உலகின் லாபகரமான வங்கி எதுவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சேஸ் வங்கி?சிட்டி வங்கி?ஸ்விஸ் வங்கி? இல்லை.அந்த வங்கியின் லாபம் எக்சான் மொபில்,ஆப்பில் மற்றும் IBM நிறுவனங்களின் கூட்டு லாபத்தை விட அதிகம்.அதன் லாபம் $78 பில்லியனுக்கும் மேல்.கேட்கவே ஆச்ச்சரியமாக இருக்கிறதா? வங்கியின் பெயரை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது. அந்த வங்கியின் பெயர் தான் பெடரல் ரிசர்வ் வங்கி.பெடரல் ரிசர்வ் வங்கி தான் உலகின் பொருளாதாரத்தின் அஸ்திவாரம்.இந்த லாபம் எப்படி வந்தது என்று பார்த்தால் இன்னும் வியப்பாக இருக்கும்
1.அமெரிக்க அரசாங்கம் அளவிற்கு மீறிய செலவீனங்களால் (போர், நிதி நெருக்கடியிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களை காப்பாற்றுதல்,மக்கள் நல திட்டங்கள்) பெருமளவில் கடன் வாங்க வேண்டி உள்ளது. அமெரிக்க அரசு மட்டுமன்றி அரசு சார்ந்த நிறுவனங்களும் பெருமளவில் கடன் வாங்க தேவை உள்ளது.
2.அரசு கடனை கருவூல பத்திரமாக விற்பனை செய்கிறது.
3.அந்த பத்திரத்தை பெருமளவிற்கு பெடரல் ரிசர்வ் வாங்குகிறது.(இதற்கு நடுவே வேறு சில நிகழ்வுகள் இருந்தாலும் எளிமைக்காக இவ்வாறு வைத்து கொள்வோம்)
4.அது போன்ற பத்திரங்களின் மதிப்பு சுமாரக $3 டிரில்லியன் டாலர்கள் ஆகும். அந்த அளவு பணத்தை சம்பாதிக்க எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்க தோன்றும். ஆனால் இந்த பணம் உழைப்பில் வருவதில்லை. கம்ப்யூட்டரில் ஒரு கிளிக் செய்தால் இந்த பணம் உருவாகி விடும். கடந்த காலங்களிலாவது பிரிண்ட்டிங் பிரஸ் வைத்து பிரிண்ட் செய்ய வேண்டும்.
5.அவ்வாறு உருவாக்க பட்ட பணத்தை அரசுக்கு கடனாக கொடுக்கிறது.
6.அரசு அந்த கடனுக்கு வட்டியாக பணத்தை பெடரல் ரிசர்விற்கு கொடுக்க வேண்டும்.
7.அவ்வாறு கிடைத்த வட்டியின் மதிப்பு $70 பில்லியன் டாலருக்கு மேல்.
8.அந்த வட்டி பணத்தை பெடரல் ரிசர்வ் வங்கி என்ன செய்யும்? தன் செலவுக்கு போக மீண்டும் அரசிடமே கொடுக்கும்.
அதாவது அரசிடம் கடன் கொடுத்து அதற்கு வட்டி வாங்கி, லாபமாக உள்ள அந்த வட்டியை அரசுக்கே திரும்ப கொடுக்கும். ஆக மொத்தம் அரசுக்கு வட்டியில்லா கடன் கிடைக்கிறது.
உலக பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக பொது நாணயமாக உள்ள டாலர் பெருமளவில் உருவாக்கபடும் கதை இது தான்.
பிற நாடுகள் இது போல் செய்வதில்லையா என்று நினைக்க தோன்றும்.இந்திய ரிசர்வ் வங்கி கூட சுமார் $2 பில்லியன் (சிறிய அலவில்?) பணத்தை உருவாக்கி உள்ளது.
அதற்கு பணவீக்கம் மற்றும் பணத்தின் மதிப்பு சரிவு போன்ற கடுமையான விலையை கொடுக்க வேண்டும். ஆனால் டாலர் சர்வதேச பொது நாணயமாக உள்ளதாலும் அமெரிக்க பொருளாதாரம் பெரியதாக உள்ளதாலும், முதலீட்டாளர்களுக்கு வேறு மாற்று (தங்கம் தவிர) இல்லாததாலும் டாலர் மிக கடுமையான விலையை என்றுமே கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
--
3 comments:
இன்னும் சற்று எளிமையாக எழுதியிருக்கலாம். சாமானியருக்கும் புரியும் விதமாக.
மேலும் இந்திய ரூபாயின் வீழ்ச்சி மற்றும் அதன் எதிர்கால விளைவுகள் பற்றி எழுதுங்களேன்.
வாங்க அம்பேத். இது பற்றி ஒரு தொடராக எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். நேரம் இல்லாததால் என்னால் உடனடியாக எழுத முடியவில்லை. நிச்சயம் கூடிய விரைவில் எழுதுகிறேன்.
anavarukkum purivathupol eliya thamalil koorungal sahotharare
Post a Comment