கடந்த வாரம் இரு வேறு செய்தி தாள்களில் வந்த இரு செய்திகள் அனைவரின் சிந்தனைக்கும் உரியது.
முதலில் நியுயார்க் டைம் செய்திதாளில் வந்த இந்த செய்தி பற்றி பார்ப்போம்.
இந்த செய்தி அமெரிக்கா சிறந்த நாடுகள் வரிசையில் 11ம் இடத்துக்காக தள்ள பட்டதாக நியீஸ் வீக் பத்திரிக்கையில் வந்த செய்தியை பற்றிய பிரெட்மேன் இன் அலசல். அமெரிக்காவின் இந்த பின்னைடைவுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் பள்ளியிலேயிருந்து மாணவர்கள் படிப்பின் ஆர்வம் குறைந்து வருவது தான் என்கிறார்.மேலும் அவர் முக்கிய காரணமாக கூறுபவை
the decline in U.S. education, competitiveness and infrastructure, as well as oil addiction and climate change.
அவர் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு போட்டியாக இந்தியா, சீனா வருவதற்கான காரணங்கள் பற்றி பின் வருபவற்றை குறிப்பிடுகிறார்
China and India have been catching up to America not only via cheap labor and currencies. They are catching us because they now have free markets like we do, education like we do, access to capital and technology like we do, but, most importantly, values like our Greatest Generation had
இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது இந்தியாவின் கல்வி வளர்ச்சி பற்றியது.முதலாவதாக இந்தியாவில் பல்கலை கழக மற்றும் உயற் கல்வி கூடங்களின் தரம் பற்றி பார்ப்போம். மேலை நாடுகளின் இந்த வேகமான வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பல்கலை கழகங்கள். அனைத்து அடிப்படை ஆராய்ச்சிகளும் அங்கு பல்கலை கழகங்களில் தான் நடைபெருகிறது. அடிப்படை ஆராய்ச்சியில் கண்டு பிடிக்க பட்ட உண்மைகளை கொண்டு அதை சந்தை படுத்தலுக்கு தேவையான பொருளாக மாற்றும் ஆராய்ச்சியும் பல்கலை கழகங்களில் தான் நடக்கும். அதற்கு பின் தனியார் கம்பெனிகள் உள் புகுந்து சிறிது முதலீடு செய்து மீண்டும் பல்கலை கழகங்களின் உதவியோடு ஆராய்ச்சியை தொடர்ந்து சந்தைக்கு உரிய பொருளாக கொண்டு வருவார்கள். எனவே பல்கலை கழக ஆராய்ச்சி என்பது முதலாளித்துவத்தின் முதுகெலும்பு. இந்தியாவிலோ முதலாளித்துவ பாதை தான் ஏற்றது என்று தேர்ந்தெடுத்தாலும் பல்கலைகழக ஆராய்ச்சியை உயர்த்துவது பற்றி யாருமே சிந்திப்பது இல்லை.
இங்கு உள்ள மத்திய கல்வி அமைச்சர்களின் குறிக்கோள் எல்லாம் எவ்வாறு இந்தியை அனைத்து மாநிலங்களிலும் புகுத்தி, ஆங்கிலத்தை ஒழித்து ஒட்டு மொத்த இந்திய கல்வி கட்டுமானத்தையே சீரழிப்பது என்பது பற்றி தான் உள்ளது.
எதோ வளர்ந்த நாடுகள் தான் பல்கலை கழக ஆரய்ச்சியில் முன்னேற்றம் செலுத்துகிறது என்று இல்லை. சீனா பல்கலை கழக ஆராய்ச்சிக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு 5 வருடத்துக்கு 1 மில்லியன் டாலர் என்று நிதி உதவி அளித்து சீனா பல்கலைகழகத்துக்கு அழைக்கிறது. அவர்களுக்கு கொடுக்க படும் டார்கெட் எல்லாம் சயின்ஸ், நேச்சர் போன்ற உயர் தர அராய்ச்சி இதழ்களில் கட்டுரை வெளியிட வேண்டும் என்பதே.அவ்வாறு கட்டுரை வெளியிட இல்லை என்றால் 5 வருடத்துடன் அவர்களுடைய கான்ட்ராக்ட் விலக்க படும்.மிக பெரிய விஞ்ஞானிகள் அங்கு சென்று ஆராய்ச்சி செய்வதால் அங்கு தரமான ஆராய்ச்சி ஆரம்பிக்க படுவதுடன், பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சி திறன் அதிகமாகிறது. பிறகு ஒவ்வோரு மாணவனும் தரமான மற்றும் லேட்டஸ்டான ஆரய்ச்சி செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.
