Monday, March 11, 2013

மண் வளம் காக்கும் மரக்கரி (Biochar) - World AgriExpo 5

மரக்கரியை எரிபொருளாக உபயோக படுத்துவது பற்றி அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே மரக்கரியை கொண்டு மண்ணின் வளத்தை பெருக்க முடியும் என்கிறார்கள் Cool Planet என்ற நிறுவனத்தார். CoolPlanet என்ற நிறுவனத்தார் தாவரத்திலிருந்து பெட்ரோல்( biofuel) எடுக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பெட்ரோல் எடுத்தபின் வெளிவரும் தாவர கழிவை பயோகார் என்னும் உரமாக உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள்.உண்மையில் இது போன்ற மரக்கரி உரங்களை உலகில் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்ய தொடங்கி உள்ளன.முதலில் biochar என்றால் என்ன என்று பார்ப்போம்.

Biochar என்றால் என்ன?

வேளாண் மற்றும் தாவர கழிவுகளை ஆக்சிசன் இல்லாமல் (அல்லது குறைந்த ஆக்சிசனில்) 400 - 500 டிகிரி செல்சியசில் எரிக்க வைப்பதன் மூலம் வெளி வரும் கரியே biochar அல்லது agrichar என்னும் உரமாகும்.இவ்வாறு ஆக்சிசன் இல்லாமல் எரிக்கும் முறைக்கு பைரோலிசிஸ் (Pyrolysis) என்பார்கள். ஆக்சிசன் இல்லாமல் எரிக்கும் போது தவரத்தில் உள்ள கார்பன், கார்பன் டை ஆக்சைடாக மாறி காற்றில் கரைந்து விடுவது தடுக்க படுகிறது. எனவே பயோகேரில் அதிக அளவு கார்பன் உள்ளது. இது சிறந்த கரிம உரமாக (organic matter) பயன் படுகிறது.இவ்வகை மரக்கரி மண்ணில் சில நூறு ஆண்டுகள் வரை இருந்து நல்லது செய்கிறது என்கிறார்கள் இதனால் கிடைக்கும் நன்மைகள் இயற்கை செயல்முறை (Natural process) மூலம் ஆண்டுகள் அதிகமாக அதிகமாக அதிகரிக்கும் என்கிறார்கள்.


முன்னோர்களின் கண்டுபிடிப்பு!

இந்த தொழில்நுட்பத்தை கண்டு பிடித்தது மேலை நாட்டு பல்கலைகழங்கள் அல்ல. அமேசான் காடுகளில் வாழ்ந்த ஆதி குடியினர் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.அமேசான் காட்டில் பழங்குடியினர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் மற்றும் காட்டு கழிவு பொருட்களை மண்ணுக்கு அடியில் குழிகளில் குறைந்த பிராண வாயு கொண்டு எரித்து வெளி வரும் கரியை உரமாக பயன் படுத்தியுள்ளனர்.  ஐரோப்பியர்கள் அமேசான் காட்டின் சில பகுதிகளை ஆராய்ந்த போது இந்த உண்மையை கண்டு பிடித்து இதனை terra preta என்று அழைத்தனர்.

நன்றி விக்கிபீடியா

நன்மைகள்

1.பயோகேரை மண்ணுக்கு உரமாக இடுவதன் மூலம் மண்ணின் structure மற்றும்  textureல் விரும்ப தக்க மாற்றம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

 2. மண்ணின் கரிமவளம் அதிகரிக்கிறது.

 3.பயோகேரில் பல நுண்ணிய ஓட்டைகள் உள்ளன. இந்த ஓட்டைகளை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் கொண்டு பார்த்தால் நன்றாக தெரியும்.  இது தண்ணீரை ஓரளவு இழுத்து வைத்து கொள்வதால் நீர் பாசனத்தின் போது தண்ணீர் வீணாவது குறைந்து நீர் மண்ணில் காய்ந்த பின் செடிக்கு நீரை தருகிறது.


4.மண்ணில் உள்ள மற்றும் உர சத்துக்கள் இந்த சிறு துளைகளுக்கு செல்வதால் மண்ணில் கசிந்து(leaching) மற்றும் பிற வழிகளில் பயிருக்கு தேவையான சத்துக்கள் வீணாவது தடுக்க படுகிறது.செடியின் வேர் பயோகேரில் உள்ள சிறு துளைகளுக்குள் சென்று சத்துக்களை எடுத்து கொள்ளும்.

 5.நுண்ணியிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து மண்ணின் வளமும் அதிகமாகிறது.

 6.வளம் குன்றிய மண் மற்றும் இயற்கை எரு குறைவாக கிடைக்கும் இடங்களில் இந்த மரக்கரியை ஒரு முறை இட்டு பல நூறு ஆண்டுகள் பயன் பெறலாம்.

 7, சமீப காலமாக பேசபட்டு வரும் புவி வெப்பமடைதல் பிரச்ச்னைக்கு இதுவும்  ஒரு நல்ல தீர்வாக கருதபடுகிறது. ஏனெனில் செடிகளில் உள்ள கார்பனை மண்ணுக்குள் நிலை நிறுத்தி விண்ணில் கலந்து விடாமல் வைக்கிறது. இது Carbon negative தொழில்நுட்பமாக கருதபடுகிறது.

