கடந்த வருடம் இதே மாதத்தில் பென்னி குயிக் பற்றி கோவில் இல்லா மதுரை வீரன் என்ற தலைப்பில் ஒரு பதிவை எனது தமிழ்மணம் நட்சித்திர வாரத்தில் இட்டிருந்தேன். சமீபத்திய முல்லை பெரியாறு பிரச்ச்னை காரணமாக அவருடைய பெருந்தன்மை மற்றும் தியாகம் பற்றி பல பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டு அவர் பற்றிய செய்திகளை மக்களை சென்றடைய உதவின.அந்த பதிவில் அவருக்கு நல்ல நினைவிடம் கூட கட்டபடவில்லை என்று பின் வருமாறு எனது மன வருத்தத்தை தெரிவித்திருந்தேன்.
//அவருடைய தியாகம் இன்றைக்கு மதுரை பகுதியை சேர்ந்த பல லட்சம் மக்களை வ்றுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. அரசு பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு எத்தனையோ சிலைகளும், நகர்களின் பெயரும் இருந்தாலும், பென்னிகுயிக்கிற்கு மதுரை பொது பணித்துறை அலுவலகத்தில் ஒரு சிலை மட்டுமே உள்ளது.ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்நாளில் நன்றியுணர்வோடு பார்க்க பட வேண்டியவர் பென்னிகுயிக்.
இவர் ஒரு கோவில் இல்லாத மதுரை வீரன் கடவுள் தானே?
//
தற்போது முதல்வர் அவருக்காக மணி மண்டபம் கட்ட முடிவு செய்துள்ளார். இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தி.
மணி மண்டபம் கட்டுவதால் என்ன பயன் என்று நீங்கள் நினைக்ககூடும். மணிமண்டபம் கட்டுவதன் மூலம் அவருடைய வரலாற்றை பல்லயிரகணக்கான மாணவர்களும் இளைஞர்களும் இனி வரும் காலங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.அரசியல் மற்றும் அனைத்து துறைகளிளும் எதிர்மறையான தலைவர்களையே பார்க்கும் அவர்களுக்கு பென்னி குயிக் வரலாறு நேர்மறையான உத்வேகத்தை (Positive Inspiration)கொடுக்க வாய்ப்புள்ளது.
அதே போல பள்ளி பாடங்களில் அரசியல் காரணத்திற்கு வைக்க பட்டுள்ள ஊழல் பெருச்சாளிகளின் பாடங்களை நீக்கி விட்டு பென்னி குயிக், சி.சுப்ரமணியம், காமராஜர் போன்றோரது வாழ்க்கை வரலாறை பாடங்களாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--
No comments:
Post a Comment