தில் மருத்துவ காப்பீடு அடிப்படையிலான தனியார் மருத்துவமனை சார்ந்த மருத்துவம் வளர்ந்து வருவது குறிப்பிட தக்கது)

இந்த பிரச்சனை மத்திய அரசோடு நிற்கவில்லை.அதிக அளவு பேபி பூமர்ஸ் மாநில அரசு ஊழியர்களும், நகர ஊழியர்களும் பணி ஓய்வு பெருவதால் மாநில அரசு மற்றும் நகரங்களின் நிதி நிலைமையும் கவலைக்குறியதாக மாற தொடங்கி உள்ளது. அது மட்டுமன்றி பொருளாதார வாட்டத்தால்,இதுவரை முதலீடு செய்யபட்டிருந்த ஓய்வூதிய பணத்திற்கான முதலீட்டின் மதிப்பும் அதிகளவு குறைந்து உள்ளதால் பிரச்ச்னையின் வேகம் அதிகமாகி உள்ளது.இதில் முக்கிய பிரச்ச்னை பெரும்பாலான ஓய்வூதிய கணக்கீடுகளை,முதலீடின் மேல் 8% லாபம் கிடைக்கும் என்ற ரீதியில் கணக்கிட்டு உள்ளனர். பெரும்பான்மையான காலங்களில் 8% லாபம் கிடைக்காது என்று அனைவருக்கும் தெரியும். இருந்தும் மாநில அரசுகள் மற்றும் நகர் அரசுகள் எவ்வாறு 8% கணக்கிட்டது என்பது வியப்பாக உள்ளதா? அங்கும் நம்மூர் சிட் பண்டு அதிகாரிகள் போல் பலர் தேனொழுக பேசி, புரியாத பொருளாதார மாடல்களையும் கணக்கையும் காட்டி 8% லாபம் பெற்று தரும் வகையில் முதலீடு செய்ய ஆலோசனை தருவதாக பேசி, பணத்தை வாங்கி பெருமளவு கட்டணத்தையும் வசூலித்து விடுவார்கள்.

இதனால் நகர மற்றும் மாநில அரசுகள் தங்கள் வருவாயில் பெருமளவு பென்சனுக்கு மட்டும் செலவிட வேண்டி இருப்பதால் நகர அடிப்படை கட்டமைப்பு வசதி மற்றும் சட்டம் ஒழுங்கு, கல்விக்கான செலவினங்களை குறைக்க வேண்டி வரும். இது அமெரிக்கர்களின் வாழ்க்கை தரத்தில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்த கூடும்.

அரசு பென்சன் உதவியையோ, முதியோருக்கான மருத்துவ உதவியையோ குறைத்து பற்றாக்குறையை சரி படுத்த முடியாதா? என்று கேள்வி கேட்க தோன்றும்.ஆனால் தற்போது 17% சதமாக இருக்கும் முதியோர்களின் ஓட்டு சிறிது சிறிதாக அதிகரித்து 26% கடக்க உள்ளது. மேலும் இளைஞ்சர்கள் முதியோர்களை விட அதிக அளவில் ஓட்டளிக்க செல்வார்கள். எனவே முதியவர்களுக்கான சலுகையை குறைத்து அவர்களின் கோபத்துக்கு ஆளானால் ஆட்சியை இழக்க வேண்டும்.

இந்த பேபி பூமர்ஸ் மக்கள் முதலாளித்துவத்தால்(1970 - 1990) நன்மை அடைந்தவர்கள். எனவே அவர்களின் மனதில் என்றுமே குடியரசு கட்சியின் பால் ஈர்ப்பு அதிகம். அவர்களின் மக்கள் தொகை பெருக்கம் குடியரசு கட்சிக்கு நன்மை தரும். ஆனால் தற்போது முதியவர்களின் சலுகைக்காக போராடுவது ஜனநாயக கட்சி தான். இந்த உண்மையின் தாக்கம் முதலாளித்துவத்தின் அபிமானத்தை விட அதிகமானால் அரசியல் கள நிலை மாறலாம்.மேற்சொன்ன காரணங்களால் அரசின் பற்றாக்குறை கட்டு படுத்த முடியாத அளவு அதிகமானால் அமெரிக்காவின் வல்லரசு நிலையும், பிற நாட்டின் மீதான தலையீடும் குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது.

