பொய்க்கும் பருவ மழையும், தண்ணீர் விட மறுக்கும் அண்டை மாநிலங்களும் தமிழக பயிர்களை வாட விட்டு கருக செய்வது வாடிக்கையாகி விட்ட இந்த காலத்தில் வறட்சியால் பயிர்கள் வாடும் போது வறட்சியிலிருந்து பயிரை சிறிது காலத்துக்கு காக்கும் தொழில்நுட்பம் இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.உலக வேளாண் பொருட்காட்சியில் அது சம்பந்தமான ஒரு தொழில் நுட்பத்தை பார்த்தேன்.
Polymer AG என்ற நிறுவனத்தினர் Anti-Stress 2000 என்ற நூதன தொழில்நுட்பத்தை பார்வைக்கு வைத்திருந்தார்கள். Anti-Stress 2000 என்பது 44% கொண்ட கரைசல் ஆகும்.இந்த கரைசலை தண்ணீரோடு கலந்து செடியின் மீது தெளிக்கையில் பகுதி அளவு ஊடுருவ வள்ள மேல் பூச்சு (Semi permeable coating ) இலைகளின் மீது படிகிறது.இந்த பூச்சானது நீராவி போக்கை( evapro transpiration ) 35 முதல் 50 சதவீதம் வரை குறைக்கிறது.தண்ணீர் வறட்சி மட்டுமின்றி, கடுங்குளிர், நடவு நடும் போது ஏற்படும் தாக்கம், சூடான காற்று போன்றவற்றினால் ஏற்படும் தாக்கத்தை கூட மட்டுபடுத்துவதாக கூறுகிறார்கள்.
வறட்சியிலிருந்து பயிரை காக்க இந்த கரைசலை வறட்சி ஏற்படுவதற்கு சிறிது முன்னராக தண்ணீர் நன்கு பாயவிட்டு தெளித்து விட வேண்டும். இது படத்தில் உள்ளது போல் சவ்வு போன்ற பகுதி ஊடுருவ கூடிய பூச்சை ஏற்படுத்தும். இந்த பூச்சானது சிறிய மழையினால் கூட கரையாது.நீராவி போக்கை குறைப்பதால் செடியில் உள்ள தண்ணீர் வெளியில் ஆவியாகி செல்ல விடாமல் செடியின் உபயோகத்துக்கு பயன் படுத்த உதவுகிறது. ஒரு முறை இக்கரைசலை தெளித்தால் 45 முதல் 60 நாட்களுக்கு பயிரை வறட்சியிலிருந்து காக்கலாம்.
இலைகளின் மேல் பூச்சு பூசுகிறது என்றவுடன் நமக்கு உடனே ஏற்படும் கேள்வி ஒளிசேர்க்கை(Photosynthesis) நடைபெறுவது தடை பெற்று விடாதா? என்பதாக இருக்கும்.பகுதி ஊடுறுவும் மேல் பூச்சு ஏற்படுத்த படுவதால் அது கரியமில வாயு மற்றும் பிராண வாயு பரிமாற்றம் எந்த தடையும் இல்லாமல் நடைபெறும் என்கிறார்கள் இந்த நிறுவனத்தினர். அதனால் ஒளிசேர்க்கை பாதிக்க படாது என்கிறார்கள்.இந்த கலவையில் உள்ள பொருட்கள் சுற்றுபுற சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தாததாகவும், எளிதில் மக்கி போகும் தன்மை உள்ளதாகவும் கூறுகிறார்கள்.இருபது ஆண்டுகளாக அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும், சில ஐரோப்பிய நாடுகளிளும் வெற்றிகரமாக விவசாயிகள் பயன் படுத்துவதாக கூறுகிறார்கள்.
Shatter-Proof என்ற அவர்களது மற்றொரு பொருள் பூஞ்சாடிகளில் வைக்கும் மலர்கள் நிறைய நாட்கள் வாடாமல் இருக்க பயன் படுகிறது.

Highly Concentrated Anti-Stress thin flim for demonstartion (It will not be this thick when applied to plant) |

உலக வேளாண் பொருட்காட்சி பற்றிய முந்தய பதிவுகள்