அமெரிக்காவின் தற்போதைய கடன்: $10,598,468,155,070($10.5 டிரில்லியன்கள்)
அமெரிக்காவின் தங்க கையிருப்பு: 261,498,899.316 (261 மில்லியன்)அவுன்சுகள்.
1 அவுன்சு விலை $837 என்று வைத்து கொண்டால் அமெரிக்க கையிருப்பின் மொத்த மதிப்பு: 218,874,578,728($218 பில்லியன்).
இந்த தகவலை வைத்து பார்த்தால் 2% கடன்களுக்கு மட்டுமே தங்கத்தை திருப்பி கொடுக்க முடியும்
அதாவது சுமார் 4842 சதம் வீக்கமடைந்துள்ளது(inflated). இது கடன் தொகையை மட்டும் வைத்து கணக்கிட பட்டது.உள் நாட்டு பண புழக்கத்தை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.
அமெரிக்க அரசு gold convertability முறையை கைவிட்டு விட்டதால் அதற்கு தங்கத்தை கட்டாயம் சேமித்து வைக்கும் அவசியம் இல்லை. அது அவ்வாறு சேமித்து வைக்க தொடங்கியிருந்தால் தங்கம் விலையும் இப்போது போல் இருந்திருக்காது(அமெரிக்காவாலும் இந்த அளவு கடன் வாங்கி இருக்க முடியாது). எனவே இது முழுமையான தகவலாக இருந்திருக்காது. ஆனாலும் இந்த செய்தி உண்மையான டாலரின் மதிப்பையும்,தங்கத்தின் மதிப்பையும் கணிக்க உதவும்.
சமீபத்திய நிதி நெருக்கடியால் மேலும் சிறிதளவு தங்கத்தை விற்று விடவும், பெரிய அளவு பணத்தை அச்சிட போவதாகவும் செய்திகள் வெளிவர தொடங்கி உள்ளது. அவ்வாறு நடந்தால் நிலமை மேலும் மோசமாகக்கூடும்.
2 comments:
//சமீபத்திய நிதி நெருக்கடியால் மேலும் சிறிதளவு தங்கத்தை விற்று விடவும், பெரிய அளவு பணத்தை அச்சிட போவதாகவும் செய்திகள் வெளிவர தொடங்கி உள்ளது. அவ்வாறு நடந்தால் நிலமை மேலும் மோசமாகக்கூடும்//
is there anyway to stop what they are doing ???
//is there anyway to stop what they are doing ???
//
அமெரிக்கா எவ்வளவு டாலர் அடித்தாலும், மற்ற நாடுகள் டாலரின் மதிப்பை காப்பாற்ற வேண்டிய கட்டயத்தில் உள்ளதை பற்றி இந்த பதிவில் கூறியிருந்தேன்.
டாலருக்கு மாற்றாக உலக பொது நாணயம் வர வேண்டும். யூரோ அவ்வாறு வர முயற்ச்சி செய்கிறது. சில நடைமுறை பிரச்சினையால் அது முழுமையாக வெற்றி பெறுவது கடினம்.சைனாவின் நாணய மதிப்பு அதன் உற்பத்தி திறன் கொண்டு இருந்தாலும், அதன் பொருளாதாரம் அமெரிக்காவை நம்பியே உள்ளது.தற்போது நிலமை சிறிதளவு மாற தொடங்கி உள்ளது. உலக நாடுகள் பிற நாட்டு நாணயங்களையும் தன் அன்னிய கையிருப்பில் சேமிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக சொவரின் முதலீடுகள் அமெரிக்காவை விட மற்ற வளரும் நாடுகளில் அதிக ஆளவு முதலீடு செய்யபட்டு உள்ளது. ஆனால் அமெரிக்கா எந்த அளவு இந்த மாற்றத்தை அனுமதிக்கும் என்பதை பொருத்து தான் இந்த மாற்றத்தின் கால அவகாசம் கணிக்கபடும்.
Post a Comment