Monday, August 31, 2009

சீனாவின் தூண்டிலில் மத்திய அமைச்சர் கபில் சிபல்

இந்தி தெரியாத மக்கள் எல்லாம் இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் தேச விரோதிகளாக உள்ளனர். இதை கூறுவது ஏதோ R.S.S தலைவர்களோ அல்லது முலயாம் கட்சியினரோ இல்லை. சோசியலிச கட்சியாக தன்னை காட்டி கொள்ளும் காங்கிரஸ் தான். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது அ.தி.மு.க இல்லை. இந்தி எதிப்பு போரில் பல்லாயிரம் பேர் சிந்திய ரத்தத்தில் வளர்ந்த தி.மு.க.

கபில் சிபல் கூறியதை பாருங்கள்.
All children are not fluent in Hindi as they are in their mother tongues. Hindi is necessary for students to integrate with the rest of the country.

இந்தி தெரிந்தால் தான் நீங்கள் தேசிய நீரோட்டத்தில் "Integrate" ஆவதாக ஒத்து கொள்வீர்களா என்ன?. அது மட்டுமல்ல. இந்தியா "Knowledge Economy" ஆக வந்த பிறகு ஆங்கிலத்தை எடுத்து விட்டு இந்தியை இந்தியா முழுதும் திணிப்பார்களாம். மற்ற மொழி எல்லாம் வளர கூடாதாம். இந்தி தான் இந்தியா முழுதும் ஏற்று கொள்ள பட வேண்டிய மொழியாக இருக்க வேண்டுமாம்.

//"Now the lingua franca is English for professionals. When we become producers of knowledge then we can set our language as the lingua franca," Sibal said.
//
இது என்ன நம்முடைய(our) மொழி. உங்களுடைய மொழி என்று சொல்லி கொள்ள வேண்டியது தானே.இதை கடுமையாக எதிர்க்காமல் பதவிக்கும் பணத்திற்கும் அடிமை ஆகி உள்ள கட்சிகள் தயவு செய்து தங்களை திராவிட கட்சிகள் என்று சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

இலங்கையில் தமிழர்கள் கொல்ல பட்ட போது அது வெளியுறவு கொள்கையை பாதிக்கும் என்ற பெயரில் அமைதியாக இருந்தீர்கள். இந்த அமைதிக்கு என்ன காரணம்?.

பா.ஜ.க வாக இருந்தாலும் சரி. காங்கிரசாக இருந்தாலும் சரி. கடிசியில் இந்து-இந்தி- இந்தியாவில் வந்து நிற்கின்றனர்.தமிழர்களும் தொலை நோக்கி பார்வையில் சிந்திக்க வேண்டிய தருணம் விரைவில் வந்து விடும் என்றே தோன்றுகிறது.

இதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? சீனா இந்தியாவை 25 துண்டாக்க வேண்டும் என்று திட்டமிடுவதாக செய்திகள் வந்தன. நம்ப ஊர் அரசியல்வாதிகள் கபில் சிபல் போல் இருந்தால், சீனா கஷ்டபட்டு இந்தியாவை உடைக்க வேண்டிய தேவையே இருக்காது. தானாகவே அது நடக்கும் .

--

12 comments:

ttpian said...

தமிழன் எப்போதுமே இந்தியனாக இருக்க முடியாது!
இருக்கும் பட்சத்தில்,மனநலம் குன்றியவர்களாக இருக்கும்!

Thomas Ruban said...

தேவைப்பட்டால் இந்தி தேரிந்துயிருப்பது நல்லதுதான். ஆனால் அதை கட்டாயமாக கற்க வேண்டும் என்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தி எதிப்பு போரில் பல்லாயிரம் பேர் சிந்திய ரத்தத்தில் வளர்ந்த தி.மு.க இதற்க்கு துணை போகக்கூடாது போனால் தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.

