Monday, January 07, 2008
ம.க.இ.க- உயிர்ம எரிபொருள் எதிர்ப்பு(Jatropha(காட்டாமணக்கு) )- சில எண்ணங்கள்
இந்தியா ஒரு விவசாய நாடு. 60% மக்கள் விவசயத்தை நம்பி உள்ளனர்.ஏழை மக்களின்
எண்ணிக்கையும் கிராமத்தில்தான் அதிகம் உள்ளது. வளர்ந்து வரும் ஏழை-பணக்காரர் பிளவை குறைக்க வேண்டுமானால் விவசாய விளைபொருள்களின் தேவை வளர்ந்த சமூகத்திடையே அதிகரிக்க பட வேண்டும். அவர்களுடைய பணம் கிராம மக்களை கொண்டு போய் சேரவேண்டும்.
Jatropha(காட்டாமணக்கு)வின் மற்றொரு குணம், அது குறைந்த நீர்வளம் உள்ள பகுதியைலும் வளரும். இதன் மூலம் மிகவும் பின் தங்கிய வறண்ட மாவட்டங்களில் வாழும் ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளின் வாழ்க்கை தரம் உயர வாய்ப்புள்ளது. அவர்களின் முன்னேற்றத்துக்கு இது ஒரு அரிய வரபிரசாதம்.
நெல் மற்றும் கரும்பின் விலை உயரும் போதெல்லாம் ,கூலி தொழிலாளின் கூலி உயர்ந்து
உள்ளது வரலாற்று உண்மை. அது போல் Jetrobaவும் வறண்ட பகுதி மக்களின் வாழ்க்கை
தரத்தை வளர நிச்சயம் உதவும்.
இன்று இந்தியாவின் உழைப்பு மற்றும் செல்வங்கள் எல்லாம் பெட்ரோலை டாலரில்
வாங்க வேண்டிய காரணத்தால்(அது மட்டுமல்ல காரணம் என்றாலும் அதுவும் ஒரு முக்கிய
காரணம்) அமெரிக்க டிரசரியில் முதலீடு செய்து உள்ளோம். டாலர் மற்றும்
பெட்ரோலுக்கிடையே உள்ள தொடர்பை இந்த பதிவு விளக்குகிறது.
http://tamilfuser.blogspot.com/2007/09/blog-post.html
ம.க.இ.க வினர் தினமும் எதிர்க்கும் அமெரிக்க ஏகாப்திபத்தியத்தின் வளர்ச்சியின் அடிப்படை காரணமே பெட்ரோலை பலநாடுகள் இறக்குமதி செய்வது தான். Jetroba பயிரிட்டு பெட்ரோல் இறக்குமதியை குறைப்பதன் மூலம் அமெரிக்க ஏகாப்திபத்தியத்தின் வளர்ச்சியை குறைக்கலாம். இந்த அடிப்படை உண்மையை கூட ம.க.வி.கவினர் புரிந்து கொள்ள முடியாதது ஆச்சிரியமாக உள்ளது.
அடுத்து சுற்றுப்புற சூழல். உண்மையிலேயே சுற்று புற சூழலுக்கு பாடு படுபவர்களாக
இருந்தால் அவர்கள் எதிர்த்து போராட வேண்டியது, பெட்ரோல் உபயோகம், பாரம்பரிய நெல் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் தான். அவை தான் green house gas அதிகம் வெளியிடுகிறது.அவர்க்ளுடைய இந்த கருத்து சரியான பிதற்றல்.
மேலும் jetroba பயிரிடுவது என்பது இறால் வளர்ப்பு போன்று ஒட்டு மொத்தமாக
விளைநிலத்தை பாழாக்குவது அல்ல.
உண்மையில் அரசு செய்ய வேண்டியது என்ன என்றால்
1.விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஒட்டு மொத்தமாக
கொடுத்து அவர்களின் மூலம் பயிரிட நினைக்க கூடாது.
2.Jatropha(காட்டாமணக்கு) என்பது மேலை நாடுகள் பயிரிடும் பயிர் அல்ல. என்வே நல்ல வித்து உருவாக்குவது, அதற்கு தேவையான agronomic practise கண்டு பிடிப்பது போன்ற விவசாய ஆராய்ச்சிக்கு நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது இந்திய அரசாங்கம் அதிக அளவு பணத்தை அராய்ச்சிக்காக விவசாய பல்கலை
கழகங்கள் மூலம் செலவிடுகிறது. அவர்களுடைய அராய்ச்சி திருப்தி அளிப்பதாக இல்லை.
கோயம்புத்தூரை சேர்ந்த தனியார் நிறுவனம் அவர்களை விட நன்றாக செயல்படுகிறார்கள்.