இந்தியாவின் பல்கலை கழகங்களில் பல மாணவர்கள் நல்ல தரமான ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று சேர்கிறார்கள். ஆனால் பல்கலைகழகங்களில் உள்ள பேராசிரியர்களின் அறிவோ 40 வருட பின் தங்கியதாக உள்ளது. அவர்கள் கொடுக்கும் ஆராய்ச்சி தலைப்பும் ஒன்றுக்கும் உதவாத தலைப்பாக இருக்கும். பல்கலைகழகங்களில் நடக்கும் அரசியலில் மாணவர்கள் வீழ்ந்து கடைசியில் அந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள். தற்போது மத்திய அரசு ஆராய்ச்சிக்கு என பல கோடி செலவு செய்தாலும், பலன் மிக குறைவே. அந்த பிராஜெக்ட் வாங்கவே சில சமயம் நீங்கள் திறமையான அரசியல்வாதியாக இருக்க வேண்டும். இந்திய பல்கலை கழக ஆராய்ச்சி பற்றிய என்னுடைய அனுபவத்தை தனி பதிவாக இடுகிறேன்.
அடுத்தது கல்லூரிகளில் கல்வி தரம். 3 முதல் 6 ஆண்டுகளுக்கு மாணவர்கள் கல்வி கற்க கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். அங்கு கொடுக்க படும் கல்வியின் தரம் மிக கவலை கூறியதாக உள்ளது. மேலை நாடுகளில் ஒரு பாடத்தில் மேல் படிப்பு வரை படித்தால் உண்மையிலேயே அவருக்கு அந்த பாடத்தில் நுண்ணிய அறிவு இருக்கும். ஆனால் இந்தியாவிலோ கல்லுரி முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு அந்த பாடத்தில் இருக்கும் அறிவு மிக மிக குறைவு. பாடத்தின் சிலபஸ் எல்லாம் மிக நன்றாகவே உள்ளது. ஆனால் கல்வி தரம் மிக குறைவாக உள்ளது. லோக்கல் கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் ,பள்ளி கூடத்தில் படிக்கும் போது அந்த பாட புத்தகத்துக்கு உள்ள தரத்தை விட குறைவாக ஒவ்வொரு பேப்பருக்கும் புத்தகம் போட்டு விடுகிறார்கள். மாணவர்களும் அதை மனபாடம் செய்து விட்டு சென்று வாந்தி எடுத்து விடுகிறார்கள். மேலை நாடுகளில் உள்ள மிக பெரிய பேராசிரியர்கள சிந்தனையை தூண்டும் விதமாக புத்தகங்கள் போடுகிறார்கள். அதை வாங்கி யாரும் படிப்பது கிடையாது. மேலும் ஆராய்ச்சி ஜேர்னல்கள் போன்றவற்றை புரட்டி பார்த்து படிப்பது என்பது விரல் விட்டு எண்ணும் நிலையில் தான் உள்ளது(அவை கல்லூரிகளில் வர வழிப்பதே குதிரை கொம்பு)
பல்கலை கழக ஆராய்ச்சி இப்படி என்றால் மற்றொரு முக்கிய பிரச்சனை கிராமபுற பள்ளிகளின் கல்வித்தரம்.கிராமபுறங்களில்(முக்கியமாக அரசு பள்ளிகளில்) உள்ள படிக்கும் பெருபான்மையான மாணவர்களின் கல்வி தரம் மிக மோசமாக உள்ளது. தற்போது தமிழகமெங்கும் கல்லூரிகள் பல அரசு மற்றும் தனியார் துறைகளில் தொடங்க பட்டதாலும், ஏழை மக்களுக்கு பள்ளி இலவச கல்வி கிடைப்பதாலும், அரசு உணவு பொருட்களை இலவசமாக வழங்குவதால் ஏழைமக்களின் சேமிப்பு மூலம் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கு செலவிட முடிவதாலும், அதை விட முக்கியமாக ஏழை மக்கள் தங்கள் குழைந்தைகளின் படிப்பு மற்றும் வளர்ச்சிக்கு பல தியாகங்களை செய்வதாலும் கிராம புரங்களிளிருந்து ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை கல்லூரி படிப்புக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது. அவர்களை பள்ளி படிப்பில் வலுவான கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டிய கிராம புற பள்ளிகள் தன் கடமையிலிருந்து தவறுகின்றனர். இதற்கு பல காரணம் உள்ளன, ஆசிரியர்களின் அலட்சியம்,முக்கியமாக ஆசிரியர்கள் நியமிக்க படாமல் இருப்பவை, அதை விட முக்கியமாக ஒவ்வொரு வகுப்பிலும் ஏதும் படிக்காமலேயே பாசாகி வந்து விடலாம் என்ற நிலமை. கடுமையான கஷ்ட்டதிற்கு நடுவில் தன் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புகிறார்கள் பெற்றோர். ஆனால் கல்வி தரத்தில் போட்டி போட முடியாததால் அவர்களால் நல்ல வேலைகளுக்கும் போட்டியிட்டு செல்ல முடியாத நிலை.அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடின் பயனையும் முந்தய தலைமுறையில் முன்னேறிய பெற்றோரின் பிள்ளைகளே அனுபவிக்கும் நிலை. நேற்று பல்கலை கழகத்தில் ஆசிரியராக இருக்கும் என் நண்பரிடம் பேசி கொண்டு இருக்கும் போது அவர் தற்போது கிராம புறத்திலிருந்து வந்திருக்கும் மாணவர்களின் தரம் பற்றிய கூறிய செய்திகள் மிக அதிர்ச்சியாக இருந்தது(அவர் கிராம புற மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்று, கிராம புற மாணவர்களுக்கு உதவ பல முயற்சி எடுப்பவர். ஆனால் அவர் உதவ முன் வந்தாலும் அதை ஏற்று முன்னேற 90% மணவர்கள் தயாரக இல்லை என்பது கொடுமை)
இந்த நிலை தொடர்ந்தால் ஒரு புறம் கல்வியின் தரம் குறைவதுடன் மறுபுறம் ஏழை மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையா? என்று எண்ண தோன்றக்கூடிய நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை.
மற்றொரு செய்தி பினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்திருக்கும் இந்த செய்தி. இது சீனாவின் சமீபத்தய பொருளாதாரம் மற்றும் வணிப ரீதியான செயல்பாடுகள் பற்றியது.
சீனா தற்போது மூல பொருட்கள் அதிகம் உள்ள தென் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பெரும் அளவு மூல பொருட்கள் சார்ந்த துறைகளில் முதலீடு செய்கிறது.இதில் குறிப்பிட தக்க நாடு பிரேசில். உலகளவில் மூலபொருட்கள் உற்பத்தியில் முக்கிய இடத்தை வகிப்பது பிரேசில். இங்கு தற்போது மூல பொருட்களோடு பெட்ரோலும் பெருமளவு கண்டு பிடிக்க பட்டுள்ளது.கடந்த ஆண்டு வரை 100 மில்லியனுக்கும் குறைவாக இருந்த பிரேசிலுக்கான சீன முதலீடு இந்த ஆண்டு 10 பில்லியனை தாண்டும் என்று எதிர் பார்க்க படுகிறது.உதாரணமாக சீனா, பிரேசிலின் எண்ணெய் கம்பெனியான பெட்ரோபிராசில் 10 பில்லியன் டாலரும் , இரும்பு கம்பெனியில் 1.25 பில்லியனும் முதலீடு செய்துள்ளது.மூல பொருட்களின் முதலீடு மட்டுமல்ல. இரயில் போக்குவரத்து, கப்பல் கட்டுமானம், மின் உற்பத்தி நிலையங்கள் என உயர் தொழில்நுட்ப துறைகளிலும் தென் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சீனாவிடம் அதிகம் இருக்கும் அன்னிய செலாவனி கையிருப்பு இதற்கு பெருமளவில் கை கொடுக்கிறது. சீனா அமெரிக்க பாண்டுகளில் மட்டும் முதலீடு செய்து வளர்ந்த நாடுகளை மட்டும் நம்பி இருக்காமல் வளரும் நாடுகளின் தொழிற்துறையிலும் தற்போது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.