//சீனா கஷ்டபட்டு இந்தியாவை உடைக்க வேண்டிய தேவையே இருக்காது. தானாகவே அது நடக்கும்//

எதிரிகள் நாட்டுக்கு வெளியே இருக்கிறார்கள். துரோகிகள் நாட்டுக்கு உள்ளேயே இருக்கிறார்கள்.

நன்றி சார்..

Varun said...

My transliterator is not working. So pardon me for writing this in english.

Here too? Tamil won't die unless people abandon it voluntarily. Did Jews become extinct due to persecution? What is harm in learning Hindi? Just another language? The fact is Hindi people are majority. And tell me honestly. Are tamil school urainadai books interesting? All ten chapters are about the glory of tamil and its great creators.

As Kalki said "Language is body. The meaning is the soul"

Tamil will live long if people stop being so damned sensitive and do constructive things like writing technical tamil text books. I'm sure Mr.Sibal will not ban tamil books or any book for that matter. He merely said Hindi will be made compulsory. Not that Tamil will be outlawed. As long as we teach our kids our mother tongue, its legacy will be safe.

Very disappointed. We produce the best computer engineers, there are so many blogs and sites in tamil, yet people crow about destruction of tamil. Irrational.

Sri Lanka is different. They didn't give us respect. So we fought. In America, they respect our preferences, so we learn their language, their technology and prosper.

சதுக்க பூதம் said...

//தமிழன் எப்போதுமே இந்தியனாக இருக்க முடியாது!
//
அந்த நிலை இன்னும் வரவில்லை என்றே நினைக்கிறேன்

சதுக்க பூதம் said...

//தேவைப்பட்டால் இந்தி தேரிந்துயிருப்பது நல்லதுதான். ஆனால் அதை கட்டாயமாக கற்க வேண்டும் என்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது.
//

வாங்க தாமஸ் ரூபன். இந்தி தேவை படும் போது தெரிந்து கொள்வதில் தவறில்லை. உதாரணமாக வட நாட்டிற்கு சென்று வேலை செய்ய தேவைபட்டால், அங்கு சென்றவுடன் 6 மாதத்தில் கற்று கொள்ளளாம். தற்போது படிக்க வேண்டிய பாடங்கள் பல உள்ளது. அவற்றிற்கு எனர்ஜியை செலவிட்டால் நன்கு முன்னேறலாம். இனி வரும் காலங்களில் மேலை நாடுகளில் மக்கள் தொகை குறைகிறது. எனவே அங்கு படித்த இளைஞ்சர்கள் தேவை படுகிறார்கள். எனவே, வேறு மொழி படிக்க வேண்டும் நினைத்தால் எதாவது ஐரோப்பிய மொழி அல்லது ஜப்பானிய மொழி படிக்கலாம்.

மேலும் வட இந்தியாவில் இருபப்வர்கள் தமிழர்களுக்கு கொடுக்கும் மரியாதையை விட மேலை நாடுகளில் இருப்பவர்கள் அதிகம் மரியாதை கொடுக்கிறார்கள்

Varun said...

//இனி வரும் காலங்களில் மேலை நாடுகளில் மக்கள் தொகை குறைகிறது. எனவே அங்கு படித்த இளைஞ்சர்கள் தேவை படுகிறார்கள். எனவே, வேறு மொழி படிக்க வேண்டும் நினைத்தால் எதாவது ஐரோப்பிய மொழி அல்லது ஜப்பானிய மொழி படிக்கலாம்.//

அதாவது ஹிந்தி படித்து இந்தியாவில் வேலை செய்வதை விட ஐரோப்பிய மொழி படித்து அங்கு செல்வது மேல். அப்படித்தானே? ஆகா என்ன மொழிப்பற்று, நாட்டுப்பற்று. நீங்கள் கூறியது போல் //சீனா கஷ்டபட்டு இந்தியாவை உடைக்க வேண்டிய தேவையே இருக்காது. தானாகவே அது நடக்கும்//

//மேலும் வட இந்தியாவில் இருபப்வர்கள் தமிழர்களுக்கு கொடுக்கும் மரியாதையை விட மேலை நாடுகளில் இருப்பவர்கள் அதிகம் மரியாதை கொடுக்கிறார்கள்//

வடஇந்தியர்கள் ஏன் தமிழர்களை 'மதறாசி' என்று கேலி செய்கிறார்கள்? இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் தானே?

