Tuesday, December 30, 2008

அண்ணாமலை பல்கலை நினைவுகள்- சண்முகம் கடை பஜ்ஜி




அண்ணாமலை பல்கலைகழகத்தில் '90 களில் படித்தவர்கள்(பொறியியல் கல்லூரி நீங்களாக) அனைவருக்கும் பெரும்பாலும் தெரிந்த கடை சண்முகம் கடை. அனைவருக்கும் தெரிந்த கடை என்றவுடன் நீங்கள் ஏதோ பெரிய ஆடம்பரமான கடை என்று நினைத்து விட வேண்டாம். அது ஒரு சிறிய கீற்று கொட்டாயில் இயங்கும் கடை.காலை மற்றும் மாலை நேரங்களில் அங்கு வித விதமான பஜ்ஜி,வடை,போண்டா,காபி,டீ போன்றவை கிடைக்கும். நள்ளிரவு நேரங்களில் தோசை, நூடுல்ஸ் போன்ற டிபன் வகையறாக்கள் கிடைக்கும். அது இருக்கும் இடம் strategically important இடம்.மாணவர்களால் செல்லமாக PC என்று அழைக்கபடும் (Post office corner) இடத்தில் உள்ளது. பல்கலை கழக பெண்கள் விடுதி நுழைவாயிலிலிருந்து main roadற்கு சேரும் இடத்தின் அருகாமையில் உள்ளது. மேலும் பல்கலை கழகத்திற்குள் உள்ள கடை தெரு என்றால் அதை தான் கூற வேண்டும். அதற்கு அருகில் கோவில் கூட உண்டு.



காலையிலிருந்து மாலை வரை கல்லூரி ஆசிரியர்களின் தாக்குதலில் நிலை குலைந்த மாணவர்கள், விடுதிக்கு சென்று ஒரு quick குளியல் எடுத்து கொண்டு, நன்றாக தங்களை அலங்கரித்து கொண்டு சிறு சிறு குழுவாக நண்பர்களுடன் PC நோக்கி புறப்பட்டு விடுவர். மாலை நேரத்தில் ஹாயாக நண்பர்களுடன் கூட்டாக அமர்ந்து அன்றைய தினம் வகுப்பில் எந்த பெண் எந்த பையனை பார்த்தார்,வகுப்பில் மாணவ்ர்கள் செய்த கலாட்டாக்கள், தமிழக அரசியல் போன்ற உலகில் நடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் குறித்து தேனீர் அருந்திக்கொண்டே தங்களுடைய மேலான கருத்துகளை விவாதிக்கும் இடம் சண்முகம் கடை. கடை தான் சிறிய கடை என்றாலும் அங்கு கிடைக்கும் பஜ்ஜி, வடைகளின் சுவையே தனி. அரட்டை அடித்து கொண்டே கடையின் அடுப்பில் சூடாக அந்த நேரத்தில் எதை எடுக்கிறார்கள் என்று பார்த்து கொண்டு உடனடியாக அவற்றில் ஒரு set ஐ order செய்து தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அக்கடையின் உரிமையாளர் சண்முகம் தன் வாடிக்கையாளரிடம் வைக்கும் நம்பிக்கை அளாதியானது. ஒரு குழுவில் எந்த பதார்த்தம் எவ்வளவு வாங்குகிறார்கள் என்று கணக்கு வைத்து கொள்ளவே மாட்டார். நாங்கள் அரட்டையை முடித்து விட்டு, வயறு நிறைந்ததும் நாமாக என்னன்ன எவ்வளவு உண்டோம் என்று சொல்கிறோமோ அதற்குறிய பணத்தை மட்டும் கணக்கிட்டு வாங்கி கொள்வார்.அப்போது நம்மிடம் பணம் இல்லை என்றால் கூட கவலை பட வேண்டாம்.அடுத்த முறை கடைக்கு வரும் போது கொடுத்தால் போதும்.அந்த கடைக்கு வரும் கூட்டத்தை வைத்து பார்த்தால் அவர் அதை எல்லாம் ஞாபகம் வைத்திருப்பார் என்பது கேள்விக்குறியே. ஆனால் ஒவ்வொரு நாளும் நாங்கள் உண்ணும் பஜ்ஜி வடைக்கு கணக்கில்லை. சிலர் மாத கணக்கு வைத்து, அதன் மதிப்பு மாதம் 1000 ரூபாயை தாண்டும்(1990 களில்).



