Sunday, January 22, 2012

பரம்பிகுளம் திட்டம் - தமிழகம் கேரளாவிடமிருந்து நீர் வாங்கிய கதை




கேரளாவில் கடலில் கலக்கும் நீரை தமிழ்நாடு உபயோகித்து கொள்ள பிரிட்டிஷ் காலத்தில் போட பட்ட திட்டங்களை(முல்லை பெரியாறு) தற்போதய கேரள அரசியல்வாதிகளும், மக்களும் கண்மூடி தனமாக எதிர்ப்பதை பார்க்கிறோம். இன்றைய தமிழக மற்றும் கேரள அரசியல்வாதிகளின் குறுகிய மற்றும் அரசியல் லாபம் பார்க்க தூண்டும் பார்வையே இதற்கு முக்கிய காரணம்.

ஆனால் ஒரு தமிழக அரசியல்வாதி கேரள அரசிடம் நயமாக பேசி தமிழகத்தின் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெரும் வகையில் கேரள நீரை வாங்கி தந்தார் என்றால் ஆச்சிரியமாக உள்ளது அல்லவா?அப்போதைய கேரள ஆட்சியாளர்களுக்கு உண்மை புரியும் படியும் அவர்களது மனநிலை அறிந்து அதற்கேற்றவாறு சாதுர்யமாக பேசி தமிழகத்துக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றினார்.

அந்த அரசியல்வாதியின் பெயர் சி.சுப்ரமணியம்.அவர் நிறைவேற்றிய திட்டம் பரம்பிகுளம் ஆளியாறு திட்டம்.அதை நிறைவேற்றிய விதத்தை தனது சுய சரிதையான "திருப்பு முனை" என்ற நூலில் அழகாக விளக்குகிறார். அந்த புத்தகத்தில் உள்ளதை அப்படியே பதிவிடுகிறேன்.இன்றைய அரசியல்வாதிகளும், இளைய தலைமுறையினரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு.

சி.சுப்ரமணியம் அவர்களின் சுயசரிதை(திருப்பு முனை)யிலைருந்து --

பரம்பிக்குளம் திட்டம்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகி மேற்கு நோக்கி ஓடி கொண்டிருக்கும் நதிகளின் நீரைக் கிழக்கு திசையில் திருப்பி விடுவதற்காக ஒரு திட்டம் மேற்கொள்ள பட்டது. அது தான் பரம்பிக்குளம் திட்டம்.

சில நதிகள் தமிழ் நாட்டில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கிச் சென்று கேரளத்தில் பாய்கின்றன.கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல காங்கிரசாரும், கோவை மாவட்ட போர்டின் தலைவராய் இருந்தவருமான வி.கே. பழனிச்சாமி கவுண்டர் பரம்பிக்குளம் திட்டம் பற்றி சிறிது காலமாக வற்புறுத்தி வந்தார்.

1952 -ம் ஆண்டில் சென்னை மாகானச் சட்ட பேரவை உறுப்பினராக பழனிச்சாமி கவுண்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சட்ட பேரவையில் உரையாற்றுகையிலும் இந்த திட்டம் பற்றி அடிக்கடி குறிப்பிட்டார். எனக்கு இந்த திட்டம் பற்றியோ அதன் இட அமைப்புக் குறித்தோ அப்போது எதுவும் தெரியாது.

அந்த திட்டத்தை எங்கே அமைக்கலாம் என்பது பற்றிப் பார்வையிட வருமாறு பழனிச்சாமி கவுண்டர் என்னை அழைத்தார். மேற்கு தொடர்ச்சி மலை பாதையில் சுமார் 48 கி.மி தொலைவு நாங்கள் காரில் சென்றோம். பின்னர், யானைகள் மீது ஏறி சென்று நதிகளின் உற்பத்தி பகுதியை அடைந்தோம். அந்த பயணம் ஆபத்து நிறைந்ததாக இருந்தது என்ற போதிலும், பரம்பிக்குளம் திட்டத்தினால் ஏற்பட கூடிய பயன்கள் குறித்து நான் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த திட்டம் குறிந்து ஆரம்ப அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு பாசனை துறை தலைமை பொறியாளரிடம் கூறினேன். இதற்கிடையே திட்டப் பகுதிக்கு நான் சென்றது பற்றி கேரள பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாயின. கேரள அரசின் அனுமதி இல்லாமல் நான் அங்கு எவ்வாறு செல்லலாம் என்று சில மலையாளப் பத்திரிக்கைகள் கேள்வி எழுப்பின.இதை கண்டு நான் வியப்புற்றேன். இந்திய பிரஜை ஒருவர் இந்தியாவின் எந்த பகுதிக்கும் செல்ல எவரிடம் இருந்தும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. எனினும் குறுகிய மனபான்மைக்குத்தான் எத்தனை விசித்திர முகங்கள்.