மீண்டும் கூறுகிறேன், ஹிந்தியை கட்டாயபடுத்துவதும் தமிழை தடை செய்வதும் வேறு வேறு விஷியங்கள். தமிழ் இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்று.

சதுக்க பூதம் said...

வாங்க வருண்.
//Tamil won't die unless people abandon it voluntarily. Did Jews become extinct due to persecution? //
இந்தி படிப்பதால் தமிழ் அழிந்து விடும் என்று நான் கூற வரவில்லை. நம்முடைய குழந்தைகளுக்கு நாம் தமிழில் பேசுவதை ஊக்குவித்தால் தமிழ் அழியபோவது இல்லை.

//What is harm in learning Hindi? Just another language? //

நிச்சயமாக இந்தியை அறிந்து கொள்வதில் தவறே இல்லை. ஆனால் தேவை படும் போது இந்தியை தெரிந்து கொண்டால் போதும் என்று தான் கூறுகிறேன். வட நாட்டில் சென்று வேலை செய்தால் 6 மாதத்தில் இந்தி கற்று கொள்ள போகிறோம். அதற்கு ஏன் அதை பாடமாக வைத்து அனைவரையும் படிக்க சொல்ல வேண்டும்.நீங்கள் அடுத்து கூறினீர்களே அந்த காரணத்துக்காக தான் இந்தியை பள்ளியில் கட்டாய பாடமாக்குவதை எதிர்க்கிறேன்.

The fact is Hindi people are majority.
நீங்கள் சொல்லும் இந்த காரணத்துக்காக தான் இந்தி திணிப்பை எதிர்க்கிறேன். மெஜாரிட்டி மக்கள் பேச தெரிந்த மொழி இந்தி என்பதால் இந்தியர் என்ற அடையாளம் பெற இந்தியை அனைவரும் படிக்க வேண்டும். இதன் அடுத்த படி மெஜாரிட்டி மக்கள் பின் பற்றும் மதம் இந்து மதம் என்பதால் இந்துக்கள் தான் இங்கு முதல் தர குடிமக்கள். இதன் அடுத்த படி தான் இந்து-இந்தி-இந்தியா வெறி .

இந்தி படிக்க செலவிடும் எனர்ஜியை வேறு அய்ரோப்பிய மொழி கற்று கொண்டால் அதிக பயனாவாவது இருக்கும். நம்முடைய வாய்ப்புகளை பெருக்கி கொள்ள இந்தி படிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் , நாம் தற்போது இருக்கும் நிலையை விட உயர்ந்த இடத்திற்கு செல்ல தான் முயல வேண்டும். இந்தி கற்று கொண்டு பீகார், உத்தர் பிரதேசம் போவதை விட அய்ரோப்பிய மொழி அறிந்து அங்கு செல்ல நினைப்பதே மேல்.

//Are tamil school urainadai books interesting? All ten chapters are about the glory of tamil and its great creators.
//

தமிழ் புத்தகம் அந்த அளவு ஆர்வமாக இருக்க வில்லை என்றால் அதற்காக இந்தி படிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது என்னால் ஏற்று கொள்ள முடியாது. இந்தி பாடம் மட்டும் அவ்வளவு இன்டரஸ்டிங்காக இருக்கிறதா?

//I'm sure Mr.Sibal will not ban tamil books or any book for that matter.//

தமிழ் புத்தகத்தை தடை செய்வேன் என்று கூறவில்லை. ஆனால் இனி ஆங்கிலம் முழுவதும் எடுத்து விட்டு அனைத்தையும் இந்தியில் கொண்டு வர போவதாக கூறியுள்ளார்.

இதற்கு என்ன அர்த்தம்?