தினமும் எவ்வாறு அவ்வளவு செலவு செய்வது? அதற்கு பல வழிகள் உள்ளன. முதல் நாள் கூட்டத்தில் உள்ள ஒரு மாணவனிடம்,"மச்சி இன்னைக்கு அந்த $$$ பிகர் கிளாசில் உன்னையே பார்த்து கொண்டிருந்தாள் பார்த்தியா" என்று ஆரம்பிப்பார்கள். அந்த மாணவனும் அப்படியா என்று கேட்டு விட்டால் போதும். அவ்வளவு தான் treat படலம் அன்று ஆரம்பமாகும். முதல் நாள் பார்த்ததாக கூறியதற்கு treat கொடுப்பார். அன்றிலிருந்து அந்த பையன், அந்த பெண்ணை பார்க்க ஆரம்பிப்பார். அவர் தொடர்ந்து பார்ப்பதால் அந்த பெண்ணும் பார்க்கும். அந்த பெண் அவரை பார்க்கும் ஒவ்வொரு நாளும் treat கள் தொடரும். அது மட்டும் அல்ல. இருவரும் ஒரே நிற உடை அணிந்தார்கள், பேசினார்கள் என பல வகையில் treat தொடரும். இது போல் சம்பந்தமே இல்லாத மாணவர் மாணவியிடையே treatக்காக நட்புறவை வளர்த்து, அது சில சமயம் காதலாகி, ஒரு சில சமயம் திருமணத்தில் கூட முடிந்துள்ளது.



சண்முகம் கடையின் மற்றொரு சிறப்பம்சம்- இரவு டிபன்.


மாலை டிபனை சண்முகம் கடையில் முடித்து விட்டு, வெளியில் ஒரு சுற்று சுற்றி விட்டு விடுதிக்கு வந்து, சில ரெக்கார்ட் மற்றும் அசைன்மன்ட் வேலைகளை முடித்து விட்டு இரவு சாப்பாடு முடிந்ததும், மாணவர்களின் அடுத்த shift தொடங்கும். ஆங்காங்கே மாணவர்களின் அறைகளில் குழுவாக கூடி அடுத்த அரட்டை கச்சேரி ஆரம்பமாகும். மாணவர்களிடம் பல குழுக்கள் இருக்கும். மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அங்கு விவாத பொருள் ஆன்மீகத்தில் தொடங்கி பில்லி சூனியம், வர்க்க அரசியல்,மாநில அரசியல்,இந்திய மற்றும் சர்வதேச அரசியல்,கல்லூரி ஆசிரியர்,சக மாணவிகள், மாணவிகளை பின் தொடரும் மாணவர்கள், கடலை போடும் மாணவர்களை கண்டு வயறெறியும் கும்பல்,கல்லூரி மாணவர்களிடையேயான அரசியல் என பல இருக்கும். இந்த விவாதம் முடிய நள்ளிரவு ஆகி விடும். விவாதத்தால் ஏற்படும் களைப்பு தீர மீண்டும் சண்முகம் கடை நோக்கி செல்வர்.அங்கு தோசை,ஆம்லெட், நூடுல்ஸ் போன்ற சுவையான சிற்றுண்டி உண்டு விட்டு விடுதி வந்து படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

ஒரு முறை என்னை பார்க்க விடுதிக்கு வந்த அண்ணணை அந்த கடைக்கு இரவு சாப்பாடு சாப்பிட அழைத்து வந்தேன். அந்த கடையின் தோற்றத்தை பார்த்து முதலில் முகம் சுளித்த அண்ணண்,அங்கு வாங்கி கொடுத்த நூடுல்ஸ் உண்டு விட்டு சுவையில் மகிழ்ந்து போனார். இன்றும் கூட சண்முகம் கடை நூடுல்ஸ் போல் எங்குமே உண்டது இல்லை என்று கூறி வருகிறார்.


பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பல்கலைகழகத்திற்கு சென்றபோது சண்முகம் கடைக்கு மீண்டும் சென்றேன். தற்போது சில புது வகை பண்டங்களையும்(காளிபிளவர் பக்கோடா) சேர்த்துள்ளார்.

கடையை சுற்றி அதே மாணவர் கூட்டம்...

மீண்டும் கல்லூரி கால நினைவுகளை அசை போட தொடங்கியது மனது...

14 comments:

Unknown said...

நானும் சிதம்பரத்துக்கு பக்கத்து ஊர் தான், ஆனால் அண்ணாமலையில் படிக்கவில்லை. அதனால் சண்முகம் கடை பஜ்ஜி சாப்பிட்டதில்லை, அடுத்த முறை விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும்போது சண்முகம் கடைக்கு ஒரு ரவுண்டு அடிச்சிட வேண்டியது தான்.

நீங்கள் படிக்கும் காலத்தில் புத்தூர் ஜெயராமன் கடை இருந்ததா? அங்கே சாப்பிட்டது உண்டா? இப்பொழுது பல அண்ணாமலை மாணவர்களுக்கு வீக்கெண்ட் விசிட்டிங் பாயிண்ட் புத்தூர் ஜெயராமன் கடை. அவர் கடையில் கெட்டித்தயிர், இறால் வறுவல் ரொம்ப பிரபலம்.

ஆயில்யன் said...

//மீண்டும் கல்லூரி கால நினைவுகளை அசை போட தொடங்கியது மனது... //

ரைட்டு ஆரம்பிச்சாச்சு !

இனி தொடரட்டும் தொடர நிறைய பேர் வருவாங்க :)))))

(முன்னாடி ஒரு முறை பல்கலை பத்தி எழுதுங்கன்னு சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு இம்புட்டு விசயம் மனசுக்குள்ள வைச்சுக்கிட்டு என்னிய போய் எழுத கேட்டீங்களேன்னு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!)

ஸ்டெப் பை ஸ்டெப் போட்டு மெதுவா நிதானமா எல்லா நினைவுகளையும் அவிழ்த்து விடுங்க

ரயில்வே ஸ்டேஷன் கதைகள் கண்டிப்பா நிறைய இருக்கும் அதையும் சொல்லணும் ஆமாம்!

ஆயில்யன் said...

//நீங்கள் படிக்கும் காலத்தில் புத்தூர் ஜெயராமன் கடை இருந்ததா? அங்கே சாப்பிட்டது உண்டா? இப்பொழுது பல அண்ணாமலை மாணவர்களுக்கு வீக்கெண்ட் விசிட்டிங் பாயிண்ட் புத்தூர் ஜெயராமன் கடை. அவர் கடையில் கெட்டித்தயிர், இறால் வறுவல் ரொம்ப பிரபலம்.//


கண்டிப்பா அதெல்லாம் பிற்தொடர்களில் பின் தொடரும் :))))

ஆயில்யன் said...

//பல்கலை கழக பெண்கள் விடுதி நுழைவாயிலிலிருந்து main roadற்கு சேரும் இடத்தின் அருகாமையில் உள்ளது//

ஒரு தடவை வெள்ளி மதியம் எக்ஸாம் பீஸ் கட்டபோய் அப்பத்தான் தெரியும் அந்த லொக்கேஷனும் எப்பவுமே கூட்டம் இருக்கற ரகசியமும்:))))

சதுக்க பூதம் said...