கீழ் காணும் வர்த்தக ஒப்பந்தத்தை பார்த்தால் இரு நாடுகளுக்கான வர்த்தகம் எப்படி நடக்கிறது என்று புரியும்.வேல் எனப்படும் பிரேசிலின் இரும்புதாது வெட்டி எடுக்கும் கம்பெனி சீனாவை சேர்ந்த இரு வங்கிகளிடமிருந்து 1.23 பில்லியன் கடன் வாங்க உள்ளது. இந்த கடன் மூலம் அது 12 மிக பெரிய கார்கோ கப்பல்களை வாங்கும். அந்த கப்பல்கள் சீனாவில், சீன தொழிலாளிகளால் தயாரிக்க படும். அவ்வாறு வாங்கிய கப்பல் பிரேசிலில் உற்பத்தி செய்த இரும்பை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய உபயோக படுத்தபடும்.
தற்போது உலகளவில் டாலர் அடிப்படையில் நடக்கும் வர்த்தகத்தை சிறிது சிறிதாக குறைத்து சீனா தன்னுடைய நாணயத்தின் அடிப்படையில் நடத்த முயற்சிகள் எடுக்க தொடங்கி உள்ளது. உலகளவில் பெருமளவில் மூல பொருட்களை உற்பத்தி செய்யும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளும், உலகளவில் உற்பத்தி தொழிலில் முதலிடத்தில் இருக்கும் சீனாவும் தன் வர்த்தகத்தை முழுமையாக டாலரில் நடத்தாமல் சீனாவினுடைய நாணயத்தில் நடத்தினால் அதன் விளைவு உலக பொருளாதாரத்தில் மிக பெரியதாக இருக்கும்
சீனாவின் உற்பத்தி துறை வளர்ச்சி பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. இந்திய உற்பத்தி துறை தொழில் சீனாவுடன் போட்டி போட்டு கொண்டு வளர வேண்டிய நிலையில் உள்ளது. உற்பத்தி தொழிலுக்கு முக்கிய தேவை மனித உழைப்பு, மூல பொருட்கள் மற்றும் மின் மற்றும் எரிசக்தி. மனித உழைப்பு இந்தியா மற்றும் சீனாவில் எளிதாக கிடைக்கும். மின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியா எவ்வாறு "தெளிவான" திட்டமிடலுடன் செயல் படுத்துதல் உள்ளது என்பது பற்றி நான் கூற வேண்டிய அவசியம் இல்லை. உற்பத்தி தொழிலுக்கான அடிப்படை தேவையான் மூல பொருட்களை அடைய சீனா எவ்வாறு முயற்சி செய்கிறது என்று மேல் சொன்ன செய்தியில் பார்த்தோம். இந்தியா அது போன்ற பெரிய முயற்சிகளை எடுக்க வில்லை என்றால் வருங்காலத்தில் மூலபொருட்கள் பற்றாக்குறையால் அனைத்து தொழில்களும் சீனா நோக்கி செல்ல தொடங்கிவிடும்.ஏற்கனவே பல தொழில் துறைகளில் சீனா மூல பொருட்கள் சப்ளையை இந்தியாவிற்கு தடுப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.'