//"Now the lingua franca is English for professionals. When we become producers of knowledge then we can set our language as the lingua franca," Sibal said.
//


1960களில் இந்தியாவிலிருந்து ஆங்கிலத்தை அகற்றி விட்டு இந்தியை மட்டும் கொண்டு வர முயற்சி நடந்தது. அன்று இந்தி எதிர்ப்பு போரில் பல்லாயிரம் பேர் உதிர்த்த ரத்தத்தால் தான் இன்று ஆங்கிலம் இந்தியாவில் உள்ளது. அதனால் தான் உலகம் எங்கும் இந்தியர்கள் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.கபில் சிபல் கூறுவது போல் இந்தியை மட்டும் கொண்டு வந்தால் , தமிழர்கள் அனைவரும் பிகார், உ.பி மாநிலத்தவரிடம் கொள்ளை அடிக்கும் தொழிலை தான் கற்ரு கொள்ள வேண்டும்

//Very disappointed. We produce the best computer engineers, there are so many blogs and sites in tamil, yet people crow about destruction of tamil. Irrational.
//
நான் எங்கும் இந்தி திணித்தால் தமிழ் அழிந்து விடும் என்று கூறவில்லை. இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்று தமிழர்களை இரண்டாம் தர குடிமக்கள் ஆக்க நினைப்பதையும், ஒரு பைசாவுக்கு உதவாத ஒரு மொழியை இந்தியர் என்ற அடையாளம் பெற தேவையின்றி படிக்க கட்டய படுத்துவதையும் தான் எதிர்க்கிறேன்.

சதுக்க பூதம் said...

//அதாவது ஹிந்தி படித்து இந்தியாவில் வேலை செய்வதை விட ஐரோப்பிய மொழி படித்து அங்கு செல்வது மேல். அப்படித்தானே?
//

அனைவரும் முதலில் தன் பிறந்த இடத்தில்(தமிழ் நாட்டில்) தான் இருக்க விரும்புவர். அங்கு திறமைகேற்ற/தேவைகேற்ற வேலை கிடைக்க வில்லை என்றால் அடுத்து எங்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்குமோ அங்கு தான் செல்ல விரும்புவார்கள். நாட்டு பற்று என்ற பெயரில் சொந்த நாட்டில் இரண்டாம் தர குடி மக்களாக பார்க்க படும் இடத்தில் எவரும் வேஎலை செய்ய மாட்டார்கள்.

தமிழர் ஒருவருக்கு பாட்னாவில் ஒரு வேலையும், லண்டனில் ஒரு வேலையும் கிடைத்தால் நாட்டு பற்றை காரணம் காட்டி பாட்னா சென்று வேலை பார்ப்பவர் ஒருவரை காட்டுங்கள்.

//ஆகா என்ன மொழிப்பற்று, நாட்டுப்பற்று. நீங்கள் கூறியது போல் //சீனா கஷ்டபட்டு இந்தியாவை உடைக்க வேண்டிய தேவையே இருக்காது. தானாகவே அது நடக்கும்//

சரியாக நீங்களே நான் கூற வந்ததை கூறி உள்ளீர்கள். இந்தி படிக்க மாட்டேன் என்றால் தேச துரோகி என்று முத்திரை குத்துகிறீர்கள். நாளை இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த தே துரோகி பட்டியலில் சேருவார்கள். இந்தியா என்பது பல மொழி,இனம்,மத்தத்தினர் வாழும் நாடு. மற்றவர்களுடைய மொழி/மதம்/ போன்றவற்றை தினிக்க ஆரம்பித்தால் நீங்கள் கூறும் தேச துரோகி கும்பலில் பல பேர் சேர்வார்கள்

//வடஇந்தியர்கள் ஏன் தமிழர்களை 'மதறாசி' என்று கேலி செய்கிறார்கள்? இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் தானே?
//

அது உண்மையில்லை. அவர்களிடம் உள்ள மன பாங்கு இந்தி-இந்து-இந்தியா என்னும் இனவாதம். இந்தியர் என்னும் அடையாளத்தை பெற ஒரு junk மொழியை கட்டயமாக திணிப்பது தேவையா? அதை தெரிந்து என்ன பயன். அதற்கு வட இந்தியர்கள் ஒழுங்காக ஆங்கிலம் படித்தாலாவது அங்கு வேலை வாய்ப்பு பெருகி வறுமை ஒழியும். நம்முடைய வரிபணம் எல்லாம் அங்கு விரலுக்கு இழைத்த நீராகாது

Thomas Ruban said...

