கடுமையான முயற்ச்சிக்கு பிறகு கடல் சார் பல்கலை கழகம் ஒரு வழியாக தமிழகத்திற்கு வந்து விட்டது.கடல் சார் பல்கலை கழக நிர்வாக வளாகமும் தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டபட்டு விட்டது.இது மிக விரைவில் இந்த ஆட்சியிலே முழு அளவில் செயல் பட ஆரம்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும். இதை கொண்டு வருவதற்கு அவர் போராடிய போராட்டங்கள் பல. தமிழ் நாட்டு மக்களின் ஓட்டை வாங்கி கொண்டு பதவிக்கு வந்த சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் செய்த புல்லுருவி தனத்தையும் மீறி ஒரு வழியாக தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார்.(இதே தமிழக கம்யூனிஸ்ட் தோழர்கள் சேலம் கோட்டம் பிரிக்கும் போதும் இதே போன்ற செயளில் இறங்கியது குறிப்பிட தக்கது).இதே போல் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் சேது சமுத்திர திட்டத்தையும் அவர் எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றினால் மிகவும் நன்றாக இருக்கும்
முக்கியமாக பாலு அவர்கள் தமிழகத்திற்கு செய்யும் பணிகளை பற்றி படித்து பார்த்தால் மிகவும் பிரமிப்பாக உள்ளது.இந்த ஆட்சியில் மட்டும் 12,146 கோடி ரூபாயில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையினால் பணிகள் செயல்படுத்த படுகின்றன.தற்போதைய மத்திய அரசு பதவி ஏற்றதில் இருந்து 403,755.85 கோடி மதிப்புள்ள 868 பிராஜெட்கள் மத்திய அரசால் செயல் படுத்த பட்டுள்ளன. அவற்றில் 40900 கோடி மதிப்புள்ள பிராஜெட்கள், அதாவது ஒட்டு மொத்த இந்தியாவிற்கு ஒதுக்க பட்ட வளர்ச்சி தொகையில் 10% தமிழகத்திற்க்காக மட்டும் செயல்படுத்த பட்டுள்ளது.தமிழகம் தான் இந்தியாவிலே அதிக அளவு பிராஜெட்கள் மற்றும் நிதியை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.இவற்றில் பெரும் பங்கு T.R.பாலு தலமையில் உள்ள துறைகளால் நிறைவேற்ற படுகிறது.தமிழகத்தில் 850 கி.மி நீள சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற பட்டுள்ளன.
எனக்கு தெரிந்து இந்த அளவு மத்திய திட்டங்களை குறுகிய காலத்தில் தமிழகத்திற்கு கொண்டு வந்த அமைச்சர் இவராக தான் இருப்பார் என்று தோன்றுகிறது.இதில் மிகவும் வருத்த பட வேண்டிய செய்தி என்னவென்றால தமிழக பத்திரிக்கைகள் இந்த சாதனைகளை பற்றி பெரிய அளவில் பாராட்டி எழுதுவதே இல்லை. மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்களின் முயற்ச்சியால் இவ்வளவு வளர்ச்சி பணிகள் தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ள சாதனை தமிழகத்தில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியே.
பத்திரிக்கைகள் முதல்வரின் குடும்ப அரசியல்,நிர்வாக சீர்கேடு போன்ற குறைகளை அதிக அளவு விமர்சித்து முக்கியத்துவம் தந்து பிரசூரிக்கிறது. இது ஆட்சியாளர்களை திருத்தி கொள்ள நிச்சயம் தேவை. ஆனால் இதே போன்று ஆட்சியாளர்கள் செய்யும் சாதனைகளுக்கும் முக்கியத்துவம் தந்து பாராட்டி , பெரிதாக பிரசூரிக்க வேண்டும். அப்போது தான் அந்த சாதனைகள் மக்கள் கவனத்திற்கு சென்றடையும்.மேலும் அது நல்லது செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளையும் ஊக்கபடுத்தும்.
தமிழகத்தை சேர்ந்த 13 அமைச்சர்கள் தமிழகத்திற்கு என்ன செய்து கிழித்து விட்ட்டார்கள் என்று கேள்வி கேட்கும் அரசியல்வாதிகளாவது இந்த சாதனைகளை படித்து விட்டு பேசினால் நன்றாக இருக்கும்.
பத்திரிக்கையாளர்களே! ஒரு சில நல்ல செய்திகளையும் மக்களுக்கு அடிக்கடி தெரிய படுத்துங்கள். கட்சி பாரபட்சமின்றி இந்த சாதனைகள் அனைவராலும் பாரட்ட பட வேண்டும். அடுத்து வரும் தேர்தலில் ஜெயித்து மத்திய அமைச்சராக வருவது யாராக இருந்தாலும் இதை விட நன்றாக செய்ய முயர்ச்சி எடுக்க வேண்டும்
5 comments:
//முக்கியமாக பாலு அவர்கள் தமிழகத்திற்கு செய்யும் பணிகளை பற்றி படித்து பார்த்தால் மிகவும் பிரமிப்பாக உள்ளது.இந்த ஆட்சியில் மட்டும் 12,146 கோடி ரூபாயில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையினால் பணிகள் செயல்படுத்த படுகின்றன.தற்போதைய மத்திய அரசு பதவி ஏற்றதில் இருந்து 403,755.85 கோடி மதிப்புள்ள 868 பிராஜெட்கள் மத்திய அரசால் செயல் படுத்த பட்டுள்ளன. அவற்றில் 40900 கோடி மதிப்புள்ள பிராஜெட்கள், அதாவது ஒட்டு மொத்த இந்தியாவிற்கு ஒதுக்க பட்ட வளர்ச்சி தொகையில் 10% தமிழகத்திற்க்காக மட்டும் செயல்படுத்த பட்டுள்ளது.தமிழகம் தான் இந்தியாவிலே அதிக அளவு பிராஜெட்கள் மற்றும் நிதியை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.இவற்றில் பெரும் பங்கு T.R.பாலு தலமையில் உள்ள துறைகளால் நிறைவேற்ற படுகிறது.தமிழகத்தில் 850 கி.மி நீள சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற பட்டுள்ளன.