இந்தியாவில் தொழில்மயமாக்கள் அறைகுறையாக நடைபெற்று பின் மீண்டும் உற்பத்தி தொழிற்துறை நலிவடைந்தால் என்ன நடக்கும் என்று பார்ப்போம். தொழில்மயமாக்கள் நடை பெரும் போது கிராமத்தில் உள்ள சிறு ,குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று நகர் நோக்கி தொழிற்சாலைகளில் வேலை தேடி வந்து இருப்பார்கள். விவசாய கூலி தொழிலாளர்களும் நகர் நோக்கி வந்திருப்பார்கள். இதனால் கிராமபுரங்களில் நில உடமையின் அளவு அதிகமாகி, விவசாயியின் கையிருப்பு நிலத்தின் அளவு அதிகமாகும். கூலி தொழிலாளர்கள் கிடைப்பதும் அரிதாகும். தற்போது தமிழக கிராமத்தில் அந்த நிலை வர தொடங்கை உள்ளது. அதனால் விவசாயம் இயந்திர மயமாகும். அங்கு தொழிலாலர்களின் தேவையும் இருக்காது.சில காலம் கழித்து தொழில்துறை நலிவடைந்து தொழிலாளிகள் மீண்டும் கிராமத்திற்கு விவசாயம் செய்ய சென்றாலும் அங்கு வழி இருக்காது.அதன் சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் கடுமையானதாக இருக்கும்.
ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களின் பெரும்பாலோனோரை தொழிற்துறைக்கு கொண்டு செல்வதன் மூலம் தான் இந்தியாவின் வறுமையை ஒழிக்க முடியும் என கூறி உள்ளார். தொழிற் துறை வளர்ச்சி பிற்காலத்தில் இந்தியாவில் நிலையாக இருக்க தேவையான மூல பொருட்கள் சப்ளை பற்றியோ , மின் மற்றும் எனர்ஜி தேவையை சரி செய்வது பற்றியோ அவர் தெளிவாக சிந்தித்து செயல் பட்டு கொண்டிருக்கிறாரா?
--
10 comments:
good article sir
//இந்த நிலை தொடர்ந்தால் ஒரு புறம் கல்வியின் தரம் குறைவதுடன் மறுபுறம் ஏழை மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையா? என்று எண்ண தோன்றக்கூடிய நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை//
then பிரெட்மேன் இன் inthiyaavai patriya அலசல் thapaa???
// தொழிற் துறை வளர்ச்சி பிற்காலத்தில் இந்தியாவில் நிலையாக
இருக்க தேவையான மூல பொருட்கள் சப்ளை பற்றியோ , மின் மற்றும் எனர்ஜி தேவையை சரி செய்வது பற்றியோ அவர் தெளிவாக சிந்தித்து செயல் பட்டு கொண்டிருக்கிறாரா?
//
sinthikka veendiya vishayam than
Oruvan
பாராட்டுக்கு நன்றி சிங்கம்
//
//இந்த நிலை தொடர்ந்தால் ஒரு புறம் கல்வியின் தரம் குறைவதுடன் மறுபுறம் ஏழை மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையா? என்று எண்ண தோன்றக்கூடிய நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை//
then பிரெட்மேன் இன் inthiyaavai patriya அலசல் thapaa???
//
வாங்க ஒருவன். பிராட்மேன்னின் அலசல் தவறு என்று கூறவில்லை. ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை கஷ்டபட்டு படிக்க வைத்து நல்ல வேலை கிடைக்கவில்லை என்றால் படிக்க வைப்பதால் எந்த லாபமும் இல்லை என்று முடிவு செய்துவிடுவார்கள் என்று கூற வந்தேன்.
ரொம்ப அற்புதமான பதிவு . ஒரே நாளில் உங்களுடைய எல்லா கட்டுரையும் படித்து விட்டேன் . மனம் நிறைந்த பாராட்டுகள் .
அருமையான பதிவு.