//நானும் சிதம்பரத்துக்கு பக்கத்து ஊர் தான், ஆனால் அண்ணாமலையில் படிக்கவில்லை. அதனால் சண்முகம் கடை பஜ்ஜி சாப்பிட்டதில்லை, அடுத்த முறை விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும்போது சண்முகம் கடைக்கு ஒரு ரவுண்டு அடிச்சிட வேண்டியது தான்.
//
கண்டிப்பாக!
//நீங்கள் படிக்கும் காலத்தில் புத்தூர் ஜெயராமன் கடை இருந்ததா? அங்கே சாப்பிட்டது உண்டா? இப்பொழுது பல அண்ணாமலை மாணவர்களுக்கு வீக்கெண்ட் விசிட்டிங் பாயிண்ட் புத்தூர் ஜெயராமன் கடை. அவர் கடையில் கெட்டித்தயிர், இறால் வறுவல் ரொம்ப பிரபலம்.
//
என்ன அப்படி கேட்டு விட்டீர்கள். புத்தூர் மெஸ் மாணவர்களிடம் மிக பிரபளம். நான் சைவ உணவு பழக்கம் கொண்டதால் அங்கு போனதில்லை.நண்பர்கள் இரு மாதத்திற்கு அங்கு ஒரு முறையாவது அங்கு சென்று விடுவர்

சதுக்க பூதம் said...

//ரைட்டு ஆரம்பிச்சாச்சு !

இனி தொடரட்டும் தொடர நிறைய பேர் வருவாங்க :)))))
ஸ்டெப் பை ஸ்டெப் போட்டு மெதுவா நிதானமா எல்லா நினைவுகளையும் அவிழ்த்து விடுங்க

//
நிச்சயமாக!

//ஒரு தடவை வெள்ளி மதியம் எக்ஸாம் பீஸ் கட்டபோய் அப்பத்தான் தெரியும் அந்த லொக்கேஷனும் எப்பவுமே கூட்டம் இருக்கற ரகசியமும்:))))
//
:))

சதுக்க பூதம் said...

//(முன்னாடி ஒரு முறை பல்கலை பத்தி எழுதுங்கன்னு சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு இம்புட்டு விசயம் மனசுக்குள்ள வைச்சுக்கிட்டு என்னிய போய் எழுத கேட்டீங்களேன்னு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!)
//
பொதுவாக அண்ணாமலை பல்கலை கழக பொறியியல் கல்லூரி சூழலும், அனுபவமும் வேறாகவும் சுவையாகவும் இருக்கும். அதனால் தான் உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள அழைத்தேன் ஆயில்யன் .

சதுக்க பூதம் said...

//ரயில்வே ஸ்டேஷன் கதைகள் கண்டிப்பா நிறைய இருக்கும் அதையும் சொல்லணும் ஆமாம்!
//
ரயில்வே ஸ்டேஷன்கும் பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும் உள்ள தொடர்பு அளவு எங்களுடைய தொடர்பு மிகவும் பின்னி பினைந்தது இல்லை. ஆனால் நண்பர்களுடன் வெள்ளி இரவு தியேட்டரில் 2nd show பார்த்து விட்டு, ரயில்வே ஸ்டேசனில் இரவு முழுக்க அரட்டை அடித்த நாட்கள் மறக்க முடியாதவை

Santhosh said...

நல்லா இருந்தது கொசு வத்தி :))

சதுக்க பூதம் said...

//his shop is simple, economic, energetic and secure//
his shop is simple, economic, energetic and secure

சதுக்க பூதம் said...

//நல்லா இருந்தது கொசு வத்தி :))//

வாங்க சந்தோஸ், -கொசு வத்தி :))?புறியலையே

Anonymous said...

naanum annamalai universiy la engg padichaen 90's la....engg manavarkalukkum sanmugan kadai romba famous...yenna athu ladies hostel pakkathula irunthathu....:)...nice post

Thiagarajan.S PMP said...

very good memories

சதுக்க பூதம் said...

நன்றி தியாகன். தற்போது எல்லாம் நீங்கள் ஏன் கவிதையே உங்கள் பதிவில் போடுவதில்லை?