" Too Big to Fail. " இது தான் அமெரிக்கர்கள் அனைவராலும் வெறுப்பாக பேச படும் பாடம். "Too Big to Fail" என்றால் என்ன? கடந்த எழுபது ஆண்டுகளாக அவ்வப்போது நடைபெற்ற பொருளாதார பின்னடைவின் காரணமாக அமெரிக்க வங்கி துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வங்கிகளை எல்லாம் ஒரு சில வங்கிகள் முழுங்கி விட்டன. அதன் விளைவு தற்போது அமெரிக்காவில் மூன்று மாபெரும் வங்கிகளும் சில சிறிய வங்கிகளும், பல மிக சிறிய வங்கிகளும் மட்டும் நிலைத்து நிற்கின்றன. அமெரிக்காவில் மூன்று வங்கிகள் மட்டும் 30 சதவிதத்துக்கும் மேற்பட்ட சேமிப்புகளை வைத்துள்ளது. அதன் விளைவு - இந்த மூன்று வங்கிகளில் ஒன்று வீழ்ந்தாலும் அமெரிக்க பொருளாதாரமே நிலை குலையும் நிலையில் உள்ளது. எனவே மிக பெரிய வங்கிகள் வீழவே கூடாது(Too big to fail) என்ற நிலை ஏற்பட்டது.அதை நன்கு உணர்ந்த பெரிய வங்கிகளும் பொறுப்பில்லாமல் பெரிய அளவில் ஆபத்தான முடிவுகளை குறுகிய கால அதிக லாபத்துக்கு எடுக்க தொடங்கின.நீண்ட கால அளவில் அது பெரும் நட்டத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிந்தும், நட்டத்திலிருந்து அரசாங்கம் தங்களை காத்து ஆக வேண்டும் என்ற கட்டயத்தில் இருப்பதை நன்கு பயன் படுத்தி கொள்ள ஆரம்பித்தன. அமெரிக்க அரசாங்கமே பெரிய வங்கிகளின் கட்டு பாட்டில் வந்தது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதிலிருந்து இந்தியா கற்று கொள்ள மறுக்கும் பாடம் என்ன என்று கேட்கிறீர்களா? இந்தியாவின் வங்கி துறையில் அரசு துறை வங்கிகள் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. அரசு துறை வங்கிகளும் ஒன்றாக இல்லாமல் பலவாக உள்ளது.
தற்போதய மத்திய அரசோ அனைத்து அரசு துறை வங்கிகளையும் ஒன்றினைத்து ஒரு சில பெரிய வங்கிகளாக உருவாக்க வேண்டும் என்றும் அரசு துறை வங்கிகளில் தனியாரின்(முக்கியமாக தற்போது சிக்கலில் சிக்கி தவிக்கும் மேல் நாட்டு வங்கிகளின்) முதலீட்டை அதிகரித்து சிறிது சிறிதாக முடிவில் அவர்களிடமே விற்று விடவும் முயற்சி செய்கிறது.(அதை உடனே நிறைவேற்றா விட்டால் கூட அது தான் அரசின் அனுகுமுறை என்று பல மூறை கூறபட்டுள்ளது) அதற்கு அரசு கூறும் முக்கிய காரணம் வங்கிகளை நடத்தும் செலவை குறைத்து பல வங்கிகளின் கிளையை மூடி லாபத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதே.
