Monday, April 27, 2009

துபாயை காப்பாற்றிய அபுதாபி


கடந்த சில வருடங்கலுக்கு முன்பு வரை வளம் கொழிக்கும் இடமாக வளர்ந்து வந்த துபாய்க்கு தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதன் வளர்ச்சிக்கு பெரிய தடை கல்லாக வந்துள்ளது. துபாயின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுல்லா. சமீபத்திய நிதி நெருக்கடியால் இந்த இரண்டு துறையும் மிக பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மிக அதிக செலவில் ஆரம்பிக்க பட்ட துபாயின் கனவு திட்டங்களான 300 செயற்கை தீவு திட்டம் மற்றும் உலகிலேயே உயரமான கட்டட திட்டம் ஆகியவை பெரும் பிரச்சனையில் தவிக்கிறது.துபாய் அரசு மற்றும் அரசு சார்ந்த கம்பெனிகளின் கடன் மட்டும் $80 பில்லியனை தாண்டி விட்டது. இரண்டு ஆண்டுகளில் அது திருப்பி தர வேண்டிய கடன் தொகை $22 பில்லியன் ஆகும்.

மார்கெட் நல்ல நிலையில் உள்ள போது துபாயில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மிகபெரிய கட்டிடங்களை கட்டும் முன்னே அவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்று விட்டனர்(சென்னையில் DLF செய்தது போல்).வெளி நாட்டினரை துபாயில் ஒரு சில குறிபிட்ட பகுதியில் வீடு வாங்க அனுமதித்த உடன் ரியல் எஸ்டேட் மிக வேகமாக சூடு பிடிக்க தொடங்கியது. முதல் தவனையாக 10% பணத்தை மட்டும் பெற்று கொண்டனர். அதனால் இடைதரகர்கள் ஒரு வீடு வாங்குவதற்கு பதில் 10 வீடுகளை 10% கொடுத்து வாங்கி தள்ளி விட்டனர். ஏனெனில் இரண்டாவது தவணை வரும் முன் அதன் மதிப்பு மேலும் உயரும்.எனவே அதை விற்று லாபம் காணலாம் என்பது அவர்களின் கணிப்பு.ஆனால் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியால் கட்டிடம் கட்ட முதல் கிடைக்காததால் கட்டும் வேகமும் வெகுவாக குறைந்து போனது. இதன் விளைவாக 17% வேலை வாய்ப்பு அங்கு குறையும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

இப்படி பட்ட இக்கட்டான நிலையில் தான் அபுதாபி உதவி கரம் நீட்டி உள்ளது.துபாய் வெளியிடும் கடன் பத்திரங்களில் சுமார் $10 பில்லியன் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக துபாயும் புதிய உத்வேகத்தோடு முன்னேற்ற பாதை நோக்கி இறங்கி உள்ளது.அபுதாபி தன் முதலீடை இவ்வளவு தாமதமாக செய்ததற்கு காரணம் இரு அரசுகளுக்கு இடையே உறவில் ஏற்பட்ட உரசல் என் சில கிசுகிசுக்கள் கசிய தொடங்கின. ஆனால் இவை பத்திரிக்கைகள் கிளப்பிய கட்டு கதை என துபாய் ஆட்சியாளர் கூறுகிறார்.


எது எப்படியோ, துபாயின் வளர்ச்சியில் தான் அங்கு வேலை பார்க்கும் பல்லாயிர கணக்கான தமிழர்களின் எதிர்காலமும், இந்தியாவின் எதிர்கலமும் உள்ளது. விரைவில் துபாய் மீண்டும் உத்வேகத்தோடு வளர்ச்சி பாதியில் செல்லட்டும்.

--

6 comments:

கண்ணா.. said...

நல்ல தகவலுக்கு நன்றி..

சதுக்க பூதம் said...

நன்றி Kanna

S.S.Alauddeen said...

துபாயும் அபுதாபியும் இரு நாடுகளல்ல நண்பரே. ஐக்கிய அரபு குடியரசு (United Arab Emirates) என்ற நாட்டின் அங்கங்கள். ஒரே நாட்டின் இரு மாநிலங்கள் அன்பரே. ஐக்கிய அரபு குடியரசில் அபுதாபி, துபாய், சார்ஜா, அஜ்மான், ராசுல்கைமா, புஜைரா, உம்முல்கைவைன் என 7 மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்க்கும் ஒரு ஆட்சியாளர். அமீர் அல்லது ஷேக் என்று அழைக்கப்படுகிறார்.

ராஜ நடராஜன் said...

வளைகுடா நாடுகளில் மாற்றங்கள் கொண்டு வர முயன்ற துபாய், உலகப் பொருளாதார தேக்கத்தில் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு பயம் காட்டியது வருத்தத்திற்குரியதே.

சதுக்க பூதம் said...

//துபாயும் அபுதாபியும் இரு நாடுகளல்ல நண்பரே//


தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி. இரு அரசாங்கங்கள் என்று கூறுவதற்கு பதில் இரு நாடுகள் என்று எழுதி விட்டேன். தவறை பதிவில் திருத்தி விட்டேன். ஆனால் அபுதாபி அரசாங்கம் $10 பில்லியன் கொடுத்து துபாய் அரசாங்கத்திற்கு உதவியது உண்மை.
மேலும் தகவலுக்கு கீழ் காணும் செய்தியை படித்து பாருங்கள்

http://saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2009032833424
http://www.economist.com/finance/displayStory.cfm?story_id=13527891&fsrc=nwlgafree

சதுக்க பூதம் said...

//வளைகுடா நாடுகளில் மாற்றங்கள் கொண்டு வர முயன்ற துபாய், உலகப் பொருளாதார தேக்கத்தில் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு பயம் காட்டியது வருத்தத்திற்குரியதே.

//

சரியாக சொன்னீர்கள் ராஜ நடராஜன்