Sunday, September 26, 2010
வாழும் வள்ளலார் - நாரயணன் கிருஷ்ணன் CNN Hero ஆக வாக்களியுங்கள்
வாடிய பயிரை காணும் போதெல்லாம் வாடினார் ராமலிங்க வள்ளலார். பசியில் வாடும் அனைவருக்கும் உணவளிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்தார்.இந்த காலத்திலும் வீதியில் அனாதையாய் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிப்பததையே வாழ்வின் லட்சியமாக கொண்டு ஒருவர் வாழ்கிறார் என்றால் கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா? இந்த அதிசயத்தை நடத்தும் நல்ல மனிதர் மதுரையை சேர்ந்த திரு.நாராயணன் கிருஷ்ணன். ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த அவர் வீதியில் சமுதாயத்தால் கைவிட பட்டு ஆனாதையாய் திரியும் ஏழைகளுக்கு தினமும் தானே உணவு தயார் செய்து அவர்களது பசியை போக்கி வருகிறார்.தினமும் 400 பேருக்கும் மேல் 3 வேளை உணவு அளித்து வருகிறார்.
உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பின் மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக தேர்ந்தெடுக்கும் CNN. இந்த வருடம் CNN தேர்ந்தெடுத்த 10 பேரில் நாராயணன் கிருஷ்ணனும் ஒருவர். இவருக்கு விருது கிடைத்தால் விருதுக்கு தான் பெருமையாக இருக்கும். ஆனால் இந்த விருதின் மூலம் அவர் பணி மேலும் வளர வாய்ப்புள்ளது. நீங்களும் அவருக்கு ஆதரவாக வாக்க அளிக்க இங்கு சென்று வாக்களிக்களாம்.
http://heroes.cnn.com/vote.aspx
இதை படிக்கும் பதிவர்கள் தங்கள் வலை பூவில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வாசகர்களுக்கு ஒரு லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும்.நவம்பர் 18 தான் வாக்களிக்க கடைசி நாள்.
CNN பத்திரிக்கையின் செய்தி அளிக்கும் விதம் குறித்து எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தாலும் இந்த CNN Hero என்ற வகையில் பல நல்ல உள்ளங்களை உலகுக்கு அறிமுக படுத்துகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இது பாராட்ட பட வேண்டிய செயல். பிற டி.வி நிறுவனங்கள் மற்றும் பிரபல செய்தி தாள்கள் கடைபிடிக்க வேண்டிய செய்தி.
--
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பகிர்வுக்கு நன்றி நண்பரே ஓட்டுப் போட்டாச்சி.
(எந்த லிங்க்கில் க்ளிக் செய்தாலும் அடுத்த டேபிள் திறக்குமாறு செய்யுங்கள் இது உதவும்.. http://vandhemadharam.blogspot.com/2010/08/open-link-in-new-tab.html)
தகவலுக்கு நன்றி Thomas Ruban. நீங்கள் சொன்ன மாறுதல் செய்து விட்டேன்
u r a living Vallalar.
god bless u narayanan Krishnan/abu
http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
(First 2 mins audio may not be clear... sorry for that)
(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409 - Tamil
http://www.vallalyaar.com/?p=975 - English
Post a Comment