Tuesday, September 14, 2010

கம்யூனிசத்துக்கு சமாதி கட்டும் கியூபா?

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின்னும், சீனா சந்தை வழி பொருளாதாரத்துக்கு முழுமையாக திரும்பிய பின்னும் உலக கம்யூனிச இயக்கத்துக்கு ஒரு பெரும் பின்னடைவாக இருந்தது. அதை பயன் படுத்தி முழுமையான சந்தை பொருளாதாரத்தை நோக்கி சென்ற உலகுக்கு கடந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சி அதிர்ச்சியாக இருந்தது. இது நாள் வரை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எடுத்து காட்டாக இருந்த கியூபா தற்போது கம்யூனிச பாதையை மாற்ற ஆரம்பித்து விட்டது.சோவியத் யூனியன் போல் நடுவண் அரசு திட்டமிடல் செய்து தேவையான தொழில்களை அரசே தொடங்கி மக்களை அதில் வேலைக்கு அமர்த்தும் முறை கியூபாவில் இருந்தது. நாட்டின் தொழிற்துறையின் முழு கட்டுபாடும் அரசே கட்டு படுத்தியது. உலகில் சுகாதார வசதியில் வளர்ந்த நாடுகளை விட முன்னிலை பெற்றது.அமெரிக்கா கூட அந்த நாட்டிடமிருந்து கற்று கொள்ள வேண்டும் என்று மைக்கேல் மூர் தன்னுடைய சிக்கோ என்ற டாக்குமென்ட்ரியில் கூறி இருப்பார்.சோவியத் வீழ்ச்சிக்கு பின் அதற்கு சோவியத் யூனியனிலிருந்து கிடைத்த உதவிகள் நிறுத்த பட்டன. இரு ஆண்டுக்கு முன் பிடல் கேஸ்ட்ரோவின் சகோதரர் அதிகாரத்து வந்த பின் மாற்றத்திற்கான அறிகுறிகள் தோன்ற தொடங்கின.கடந்த ஏப்ரல் மாதத்தில் முடி வெட்டும் கடைகள் பலவற்றை அரசு தன் கட்டு பாட்டிலிருந்து விளக்கி தொழிலாளர்கள் சேர்ந்து நடத்தும் கூட்டுறவிற்கு கொடுத்தது. விவசாய நிலங்கள் தனியார் வசம் ஒப்படைக்க தொடங்கியது.

கடந்த ஜூலை 26ம் நாள் கியூப புரட்சியின் நினைவு தினத்தில் காஸ்ட்ரோ பேசாத போதே பெரும் மாற்றம் நிகழ போகிறது என்று நினைத்தேன். சில நாட்களுக்கு முன் காஸ்ட்ரோ கியூப கம்யூனிச முறை தோல்வி அடைந்து விட்டதாக கூறி பின்னர் அவ்வாறு கூறவில்லை என்றார். நேற்று கியூப அதிபர் கம்யூனிச மாதிரிக்கு முடிவு கட்டும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அரசு வேலையில் உள்ள 50,000 பேர் பணி நீக்கம் செய்ய படுவார்கள். அவர்கள் வேறு வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது தொழிலாளிகள் நடத்த போகும் புதிய கூட்டுறவு தொழிற்துறையில் இணைந்து வேலை செய்யவேண்டும். அவர்களுக்கு அரசு தரும் இலவச உணவோ, போக்குவரத்து உதவியோ கிடைக்காது.

ஆனால் கியூபா முழுமையான சந்தை பொருளாதாரத்துக்கோ அல்லது மக்களாட்சிக்கோ போக போவது இல்லை. தற்போதைய செய்தி படி அது அரசு முழுமையாக கட்டு படுத்தும் தனியார் துறை மற்றும் கூட்டுறவு துறையை வெனிசூலாவின் சாவஸ் ஸ்டைலிலும், சீன வழி ஒற்றை கட்சி ஆட்சி முறையும் பின் பற்றபோவதாக தெரிகிறது.

ஆனால் இந்த முடிவு குறுகிய காலத்தில் அவசர அவசரமாக எடுக்க பட்டது அல்ல. கடந்த இரு வருடங்களாக திட்டமிட்டு எடுக்க பட்டது. எனவே வேலை இழக்கும் தொழிலாளர்கள் பாதிக்க படுவது குறைவாகவே இருக்கும்.


