Sunday, October 03, 2010

உல்லாச தலைநகரம் லாஸ் வேகஸ் -3 - சூதாட்டங்கள்

லாஸ் வேகாஸ் என்றவுடனே அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது சூதாட்டம், மது ,மாது மற்றும் மாமிசம். சூதாட்டத்தில் உலக அளவில் சில காலம் முன்பு வரை முதலில் இருந்தது இந்த நகரம் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலகளாவிய பன்னாட்டு வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் நூதனமான பல புதிய LIVE சூதாட்டங்களை அறிமுகபடுத்தி , சூதாட்டத்தின் மதிப்புகளும் டிரில்லியனை தாண்ட வைத்து நியூயார்க் நகரை சூதாட்டத்தின் முதல் இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டர்கள்.

நெவேடா மாகாணத்தில் விபச்சாரம் ஒரு சில இடங்களில் அனுமதிக்க பட்டு இருந்தாலும் லாஸ்வேகாஸ் பகுதியில் அதற்கு அனுமதி இல்லை. இது சட்ட படி மட்டுமே. ஆனால் அங்கு தெருவெங்கும் மக்களுக்கு விபச்சாரத்துக்கு விசிட்டிங் கார்டு கொடுத்து அழைப்பவர்கள் ஏராளம். இந்த சட்டத்திற்கு புறம்பான நிகழ்ச்சி மறைமுகமாக நடைபெறுவதில்லை. நேரடியாகவே அனைத்து தெருக்களிலுமே நடைபெறுகிறது. ஆனால் இந்த தொழில் மிக பெரிய மபியாக்களின் கட்டு பாட்டில் உள்ளதால் அந்த விடுதிகளுக்கு செல்லும் மக்களின் உடமைகளுக்கு உத்தரவாதம் இல்லை என்று கேள்வி பட்டிருக்கிறேன்.அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண நடன நிகழ்ச்சிகள் அனைத்து பெரிய விடுதிகளிளும் நடக்கும். அது மட்டுமன்றி ஒரு சில காசினோக்கள் நள்ளிரவு ஆப் சீசன் நேரங்களில் இது போன்ற நடனங்களை இலவசமாக சூதாடும் இடங்களில் நடத்தி வாடிக்கையாளர்களை இழுப்பதும் உண்டு.

தண்ணீர் பிரச்சனை இல்லாத ஒரு பாலைவனம் உண்டு என்று சொன்னால் அது லாஸ்வேகாசாக தான் இருக்கும். இங்கு அனைத்து வகை மது பாணங்களும் கிடைக்கும். வித்தியாசமான கோப்பைகளில் கிடைக்கும் மார்க்கரிட்டா இங்கு பிரபலம்

உணவு இங்கு மிக பிரபலம். ஒவ்வொரு விடுதியும் buffet வகை உணவை வைத்திருக்கும். அது மட்டுமன்றி பல வகையான சிறப்பு உணவுகளுக்குகான உணவு விடுதிகள் பல ஒவ்வொரு விடுதியிலும் இருக்கும். buffetல் உலகில் உள்ள அனைத்து வகையான உணவு(சீனா,மலசியா,தாய்லாந்து,ஜப்பான்,கொரியா,இத்தாலி,இங்கிலாந்து,பிரான்ஸ்,மெக்சிகன் ,american) வகைகளும் வைக்க பட்டிருக்கும். உணவு பிரியர்களுக்கு இது ஒரு நல்ல வர பிரசாதம்.

சூதாட்ட விடுதியில் நீங்கள் 1 செண்டு முதல் பல்லாயிரம் வரை வைத்து சூதாட்ட வசதி உள்ளது( மகாபாரதத்தில் வருவது போல் நாடு,நகரம் போன்றவற்றை வைத்து சூதாட வசதி உள்ளதா என்று தெரியவில்லை!). அங்கு இருக்கும் slot Machineகளில் 1 செண்டு முதல் சில டாலர் வரை வைத்து சூதாடலாம். குறைந்த முதலீட்டில் விளையாட வாய்ப்புள்ளதால் பெரும்பாலானோர் இதை தான் விரும்புவார்கள். ஸ்லாட் இயந்திரங்களில் பல வகை உள்ளது. அவற்றில் முக்கியமானது எண்கள்/எழுத்துக்கள் சுத்தும் வகை தான். அதாவது ஒவ்வொரு முறை விளையாடும் போதும் 3 - 5 row-க்களில் எண்கள் சுழன்று கொண்டு randomஆக ஒரு இடத்தில் நிற்கும். அப்போது கிடைக்கும் எண்களின் ஒப்பீட்டிற்கு(Combination) ஏற்றவாறு பரிசு இருக்கும். உதாரணமாக 333 என்று ஒரே எண் வந்தால் அதற்கு ஒரு பரிசு பொருள் இருக்கும். குறிப்பிட்ட எண்கள் combination வருவதற்கான நிகழ்தகவு(probability) குறைவாக இருந்தால் அதற்கு பரிசு அதிகம் இருக்கும்.இந்த விளையாட்டுகளில் வரும் லாபமும் முதலீட்டை போலவே மிக குறைவு என்பது தான் பல பேருடைய கணிப்பு. ஆனால் உண்மை அது இல்லை. அமெரிக்காவில் இது போன்ற Slot Machine களை வைத்து விளையாடுவதில் ஒரு சில சட்ட திட்டங்கள் உள்ளது. அதன் படி ஒவ்வொரு விடுதியிலும் ஸ்லாட் இயந்திரங்களில் மக்கள் விளையாட போடும் பணத்தில் ஒரு கணிசமான சதவீதத்தை, கட்டாயமாக சூதாட்ட விடுதிகள் பரிசு பொருளாக விளையாடுபவர்களுக்கே கொடுத்து விட வேண்டும்.உதாரணமாக நெவேடா மாகாணத்தில் குறைந்தது 75% பணத்தை விளையாடுபவர்களுக்கு பரிசாக அளிக்க வேண்டும்.இந்த பரிசு பொருள் randomஆக வெவ்வேறு slot mnachineமூலம் jackpot என்ற பெயரில் பெரிய தொகையாக வழங்கபடும். எனவே அதிர்ஷ்டம் இருந்தால் குறைந்த முதலீட்டில் ஜாக்பாட் அடித்து நிறைய பணம் பார்க்கலாம். இங்கு விளையாட வருபவர்களில் ஒரு சிலர் இது போன்ற ஸிலாட் இயந்திரங்களில் நிறைய நேரம் விளையாடி விட்டு எழுந்து போகும் மக்களின் body language-ஐ கூர்ந்து கவனிப்பார்கள். அவர்களிடம் ஏமாற்றம் அதிகம் தெரிந்தால் அந்த இயந்திரங்களில் நிறைய நேரம் ஜாக்பாட் வரவில்லை என்று பொருள். எனவே அங்கு விளையாடினால் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதால் அந்த இயந்திரங்களில் விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.

ஸிலாட் இயந்திரங்களுக்கு அடுத்த படியாக உள்ளது பிற Board Gameகள். கள் விளையாட மிக அதிக பணம் செலவ்ழிக்க வேண்டும் என்பது பலரின் நினைப்பு. ஆனால் உணமை அதுவல்ல. குறைந்த பணத்தை கொண்டே போர்ட் கேம்கள் விளையாடலாம். இனிவரும் பதிவுகளில் BlackJack,Roulette,Craps போன்ற விளையாட்டுகள் எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas)

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas) 2

--

2 comments:

மண்டையன் said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

சதுக்க பூதம் said...

நன்றி மண்டையன்