மண்ணின் வளத்தை பெருக்க மூடு பயிர் வளர்ப்பது தமிழக விவசாயிகளுக்கு புதிதல்ல. நெல்லை அறுவடை செய்து கோடை காலங்களில் வேர் முடிச்சி தாவரமான சணப்பையையும், தண்டு முடிச்சி தாவரமான செஸ்பேனியா ரோஸ்டிரேட்டாவையும் தமிழகத்தில் பல காலமாகவே இயற்கை உரத்திற்காக வளர்த்து வருகின்றனர்.மேலை நாடுகளில் இந்த தொழில்நுட்பம் இதுவரை அதிகம் பிரபலமாகவில்லை. தற்போது மேலை நாடுகளிலும் இது போன்ற தொழில்நுட்பத்தை மூடு பயிராக அறிமுக படுத்த தொடங்கி உள்ளனர். Cover Crops என்ற நிறுவனம் மிக பெரிய அளவில் இது போன்ற மூடு பயிர்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த நிறுவனம் கீழ் காணும் மூடுபயிர்களை விற்கிறார்கள்
1.ஆழ ஊடுருவி வளரும் ரை புல்வகைகள்.
2. மித வெப்பத்தில் வளரும் வேர் முடிச்சு பயிறு வகைகள் - சணப்பை
3. குளிர்கால பயிறுவகைகள் Winter Pea,Hairy Vetch,Crimson Clover,Medium Red Clover,Sweet Blue Lupin
4.முள்ளங்கி
5.மேற்கூறிய பயிர்களின் கலவை
முள்ளங்கி
தமிழ தட்பவெப்பத்துக்கு ஏற்ற வகையில் வளரும் பெரும்பாலான பயிர்களை பற்றி தமிழக விவசாயிகள் அறிந்து இருப்பார்கள்.ஆனால் முள்ளங்கியை மூடு பயிராக பயன்படுத்துவது உண்மையிலேயே நூதன முயற்சியாகும்.முக்கிய பயிரை அறுவடை செய்து அடுத்த வருட பயிர் போடும் முன் முள்ளங்கியை மூடுபயிராக வளர்ப்பதன் மூலம் உழவுக்கும் (no tilage), அடுத்த பயிரின் வளர்ச்சிக்கு தேவையான உணவை அளிக்கவும், மண்ணின் கரிம வளத்தை அதிகரிக்கவும், களையை கட்டுபடுத்தவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன் படுத்தலாம் என்கிறார்கள்.
பயன்கள்
1.முள்ளங்கியின் ஆணி வேர் சுமார் 50 செமி நீளத்திற்கு வளர கூடியது. இது சாதாரண உழவு எந்திரம் மண்ணுக்கு கீழே ஊடுருவி செல்லும் ஆழத்தை விட அதிகம். இவ்வாறு ஆழமாக ஊடுருவி சென்று மண்ணுக்கு அடியில் இருக்கும் அனைத்து வகை சத்துக்களையும் எடுத்து முள்ளங்கி தண்டில் சேமிக்கிறது. இந்த முள்ளங்கி தண்டை மண்ணில் மக்க விடுவதன் மூலம் அடுத்து பயிரிடும் பயிர்களுக்கு தேவையான நேரத்தில் (முதல் 3 மாதங்களுக்கு) வேர் பகுதியிலேயே எளிதான உணவு கிடைக்கிறது.(Bio-Drilling)
2.அவ்வாறு வேர் மற்றும் வேர் தண்டு மக்கும் போது காற்று மற்றும் நீர் ஊடுருவி செல்ல ஏதுவாக இருக்கிறது.
3.முள்ளங்கி வளரும் போது தனது இலைகளால் பூமியின் மேல் பரப்பை மறைத்து விடுவதால் களை செடிகள் வளர்வது கட்டு படுத்த படும்.
4.முள்ளங்கி மக்கும் போது ஐசோதயோசயனேட் போன்ற குளுகோசினோலேட்குகள் வெளியாகிறது. அவை பயிருக்கு நோயை உருவாக்கும் நெமட்டோட் மற்றும் காளான்களை அழிக்கும் தன்மை உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
5.மக்கிய முள்ளங்கி அதிக அளவு மண்புழுக்களையும் நல்லது செய்யும் நுண்ணியிரிகளையும் கவர்ந்திழுக்கிறது.
6.கால்நடைகளை இந்த முள்ளங்கியை மேயவிட்டு தீவனமாகவும் உபயோக படுத்தலாம் என்கிறார்கள். முள்ளங்கியோடு சில புல் வகைகளையும் கலந்து பயிரிட்டால் கால்நடைகளுக்கு நல்ல உணவாகும் .
எப்படி பயன் படுத்துவது?