//
நிச்சயம் தமிழ் நாட்டில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி
ஏற்கனவே சேலம் ரயில்வே கோட்டம் கொண்டு வந்து தமிழ்கத்தில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது.
அதைவிட நெடுஞ்சாலை துறை அமைச்சர் செய்த சாதனைகள் இதோ:
கத்திப்பாரா மேம்பாலத்தை எட்டு வருடங்களாக முடித்த சாதனை, மடுவின்கரை அண்ணா சாலை இணைப்பு பாலத்தை ஆறு ஆண்டுகளாக இன்னும் முடிக்காமல் இருக்கும் சாதனை, குரோம்பேட்டை பள்ளிக்கரணை மேம்பாலத்தை ஒன்பது ஆண்டுகளாகியும் முடிக்காமல் இருக்கும் சாதனை,
நாகர்கோயில் மதுரை இரு வழிப்பாதை சாலையை பத்து ஆண்டுகள் ஆகியும் முடிக்கமால் இருக்கும் சாதனை, வாஜ்பாய் காலத்தில் தொடங்கப்பட்ட தங்க நாற்கர சாலை அனேகமாக துரை தயாநிதியின் பேரன் காலத்தில் முடியும் என நம்புவோம்.
துபாய், மஸ்கட் எல்லாம் பொய் பாத்துட்டு வாங்க சாமிகளா, எவ்வளவு சீக்கிரமா சாலைகளை அமைக்கிறார்கள் என்று.
குப்பன்_யாஹூ
//ஏற்கனவே சேலம் ரயில்வே கோட்டம் கொண்டு வந்து தமிழ்கத்தில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது.
//
ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும் ஒவ்வொரு கோட்டத்திற்கும் குறிப்பிட்ட அளவு பணம் ஒதுக்குவார்கள்.இதுவரை தமிழகத்தை சேர்ந்த பகுதிகள் பல கேரளாவை தலமையிடமாக கொண்ட கோட்டத்தில் இருந்ததால், அந்த கோட்டத்திற்கு ஒதுக்க பட்ட பணம் அனைத்தும் கேரள பகுதிக்கே செலவிடப்பட்டு, அந்த கோட்டத்தில் இருந்த தமிழக பகுதிகள் புறக்கணிக்க பட்டு வந்தது. இனி வரும் பட்ஜெட்டுகளில் சேலம் கோட்டத்திற்கு ஒதுக்க படும் பணம் முழுவதும் தமிழ்நாட்டு ரயில்வே பணிக்ளுக்கே செலவிடப்படும்.
மேலும் ஒரு கோட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதால் தேனாறும் பாலாறும் ஓட போவது இல்லை. அது போல், அதனால் பிற் காலத்தில் ஏற்பட போகும் நன்மையும் கணிசமானவையாக இருக்க வாய்ப்புண்டு.
//கத்திப்பாரா மேம்பாலத்தை எட்டு வருடங்களாக முடித்த சாதனை, மடுவின்கரை அண்ணா சாலை இணைப்பு பாலத்தை ஆறு ஆண்டுகளாக இன்னும் முடிக்காமல் இருக்கும் சாதனை, குரோம்பேட்டை பள்ளிக்கரணை மேம்பாலத்தை ஒன்பது ஆண்டுகளாகியும் முடிக்காமல் இருக்கும் சாதனை,
//
மத்திய அரசின் திட்டங்கள் தாமதமாவது ஒன்றும் புதிதல்ல.ஆனால் ஒரு திட்டத்திற்கு என்று மத்திய அரசு நிதி ஒதுக்கினால், என்றாவது ஒரு நாள் பயன் கிடைக்க போவது உறுதி. திட்டங்கள் தாமதமாவது என்பது இந்த பதிவின் செய்திக்கு அப்பாற்பட்ட விவாதத்திற்கு உரிய பொது பிரச்சனை
//துபாய், மஸ்கட் எல்லாம் பொய் பாத்துட்டு வாங்க சாமிகளா, எவ்வளவு சீக்கிரமா சாலைகளை அமைக்கிறார்கள் என்று.
//
ஒழுங்காக திட்டமிட்டு L&T போன்ற தரமான கம்பெனிகளை கொண்டு, குறித்த காலத்தில் பாலத்தை கட்டி முடித்தால் , பொய்யான ஊழல் கேசு போட்டு அந்நிறுவனங்களையும் கொச்சை படுத்தி ஓட ஒட விரட்டுகின்றனரே இந்த அரசியல்வாதிகள்.மேலும் bureacracy, red tapism போன்றவை இந்தியாவின் பொது பிரச்சனைகள்
//பத்திரிக்கையாளர்களே! ஒரு சில நல்ல செய்திகளையும் மக்களுக்கு அடிக்கடி தெரிய படுத்துங்கள். கட்சி பாரபட்சமின்றி இந்த சாதனைகள் அனைவராலும் பாரட்ட பட வேண்டும்//
Yes, it would be nice if they high light all the good things that is been done by the politisions, so that it would be a boost for them to do more good things for the public
கருத்துக்கு நன்றி Nanmai Virumbi
Post a Comment