அது போல் தனியார் நிறுவனங்களை jetroba அராய்ச்சிக்காக ஊக்குவிக்க வேண்டும்
3.Jetroba தொழில் நுட்பத்தில் உள்ள் மற்ற technology gapsம் சரி செய்ய பட வேண்டும்
4.கலைஞர் செய்யும் நில சீர்திருத்த திட்டத்தை jetroba பயிரிடும் பகுதிகளில் முழுமையாக
செயல் படுத்த வேண்டும். அதாவது நிலமற்றவர்களுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது.
5.அங்கு இருக்கும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம்,நில சீர்திருத்த வசதி போன்ற
capital investment இலவசமாக செய்து கொடுக்க வேண்டும்.
6. Jatropha(காட்டாமணக்கு) விளை பொருளுக்கு நல்ல குறைந்த பட்ச ஆதார விலையை கொடுக்க வேண்டும்.
7.அரசு உதவியுடன் நல்ல பயிர் காப்பீட்டு திட்டத்தை(crop Insurance) அறிமுகபடுத்த
வேண்டும். இது புதிய பயிர் என்பதால், பயிர் காப்பீட்டு திட்டத்தை எளிதாக அறிமுக
படுத்தலாம்.
8.Contarct farming அறிமுகபடுத்தி விவசாயிகளுக்கு நல்ல தொழில்
நுட்பமும்,இடுபொருள்களுக்கான முதலீடும் எப்போதும் கிடைக்க செய்ய வேண்டும்.
பிடரல் காஸ்ட்ரோ உண்மையான தலைவர்தான். தன் மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்க உதவியவர். பன்னாட்டு
கம்பெனிகளுக்கு விலை போகாதவர். ஆனால் அவர் கூறும் அனைத்தையும் எடுத்து கொள்ள
வேண்டும் என்று அவசியம் இல்லை. முன்பு சோவியத் கூறிய அனைத்தையும் எடுத்து
கொண்டு அதை utopean சமூகமாக கம்யூனிஸ்டுகள் காட்டினர் .அதனால் சோவியத் சரிவு
மக்களிடம் அவர்களின் சித்தாந்தத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.பிறகு சைனாவை
உதாரணம் காட்டினர்.அது சர்வாதிகார மற்றும் முதலாளித்துவ பாதைக்கு சென்ற போது
மக்களும், கம்யூனிசத்தின் ஒரு பகுதியினரும்(CPM) சித்தாந்ததின் மீது நம்பிக்கை இழந்தனர்.
CPM முதலாளித்துவ/சர்வாதிகார பாதைக்கு சென்றது. மீதமுள்ளோர் மக்களிடம் உள்ள
வெறுப்பு, ஏழ்மை போன்றவற்றை வைத்து கொள்கை, தீர்வு எதுவும் இல்லாமல் சில அன்னிய model வைத்து போராடுகின்றனர்.
கம்யூனிசத்தின் அடிப்படை சித்தாந்ததை மட்டும் வைத்து இந்தியா-இந்தியர்களின்
தேவையை கொண்டு கொள்கைகளை இந்தியர்களுக்காக வடிவமைத்து இருந்தால் இந்த
வெற்றிடம் ஏற்பட்டிருக்காது.இந்த வெற்றிடத்தால் ஏழை மக்க்ளுக்கு உண்மையிலேயே
போராட ஒரு உண்மையான அமைப்பும் இல்லாமல் போய்விட்டது.
தமிழ்மணி அவர்களின் இந்த பதிவு பார்த்து , அதன் மூலம் உயிர்ம எரிபொருள் பற்றிய இந்த கட்டுரையை படித்த பின் எழுதிய பதிவு இது. அவருடைய பதிவில் பின்னூட்டமாக இட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சதுக்கப்பூதம்,
உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி.
உங்கள் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துபோகிறேன், கடைசி கருத்தை தவிர.
இன்று தமிழ்நாட்டில், இந்தியாவில் இருக்கும் கட்சிகள் எல்லாமே மக்கள் நலனை அடிப்படையாக கொண்டவைதான்.
ஒரு கட்சி செய்யும் தவறை மற்ற கட்சி உரத்து பேசுவதால், எல்லா கட்சிகளுமே மோசமானவை என்ற எண்ணம் வந்துவிட்டிருக்கிறது. (அப்படிப்பட்ட உரத்து பேசுவதால்தான் ஏராளமான வளர்ச்சி நடந்திருக்கிறது, தவறுகளும் களையப்பட்டிருக்கின்றன!!!)
ஆனால் கம்யூனிஸம் அடிப்படையே தவறான கொள்கை.
