Saturday, January 29, 2011

ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம் - இந்தியாவின் கனவு தகர்ந்தது?

கடந்த சில வருடங்களாக ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்திர உறுப்பினராக பல வகையிலும் இந்தியா முயற்சி செய்வது அனைவரும் அறிந்ததே. தற்போது பாதுகாப்பு சபை நிரந்திர உறுப்பினர் நாட்டின் தலைவர்களை எல்லாம் ஒவ்வொருவராக அழைத்து அந்நாட்டின் பொருளாதாரம் உயர அவர்களிடம் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்கி குவிக்க, இந்திய அரசாங்கம் ஒப்பந்தம் இடுவது அனைவருக்கும் தெரிந்ததே.

அது மட்டுமன்றி இந்திய தொழில் துறைகளை/ நிதி துறைகளை ஒட்டு மொத்தமாக அழித்து மேலை நாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவை தாரை வார்த்தால் தான் இந்தியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்திர இடம் கிடைக்கும் என்று கூறி அதற்கான முயற்சியிலும் இறங்கி வருகிறது.

அந்த முயற்சிகளுக்கு எல்லாம் இப்போது பெரிய ஆப்பு விழ போவதாக செய்திகள் வந்துள்ளது. தன் நாட்டு பிரஜைகளை ஒரு குட்டி தீவு நாட்டால் வெளிபடையாக கொன்று குவிக்கும் போது, அதை தடுக்க திரணியற்ற ஒரு நாட்டுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கொடுத்தால் அது ஐ.நா பாதுகாப்பு சபையையே கேலி கூத்தாக்கும் என்று மேலை நாடுகள் நினைப்பதால் இந்த முயற்சிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

தன் நாட்டு அப்பாவி மீனவர்களை காக்க திரணியற்ற ஒரு நாட்டுக்கு உலக நாட்டமை பதவி கொடுப்பது பொருத்தமாக இருக்காது என்ற மேலை நாடுகளின் வாதங்களை எதிர் கொள்ள வழி இல்லாமல் இந்திய அரசும் திணறுவதாக தெரிகிறது.

பின் குறிப்பு: இந்த செய்தி உண்மையானால் மட்டுமே மன்மோகன் சிங் இந்திய மீனவர்களை காக்க எதாவது முயற்சி செய்வார்.வட நாட்டு மீடியாக்களும் தமிழர்களின் உயிருக்கு சிறிது மதிப்பு கொடுத்து இந்த பிரச்ச்னை பற்றி மீடியாவில் பெரிய செய்தியாக எழுதும்


--

4 comments:

சேக்காளி said...

நம்மள பாதுகாக்க எப்ப்டியெல்லாம் யோசிக்க வேண்டியதாயிருக்கு.நம்ம பொளப்பு இப்படியா ஆகணும்?.

சதுக்க பூதம் said...

வாங்க சேக்காளி .னமக்கு நாமே பரிதாப பட்டு கொள்ள வேண்டியது தான்

ராஜ நடராஜன் said...

//தன் நாட்டு அப்பாவி மீனவர்களை காக்க திரணியற்ற ஒரு நாட்டுக்கு உலக நாட்டமை பதவி கொடுப்பது பொருத்தமாக இருக்காது என்ற மேலை நாடுகளின் வாதங்களை எதிர் கொள்ள வழி இல்லாமல் இந்திய அரசும் திணறுவதாக தெரிகிறது.//

மீனவன் சாவதையே பார்த்து கோபப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவின் நாட்டாமை பற்றி யோசிக்கவில்லை.

பெரியண்ணன் இந்தியாவுக்கு ஆதரவுன்னு கேள்வி.

சதுக்க பூதம் said...

//பெரியண்ணன் இந்தியாவுக்கு ஆதரவுன்னு கேள்வி.

//
வாங்க ராஜ நடராஜன்
சிறு வயதில் ஒரு கதை கேள்வி பட்டிருக்கிறேன். குதிரை வண்டியில் குதிரையை கட்டிய பின் அதன் வாய்க்கு சிறிது தொலைவில் சிறிது புல்லை கட்டி தொங்க விட்டு விட்டு விட்டு குதிரையை ஒட்டுவார்கள் என்று. அந்த புல்லை பிடிக்க என்று குதிரை ஓடிகொண்டே இருக்கும். வண்டியும் நகர்ந்து கொண்டே இருக்கும். பயணம் முடியும் வரை அது புல்லை பிடிக்க முடியாமலேயே இருக்கும். அவ்வாறு பெரியண்ணாவின் ஆதரவு இல்லாமல் இருந்தால் சரி தான்.இந்தியாவுக்கு அந்த பதவி கிடைத்தால் கூட மக்களுக்கு எந்த பயணும் இருக்க போவது இல்லை. உள் நாட்டுக்கு ஒரு நீரா ராடியா போல் சர்வதேச லாபியிஸ்டுகளுக்கு தான் லாபம்.