Thursday, July 30, 2009

அசர வைக்கும் மைக்ரோசாப்டின் Project Natal

பொதுவாகவே மைக்ரோசாப்டுக்கு பிற நிறுவனங்களை காப்பி அடித்து(reengineering செய்து) புதிய பிராடக்ட்கள் வெளியிடும் என்ற பெயர் உள்ளது.அந்த பெயரை மாற்றும் வகையில் தற்போது Project Natal என்ற புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.கையின் அசைவுகளை கண்டு பிடித்து அதன் மூலம் வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii விளையாட்டு மாபெரும் புரட்சி செய்த்தது.மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி செய்யாமல் தற்போது புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான வீடியோ விளையாட்டுக்கான தொழில்நுட்பத்தில் இறங்கி உள்ளது.அதற்கு தான் Project Natal என்று பெயர்.

இந்த விளையாட்டை விளையாட எந்த சென்சார்கலையும் உடலில் அணிய வேண்டியது இல்லை. மேலும் மற்ற விளையாட்டை போல கையை மட்டும் பயன் படுத்த வேண்டியது இல்லை.நம் உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன் படுத்தலாம். நம் உடலின் அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா மூலம் பல புள்ளிகளிலிருந்து கண்டறிந்து அதன் மூலம் கம்ப்யூட்டரின் உள் முப்பரிமான உருவம் செயற்கையாக வடிவமைக்கிறது. பிறகு நாம் செய்யும் அசைவுகள் அனைத்தையும் அந்த உருவத்தின் மூலம் செய்ய வைத்து உண்மையான விளையாட்டு போல் உணர செய்கிறார்கள்.

நான் கூறுவதை கேட்பதை விட மைக்ரோசாப்ட்டின் இந்த demo வீடியோவை நீங்களே பாருங்களேன்! இது Science Fiction படத்தை விட அருமையாக உள்ளது. உண்மையிலேயே நம்பவே முடியவில்லை.



http://www.xbox.com/en-US/live/projectnatal/


http://www.youtube.com/watch?v=I9tmr8VDqN8



வீடியோ விளையாட்டு துறையில் நிச்சயமாக இது evolution ஆக இருக்காது.revolution ஆக இருக்கும்!


--

6 comments:

பாவக்காய் said...

vow.. superb.... def going to be reval for WII products..

Thanks for the info.
aum

சதுக்க பூதம் said...

நிச்சயமாக பாவக்காய்

Anonymous said...

அய்யா, The Island என்னும் அங்கில படத்தை பாருங்கள். அதில் நீங்கள் கூறும் தொழில் நுட்பம் வருகிறது.
இதே போலத்தான் அவர்கள் விண்டோஸ் விஸ்டா-வையும் கூறினார்கள். ஆனால் அது பிலோப் ஆன கதை ஊருக்கு தெரியும்.

சதுக்க பூதம் said...

//இதே போலத்தான் அவர்கள் விண்டோஸ் விஸ்டா-வையும் கூறினார்கள். ஆனால் அது பிலோப் ஆன கதை ஊருக்கு தெரியும்.
//
Windows Vista விஷயத்தில் உண்மைதான். ஆனால் இந்த தொழில்நுட்பத்தில் மிகவும் நன்றாக செய்வார்கள் என்று ஏனோ நினைக்க தோன்றுகிறது.Paycheck படத்தில் கூட இது போல் தான் எடுத்து இருப்பார்கள். ஸ்பீல்பர்க் கூட இந்த தொழில் நுட்பத்தை பார்த்து விட்டு உண்மையிலேயே பெரிய விஷயம் என்று பாராட்டி இருக்கிறார். பொருத்து இருந்து பார்போம்.

Anonymous said...

nalla thagaval paginthamaiku nandri ayiyaa
project natal yepoothu markettuku varugirathu ???

-- ipadikku
project natal markettuku varum naalai avaludan yethiparkum oruvan :)

சதுக்க பூதம் said...

அடுத்த வருட இறுதியில் வெளிவரும் என்று மைக்ரோசாப்ட் கூறி உள்ளது. ஆனால் வழக்கம் போல் slippage ஆகி 2 வருடத்தில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்