அமெரிக்காவில் கடுங்குளிர் வருவதற்கு 3 - 10 வாரம் முன் இந்த முள்ளங்கியை பயிரிட பரிந்துரைக்கிறார்கள். குளிர் காலம் வந்தவுடன் தானாகவே பயிர் இறந்துவிடும் . அடுத்த வருடம் மார்ச் முதல் ஜூலை வரை மண்ணில் மக்கி அதிக சத்துக்களை அப்போது வளரும் முக்கிய பயிருக்கு அளிக்கிறது..குளிர் இல்லாவிட்டால் கால்நடைகளை மேய விட்டோ, களைகொல்லி மூலமாகவோ, mowing மூலமாகவோ பயிரை அழித்துவிடலாம் இந்தியாவின் தட்ப வெப்பத்திற்கு ஏற்ப முள்ளங்கியை எப்போது பயிட்டால் அடுத்த பயிருக்கு முழுமையாக பலன் கிடைக்கும் என்று ஆராய்ச்சி செய்து standardise செய்ய வேண்டியிருக்களாம்
Covercrops என்ற நிறுவனத்தினர் அவர்களது முள்ளங்கி விதை இது போன்ற மூடு பயிருக்கு ஏற்றதாக உள்ளதாக கூறுகின்றனர். இது பற்றி மேலும் அறிய அவர்களது தளத்திற்கு சென்று பாருங்கள்.
விசாரித்து பார்த்ததில் ஒரு ஏக்கருக்கு தேவையான முள்ளங்கி விதையின் விலை சுமார் 400 ரூபாய் என்று தெரிய வந்தது.உபயோகபடுத்தி பார்க்க எனக்கு கொஞ்சம் மாதிரி விதையை கொடுத்தார்கள்.அதை உபயோகித்து பார்த்த பின் எனது அனுபவத்தை நான் பகிர்கிறேன்.

உலக வேளாண் பொருட்காட்சி பற்றிய முந்தய பதிவுகள்
5 comments:
பூதம்,
முள்லங்கியை பயிரிட்டு உரமாக்குகிறார்கலா,அமெரிக்காவில் எல்லாம் பணக்கார விவசாயிகள் :-))
இங்கே முள்ளங்கி வாங்கி சாம்பார் வைக்கிறோம், கிலோ 40 ரூவா .
எனவே முள்ளங்கி போட்டாலே வருமானம் பார்க்கலாம்,அதை மக்க விட்டு உரமாக்கி,அதுக்கு அப்புறம் இன்னொரு பயிர் வேற செய்யனுமா :-))
நம்ம ஊரு விவசாயிகள்கிட்டே முள்ளங்கியை போட்டு இயற்கை உரமாக்குனு சொன்னா அடிக்க வருவாங்க :-))
//மண்ணின் வளத்தை பெருக்க மூடு பயிர் வளர்ப்பது தமிழக விவசாயிகளுக்கு புதிதல்ல. நெல்லை அறுவடை செய்து கோடை காலங்களில் வேர் முடிச்சி தாவரமான சணப்பையையும், தண்டு முடிச்சி தாவரமான செஸ்பேனியா ரோஸ்டிரேட்டாவையும் தமிழகத்தில் பல காலமாகவே இயற்கை உரத்திற்காக வளர்த்து வருகின்றனர்.மேலை நாடுகளில் இந்த தொழில்நுட்பம் இதுவரை அதிகம் பிரபலமாகவில்லை. தற்போது மேலை நாடுகளிலும் இது போன்ற தொழில்நுட்பத்தை மூடு பயிராக அறிமுக படுத்த தொடங்கி உள்ளனர். Cover Crops என்ற நிறுவனம் மிக பெரிய அளவில் இது போன்ற மூடு பயிர்களை அறிமுகம் செய்து வருகிறது. //
கவர் கிராப்ஸ் என்பது மண் அரிப்பை தடுக்கவும் பயிரிடுவது.
உரமாக பயிரிடுவது பசுந்தாள் உரம் என்பார்கள்,(green manure crops),
சணப்பை ,கொழிஞ்சி,தக்கைப்பூண்டு எல்லாம் பசுந்தாள் உரமாகும்.கோடை உழவில் பயிரிட்டு ரோட்டோவேடர் வச்சு உழுதுவிட்டு நெல் போடுவாங்க. இயற்கையாக நைட்ரஜன் நிறைய கிடைக்கும்.
தூரதேசத்தில் இருந்தாலும் விவசாயத்தில் நாடு சிறப்பாக இருக்க வேண்டுமென்ற உங்கள் எண்ணமும், அணுகுமுறையும் விவசாயிகளிடம் சென்றடைய வேண்டும். மிகத் தெளிவாக படங்களுடன் பதிவிடுவது சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். உண்மையில் எளிய சிறப்பான தொழில் நுட்பம். எனது நண்பர்களுடன் நாளை 6-3-13 பகிர்ந்து கொள்வேன்.