பிடல் காஸ்ட்ரோ அப்படிப்பட்ட நல்ல தலைவராக இருந்தால், கம்யூனிஸம் மக்களுக்கு நல்லது செய்யுமென்றால், ஏன் கியூபாவிலிருந்து மக்கள் கார் டயரிலெல்லாம் புகுந்துகொண்டு வெளியேறுகிறார்கள்?
-
முதலாளித்துவ பாதைக்கு சர்வாதிகார சிபிஎம் திரும்பியிருப்பதால், (முதலாளித்துவ/சர்வாதிகார பாதைக்கு சிபிஎம் சென்றிருக்கிறது) என்று எழுதியிருக்கிறீர்கள்.
முதலாளித்துவ பாதை வேறு. சர்வாதிகார பாதை வேறு.
ஜனநாயகம் இல்லாத முதலாளித்துவம், சர்வாதிகாரமாகி, தற்போதைய சீனா போல பாஸிஸமாக ஆகிறது.
//ஆனால் கம்யூனிஸம் அடிப்படையே தவறான கொள்கை. //
இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. வளர்ந்த நாடுகளுக்கு, முக்கியமாக மக்கள் தொகை வளர்ச்சி சமநிலை அடைந்து,எந்த ஒரு வாய்ப்பையும் பெரும்பான்மையான மக்கள் பயன் படுத்த கூடிய அளவில் வளர்ந்த மக்களுக்கும், நாட்டிற்கும் முதலாலித்துவம் நன்மையை தரும். பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை வசதியே சென்றாடையாத, கிடைக்கும் வாய்ப்புகளை பெரும்பான்மையான மக்கள் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ள மக்களுக்கு கம்யூனிசம் மற்றும் முதலாலித்துவம் கலந்த கலவையே பயன் தரும்.இடது-வலது இரண்டும் கலந்த கலவை தேவை.
//பிடல் காஸ்ட்ரோ அப்படிப்பட்ட நல்ல தலைவராக இருந்தால், கம்யூனிஸம் மக்களுக்கு நல்லது செய்யுமென்றால், ஏன் கியூபாவிலிருந்து மக்கள் கார் டயரிலெல்லாம் புகுந்துகொண்டு வெளியேறுகிறார்கள்?
//
There is no utopean country in the world.தொழிற் புரட்சியால் பயன் பெறாத வறுமை நிறைந்த ஒரு நாட்டில், மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை கிடைக்க செய்தது அவரது சாதனை. அனைவரும் அடிப்படை வசதி கிடைத்தவுடன்,அதை தக்க வைத்து அடிப்படை வசதி அனைவருக்கும் கிடைத்து முதலாளித்துவ மனபான்மை வருவது இயல்பு. அதன் விளைவே வெளி நாடுகளுக்கு செல்ல முயல்வது.
//ஜனநாயகம் இல்லாத முதலாளித்துவம், சர்வாதிகாரமாகி, தற்போதைய சீனா போல பாஸிஸமாக ஆகிறது.
//
முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட ஜனநாயகமும், மறைமுக சர்வாதிகரத்திற்கு தான் இட்டு செல்லும்.
ungaludaiya dollor arasiyal matrum intha katturai irandaiyum ipothuthan padithen migavum yelimaiyagavum yeloralum purium padium yelithiullirgal
valthukal, ithupola pala seithigalai yelimaiyaga inium tharuvirgal yena nabugiren
Chennai Tamilan, Thanks for ur appreciation. I will continue writing article in the same way.
சதுக்க பூதம், நல்ல கருத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள். இந்திய ரயில்வே கூட ஜட்ரோபா எண்ணெயைப் பெரிய அளவில் உபயோகிக்க உள்ளது. ஒரே சிறிய குறை உங்கள் பதிவில்: இச்செடியின் பெயர் ஆங்கிலத்தில் Jatropha ஆகும். உங்கள் கட்டுரையில் எழுத்துப்பிழை காணப்படுகிறது. முடிந்தால் திருத்தி வெளியிட்டால் நலம்.
நான் பதிப்புத்துறையைச் சார்ந்தவனாக இருப்பதால், பிழைகள் சட்டென்று உறுத்திவிடுகின்றன. முக்கியமற்ற விஷயத்தைப் பற்றியதாக இருந்திருந்தால், நான் பாட்டுக்குச் சென்றிருப்பேன்.
காட்டாமணக்கு எனத் தமிழில் குறிப்பிட்டீர்கள் என்றால் மேலும் மகிழ்ச்சி!
saravanan கருத்துக்கு நன்றி. திருத்திவிட்டேன்
Post a Comment