
பட்டை தீட்டிய வைர ஏற்றுமதி மூலம் இந்தியாவிற்கு $17 பில்லியன் டாலருக்கும் மேல் ஏற்றுமதி வருவாய் கிடைக்கிறது. இதன் மூலம் மகாராஷ்ட்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் லட்ச கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இத்தொழிலில் உலகலவில் முதலிடத்தில் இருப்பது இந்தியா. இப்போது இந்தியாவில் இத்தொழிலுக்கான ஆப்பு வைக்க சீனா தயாராகி விட்டது. எப்படி என்கிறீர்களா? வைரம் தாது பொருளாக பெரிய அளவில் அங்கோலா காங்கோ போன்ற ஆப்ரிக்க நாடுகளில் கிடைக்கிறது. இந்த வைர தாது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய பட்டு அது இந்தியாவில் பட்டை தீட்ட பட்டு, ஆபரணமாக செய்ய பட்டு பெல்ஜியத்திற்கு ஏற்றுமதி செய்ய பட்டு உலகம் முழுதும் விற்பனை செய்ய படுகிறது.
சீனா தற்பதோது காங்கோ அங்கோலா போன்ற நாடுகளுக்கு பெருமளவு நிதி உதவி செய்து அங்கு உற்பத்தியாகும் வைரத்தின் பெரும் பகுதியை சீனாவிற்கு ஏற்ருமதி செய்ய நிர்பந்திப்பதாக கூற படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் மூல பொருள் இல்லாமல் வைரம் பட்டை தீட்டும் தொழில் இந்தியாவில் நலிவடைய தொடங்கும்.
ஆனால் ஒரு சில நிபுணர்களின் கருத்து படி டிபியர்ஸ் மற்றும் அல்ரோசா என்ற இரு கம்பெனிகள் தான் உலக வைர விற்பனையில் பெரும் பங்கு வகிக்கின்றனர். எனவே இவ்விரு கம்பெனிகளும் முடிவு செய்து ஒத்துழைத்தால் தான் சீனாவால் வைர பட்டை தீட்டும் தொழிலில் ஆதிக்கம் செலுத்த முடியும். இந்திய் அரசு வழக்கம் போல் இதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள போவது இல்லை.
--
2 comments:
economic imperialism இந்தியாவிற்கு வேண்டாம். resource acquisition விசியத்தில் ஒரு நாடு மற்ற நாடுகளுக்கு உதவி செய்வது பாவ்லா என்றுதான் சரித்தரம் உள்ளது.
சீனா நிச்சியம் நல்ல வழிகளை பின்பற்றாது. அமெரிக்கா வளைகுடா-வை எப்படி ஆழ்கிறதோ, அப்படி தான் சீனாவும் செயல்படும்.
ஏற்கெனெவே மேற்கத்திய நாடுகள் ஆப்ரிக்காவை நாசம் செய்து கொண்டிருக்கின்றன. நாமும் அப்படி செய்ய வேண்டுமா?
இந்தியாவில் உள்ள resources-ஐ exploit செய்வதிலேயே நக்சல் என்று நிற்கிறது. ஆப்பிரிகவிலுமா?
உலகம் சுற்றும் திசையில் தான் நாமும் சுற்ற வேண்டும் என்றால், போகவேண்டும். நீயா நானா என்று பார்க்கவேண்டும். பிரிட்டிஷார் நம் நாட்டுக்கு செய்ததை(கெட்டதும், அறியாமல் செய்த நன்மைகளும்) அவர்களுக்கு செய்வோம்.
இந்த கலி காலத்தில் மண் உள்ளவனே பெரிய ஆள்.
எந்த வழியும் யோசிக்காத கையாலாகாத்தனம் என்று பார்த்தால் சரியான குட்டு, சதுக்க பூதம்.
//economic imperialism இந்தியாவிற்கு வேண்டாம். resource acquisition விசியத்தில் ஒரு நாடு மற்ற நாடுகளுக்கு உதவி செய்வது பாவ்லா என்றுதான் சரித்தரம் உள்ளது.
//
உண்மை. தற்போது வளர்ந்து வரும் -Financial capitalism அதை விட அபாயகரமானது.
//ஏற்கெனெவே மேற்கத்திய நாடுகள் ஆப்ரிக்காவை நாசம் செய்து கொண்டிருக்கின்றன. நாமும் அப்படி செய்ய வேண்டுமா?
//
இத்தொழில் ஆப்ரிக்காவிலேயே நடை பெற்றால் மிக நன்றாக இருக்கும். ஆனால் அது தற்போது நடக்கும் காரியமாக தெரியவில்லை
//உலகம் சுற்றும் திசையில் தான் நாமும் சுற்ற வேண்டும் என்றால், போகவேண்டும். நீயா நானா என்று பார்க்கவேண்டும். பிரிட்டிஷார் நம் நாட்டுக்கு செய்ததை(கெட்டதும், அறியாமல் செய்த நன்மைகளும்) அவர்களுக்கு செய்வோம்.//
Struggle For Existence and
Survival of fittest
என்பது மட்டும் நியதியான பின் பாவம்,நியாயம்,நீதி என்பதெல்லாம் குறைந்து வருகிறது
Post a Comment