//நாட்டு பற்று என்ற பெயரில் சொந்த நாட்டில் இரண்டாம் தர குடி மக்களாக பார்க்க படும் இடத்தில் எவரும் வேஎலை செய்ய மாட்டார்கள்.//

கர்நாடகாவில் பெரும்பலோர் விதியே என்று வயிற்று பிழைப்பிற்க்காக அப்படித்தான் வாழ்ந்து(வேலை) கொண்டு இருக்கிறார்கள்.

// வட இந்தியாவில் இருபப்வர்கள் தமிழர்களுக்கு கொடுக்கும் மரியாதையை விட மேலை நாடுகளில் இருப்பவர்கள் அதிகம் மரியாதை கொடுக்கிறார்கள்//

வட இந்தியாவில் இருபப்வர்கள் தமிழர்களின் உழைப்பையும், புத்திகூர்மையும் பார்த்து பயப்படுகிறார்கள்.

மேலை நாடுகளில் இருப்பவர்கள் தமிழர்களின் உழைப்பையும், புத்திகூர்மையும் பார்த்து பயன் படுத்தி கொள்கிறார்கள்.

////இனி வரும் காலங்களில் மேலை நாடுகளில் மக்கள் தொகை குறைகிறது. எனவே அங்கு படித்த இளைஞ்சர்கள் தேவை படுகிறார்கள். எனவே, வேறு மொழி படிக்க வேண்டும் நினைத்தால் எதாவது ஐரோப்பிய மொழி அல்லது ஜப்பானிய மொழி படிக்கலாம்.//

இப்போது மேலை நாடுகளிலும் (ஆஸ்திரிலியா)இனவெறி தலைவிரித்து ஆடுகிறதே!

தமிழக அரசாங்கம் தான் திறமைகேற்ற/தேவைகேற்ற வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

//நிச்சயமாக இந்தியை அறிந்து கொள்வதில் தவறே இல்லை. ஆனால் தேவை படும் போது இந்தியை தெரிந்து கொண்டால் போதும் என்று தான் கூறுகிறேன்//

இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன் நன்றி சார்.

Varun said...

அய்யா, நீங்கள் கூறுவதிலும் உண்மை இருக்கிறது.

ஆங்கிலம் இருக்கும் போது ஏன் இன்னொரு மொழியை கட்டாய படுத்த வேண்டும் என்று கேட்கிறிர்கள். சரியா?

நியாயம் தான். மொழிக்கும் நாட்டு பற்றுக்கும் சம்பந்தம் இல்லை. நான் முன்பு கூறியதால் அப்படி ஒரு பிம்பம் உருவாகிஇருந்தால் அது தவறு.

ஹிந்தியும் அறுவை தான். சந்தேகம் இல்லை. படிதிர்ருகிறேன். தமிழும் அப்படி இருப்பது தான் பிரச்சனை.

//தமிழர் ஒருவருக்கு பாட்னாவில் ஒரு வேலையும், லண்டனில் ஒரு வேலையும் கிடைத்தால் நாட்டு பற்றை காரணம் காட்டி பாட்னா சென்று வேலை பார்ப்பவர் ஒருவரை காட்டுங்கள்.//
சரியான பதிலடி. ஒப்பு கொள்கிறேன் :-) நான் யாரையும் அப்படி கண்டதில்லை.

தமிழ் அழிவது நம் கையில் தான் இருக்கிறது. வெளியில் இருந்து எந்த கொம்பனாலும் செய்ய முடியாது.

சிபல் நன்கு படித்தவர். அப்படி பட்டவர் jingoistic ஆக இருப்பது வருத்தத்துக்குரியது.

