Wednesday, December 10, 2008

விமான எரிபொருளாக வரப்போகிறது அடுத்த தலைமுறை உயிர்ம எரிபொருள்(Biofuel)

   உயிர்ம எரிபொருள் தொழில்நுட்பம் அறிமுகமானதிலிருந்து பல வரவேற்புகளையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.பெட்ரோலிய எரிபொருட்கள் தீர்ந்து வருவதாலும, அதன் உற்பத்தி ஒரு சில நாடுகளை நம்பி இருப்பதாலும்,உலகளாவிய
வளர்ச்சி ஏற்படும் போது அதன் தேவை அதிகமாவதலும் மற்றும் மேற்கூறிய காரணங்களை காட்டி அதன் விலையை இடைதரகர்கள் லாபநோக்குக்காக ஏற்றுவதாலும்,புதிய எரிபொருளுக்கு மாற்று தேடி உலகெங்கும் அராய்ச்சி நடை பெற்று வருகிறது.பெட்ரோலிய பொருட்களின் விலை 100$ தாண்டியதால் மாற்று எரிபொருளின் உற்பத்தி பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருந்தது.

இதன் விளைவாக ஏற்பட்ட கண்டுபிடிப்பு தான் உயிர்ம எரிபொருள்.பயிர்களிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பம் மிகவும் வெற்றிகரமானதாக கருதப்பட்டு செயல்படுத்தபட்டும் வந்தது.ஆனால் பெரும்பாலான நாடுகள் உணவுக்கு பயன்படுத்தும் பயிர்களை உயிர்ம எரிபொருளுக்கு பயன் படுத்த ஆரம்பித்ததாலும், உணவு பயிர் பயிரிடும் இட்த்தில் உயிர்ம எரிபொருள் பயிரிட ஆரம்பித்ததாலும்( இது எந்த அளவு உணமை என்று தெரியவில்லை), உணவு பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்து (உண்மையில் உணவு பொருட்களின் விலை உயர்விற்கு climate change மற்றும் speculative commodity trading போன்றவைதான் காரணம் என்பது வேறு விஷயம்) உணவு பொருள் vs உயிர்ம எரிபொருள்(Food vs Fuel) என்ற வாதத்திற்கு கொண்டு சென்றது. அவற்றில் ஜெட்ரோபா போன்ற சில எரிபொருட்கள் பயிகள் விளைவிக்க முடியாத வரண்ட நிலங்களில் வளரக்கூடியவை.ஆனால் அவை உற்பத்தியாகும் காலம் அதிகம் என்பதும் வணிக ரீதியாக லாபம் குறைவானது என்றும் சில குறைகள் இருந்தது .


 இதற்க்கெல்லாம் ஒரு மாற்றாக சப்பயர் என்ர்ஜி என்ற நிறுவனம் பாசியிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டு
பிடித்துள்ளது.உயிம எரிபொருளுக்கு பாசி பயன்படுத்துவது என்பது பலவகையிலும் நன்மை பயக்க கூடியது. மிக குறைவான இடத்தில் அதிக அளவு பாசியை எளிதாக உற்பத்தி செய்யலாம்.இதனால் உணவு உற்பத்தி பாதிக்க படாது. இது வளி மண்டலத்தில் உள்ள கரியமில
வாயுவை உறிஞ்சுவதால் global warmingஐயும் குறைக்க உதவுகிறது.இது மற்ற பயிர்வகைகளை போல் இல்லாமல் ஒரு சில நாட்களிலேயே வளர்ச்சி அடைந்து உடனடியாக பலனளிக்க கூடியது. மேலும் எரிபொருளை பிரித்த பின்னர் எஞ்சியவற்றை கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன் படுத்தலாம். தற்போது அந்த தொழில்நுட்பம் பொது உபயோகத்துக்கு வரும் காலம் வந்து விட்டது. விமான எரிபொருளுக்கு மாற்றாக பாசி மற்றும் ஜெட்ரோபாவிலிருந்து கிடைக்கும் எண்ணையை பயன்படுத்த Continental Airlines,Virgin Atlantic,Air Newzealand
போன்ற நிறுவனங்கள் முடிவெடுத்து சோதனை ஓட்டத்துக்கும் தயாராகின்றனர் .

இந்த முயற்ச்சி வெற்றி பெற்றால் இந்தியாவில் தரிசு நிலங்களில் ஜெட்ரோபா பயிரிடுவத்ற்கும் குறைந்த விலையில் பாசி உற்பத்தி செய்து லாபமீட்டவும் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

3 comments:

ராஜ நடராஜன் said...

உயிர்ம எரிபொருளில் புதியதாக gas hydrates வங்காள விரி குடாக் கடலுக்கு அடியில் இருப்பதாக இந்தியக் கடல் ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.இதன் சக்தி பெட்ரோலியத்துடன் சமனீடு செய்தால்

ஒரு லிட்டர் பெட்ரோல் = 10 கிமீ
gas hydrates = 1600 கி.மீ

இது எப்பொழுது சாத்தியம் எனத் தெரியவில்லை.

சதுக்க பூதம் said...

தகவலுக்கு நன்றி ராஜ நடராஜன்.Gas Hydrates பற்றி படித்து பார்த்தேன். அது உபயோகத்திற்கு வர சில காலம் ஆகும் போல் தெரிகிறது.மேலும் global warming பிரச்சனையையும் அதிக படுத்தும் போல் தெரிகிறது

Anonymous said...

//பாசியிலிருந்து எரிபொருள் //

Wow !!!