 இவ்வகை மரக்கரியை கரும்பு , மரவள்ளி கிழங்கு தொழிற்சாலை கழிவுகளிலிருந்தும் தயாரிக்களாம். தமிழகத்தில் கரும்பு சக்கையிலிருந்து கம்போஸ்ட் தயாரித்து விற்பது பற்றி பார்த்திருக்கிறேன். மரக்கரி தொழில்நுட்பத்தையும் இனி பயன் படுத்தலாம் என்று நினைக்கிறேன். பைரோலிசிஸ் தொழில்நுட்பம் என்றால் பெரிய தொழில்நுட்பம் என்று  நினைத்து விடாதீர்கள். இதை குடிசை தொழில் போல கூட கீழ் காணும் விடியோவில் உள்ள படி செய்யலாம்.


இணையத்தில் தேடிய போது இந்தியாவில் கூட இது போல் ஒரு  சிலர் முயற்சி செய்வதாக பார்த்தேன். மண்ணில் வளம் குறைந்து வரும் இந்த காலத்தில் இயற்கையாக மண்ணின் வளத்தை அதிகரிக்க உதவும்  அமேசான் பழங்குடியினர் தந்த மரக்கரி தொழில்நுட்பமும் ஒரு வரபிரசாதம் தானே.


உலக வேளாண் பொருட்காட்சி பற்றிய முந்தய பதிவுகள்

8 comments:

வின்சென்ட். said...

வித்தியாசமாக உங்கள் World AgriExpo 2013 இருப்பது மனநிறைவு தருகிறது. நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம். இதுபோன்ற எளிமையான தொழில் நுட்பங்கள் மக்களிடம் சென்றடையவேண்டும். அதிகமான விவசாய மாற்றங்கள் இந்தியாவில் மிக அதிக மருத்துவ மனைகளையும்,மருந்தகங்களையும்உண்டாக்கியுள்ளது.புகழ் பெற்ற இராமநாதபுரம் "கரி மூட்டம் இந்த பயோச்சார்" வகையை சார்ந்ததே. வீட்டுத் தோட்டத்திற்கு அடுப்பு சாம்பலை உபயோகித்த எனது தாயாரையும் "கேஸ்" வந்த பின்பு மெல்ல வீட்டுத் தோட்டம் தன் செழிப்பை இழந்ததையும் நினைத்துப் பார்க்கிறேன்.

பாவா ஷரீப் said...

arumai brother

thadarattum ungal uyarntha sevai

thanks

சதுக்க பூதம் said...

வாங்க வின்சென்ட் சார்.மிக்க நன்றி.இராமநாத புரம் கரி மூட்டம் என்றால் என்ன சார்?முன்பெல்லாம் பயோகாஸ் உபயோகித்தவர்களை எல்லாம் மான்ய விலையில் காஸ் கொடுத்து காஸ் உப்யோக படுத்தவைத்தார்கள்.நம்மால் முடிந்தவரை இது போன்ற தொழில்நுட்பங்களை பரப்புவோம் சார்.உர முள்ளங்கி தொழில்நுட்பத்தை கூட 3 விவசாயிகள் இந்த வருடம் பரிட்சித்து பார்ப்பதாக கூறி உள்ளார்கள்

சதுக்க பூதம் said...

வாங்க பாவா ஷரீப் .மிக்க நன்றி

வின்சென்ட். said...

நீராதாரம் குறைந்த இராமநாத புரம் மாவட்டங்களில் சீமை கருவேலை கரியாக்கி வடமாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள்.அதிக வெப்பம் தருவது சீமை கருவேல்.
http://maravalam.blogspot.in/2010/12/prosopis-juliflora.html

வின்சென்ட். said...

இந்த பதிவையும் பார்த்துவிடுங்கள் http://nijampage.blogspot.in/2013/03/blog-post_4750.html

சதுக்க பூதம் said...

தகவலுக்கு நன்றி வின்சென்ட் சார். இரண்டு பதிவையும் பார்த்தேன். காமராஜர் நல்லது செய்ய இந்த மரத்தை அறிமுகபடுத்தி தற்போது பிரச்ச்னையாக போய் விட்டது என்று கேள்வி பட்டிருக்கிறேன். அந்த ஊர் மக்களுக்கு இதுவும் இப்படி ஓர் வாழ்வாதாரமாக இருப்பது இப்போது தான் தெரிந்தது.water hyacinth,நெய்வேலி காட்டாமனி போல் இதையும் முழுமையாக அழிப்பது கடினம் தான்.பயோகார் போல் இதை எதாவது நிறுவனங்கள் உரமாக மாற்றினால் நன்றாக இருக்கும்

ஜீவன் சுப்பு said...

//But Do you know how we started to drink tea....
Let me share some interesting facts about 'History of Tea in India'. When British ruled India, they were desperate to find & stay in place of cool weather, which they found in hill station & migrated there. But what will they do without any income, so they found the climate is suitable to cultivate tea & started planting it & migrated lots of people to work in the field. Now the product 'tea' is ready, but there isn't any consumer to buy it, because we drank 'Neeragaram', curd milk.
British started tea shops in towns & villages distributed tea freely for people to drink for many years. British waited patiently for years and turned our people to get addicted to tea. After years, people by default, just woke up & directly went to tea shop. Later they started to charge very less amount & today our day starts with Tea...//
புதிய தகவல் . அறியத்தந்தமைக்கு நன்றி.