முழு சந்தை பொருளாதாரம் எவ்வாறு வசதியற்றவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை மறுக்கிறது என்று அமெரிக்காவின் அனுபவத்தில் பார்க்கிறோம்.வறுமை மிக மிக குறைவாக உள்ள அமெரிக்காவிலேயே இப்படி என்றால் இந்த முறை இந்தியாவில் நடமுறை படுத்த பட்டால்(தற்போது சிறிது சிறிதாக நடை முறை படுத்த பட்டு வருவது வேறு விஷயம்), அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதும் யூகிக்க முடிகிறது. அதே போல் அனைத்து வேலைகளையும் நடுவண் அரசின் மூலம் திட்டமிட்டு அரசே அனைத்து வேலைகளையும் செய்து கொள்வதும் நடைமுறை சாத்தியம் இல்லை என்பதை சோவியத்,(மாவோ கால) சீனா மற்றும் கியுபா போன்றவற்றில் பார்க்கிறோம். இனியும் UTOPIAN கம்யூனிச கொள்கையை கனவாக கொண்டு, கனவை நோக்கியே பயனிப்பதும் பயனில்லாதது.(நிச்சயம் முதலாளித்துவம் தன் நிஜ முகத்தை உலகெங்கும் காட்ட தொடங்கிய பின் அடுத்த cycleல் கம்யூனிசம் மீண்டும் வரும் என்பதும் நிஜம். ஆனால் அதற்காக காத்து கொண்டிருந்தால் தற்போதைய காலத்தில் ஒடுக்க பட்டவர்களை முன்னேற்ற எடுக்க கூடிய, நடைமுறை சாத்தியம் உள்ள வகைகளை பற்றி சிந்திக்க யாரும் இருக்க மாட்டார்கள்)
தற்போதைய சூழ்நிலையில் வசதி வாய்ப்பற்ற மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் அரசு கல்வி(இலவச கட்டணத்துடன் கூடிய அரசு கல்லூரிகள்), மருத்துவம்( தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் தாரை வாக்காமல் இலவச அரசு மருத்துவமனை) , முன்னேற்றக்கடன்( அரசு வங்கி மூலம் விவசாயம் மற்றும் சிறு தொழில்) தருவது மற்றும் அடைப்படை வசதிகளை செய்து தருவது போன்றவை இன்றி அமையாதவை.இவற்றை லாப நோக்குள்ள தனியார் வசம் முழுமையாக கொடுக்க முயற்சி செய்வது தவறானது ஆகும்.

அதே போல் தங்கு தடை இல்லாத சந்தை பொருளாதாரம் என்ற பெயரில் மக்களை தனியார் நிறுவங்களின் வேட்டை காடாக்கி அரசின் கட்டுபாட்டை முழுமையாக விளக்குவது என்பதும் மிக தவறாகும்.கட்டுபாடற்ற சந்தை பொருளாதாரம் பற்றி பேசி வந்த அமெரிக்காவே தற்போது அரசின் கட்டுபாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறி அதற்கான செயல்பாட்டிலும் இறங்கி உள்ளது.

தற்போதைய கியூபாவின் இந்த முடிவானது மக்கள் நலம் சார்ந்தது மட்டுமின்றி அனைத்து தொழில்களையும் அரசே எடுத்து நடத்தும் கம்யூனிசத்தின் தோல்வி மட்டும் தான். இதை உதாரணம் காட்டி ஒடுக்க பட்ட மக்களின் அடைப்படை நலனுக்காக அரசு நேரிடையாக மற்றும் மறைமுகமாக செய்து வரும் உதவிகளை முழுதும் நிறுத்த வேண்டும் என்ற கூக்குறல் எழ கூடும்.கூடிய விரைவில் ஊடகங்கிளில், கியூபாவின் இந்த செய்தியை மேற்கோள் காட்டி ஒபாமாவின் மக்கள் நல திட்டங்களை எதிர்த்து நிறைய கட்டுரைகளை காணலாம்.

--

15 comments:

vasu said...

