Sunday, October 10, 2010

Capitalism:A Love Story திரை விமர்சனம்

மைக்கேல் மூர் படம் என்றாலே சமூகத்தில் நிகழும் அவலங்களை மிக ஆழமாக கூறுவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த படத்தில் படத்தின் தலைப்புக்கு ஏற்ப முதலாளித்துவத்தின் தீய விளைவுகள் பற்றி அழகாக கூறியுள்ளார். சோவியத் இருந்த வரை கம்யூனிசம் அல்லது மக்களாட்சி ஆகிய இரண்டு மட்டும் வாத பொருளாக இருந்தது. அப்போது முதலாளித்துவம் என்பது மக்காளாட்சியின் போர்வையில் ஓரளவு கட்டுபாட்டிலும் இருந்தது.

ஆனால் சோவியத் வலுவிழக்க ஆரம்பித்தவுடன், முக்கியமாக ரீகன் மற்றும் தாட்சர் ஆட்சியில் முதலாளித்துவத்தின் தாக்கம் மக்களாட்சியில் அதிகம் ஏற்பட ஆரம்பித்தது. அரசாங்கம் என்பது மக்கள் நன்மைக்காக கட்டுபாடுகளை நடைமுறைபடுத்துவது மக்களாட்சியாகவும், அரசாங்கமே அனைத்தையும் எடுத்து நடத்துவது சோசியலிசமாகவும் இருந்தது. ஆனால் சோவியத் யூனியன் மறைவிற்கு பின் உண்மையான மக்களாட்சி என்பது சோசியலிசம் போலவும் அதற்கு மாற்றாக முழு முதலாளித்துவமும் உள்ளது போன்ற நிலை ஏற்பட தொடங்கியது. மக்கள் நலனுக்காக அரசு தனியார் மீது விதிக்கும் கட்டுபாட்டுகள் அகற்றபடுவதால் ஏற்படும் விளைவுகளை உணர்ச்சி பூர்வமாக கூறி மக்களின் மனதிற்கு எடுத்து சென்று உள்ளார். ஆனால் தன் கருத்துக்களின் ஆழத்தையும் அதன் பின்னனி மற்றும் ஆதாரங்களையும் இன்னும் தெளிவாகவே விளக்கி இருக்கலாம் என்பதே என் கருத்து.இப்படத்தில் அமெரிக்காவின் அரசு அதிகாரத்தில், முடிவுகளை எடுக்கும் அதிகாரத்திற்கு எந்த அளவு நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் பங்களிப்பு ரீகன் காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது என்று கூறியுள்ளார். வால் ஸ்ட்ரீட்டிலிருந்து மெயின் ஸ்ட்ரீட்டிற்குள் புகுந்து எவ்வாறு தங்களுக்கு தேவையான சட்டங்களை போட்டு கொண்டிருக்கிறார்கள் என்று அழகாக கூறியுள்ளார். இந்த நிகழ்வின் பெரும் பகுதியை நடத்திய கிளிண்டன் நிர்வாகத்தை பற்றி அதிகம் கூறாதது அவருடைய மனதில் உள்ள டெமாக்ரெட்ஸ் மீது உள்ள அபிமானத்தை காட்டுகிறது !பாதிக்க பட்ட மக்களிடம் பேட்டி எடுத்து , பாதிக்கபட்ட நிகழ்வுகளை காட்டி(முக்கியமாக வீடுகளை இழந்த) உணர்வு ரீதியாக மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் விமானியின் ஆரம்ப சம்பளம் வருடத்திற்கு $20000 தான் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.ஜன்னல் செய்யும் நிறுவனம் மஞ்சள் நோட்டீசு கொடுத்த பின் அதில் பாதிக்க பட்ட தொழிலாளிகள் நியாயமான இழப்பீடுக்காக போராடிய விதம் நெஞ்சை தொடுவதாக உள்ளது.இந்த நிதி நெருக்கடி முடிவுக்கு வந்தபின் மிக பெரிய மான்ஸ்டராக வளர்ந்து இருக்க போகும் நிதி நிறுவனங்கள் பற்றி அவர் கூறுவது அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய அதிர்ச்சிகரமான உண்மை. இது பற்றி முன்பு பல பதிவுகள் எழுதி உள்ளேன்.

