Saturday, April 17, 2010
Goldman Sachன் தந்திரம்
அமெரிக்க நிதி நெருக்கடி காலங்களில் மிக பெரிய வங்கிகள் எவ்வாறு சம்பதித்தனர் என்று பல விதமாக செய்திகள் வெளி வந்தாலும் தற்போது SEC(Security and Exchange Commission)0 கோல்ட்மேன் சாக்ஸ் மீது அறிவித்துள்ள குற்றச்சாட்டு இது போன்ற பெரும் நிதி நிறுவனக்களின் நம்பகத்தன்மையே சந்தேகத்தில் ஆழ்த்த தொடங்கி உள்ளது.
அப்படி என்னத்தான் SEC குற்றசாட்டு சொல்கிறது என்று பார்ப்போம். நிதி நெருக்கடிக்கு முன் அமெரிக்க ரியல் எஸ்டேட் கடன் மார்க்கெட் வேகமாக வளர்ந்து வந்தது அனைவரும் அறிந்ததே. அப்போது முதலீட்டார்கள் அனைவரும் நம்பியது அமெரிக்க ரியல் எஸ்டேட் வளர்ச்சி இப்போதைக்கு குறையாது என்பதே. அதனால் வங்கிகள் கொடுத்த கடனின் அபாயத்திலிருந்து(default) தங்களை காத்து கொள்ள, பல கடன்களை ஒரு கலவையாக்கி அவற்றை ஒரு பொருளாதார பொருளாக(financial product) விற்க தொடங்கின. ஒவ்வொரு CDOவிலும் இருக்கும் கடன் பத்திரங்களின் நம்பக தன்மையை தனி தனியே ஆராய்வது கடினம். அதற்கு தர நிர்ணய படுத்தும் அமைப்புகள் (Credit rating Agencies), அதன் தரத்தை ஆராய்ந்து அவற்றிற்கு மதிப்பீடுகளை வழங்கும். (CDO வை உருவாக்கும் நிறுவனங்கள் தான் பணம் கொடுத்து தன்னுடைய CDOவின் தரத்தை பதிப்பீடு செய்ய சொல்லும். அப்படி என்றால் தரம் நிர்ணயம் செய்பவர்களின் மனபாங்கு எப்படி இருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்!).2006ம் ஆண்டு ABX என்ற குறியீட்டு முறை அறிமுக படுத்தபட்டது. அதன் படி CDO போன்ற பொருளாதார பொருட்களின் மதிப்பு உயரும் அல்லது குறையும் என்று பெட் செய்ய முடியும். முதலீட்டளர்களின் நட்டத்தின் அளவை மோசமான கால்ங்களில் குறைக்கவே இம்முறை உதவும்.ஆனால் கோல்ட்மேன் சாக்ஸ் இந்த முறையை தந்திரமாக உபயோக படுத்தி முதலீட்டளர்களை நட்டத்திற்கு தள்ளி தான் பெரும் லாபம் அடைந்ததாக் குற்றசாட்டு எழுப்ப பட்டுள்ளது.
2006 ல் அமெரிக்க ரியல் எஸ்டேட் மார்கெட் மிகவேகமாக வளரும் என்று நம்பிய போது அது கூடிய சீக்கிரம் விழ போகிறது என்ற உண்மை ஒரு சிலருக்கு தெரிய ஆரம்பித்தது.அதை உணர்ந்த ஒரு சில கோல்ட்மேன் நிறுவன விற்பனையாளர்கள்,மேற் சொன்ன CDO சிலவற்றை உருவாக்கினார்கள்.அவற்றிற்கு நல்ல மதிப்பீடு பெற்று தர மோடி போன்ற தர நிர்ணய அமைப்புகளிடம் நெருக்குதல் கொடுத்தார்கள் என்று கூற படுகிறது. அவற்றிற்கு நல்ல மதிப்பீடு பெற்றவுடன் நடந்தது தான் கோல்ட்மேன் நிறுவனத்தின் நம்பகதன்மையை கேள்வி குரியாக்கி உள்ளது. இந்த CDOகளை உருவாக்கும் போதே அது நிச்ச்யம் தேறாது என்று அவர்களுக்கு தெரிந்துள்ளது. ஆனால் கோல்ட்மேன் நிறுவனம் அதை வெளியுட்டள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் அது தரம் வாய்ந்தது என்று நம்பி அது சார்ந்த முதலீடுகளில் ஈடுபட்டனர். ஆனால் மறுபுறம் கோல்ட்மேன் நிறுவனமோ அந்த CDOக்கள் நம்பக தன்மை குறைந்தது என்று மிக பெரிய அளவுக்கு பெட் செய்தது. அவர்களுக்கு தான் அதன் தரம் தெரியுமே. ஆனால் தன் வாடிக்கையளர்களிடம் அந்த CDOஅதிக மதிப்புடையதாகபொய்யாக காட்டியது.18 மாதங்களில் CDOல் உள்ள கடன்களை உண்மையில் வாங்கியவர்கள் கட்டாமல் மஞ்சள் நோட்டீசு விட்ட்தால் அதன் தர மதிப்பீடும், மதிப்பும் மிக வேகமாக வீழ்ந்தது. அதன் மதிப்பு வீழும் என்று பெட் கட்டிய கோல்ட்மேனுக்கு பில்லியன் டாலருக்கும் மேல் லாபம். அதை நம்பிய வாடிக்கையளர்களுக்கோ பட்டை நாமம்!
--
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
சில மனிதர்கள் தவறு செய்தல் (இராமலிங்க ராஜு?) அவர்களை தண்டிக்க வாய்ப்புள்ளது....ஆனால் ஒரு நிறுவனமே தவறு செய்தல் ?
பெரிய அளவில் எந்த ஒரு தண்டனையும் இருக்காதோ? பாப்போம் ..
வாங்க Jo.
தற்போது குற்றசாட்டை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் என்ரான் போன்ற கேசுகளில் குர்றம் நிருபிக்க பட்டு தண்டனையும் கொடுக்க பட்டு வருகிறது.பொருளாதார கம்பெனிகளில் எந்த அளவு அரசால் குறுக்கிட முடியும் என்று பொருத்திருந்து பார்ப்போம்
Good post
thanks for sharing
--
OHM
சற்றே எளிதான, உருவாக விளக்கம் "For the Win" என்ற நாவலில் உள்ளது.
Free Download at craphound.com. 7th chapter..
வர்த்தகத்தில் எல்லாம் நடக்கும். இந்தியாவை அமெரிக்க ஆக்க நிறைய பேர் முயற்சிகிறார்கள் அல்லது சொல்கிறார்கள். அவர்களை உங்கள் பதிவு சென்றடையட்டும்.
Post a Comment