இதனால் ஏற்படும் விளைவுகளை இப்போது பார்ப்போம்
1. சிறு சிறு வங்கிகளை ஒன்றினைத்து பெரிய வங்கிகளாக ஆக்குவதன் மூலம் ஒவ்வொரு பெரிய வங்கியும் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மிக அதிகமாகும். ஒரு வங்கியின் தலைவர் தவறு செய்பவராக இருந்து அதன் மூலம் அந்த வங்கி வீழும் நிலைக்கு தள்ளபட்டால், அந்த வங்கியை காப்பாற்றுவது என்பது அரசுக்கு மிக பெரிய சுமையாகவும், அதே சமயத்தில் அதை காப்பாற்றியே ஆக வேண்டிய நிலைக்கும் தள்ளபடும்.அதுதான் அமெரிக்காவில் தற்போது நடக்கிறது. இதுவே சிறிய வங்கியாக இருந்தால் அதன் தாக்கம் சிறிதாக இருப்பதாலும் அதை காப்பாற்ற அரசுக்கு ஆகும் செலவும் குறைவாக இருக்கும். உதாரணமாக இந்தியன் வங்கி கோபால கிருஷ்ணனின் தலமையில் பல்லாயிரம் கோடி நட்டமடைந்து மூடும் நிலைக்கு வந்த போது அதை அரசால் காப்பற்ற முடிந்தது. அதுவே பல வங்கிகளை ஒன்றினைத்த பெரிய வங்கியாகி வீழும் சூழ்நிலை ஏற்பட்டால் அதை காப்பாற்ற பல லட்சம் கோடி தேவைபடும். இதுவே அமெரிக்கவாக இருந்தால் மிக குறைந்த பின் விளைவில் பல்லாயிரம் கோடி ரூபாய் அச்சிட்டு கொள்ளலாம். ஏனென்றால் அமெரிக்க டாலர் இப்போது உலக சேமிப்பு நாணயமாக உள்ளது.(இதை பற்றி முழுவதும் படிக்க இங்கு சுட்டவும்) ஆனால் இந்தியாவின் நிலை அப்படி இல்லை என்பதால் அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும். (பொது துறை வங்கி என்று இல்லை. பெரிய தனியார் துறை வங்கி வீழ்ந்தாலும் அரசு காப்பாற்றி தான் ஆக வேண்டும்). வங்கிகளின் நடவடிக்கையை முழுமையாக நெறிமுறை படுத்துவது என்பதும் தற்போது நடைமுறையில் சாத்தியம் இல்லாத செயல்
2. சிறு வங்கிகளை ஒன்றாக்குவதால் முதலில் மூடபபோவது கிராம் புறங்களை சேர்ந்த வங்கிகளை தான். இதன் விளைவாக ஏழை விவசாயிகள், சுய தொழில் தொடங்கும் ஏழை மற்றும் ந்டுத்தர மக்கள் போன்றோர் மிகவும் அதிக அளவில் பாதிக்க படுவர். தற்போதைய உலகமயமாதல் சூழ்நிலையில் இது போன்ற மிக பெரிய வங்கிகள் பெரிய கார்பொரேட்டுகளுக்கும் பண காரர்களுக்கும் மட்டுமே கடன் கொடுத்து லாபம் செய்ய முனைவர்.
3. ஒவ்வொரு வங்கியும் நாட்டின் ஒவ்வொரு குறிபிட்ட பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு பார்த்தால் இந்தியன் வங்கியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் தமிழகத்தில் அதிக அளவு கவனம் செலுத்துகிறது. அதன் தலமையகமும் தமிழ் நாட்டில் உள்ளது. அது தமிழகத்தில் உள்ளவர்களின் தேவையை உடனுக்குடன் அறிந்து அதற்கேற்ற சேவையை வழங்குகின்றது. இந்தியன் வங்கியை மற்ற வங்கியுடன் சேர்த்தால் இந்த தனி தன்மை முழுமையாக பாதிக்க படும்(முழுமையாக அழியாவிட்டால் கூட பாதிப்பு அதிகம் இருக்கும்). பின் வரும் காலங்களில் வங்கிக்கு வரும் அதிகாரிகளின் தனிபட்ட விருப்பு வெறுப்புக்காக அந்த வங்கியின் கவனிப்பு இருக்கும் இடமும் மாறி போக வாய்ப்புள்ளது
4. அதிகார பரவலாக்கத்தின்(Decentralization) மூலம் தான் எந்த ஒரு துறையின் செயல்பாட்டின் திறனையும் அதிகரிக்க முடியும் என்பது இத்தனை நாள் அனுபவத்திலிருந்து கிடைத்த உண்மை. .தற்போது வங்கிகள் அதிகார பரவலாக்கத்தோடு நன்கு செயல் பட்டு வருகிறது. வங்கிகளை ஒன்றினைப்பது மூலம் அதிகார பரவலாக்கம் என்பது மாறி அதிகரம் ஒருமுனை படுத்த பட்டு அதன் செயல் திறன் குறைய வாய்ப்புள்ளது.