லெஹ்மேன் பிரதர்ஸின் வீழ்ச்சிக்கு பிறகு, மிக பெரிய நிதி நிறுவனங்களை காப்பாற்ற செனட்டர்கள் எப்படி நிர்பந்திக்க பட்டார்கள் என்ற செய்தியையும் விளக்கி உள்ளார். நிதி நிறுவனங்களை கட்டு படுத்தும் அமைப்புகளின் தலைவர்களுக்கும் நிதி நிறுவனங்களுக்குமேயான தொடர்பையும் அழகாக காட்டி உள்ளார்

இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு முதலில் மனதில் தோன்றியது இந்தியாவில் தற்போது மிக முக்கியமாக தேவை படும் உண்மையான தொழிலாளர்களின் யூனியனின் அவசியம். அமெரிக்காவில் ரீகன் காலத்திலிருந்து systemically யூனியன்கள் சிறிது சிறிதாக அழிக்க பட்டு விட்டது. தற்போது அவர்களுக்கு நியாயமான உரிமைகள் மறுக்கபடும் போது இணைந்து போராடுவதற்கான கட்டமைப்பே அவரகளிடம் இல்லை. அதே சமயம் மீடியாக்கள் முழுதும் ஒரு சில செல்வந்தர்கள் கையில் இருப்பதால் தொழிலாளர்களின் உண்மை நிலை ஒட்டு மொத்தமாக வெளி உலகுக்கு தெரியாமல் இருட்டடிக்க படுகிறது.இந்தியாவிலோ தற்போது ஒருபுறம் தொழிலாளர்களின் உரிமையை காப்பற்ற வேண்டியவர்கள் முதலாளிகளோடு கூட்டு சேர்ந்து யூனியன்களின் செயல்பாட்டையே கேலி கூத்தாக்குகிறார்கள். மறுபுறம் அரசாங்கங்கள் தொழிலாளர்களின் போராட்ட உரிமையை சிறிது சிறிதாக சட்டம் மூலம் பறித்து கொண்டு உள்ளார்கள்.

கம்யூனிஸ்டுகள் அமெரிக்க அணு ஒப்பந்தத்துக்கு எதிராக போராடிய திறனில் நூற்றில் ஒரு பகுதியாவது இந்தியாவில் உள்ள தொழிலாளிகளின் நலனுக்கு ஆதரவாக அல்லது ஏழைகளின் நலனுக்காக செலவிட்டார்களா என்பது கேள்வி குறியே.மேற்கு வங்காளத்தில் அவர்கள் நடத்தும் ஆட்சி பற்றி எதுவும் கூற வேண்டியது இல்லை. மற்ற கட்சியை பற்றி கூறாமல் கம்யூனிஸ்டுகளை பற்றி மட்டும் ஏன் கூறுகிறேன் என்றால் ஒடுக்க பட்ட மக்களுக்கு ஆதராவாக ஒரு இயக்கம் தோன்றுவது மிக மிக கடினம். அதையெல்லாம் மீறி ஒரு இயக்கம் தோன்றி விட்டால், ஒட்டு மொத்த ஒடுக்க பட்ட மக்களின் பார்வையும் அவர்கள் பக்கமே செல்லும். அந்த இயக்கங்களின் தலைமை ஒரு சில சுயநல கும்பலிடம் மாட்டி விட்டால் அந்த இயக்கங்களின் அடிமட்ட தொண்டர்கள் உண்மையானவர்களாகவும், தலைமை அவர்களின் சக்தியை வீணடித்து , போராட்டதை மழுங்கடித்து விடுவர். மக்களின் உண்மையான தேவையை திசை திருப்பி, குறைந்த முக்கியத்துவம் உள்ள பிரச்ச்னையை மக்கள் முன் பூதாகரமாதாக்குவார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளின் பொலிட்பீரோவிற்கு அடி மட்டத்திலிருந்து உழைத்து முன்னிரியவர்கள் செல்வதை விட வங்கி மற்றும் காப்பீடு துறையில் உள்ள புரோக்கர்கள் ஆதிக்கமும் theoritically கம்யூனிசம் படித்து மேல் தர வர்க்கத்திலிருந்து(உயர் நடுத்தர) வந்தவர்கள் ஆதிக்கமும் அதிகமாவது கூட இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இதன் விளைவாக பிற்காலத்தில் அது போன்ற எந்த இயக்கத்தையும் மக்கள் நம்ப மறுப்பார்கள். அது அவர்களின் ஒட்டு மொத்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்.