கேரள முதல்வர் இசைவு

அப்போது ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் கேரள முதலமைச்சராக இருந்தார். பாசன துறை அமைச்சராக வி.ஆர்.கிருஷ்ணய்யர் பொறுப்பு வகித்து வந்தார்.அவர்கள் இருவரும் எனது சிறந்த நண்பர்கள். 1932ம் ஆண்டில் வேலூர் சிறையில் நான் இருந்த போது நம்பூதிரிபாட் அங்கே இருந்தார்.

கேரள முதல்வரையும் பாசன துறை அமைச்சரையும் சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டு, நான் கேரளத்துக்கு சென்றேன்.என்னுடன் அதிகாரிகள் எவரையும் அழைத்து செல்லவில்லை. பரம்பிக்குளம் திட்டம் பற்றி நம்பூதிரி பாட்டிடம் பேசினேன். அவர் கிருஷ்ணய்யரையும் எங்களது பேச்சில் கலந்து கொள்ள அழைத்தார். நாங்கள் பல்வேறு அம்சங்களையும் பற்றி விரிவாக விவாதித்தோம். இந்த திட்டம் பற்றி ஒரு முழுமையான அறிக்கையைத் தந்தால் இது குறித்து பரிசீலிப்பதாக நம்பூதிரிபாட் ஒப்பு கொண்டார். இவ்வாறு ஒரு அறிக்கையைத் தயாரிக்க தமிழ்நாடு அரசு பொறியாளர்கள் திட்ட பகுதிக்கு செல்ல வேண்டி இருந்தது.திட்ட பகுதியில் கேரளத்தில் உள்ள பகுதியும் அடங்கி இருந்தது.எனவே நமது பொறியாளர்கள் கேரள பகுதியையும் ஆய்வு செய்வதற்கு அனுமதி வேண்டினேன். அது உடனே ஒப்பு கொள்ள பட்டது.

பின்னர், திட்டம் குறித்து முழுமையாக ஆய்ந்து, அறிக்கை தயாரிக்குமாறு தமிழ்நாடு பொறியாளர்களுக்கு கூறினேன். ஒரு பள்ளதாக்கிலிருத்து மற்றொரு பள்ளதாக்கிற்கு நீரோட்டத்தை மாற்றும் முயற்சி இந்தியாவிலேயே அப்போது தான் முதன்முறையாக மேற்கொள்ள பட்டது. இதற்காக பெறிய மலைகளை குடைந்து நீண்ட சுரங்க பாதைகளை அமைக்க வேண்டி இருந்தது.

இந்த தொழிற்நுட்பம் நமக்கு புதிது. எனினும் இந்த திட்டத்தை தங்களால் செயல்படுத்த முடியும் என்று தமிழ்நாடு அரசு பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.எனினும் திட்டத்தை செயல்படுத்த குறிப்பாகச் சுரங்க பாதைகளை அமைக்க ஓரளவு வெளி நாட்டு உதவி தேவை படும் என்று அவர்கள் கூறினர்.

நீர் பகிர்வு

திட்டத்தின் முதற் கட்டத்தில் பிரதான நதியான் பரம்பிக்குளம் திசையைய்த் திருப்ப வேண்டி இருந்தது. திட்டத்தின் இரண்டாவது, மூன்றாவது கட்டங்களில் மூன்று சிறிய நதிகளை இந்த பிரதான திட்டத்துடன் ஒருங்கிணைக்க தீர்மானிக்க பட்டது.

ஒரு ஆண்டில் மொத்தம் எவ்வளவு நீர் கிடைக்கும் என்பதை மதிப்பிட வேண்டியிருந்தது.முப்பது ஆண்டுகளில் திட்ட பகுதிகளில் பெய்த மழை சம்பத்தமான புள்ளி விபரங்களை கருத்தில் கொண்டு, மதிப்பீடு செய்யபட்டது.

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்க கூடிய நீரைத் தமிழ்நாடு, கேரளாவும் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது பற்றி அரசியல் அளவிலும், தொழில்நுட்ப நிபுணர்கள் அளவிலும் மிக விரிவான பேச்சுகள் நடந்தன.

