Sunday, April 18, 2010

நக்சலைட் இயக்கத்தை அழிக்க ஒர் நூதனமான அணுகுமுறை!

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 1

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 2

தேசிய வேளாண் நிறுவனம் பற்றியும் அது விவசாயம் சார்பாக செய்து வரும் பணிகளை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அது செய்து வரும் சமூக பணிகளை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

1.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 300க்கும் அதிகமான சுய உதவி குழுக்களை அமைத்துள்ளனர். ஆனால் பெயரளவிற்கு குழுவாக மட்டும் விட்டு விடாமல், அவர்களுக்கு தேவையான தொழில் நுட்ப பயிர்ச்சிகளை அளித்து, கடனுதவி பெற உதவி செய்து,தொடர்ச்சியாக தொழில் நுட்ப ஆலோசனை செய்து அவர்களின் குழுக்கள் தொடர்ச்சியாக வெற்றிகரமாக நடைபெற உதவி செய்கிறது. அது மட்டுமில்லாமல் அவர்களின் உற்பத்தியை சந்தை படுத்தவும் உதவி செய்கிறது.

2. சுகாதாரம் பற்றி கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் சிறந்த சுகாதார கிராமமாக அது கவனித்து கொள்ளும் கிராமத்திற்கு பெயர் வாங்கி கொடுத்துள்ளது.

3.சமீப காலமாக சென்னையில் ஏற்றுமதிக்கென்று பல தொழில் நிறுவனங்கள் தொழிற் சாலையை தொடங்கி உள்ளது. அவற்றில் மனித வளத்தை மட்டும் அதிகம் சார்ந்துள்ள தைத்த துணிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும்(export garments) பல. அவற்றிற்கு வேலை பார்க்க வரும் தொழிலாளர்களுக்கு சம்பளமோ குறைவு. பெரும்பான்மையான தொழிலளர்கள் கிராமத்திலிருந்து சென்னை வந்து வேலை செய்பவர்களாக இருப்பார்கள். சென்னையில் அவர்கள் தங்கி இருந்து வாழ்க்கை நடத்துவ்து மிகவும் கடினம்.மறுபுறம் கம்பெனிகளுக்கு வேலைக்கு ஆள் கிடைப்பதும் கடினம்.இந்த கம்பெனிகளையே கிராம சூழ்நிலையில் ஏற்படுத்தினால் எப்படி இருக்கும்?. வேலை செய்பவர்களும் தங்கள் வீட்டிலிருந்து வேலைக்கு எளிதாக செல்லலாம் . அவர்களுக்கு சேமிப்பும் அதிகமாக இருக்கும். தேசிய வேளாண் நிறுவனத்தின் முயற்சியால் இது போன்ற ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியை மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு என்ற கிராமத்தில் தொடங்கி வைத்துள்ளது.கிராமத்தில் உள்ள பெண்களுக்கு தேசிய வேளாண் நிறுவனம் தையல் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கிறது.

4.M.V. Diabetics நிறுவனத்தின் உதவியுடன் கிராம மக்களுக்கு சர்க்கரை வியாதி உள்ளதா என்று மொபைல் அராய்ச்சி கூடம் மூலம் கிராமங்களுக்கே சென்று பரிசோதனை செய்து சாட்டிலைட் மூலம் புகழ் வாய்ந்த மருத்துவ நிபுனர்களின் ஆலோசனையை கிராமத்திலிருந்தபடியே கிடைக்க செய்கிறது.

5.நகரத்தில் உள்ள குழந்தைகளுக்கு தரம் வாய்ந்த மழலையர் பள்ளிகள் உள்ளது. கிராமத்தில் கூலி வேலை செய்யும் ஏழை தொழிளாலர்களுக்கு தேசிய வேளாண் நிறுவனம் தரம் வாய்ந்த மழலையர் பள்ளியை நடத்தி வருகிறது.




6.கிராம பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிர்ச்சியை கொடுக்கிறது.

7.IGNOUவுடன் இணைந்து விவசாயம் சார்ந்த பட்டய படிப்புகளை கற்று கொடுக்கிறது.இதன் மூலம் கிராமங்களில் இருக்கும், பள்ளி படிப்பை பாதியில் முடித்த இளைஞர்களுக்கு விவசாய தொழில் நுட்பத்தில் பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்களுக்கு விவசாயம் சார்ந்த கம்பெனிகளில் வேலை கிடைக்கவும் வழி செய்கிறது. பட்டய படிப்பை படித்து வேலைக்கு செல்ல விரும்பாதவர்களுக்கு விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ஆலோசனை தருகிறது.


8.விவசாய பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க நபார்டு வங்கியிடம் கடன் வாங்க தேவையான(Agri Clinic வைக்க) பயிர்ச்சியையும் தருகிறது.

9.நகரில் வளரும் குழந்தைகளுக்கு விவசாயம் பற்றி எதுவுமே தெரிவதில்லை. என்வே சென்னை போன்ற மாநகரங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு விவசாயம் பற்றி அறிமுகம் கொடுக்க கிராமத்துக்கு ஒரு நாள் சுற்றுல்லா வர வழி வகை செய்து கிராம புற விளையாட்டுகளை காட்டுவதுடன் விவசாயத்தில் அறிமுக பாடமும் நடத்துகிறது.

10.கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு team outing யை கிராமபுறங்களில் ஏற்பாட்டு செய்து eco tourism வளர வழிவகை செய்கிறது. இந்த team outingல் கிராமபுற விளையாட்டு நடத்துவது, மாட்டு வண்டி சவாரி,நாட்டு புற கலைகள் என்று மிகவும் வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது.

இந்த தலைப்புக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா?

இது போன்ற நிறுவனங்கள் நாடு முழுதும் தோன்றினால் கிராம- நகர ஏற்ற தாழ்வு குறைந்து நக்சலைட் போன்ற இயக்கங்கள் நாட்டில் வளர்வதற்கான சூழ்நிலையை அழிக்கும்.

--

7 comments:

nerkuppai thumbi said...

Please have a look at
makaranthapezhai.blogspot.com

naam marandha indhiyar: pazhangudiyinar.

your comments are welcome

nerkuppai.thumbi@gmail.com

Anonymous said...

மிக அருமையான பதிவு, அதற்காக கொடுத்த தலைப்பு அற்புதம்.உங்களின் சமுக அக்கறை மிகுந்த சந்தோசம் அளிக்கிறது.

Maximum India said...

சாதியம், வன்முறை, பாலியல், சினிமா, அரசியல் போன்றவற்றையே அதிகம் காணமுடிகிற நமது பதிவுலகில் உங்களுடைய பதிவு மிகுந்த மனநிறைவை தருகின்றது.

மேலும் நெகட்டிவான விஷயங்களையே ஊடகங்களில் காண முடிகின்ற இன்றைய தேதியில், நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களையும் முன் வைப்பது அற்புதமான சமூக தொண்டு என்று நினைக்கிறேன்.

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

நன்றி!

சதுக்க பூதம் said...

நன்றி suman ,Maximum India

NO said...

Great writing and title.
Keep it up.

Unknown said...

நல்ல முயற்ச்சி. தலைப்பில் "நக்சலிட் இயக்கத்தை அழிக்க" என்று கூறியிருக்க வேண்டாம்..

பெரிய முதளிகளும், நில கையபடுத்தலும் இருக்கும் வரை அதுவும் இருக்கும். demand side-இல் பிரச்னை தீர்ந்தாலும் supply side-இல உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.

பார்க்கலாம்.

Unknown said...

Nice