5. வங்கிகள் என்பது ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியின் ஆணி வேர். அதை குறுகிய லாப நோக்கம் கொண்ட பன்னாட்டு தனியார் கம்பெனிகளின் கையில் கொடுத்தால் இன்று அமெரிக்கா அடைந்த நிலையை இந்தியாவும் அடையும்.
6. பன்னாட்டு வங்கிகள் சமூகத்தில் பின் தங்கியவர்களின் வளர்ச்சியை பற்றி கவலை பட போவது இல்லை. அவர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள். பசுமை புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததிற்கு வங்கிகளின் பங்கு முக்கியம். தற்போதய வளர்ந்து வரும் மக்கள் தொகை சூழ்நிலையில், விவசாய உற்பத்தியை பெருக்க வங்கியின் சேவை மிகவும் தேவை இக்கனம். மத்திய அரசின் தற்போதைய முயற்சியால் அது தடை பெற அதிக வாய்ப்புள்ளது.
இதை உணர்ந்து மத்திய அரசாவது ஒரு சில தனிபட்டவர்களின் நன்மையை பார்க்காமல் இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல் பட்டால் நன்றாக இருக்கும்.
--
10 comments:
ஆஹா... அருமையான பதிவு !! நல்ல அலசல் !! If America is "too big to fail" India is "too vulnerable to fail" :(
Good post. Thank u.
இந்திய வங்கிகளை தனியார் மயமாக்கினால் கடவுளே நினைத்தாலும் நம்மை காப்பாத்த முடியாது.அதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. அதனாலென்ன நமக்கு தான் வோட்டுக்கு 500 ரூபா கிடைக்குதுல்ல. நிச்சயமாக இந்த தாராளமயமாக்கல் உலகமயமாக்கல் போன்றவை தோற்று விட்டன. வேறொரு புதிய சித்தாந்தம் தேவை. கம்யுனிசத்தை வேறொரு பரினாமத்திற்கு கொண்டு சென்றால் நன்றாயிருக்கும்.
நன்றி Mahesh.
//America is "too big to fail" India is "too vulnerable to fail" :(//
சரியாக கூறினீர்கள்
Welcome Maasilan
//கம்யுனிசத்தை வேறொரு பரினாமத்திற்கு கொண்டு சென்றால் நன்றாயிருக்கும்.//
அது பற்றி சிந்தக்கத்தான் தலைவர் யாருமே இல்லை. வெனிசூலாவின் சாவேஸ் ஒரளவு முயற்ச்சிக்கிறார். ஆனால் முதலீட்டை அமெரிக்கா மற்றும் மேல் நாடு போல் அளவின்றி அவரால் உருவாக்க முடியாததால் அவரும் தினறுகிறார்
நல்ல வாதங்கள். ஏற்கெனவே கல்வி மற்றும் ஊடகங்கள் தனியார் மயமானதனால் ஆன பாதிப்பே தாங்க முடியவில்லை.
வங்கிகளும் தனியார் மயமானால் அவ்வளவுதான். Sun Bank, Jaya Bank, Raj Bank என்று நினைத்துப் பார்த்தாலே பயமா இல்லை..
வாங்க சீமாச்சு. சரியாக சொன்னீர்கள். மீதி வங்கிகளும் citi,boa,chase என ஒரு சிலரின் கைக்கு சென்று விடும்
ஹலோ சதுக்கபூதம் நல்ல பணியை செய்து வருகிறீர்கள், தொடருங்கள் அப்படியே தொடர்ந்து ஒவ்வொரு பொருளாதார கூறுகளையும் அலசினால் இன்னும் நன்றாக இருக்கும்... வாழ்த்துக்கள்... தொடர்ந்து வாசிப்பேன்...
நன்றி poorna.நிச்சயம் பொருளாதாரத்தின் கூறுகள் பற்றி எழுத முயற்ச்சிக்கிறேன்
Post a Comment