கேரள முதலமைச்சர் ஒத்துழைத்ததால் திட்டத்தின் முதல் கட்டம் சம்பந்தமாக இந்த விஷயத்தில் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டாவது, மூன்றாவது கட்டங்கள் அமலாகத்தொடங்கியதும், மேற்கொண்டு பேச்சுக்களை நடத்துவது என்று முடிவு செய்ய பட்டது. மத்திய அரசின் தலையீடு அல்லது மத்தியஸ்தம் எதுவும் இல்லாமல் இரு மாநிலங்களுக்கு இடையே இவ்வாறு ஓர் உடன்பாடு உருவானது, உண்மையிலேயே பெருமைக்குறிய விஷயம் ஆகும்.

இந்த உடன்பாட்டை தொடர்ந்து பரம்பிக்குளம் திட்டம் மிகவும் தீவிரமாக செயல் படுத்தபட்டது. ஒரு கட்டத்தில் திட்ட பகுதியை பார்வையிட வருமாறு நேருஜியை நான் அழைத்தேன். திட்டம் செயல் படுத்த பட்ட இடத்தில் ஒரு விருந்தினர் விடுதியை சிறந்த முறையில் அமைத்திருந்தோம். அதை திறக்க வருமாறு நேருஜியை அழைத்தோம். நேருஜி வந்து அதை திறந்து வைத்தார். அந்த திட்டம் அவரை பெரிதும் ஈர்த்தது. தமிழ்நாடு பொறியாளர்களின் திறமையை நேருஜி பாராட்டினார்.

இரண்டாவது கட்டம்

பின்னர் இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டம் குறித்து பேச்சு நடத்தவேண்டி இருந்தது. இதற்கிடையே கேரளத்தில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை விழுத்து விட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் பிரஜா சோசியலிஸ்ட்டுக் கட்சியின் சார்பில் ஒரு அமைச்சரவை அமைக்க பட்டிருந்தது. பட்டம் தாணுப்பிள்ளை முதலமைச்சராக இருந்தார். நான் அவருடன் பேச்சு நடத்தினேன்.

கம்யூனிஸ்டு அமைச்சரவையுடன் சுமூகமாக பேசி உடன்பாடு கண்ட எனக்கு,பட்டம் தாணுப்பிள்ளையைச் சமாளிப்பது சிரமமாக இருந்தது. நானும் பட்டம் தாணுப்பிள்ளையும் உடன்பாடு காண முடியவில்லை. எனவே தலையிட்டு மத்யஸ்தம் செய்யும் படி மத்திய உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த்தை நாங்கள் கேட்டு கொண்டோம். இரு தரப்பினரையும் அவர் டெல்லிக்கு அழைத்தார்.


பட்டம் தாணுப்பிள்ளையும், அவரது பாசன துறை அமைச்சரும், கேரள பொறியாளர்களும் டெல்லிக்கு சென்றார்கள். காமராஜரும், நானும் தமிழ்நாடு அரசு பொறியாளர்களுடன் டெல்லிக்கு பயணமானோம்.

மத்திய உள்துறை அமைச்சர் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் அடுத்த நாள் நடைபெறுவதாய் இருத்தது.அதற்கு முன்னர் ,பட்டம் தாணுப்பிள்ளையைத் தனியாகச் சந்தித்துப் பேசலாம் என்று எனக்கு ஓர் யோசனை தோன்றியது. உடனே அவருக்கு டெலிபோன் செய்தேன். அவர் தங்கி இருந்த கொச்சி இல்லத்தில் என்னை சந்திக்க அவர் உடனடியாக ஒப்பு கொண்டார்.

அவ்வாறே அவரைச் சந்தித்தேன்.பரம்பிக்குளம் திட்டத்தின் முதல் கட்டம் குறித்து மத்திய அரசின் தலையீடு இல்லாமல் கேரளமும், தமிழ்நாடும் ஒரு உடன்பாட்டுக்கு வர முடிந்ததை அவருக்கு சுட்டி காட்டினேன். இந்த கட்டத்தில் மத்திய அரசு இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்வதை நான் விரும்பவில்லை என்றும், கேரளமும் தமிழ்நாடும் மத்தியஸ்தம் இல்லாமல் முடிவு செய்வதையே நான் விரும்புகிறேன் என்று சொன்னேன்.