//நிச்சயம் முதலாளித்துவம் தன் நிஜ முகத்தை உலகெங்கும் காட்ட தொடங்கிய பின் அடுத்த cycleல் கம்யூனிசம் மீண்டும் வரும் என்பதும் நிஜம். ஆனால் அதற்காக காத்து கொண்டிருந்தால் தற்போதைய காலத்தில் ஒடுக்க பட்டவர்களை முன்னேற்ற எடுக்க கூடிய, நடைமுறை சாத்தியம் உள்ள வகைகளை பற்றி சிந்திக்க யாரும் இருக்க மாட்டார்கள்//

உண்மை... தற்போதும் அப்படிதான் இருக்கிறது...

oruvan said...

//தற்போதைய கியூபாவின் இந்த முடிவானது மக்கள் நலம் சார்ந்தது மட்டுமின்றி அனைத்து தொழில்களையும் அரசே எடுத்து நடத்தும் கம்யூனிசத்தின் தோல்வி மட்டும் தான்//

itharku yenna karanam arasin iyalamaiyaa???? ......allathu panathatupada???

--
Oruvan

சதுக்க பூதம் said...

வாங்க வாசு. கம்யூனிச சித்தாந்தம் பற்றி விவாதிப்பதை குறைத்து கொண்டு தற்போதயை சூழ்நிலையில் எவ்வாறு சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்தலாம் என்று சிந்திப்பது முக்கியம்

சதுக்க பூதம் said...

//itharku yenna karanam arasin iyalamaiyaa???? ......allathu panathatupada???

//

சோவியத் வீழ்ந்த பின் கியூபாவுக்கு பண தட்டுபாடு ஏற்பட்டது உண்மை. அதுவும் ஒரு காரணம். ஆனால் காஸ்ட்ரோ கூறும் காரணத்தையும் பாருங்கள்.

“We have to erase forever the notion that Cuba is the only country in the world where one can live without working,” he told the National Assembly last month.

தொழிலாளர்கள் யூனியன் கூறியது
“Cuba faces the urgency to advance economically,” the statement said. “Our state cannot and should not continue supporting companies” and other state entities, “with inflated payrolls, losses that damage the economy, which are counterproductive, generate bad habits and deform the workers’ conduct,” the labor federation added.

தொழிலாளர்கள் உரிமையை பெற கொடுக்கும் முக்கியத்துவம் கடமையை நேர்மையாக, முழுமையாக செய்ய தவறுவதாக கூட இருக்கலாம்.
இந்தியாவில் கூட தொழிலாளர்கள் தங்கள் கடமையை நேர்மையாக, முழுமையாக செய்ய தொடர்ந்து தவறினால் அது பயங்கர விளைவையே ஏற்படுத்தும்.
Always Freedom comes with Responsibility

சதுக்க பூதம் said...

இதோடு தொடர்புடைய நல்ல அலசல்
கலையகம்: கியூபர்கள் சோஷலிசத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்களா?

கோவை சிபி said...

not a fidel castro son in power, he is brother of fidel.(raul castro).

சதுக்க பூதம் said...

தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி கோவை சிபி. பதிவில் திருத்தி விட்டேன்

vasu said...

சமதர்ம சமுதாயம் என்று நீங்கள் எதை வரையறுக்கிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன். நன்றி...

சதுக்க பூதம் said...

//சமதர்ம சமுதாயம் என்று நீங்கள் எதை வரையறுக்கிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன். நன்றி... //
சம தர்ம சமுதாயம் என்று கூறுவதை விட அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்க வேண்டும். முக்கியமாக கல்வி மற்றும் மருத்துவ வசதி தரமானதாக எப்போதும் கிடைக்க வேண்டும். வேலை வாய்ப்பு வருடம் முழுதும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். social security அனைவருக்கும் எப்போதும் இருக்க வேண்டும். உதாரணமாக நகரத்தில் நல்ல பள்ளியில் படிக்கும் ஒருவருக்கு கிடைக்கும் கல்வியின் தரம் கிராமத்திலும் கிடைக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு தங்கள் விலை பொருளுக்கு ஏற்ற இரக்கமில்லாமல் சீரான அதே சமயம் லாபம் அடைய கூடிய விலை கிடைக்க வேண்டும்.கிராமத்தில் பல இன்னல்களுக்கு இடையே படிக்கும் இளைஞ்சர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். சிறு,குறு தொழில் மற்றும் விவசாயத்துக்கு குறைந்த வட்டியில் எளிதாக கடன் கிடைக்க வேண்டும்.