//கவர் கிராப்ஸ் என்பது மண் அரிப்பை தடுக்கவும் பயிரிடுவது.
உரமாக பயிரிடுவது பசுந்தாள் உரம் என்பார்கள்,(green manure crops),
//
வாங்க வவ்வால்.
கவர் கிராப் மண் அரிப்பை தடுக்கவும் பயன் படுவது. பசுந்தாள் உரம் தரும் செடிகள் தான் மூடு பயிரில் முக்கிய பங்கு வகிக்கிறது.
விக்கிபீடியாவில் உள்ளபடி
http://en.wikipedia.org/wiki/Cover_crop
விக்கிபீடியாவின் ஆர்டிகளை படித்தால் அதன் பெரும் பகுதி மூடு பயிர் மண்ணின் கனிம/கரிம வளம் பெருக்கும் தன்மை பற்றியும், களை கட்டுபாடு/பூச்சி,நோய் கட்டு பாடு பற்றியும் தான் கூறி இருப்பார்கள். அதே சமயத்தில் மண் அரிப்பை தடுக்கும் செடிகளும் மூடு பயிர்கள் தான்.அதாவது மூடுபயிரின் முக்கிய வகைகளில் ஒன்றுதான் பசுந்தாள் பயிர்.
//நம்ம ஊரு விவசாயிகள்கிட்டே முள்ளங்கியை போட்டு இயற்கை உரமாக்குனு சொன்னா அடிக்க வருவாங்க :-))
//
முள்ளங்கியை முறையாக விவசாயம் செய்ய பயிர் வளர்ப்பதற்கும் மூடு பயிராக வளர்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதை விவசாய பயிராக வளர்க்க Land preparation,Crop Production,Crop Protection,Harvest,transport,storage,marketing போன்றவற்றிற்கு பல ஆயிரம் செலவழிக்க வேண்டும்.முக்கியமாக அதிக வேலையாட்கள் கவர் கிராப் வளர்க்க தேவைபடாது. ஆனால் மூடு பயிராக வளர்க்க விதைத்து விட்டு மிகவும் குறைந்த கவனிப்பு போதுமானது.
செலவாகாது. மன்ணின் வளத்தை பாதுகாக்கும் நோக்கமுள்ள விவசாயிகளுக்கு இது வரபிரசாதம். இந்த வகை முள்ளங்கி உண்ணுவதற்கு சுவையாக இருக்கும் என்று தோனவில்லை. இந்த நோக்கத்திற்காக specific selction மூலம் இந்த வகை குறைந்த செலவில் வேகமாக வளரும் ரகத்தை தேர்ந்தெடுத்திருப்பார்கள்.
இது பற்றி ஒரு சில முன்னோடி விவசாயிகளிடம் பேசிய போது நல்ல வரவேற்பு இருந்தது.
//தூரதேசத்தில் இருந்தாலும் விவசாயத்தில் நாடு சிறப்பாக இருக்க வேண்டுமென்ற உங்கள் எண்ணமும், அணுகுமுறையும் விவசாயிகளிடம் சென்றடைய வேண்டும். மிகத் தெளிவாக படங்களுடன் பதிவிடுவது சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். உண்மையில் எளிய சிறப்பான தொழில் நுட்பம். எனது நண்பர்களுடன் நாளை 6-3-13 பகிர்ந்து கொள்வேன்.//
மிக்க நன்றி வின்சென்ட் சார். உங்களுடைய பதிவை படித்த போது தான் நானும் விவசாயம் சார்ந்த பயனுள்ள பதிவு அதிகம் எழுத வேண்டும் என்று தோன்றியது. வெளிநாட்டில் தற்போது இருப்பதால் உலக தொழில்நுட்பங்கள் தமிழக விவசாயிகளை அடைய வேண்டும் என்று ஆர்வமாக உள்ளேன். உங்கள் பதிவை/ஆர்டிகளை பார்த்து சில நூறு மைல்கள் பயணம் செய்து உங்களுடைய தோட்டத்தை பார்த்து தொழில் தொடங்க வந்தவர் பற்றிய பதிவை பார்த்தேன் . நெகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் அந்த அளவு மக்கள் உபயோகபடுத்த கூடிய பிராக்டிகலான செய்திகளை கூறுகிறீர்கள். அது போலவே உலகளவில் பிரபளமான எளிய தொழில்நுட்பங்களை தமிழக விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது
தங்களால் இயன்ற அளவு பல விவசாயிகளுக்கு இந்த செய்தியை கொண்டு சேர்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்
Post a Comment