கேரள முதல்வரை சி.எஸ் எவ்வாறு சமாளித்தார் என்றும் அந்த திட்டத்தின் இன்றையை நிலை மற்றும் அந்த திட்டத்தை திராவிட இயக்கங்கள் எவ்வாறு தொடர்ந்தன என்பது பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்

--

8 comments:

வவ்வால் said...

சதுக்கப்பூதம்,

மிகவும் அவசியமான கட்டுரை. பீஏபி கால்வாய் பற்றி முன்னர் எப்போதோ படித்தேன். இப்போது மேலும் விரிவாக தெரிந்துக்கொண்டேன். காளிங்கராயன் கால்வாய் கூட ஒரு முக்கியமான கால்வாய்.ஆனால் இப்போது இத்திட்டங்களிலும் பிரச்சினை இருக்கு. தடுப்பு அணை சேதம் ஆகி இருக்கு, அதனை சரி செய்ய கேரளா அணுமதிக்கவில்லை என்பதாக ஒரு பிரச்சினை.கால்வாய்கள் தூர்ந்த்து, தூர்வாரப்படாமல் , சேதம் ஆகி இருப்பதாகவும் படித்தேன்.

நம்ம அரசியல்வாதீகள் இதை எல்லாம் எங்கே கவனிக்கப்போறாங்க.

Anonymous said...

very interesting...ஒரே பதிவில் முடிச்சி இருக்கலாமா ?
waiting for next part

சதுக்க பூதம் said...

வாங்க வவ்வால்.
//நம்ம அரசியல்வாதீகள் இதை எல்லாம் எங்கே கவனிக்கப்போறாங்க.//
தற்போதைய அரசியல்வாதிகள் ஆட்சி செய்வதை விட்டு வியாபரம் தான் செய்கிறார்கள். என்ன செய்ய?
//. காளிங்கராயன் கால்வாய் கூட ஒரு முக்கியமான கால்வாய்.ஆனால் இப்போது இத்திட்டங்களிலும் பிரச்சினை இருக்கு//
அது பற்றி விவரமாக பதிவிடுங்கள். வெளியுலகத்துக்கு சிறிதாவது தெரியட்டும் வவ்வால்.

சதுக்க பூதம் said...

//very interesting...ஒரே பதிவில் முடிச்சி இருக்கலாமா ?
//
வாங்க அணானி. ஒரே பதிவாகதான் இட நினைத்தேன். பதிவின் அளவு பெரிதாக சென்றதால் படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுமோ என்று நினைத்து இரு பதிவாக இடலாம் என்று முடிவு செய்தேன்

ராஜ நடராஜன் said...

அணைக்கட்டு,மின்சார வசதி திட்டங்கள் போன்றவை முன்பு கட்சிகள்,பொதுமக்கள் தலையீடுகள் இல்லாமலே இரு மாநில அரசுகளின் புரிந்துணர்வின் அடிப்படையில் மட்டுமே நிகழ்ந்தன.ஆழியாறு,பரம்பிக்குளம்,காடம்பாறை,சோலையார் அணைக்கட்டு திட்டங்கள் அவ்வாறு நிகழ்ந்தனவே.

சோலையாறு அணை கூட கேரளாவின் எல்லைப்பகுதியில் தமிழகத்தை சார்ந்து உயர் மேட்டில் உள்ளது.

முன்பு கேரளாவின் அதிராபள்ளி நீர்வீழ்ச்சியெல்லாம் சோலையாறு அணை கடந்த வெள்ள நீர்வீழ்ச்சியாகும்.

இப்போதைய காலகட்டத்தில் அணை கடந்த வெள்ளம்,அதிராபள்ளி நீர்வீழ்ச்சி கோடைகாலத்தின் காய்ந்த நிலையே தென்படுகிறது.

மாநிலங்கள் கடந்த நிலையில் நீர் பற்றாக்குறை நிலையை தென்னகம் நோக்கிச் செல்கிறது.

சதுக்க பூதம் said...

வாங்க ராஜ நடராஜன்.
மாநிலங்களுக்கிடையேயான உறவு நாளுக்கு நாள் மோசமகவே செல்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தவுடன் தேவையற்ற அதிகாரங்களை மத்திய அரசு வாரி குவித்து தேவையானவற்றை ஏற்று கொள்ளாதது கூட காரணமாக இருக்கலாம்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.

சதுக்க பூதம் said...

நன்றி Rathnavel Natarajan