கடைசியில், மொழியை வைத்து நாம் என்ன செய்கிறோம் என்பது தான் நம் நாட்டை உயர்த்தபோகிறது. மொழியே தன்னால் ஒன்றும் செய்ய முடியாது.

சதுக்க பூதம் said...

வருண் உங்கள் விவாதத்துக்கும் கருத்துக்கும் நன்றி. இந்தி தமிழுக்கு போட்டியாக வரும் என்று எதிர்க்கவில்லை. இந்தியா என்பது மதம், மொழி,இனம்,பழக்க வழக்கம் என பலவற்றில் வேற்றுமை உள்ள நாடு. இருந்தும் வேற்றுமையில் ஒற்றுமை இருக்க காரணம் அவரவர் விருப்பபடி அவரவர் விரும்புவதை கடை பிடிக்க அனுமதிப்பது தான். தேசியம் என்ற பெயரில் அனைவரையும் இந்தி மொழியால் பிணைக்க நினைப்பது தவறு. இந்தி படிப்பதால் தமிழனுக்கு எந்த ஒரு நன்மையும் ஏற்பட போவதில்லை.

ஆனால் இந்தியா முழுதும் இந்தியை படிக்க வைத்து அனைவர் மேலும் திணித்தால்

ஆங்கிலம் என்பது அழிந்து போகும்.
நாளையே வட மாநிலத்தினர் தங்கள் தாய் மொழியில் முழுதும் படித்து மத்திய அர்சின் வேலை வாய்ப்பு தேர்வை எழுதுவர். நாம் வேற்று மொழியில் படித்து அதனை தாய் மொழியினரோடு போட்டி போட வேண்டும். இந்தியை பொது மொழியாக ஏற்று கொள்வது பிற தாய் மொழியினரை இரண்டாம் தரமாக மாற்றுவதற்கு சமம்

சதுக்க பூதம் said...

//வட இந்தியாவில் இருபப்வர்கள் தமிழர்களின் உழைப்பையும், புத்திகூர்மையும் பார்த்து பயப்படுகிறார்கள்.

மேலை நாடுகளில் இருப்பவர்கள் தமிழர்களின் உழைப்பையும், புத்திகூர்மையும் பார்த்து பயன் படுத்தி கொள்கிறார்கள்.
//

சரியாக சொன்னீர்கள்.

//இப்போது மேலை நாடுகளிலும் (ஆஸ்திரிலியா)இனவெறி தலைவிரித்து ஆடுகிறதே!
//

இனவெறி என்பது எங்கும் உள்ளது. தமிழகத்தில் பிற சாதியினர் தாழ்த்தபட்ட சாதியினரை மதிப்பது/நடத்துவதை விட, வட நாட்டினர் தமிழ் நாட்டினரை நடத்துவதை விட வெளிநாட்டினர் மோழமாக இருக்கிறார்கள் என்று என்னால் ஒத்து கொள்ள முடியாது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாட்டில் நான் பணி புரிந்துள்ளேன். அங்கு எல்லாம் குறிப்பிட தகுந்த இன வெறி இருப்பதாக எனக்கு படவில்லை. அதற்காக சுத்தமாக இல்லை என்று கூற வில்லை. குறைவான அளவே உள்ளது.

//தமிழக அரசாங்கம் தான் திறமைகேற்ற/தேவைகேற்ற வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

/

உண்மை தான் தாமஸ் ரூபன். அனாலும் தமிழகத்தில் உருவாகும் வேலையைமுடிந்த வரை தமிழர்களே பெற வேண்டும் . வெளி நாடுகளுக்கும் அவர்கள் அதிகம் போக வேண்டும். அப்போது தான் இங்கு புதிதாக வேலைக்கு வரும் இளைய தலைமுறையினருக்கு அதிகம் வேலை கிடைக்கும். ஏனென்றால் நாம் இங்கு அந்த அளவு படித்த மாணவர்களை உறுவாக்குகிறோம்