சந்தையில் ஒரு துறையில் பல சிறு கம்பெனிகள் போட்டியில் இருந்து சந்தையின் மாற்றம் நிர்ணயிக்க பட்டால் நல்லது. ஆனால் தற்போது உள்ளது போல் அனைத்து முதலீடும் ஒரு சிலர் வசம் செல்வதால் , ஒவ்வொரு தொழிலிலும் oligpoly நோக்கி நகர்ந்து ஒரு Special Interst Group உருவாக்க பட்டு ஒட்டு மொத்த சுரண்டலுக்கும் வழி வகுக்கும் போக்கு தவறு. அத்தகைய சூழ்நிலையில் அரசின் தலையீடு அவசியம்.

அரசாங்க லஞ்ச லாவன்யம் குறைந்த அளவு இருக்க வேண்டும்.

இவையெல்லாம் ஒரு சில நல்ல காரணிகள்.

சம தர்ம கொள்கை என்பது ஒருutopean கொள்கை தான். அது நடைமுறைக்கு ஒத்து வராது. Selfish Geneல் கூறியிருப்பது போல சுயநலம் போன்ற சில கொள்கைகள் நமது ஜீன்கள் முதற் கொண்டு அடிப்படையாக கொண்டது. ஆனால் வசதி வாய்ப்பற்றவர்களுக்கு எப்போதும் அரசின் உதவியோடு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வசதி வாய்ப்புள்ளவர்களுடன் போட்டி போட உதவி ஆகியவை கிடைக்க வேண்டும்.இலவசம் என்பதை வேறு வழியே இல்லாத போது அரசு கொடுக்க வேண்டும். அதுவே முதல் வழியாக இருக்க கூடாது.

இந்தியா போன்ற ஏழைகள் அதிகம் வசிக்கும் நாடுகளில் வறுமை ஒழிப்பில் அரசின் பங்கு முக்கியம். தமிழ் நாட்டில் காங்கிரஸ் அரசு முதற் கொண்டு தி.மு.க, அதிமுக போன்ற அரசுகள் பல சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவிற்கே முன் மாதிரியாக உள்ளன.(ஒரு சில மோசமான திட்டங்கள் நடைமுறை படுத்தினால் கூட)
இன்னும் நிறைய பாதை கடக்க வேண்டியுள்ளது

மண்டையன் said...

மிக நல்ல பதிவு பாராட்டுகள் ...

சதுக்க பூதம் said...

பாராட்டுக்கு நன்றி மண்டையன்

vasu said...

மிக்க நன்றி...
விரைவில் அடுத்த பதிவை எதிர்நோக்குகின்றேன்...

Anonymous said...

"ideology is not as important as our daily lives" யார் கூறினார்கள் என்று தெரியவில்லை. rigidity இல்லா idoelogyஏ சிறந்தது.

காபிடிளிசம் மட்டும் என்னவாம்? Adam Smith கூறியபடி ஒன்றும் யாரும் யாவாரம் செய்வதில்லை. சுத்தமான ப்ரீ மார்க்கெட் உலகில் எங்கும் இல்லை. இருந்தால் அது soviet communism போல் தான் நாசமாக போகும்.

China-வின் Socialism with chinese characteristics" கியூபாவின் வழிகாட்டியாக இருக்கலாம். with due consideration to human rights laws, of course.

சதுக்க பூதம் said...

//காபிடிளிசம் மட்டும் என்னவாம்? Adam Smith கூறியபடி ஒன்றும் யாரும் யாவாரம் செய்வதில்லை. சுத்தமான ப்ரீ மார்க்கெட் உலகில் எங்கும் இல்லை. இருந்தால் அது soviet communism போல் தான் நாசமாக போகும்.
//
உண்மை தான். உண்மையான சந்தை பொருளாதாரத்தில் நிச்சயம் 'self Interest Group' உருவாகும்,. அதன் பின் அது சந்தை பொருளாதாரமாக இருக்காது

nunmaipathippagam said...

the article is true reflection of todays CUBA. after che guver left cuba has slowly slipped in to capiatalism and toatlitarianaism . it is role in in tamils struggle in SRILANKA IS SAD EXAMPLE SEETHE TWO ARTICLES IN MY BLOG NUNMAIPATHIPPAGAM