ஒரு தொழிலில் 100 ரூபாய் முதலீடு செய்து 1000 ரூபாய் சம்பாதித்தால் அது லாபம் என்போம். அதையே 100 ரூபாய் முதலீடு செய்து 1 லட்சம் ரூபாய் சம்பாதித்தால் அது கொள்ளை லாபம். அந்த அளவு கொள்ளை லாபம் கிடைக்கும் தொழில் ஒன்று உண்டா? ஆம் இருக்கிறது. பாக்கிஸ்தான் அந்த வியாபார தந்திரத்தை கண்டுபிடித்து பெரிய அளவில் பயனடைகிறது. என்ன என்று கேட்கிறீர்களா? பாக்கிஸ்தான் தலிபான், லஸ்கர்-இ-தொய்பா என பல தீவிரவாத இயக்கங்களை சில மில்லியன் டாலர் முதலீட்டில் உருவாக்கி, அதன் பலனாக இன்று பல பில்லியன் டாலர்களை அமெர்க்காவிடமிருந்து நிதி உதவியாக பெற்று கொள்ளை லாபம் அடைகிறது. 21ம் நூற்றாண்டில இதுவும் ஒரு லாபமிகு தொழில் தான்.
--
6 comments:
நக்கல் அல்ல
உண்மைதான்..
நல்ல பார்வை
வாழ்த்துக்கள்...
நன்றி அறிவே தெய்வம்
சதுக்க பூதம்,
பொருளாதாரக் கட்டுரைகளை நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
ஆனால், இந்தப் பதிவு வெறும் நக்கலாகத்தான் இருக்கிறது, உண்மை எதுவும் இல்லை இதில்.
தலிபான்களை உருவாக்கியது அமெரிக்க ஆதிக்கத் தேவைதானேயொழிய வேறேதுமில்லை. மேலும் இன்றளவில் உள்ள பல தீவிரவாதக் குழுக்களும் தொடர்வினைகளாகத் தான் உருவாகியிருக்கிறதேயன்றி மக்களுக்காகவோ மதத்தைக் காக்கவோ நிச்சயம் உருவாகவில்லை.
இன்றைக்கு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு(Swat Valley) எனும் அழகிய பகுதியையே தலிபன் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது, பாகிஸ்தான் அரசாங்கம் கையாலாகாத்தனமாய் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறது.
கருத்துக்கு நன்றி நம்பி.பா.இதை நக்கல் என்ற தலைப்பில் தான் எழுதியுள்ளேன்.தீவிரவாதத்தை பற்றிய உங்கள் கருத்து உண்மை .நிச்சயம் பொருளாதார கருத்துகளை தொடர்ந்து எழுத்கிறேன்
இவ்விசயத்தில் நம்பி.பா சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன்.
தவிர .. 100 ரூபாய் போட்டு 1000 ருபாய் எடுத்தாலே அது கொள்ளைக்கு கொள்ளை லாபம் தான் .
இன்றைய முதலாளித்துவ சட்டப்படியே நியாயமான இலாபம் 25% தான்..
Post a Comment