அமெரிக்காவின் மற்றொரு பிரச்சனை அது வாங்கியுள்ள கடனுக்கு கட்ட வேண்டிய வட்டியின் மதிப்பு. தற்போதைய அமெரிக்க அரசின் கடனின் மதிப்பு $12 டிரில்லியன் ஆகும். தற்போது அந்த கடனுக்கு அது வட்டியாக செய்ய போகும் செலவு சுமார் $202 பில்லியன். 2019ம் ஆண்டு அமெரிக்கா தன் கடனுக்கு வட்டியாக கொடுக்க வேண்டிய மதிப்பு $700 பில்லியனை தாண்டும் என்று கணக்கிட பட்டுள்ளது. $700 பில்லியன் என்பது தற்போது அமெரிக்கா கல்வி, ஆற்றல், பாதுகாப்பு மற்றும் ஈராக்,ஆப்கானிஸ்தான் போருக்கு செலவிடும் பணத்தை விட அதிகம்.

இந்த தாக்குதலிலிருந்து அமெரிக்காவை தாக்க ஒரு வலிமையான ஆயுதம் உள்ளது. அதுதான் அமெரிக்க Federal Reserve Printing Press.தற்போது அமெரிக்க மத்திய அரசின் கடன் பிரச்ச்னையை தீர்க்கும் Fed, மாநில வங்கிகளை காக்குமா என்பது கேள்விகுறி. தனியார் வங்கிகளையும், பன்னாட்டு கம்பெனிகளையும் நிதி நெருக்கடியிலிருந்து மீட்டு கொடுத்த மத்திய ரிசர்வ் வங்கி தற்போது நிதி பிரச்ச்னையில் சிக்கி தவிக்கும் மாநில அரசுகளை காப்பாற்ற விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார்.

அடுத்த 10 - 20 ஆண்டுகளில் நடை பெற போகும் பொருளாதார மாற்றங்கள் தான் இதற்கு பதில் சொல்லும். 1970 வரை டாலருக்கு இணையாக தங்கத்தை வெளி நாடுகளுக்கு கொடுக்க ஒப்புதல் தெரிவித்திருந்த அமெரிக்க அரசு, நிக்சன் ஜனாதிபதியாக இருந்த போது அவ்வாறு தர முடியாது என்று உலகுக்கு அறிவித்திருந்தது .

--

8 comments:

ஜீவன்சிவம் said...

எப்படி எல்லாம் யோசிக்கறிங்க..

எண்ணத்துப்பூச்சி said...

சதுக்கபூதம்,

வித்தியாசமான அலசல்.
அமெரிக்காவின் எதிர்காலம் இனி சீனாவிடம்
கையேந்தும் நிலை கூட வரலாம்.

நட்சத்திர வாழ்த்துகள்.

சதுக்க பூதம் said...

வாங்க ஜீவன்சிவம்,எண்ணத்துப்பூச்சி

//அமெரிக்காவின் எதிர்காலம் இனி சீனாவிடம்
கையேந்தும் நிலை கூட வரலாம்//
சீனாவின் வளர்ச்சியின் முக்கிய பகுதியை பன்னாட்டு கம்பெனிகள் அறுவடை செய்ய முயலும். அதை சீனா எவ்வாறு எதிர் கொள்ள போகிறது என்பதை தான் மிக முக்கியம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்படி சமீபத்தில் பணி ஓய்வு பெற்று மருத்துவ உதவியை எதிர்பார்த்திருக்கும் சில அமரிக்க முதியவர்களின் ப்ளாக் களையும் அங்கே வந்திருந்த பின்னூட்டங்களை நான் படிக்க நேர்ந்தது.. உங்கள் கூற்று உண்மை.

சதுக்க பூதம் said...

நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi

Anonymous said...

The same problem is being faced by Japan also.
The retirement age had been increased to 65 and government is considering to increase it to 67 or so.
In addition, the population growth is almost zero, since younger generation Japanese , lately , seem to have disinterested in marriage.
Japan is facing another problem where they will not have employable population which will be disastrous for their economy.
I believe that Japan's problems will be more severe compared to USA in the years to come.

K.G.Subbramanian

சதுக்க பூதம் said...

வாங்க K.G.Subbramanian.நீங்கள் கூறுவது உண்மை. அமெரிக்கா வரும் காலத்தில் எதிர் கொள்ள போகும் பிரச்ச்னையை ஜப்பான் இப்போதே எதிர் கொள்கிறது. அதுமட்டுமன்றி அமெரிக்கா இமிக்ரேசன் மூலம் தன் மக்கள் தொகையை ஓரளவு பெருக்கி உள்ளது. ஆனால் ஜ்ப்பான் அவ்வாறு செய்யவில்லை.

Suppa S said...

Japan is already facing this issue. India will also face this issue in a much later stage(dont know hw our leaders are gng to handle this). வளர்ச்சி எனபது ஒன்றும் ஒரு வழி பாதை அல்ல, விரிந்து அதன் விரிவலேயே சுருங்கும்.

இதை சரி செய்ய போர் கூட ஒருகுருக்கு வழிதான். முன்றாம் உலக போர் அல்ல "பொருளதார போர்"

நல்ல பதிவு - நன்றி