இந்த படம் நமக்கு கற்று கொடுக்கும் பாடம் - நாட்டிற்கு உடனடி தேவை தொழிலாளர்கள் நலனை பேனி பாதுகாக்க கூடிய உண்மையான தொழிற்சங்கங்களும் அவர்களின் உரிமையை நிலை நிறுத்த தேவையான சட்ட திட்டங்களும் தான்.சந்தை மற்றும் நிதி நிர்வாக அமைப்புகளின் மீது அரசின் கண்காணிப்பின் தேவையும் கட்டுபாடும் எவ்வளவு அவசியம் என்பது இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு புரியும். நாட்டின் பொருளாதாரத்தை சூதாட்ட களமாக மாற்றிய நிறுவனக்களுக்கு இந்தியாவிலும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நமது பிரதமர் கூறி வருவதை அனைவரும் கவனிக்க வேண்டும்.

--

7 comments:

மண்டையன் said...

நல்ல பயனுள்ள பதிவு .இத்துடன் நான் ஒரு லிங்க் குடுக்கிறேன்
நேரம் இருக்கும் போது இதை டவுன்லோட் செய்து பார்க்கவும்
மொத்தம் மூன்று docmantry உள்ளது .
அதில் மூன்றாவது bank பற்றியது .
நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
http://torrentscan.com/#!q=Zeitgeist.Remastered.Edition.2007.DVDRip.XviD&e=seedpeer

எஸ்.கே said...

அருமையான விமர்சனம்! நல்ல அறிமுகம்! பார்க்க முயற்சிப்போம்!

சதுக்க பூதம் said...

வாங்க மண்டையன்.கடந்த வருடம்Zeitgeist படம் பார்த்தேன். அதை பார்த்த பிறகு அது சம்பந்தமாக சில புத்தகங்களை படித்து வருகிறேன். முக்கியமாக பணம் முதலில் தோன்றியது எப்படி? அது commodity money to paper money ஆக எப்படி ஆகியது. அதன் அடிப்படையிலான weaLth மற்றும் அதன் விளைவுகள் பற்றி விளக்கமாக எழுத ஆசை.
படத்தின் கொடுத்ததற்கு மிக்க நன்றி மண்டையன். இந்த blog படிக்கும் பலர் நிச்சயம் அதை செய்து பயன் அடைவார்கள்

சதுக்க பூதம் said...

நன்றி எஸ்.கே

vasu said...

//முக்கியமாக பணம் முதலில் தோன்றியது எப்படி? அது commodity money to paper money ஆக எப்படி ஆகியது. அதன் அடிப்படையிலான weaLth மற்றும் அதன் விளைவுகள் பற்றி விளக்கமாக எழுத ஆசை.//

இது போன்ற விசயங்களை என்னை போன்றவர்கள் அறிந்து கொள்ள உங்கள் எழுத்து உதவியாக இருக்கும். பொருளாதார கொள்கைகளை பற்றியும் தொடர் எழுதுவதாக கூறியிருந்தீர்கள் அப்படியான பதிவுகளை கூடிய விரைவில் எதிர்பார்கிறேன்.
sorry if I am rude....

சதுக்க பூதம் said...

வாங்க வாசு

// பொருளாதார கொள்கைகளை பற்றியும் தொடர் எழுதுவதாக கூறியிருந்தீர்கள் அப்படியான பதிவுகளை கூடிய விரைவில் எதிர்பார்கிறேன்.//
நிச்சயம் கூடிய விரைவில் எழுதுகிறேன். கடுமையான வேலை பளு காரணமாக அதற்கான நேரம் செலவிடமுடியவில்லை. ஓரிரு வாரங்களுக்குள் அது பற்றி எழுத தொடங்குகிறேன்.

//sorry if I am rude....//

கட்டாயம் அப்படி எல்லாம் என்றுமே இல்லை. நீங்கள் ஏன் அவ்வாரெல்லம்(rude) நினைக்கிறீர்கள் என்றுதான் தெரியவில்லை.

மாற்று எரிசக்தி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்(other than IT related also) பற்றிய பதிவுகள் நிறைய உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்

vasu said...

நன்றி...

//மாற்று எரிசக்தி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்(other than IT related also) பற்றிய பதிவுகள் நிறைய உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன் //

எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எழுதுவதற்கு ஒன்றிரண்டு விஷயங்களை பல நாட்களாக அசைப்போட்டு கொண்டிருக்கிறேன். நான் எழுத நினைக்கும் "நாளை" வரும் என்றுதான் நினைக்கிறேன்...
:)