பாராட்டுக்கு மிக்க நன்றி மண்டையன் மற்றும் அகோரி
mattamana post and mosamana thoughts you are 100% capatalist and imperialist
//mattamana post and mosamana thoughts you are 100% capatalist and imperialist//
கேப்பிடலிஸம் என்பது உலகெங்கும் திணிக்க பட்டுவிட்டது. அதன் தீய விளைவுகளை மட்டும் பேசி பயனில்லை. இனி கேபிடலிசம் கொண்டு எந்த அளவு அனைத்து மக்களுக்கும் அடிப்படை தேவை சென்றடைய வேண்டும் என்று சிந்திப்பது முக்கியம்.
கம்யூனிஸ்டுகளும் இனி சீனாவின் வளர்ச்சி தான் காம்யூனிசத்தின் வளர்ச்சி என்ற சிந்தனையில் இல்லாமல் இந்தியாவின் ஏழை மக்களின் உண்மையான வளர்ச்சிக்கு எது தேவை என்று சிந்தனை செய்ய வேண்டும்.
இந்தியாவின் மக்கள் தொகை மிக வேகமாக வளர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு சிறு பிரச்சனை என்றாலும் அது அது பல்லாயிர உயிர் சம்பத்தபட்டது.
ஏழை மக்களின் கல்வி வளர்ச்சி என்பது வளர்ச்சியின் அடிப்படை என்பது என் கருத்து. மாவோவின் கல்சுரல் ரெவொல்யூசன் என்பது போன்ற புரட்சி செய்து அனைத்து பள்ளி கல்லூரிகளையும் அழிப்பது என்பது இந்தியாவை அழி பாதைக்கு கொண்டு செல்லும் என்பது என் கருத்து.
சீனாவின் வளர்ச்சி தான் கம்யூனிஸ்த்தின் வளர்ச்சி என்று எண்ணக் கூடிய கம்யூனிஸ்டுகள் இப்போது யாரும் இ ந்தியாவில் இல்லை உள்ளதை தக்க வைத்துக்கொள்ளவே அவர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இந்தியா ஆளும் வர்க்கம் மற்றும் பி ஜே பி அடிக்கடி சொல்லிவரும் கருத்துகளை நீங்கள் மறு ஒளிபரப்பு செய்து உள்ளீர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளை ஒரு குறிப்பிட அள்வுக்கு நிறைவு செய்து விட்டடு மக்கள் சீனம் முதலாளித்துவ பாதையை தேர்வு செய்து உள்ளது ஒரு கால கட்டத்தில் அது நிகரமையும் தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது அதை ஏன் நாம் முன் கூட்டி நிராகரிக்கவேண்டும் இந்தியாவில் செய்தியே வேறு உழவரகளை , தொழிலார்களை தெரிந்தே , திட்டம் இட்டே சுரண்டி வருகீன்றனர் அமெரிக்காவிற்கு மாற்றாக இல்லை ,அதன் அடிவருடியாக் இருப்பதே அதன் நோக்கம ஆகும் . மேலும் ஒரு சிக்கலான தேசிய இன அமைப்பை உடைய இந்திய அதைப், பற்றி சீறிதளவும் சிந்திகாமல் வல்லரசக கனவு காணுவது வேடிக்கை
மாவோவின் கலாசரப்,புரட்சிப்,பற்றிய கருத்துகள் தேவை அற்றது .இ.ந்தியாவில் அப்படிஏதும் நடதுவிடும் என்று பயப் பட வேண்டாம் ஆளும் வர்க்கங்கள் திறமாக அமர்ந்திருக்கின்றனர் ஆனால் அது சீனத்தில் மறு வடிவு எடுத்து வருகிறது மாணவர்கள் கிராமங்களில் பணி,புரிய அனுப்பப்;படுகிறார்கள் அது தேவையான ஒன்று. இந்தியாவில் படித்துவிட்டு நான் அமெரிக்கணுக்குத்தான் சேவை செய்வேன் என்று கூறும் மருத்துவ மாணவர்களை கிராமப்,புறங்க்ளுக்கு எப்படி அனுப்புவது என்று தெரியாமல் அரசு விழித்துக் கொண்டிருக்கிறது அல்லது அப்படடி நடிக்கிறது
துரை இளமுருகு ilamurugand@gmail.com.
http// nunmaipathippagam.blog
Post a Comment