Friday, September 07, 2007

டாலர் அரசியல்

உலகிலேயே அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனாவும் ஒன்று. பல் குத்தும் ஊசி முதல் அண்டம் பாயும் ஏவுகணை வரை,சீனாவின் தயாரிப்புகளுக்கு உலக சந்தையில் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆனாலும் சீனாவின் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதரத்தை சார்ந்தேயிருக்கிறது.உலகிலேயே அதிகமாக பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்காவின்பொருளாதாரம் எப்படி,உலகிலேயே அதிகமாக ஏற்றுமதி செய்யும் சீனாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகிறது? "கோட்டீஸ்வரன்" நிகழ்ச்சியிலோ அல்லது "kaun banega crorepathi " யிலோ கேட்கப்பட வேண்டிய கேள்வி.புலித்தோல் போர்த்திக்கொண்டு சிறுத்தையை கட்டுப்படுத்தும் காரியமாக அல்லவா இது!.அதற்கெல்லாம் மூலகாரணம் தான் என்ன? விடை அளிக்கவே இக்கட்டுரை.
இந்த கதையின் ஆரம்பம் உலகப்போர் காலத்தில் தொடங்குகிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உற்பத்தி திறன் வெகு அதிகமாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்த வல்லுநர்களால் அமெரிக்கா, தொழில் நுட்ப மற்றும் உற்பத்தி துறையில் வெகு முன்னேறிய நாடாக இருந்தது. முதல் உலகப்போரில் நேரடியாக பங்கு பெறாததால் ஐரோப்பிய நாடுகள் அடைந்த பெரு இழப்பை போல் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியில் நன்கு முன்னேற்றம் அடைந்தது. ஹிட்ல்ரின் கொள்கையினால் நாடு பெயர்ந்த யூதர்களின் மூளையை கொண்டு அதன் வளர்ச்சியை வேகப்படுத்தியது. இரண்டாம் உலகப்போரில் மேற்கத்திய நாடுகளுக்கு உதவி செய்து கைமாறாக பெரும் தங்கத்தை தன் இருப்புக்கு கொண்டு வந்தது. டாலரின் மதிப்பு அமெரிக்கா வைத்திருந்த தங்க இருப்பை கொண்டு மதிப்பிடபட்டது. டாலர் ஒரு வலுவான நாணயமாக இருந்தது. இரண்டாம் உலகபோரின் முடிவில் உலக தங்கத்தின் கையிருப்பில் 80% மற்றும் உற்பத்தி துறையில் 40% அமெரிக்கா கையில் இருந்தது. வெளிநாட்டு வங்கிகள் வாங்கும் டாலர் பணத்தை அமெரிக்கா எந்த நேரத்திலும் தங்கமாக திருப்பி கொடுக்கும் நிலையில் இருந்தது. உலக நாடுகள் டாலர் மற்றும் தங்கத்தை கையிருப்பாக கொண்டு தங்களது நாணயத்தை வெளியிட தொடங்கின. உலகின் பல நாடுகளின் வங்கிகள் டாலரை தனது முதலீட்டு கையிருப்பாக வைக்க ஆரம்பித்தன, 1960 வரை இந்த நடைமுறை நன்றாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.
வியட்நாம் போர்-மாபெரும் மாற்றத்தை எற்படுத்தியது. 1960களில் நடந்த இந்த போருக்காக அமெரிக்கா அளவுக்கு மீறி செலவு செய்ய வேண்டி வந்தது. அதுவரை தங்க கையிருப்பிற்கு எற்றவாறு டாலரை வெளியிட்டு வந்த அமெரிக்கா அதிக அளவு டாலரை வெளியிட தொடங்கியது. ஒருநிலையில் வெளிநாட்டு வங்கிகள் தங்களிடம் இருந்த டாலரை கொடுத்து அமெரிக்காவிடம் தங்கம் கேட்டால் அதனால் தரமுடியாது என்ற நிலை எற்படும் நிலை வந்தது. 1971ம் ஆண்டு நிக்ஸன் நிர்வாகம் உலக முக்கியத்துவம் பெற்ற தீர்மானத்தை கொண்டுவந்தது. அதன் படி டாலருக்கும் தங்கத்திற்கும் இடையிலான தொடர்பை அறுத்து விட்டது அமெரிக்க அரசாங்கம். அதன் படி டாலரின் மதிப்பு இனி அமெரிக்க நிர்வாகத்திடம் உலகம் வைக்கும் நம்பிக்கையில்தான் என்றானது. அதன் பின்னர் நடந்த மாற்றங்கள் தான் உலகை இன்றைய நிலைக்கு இட்டு சென்று உள்ளது.
1970களின் ஆரம்பத்தில் அமெரிக்க அரசாங்கம் சவுதிஅரேபிய அரசாங்கத்திடம் ஓர் ஒப்பந்தம் போட்டது. அதன்படி சவுதிஅரேபியா தனது எண்ணை விற்பனை அனைத்தையும் டாலர் அடிப்படையில் செய்வது என்று சம்மதித்தது. இதுதான் உலகபொருளாதாரத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதன் விளைவாக உலக பெட்ரோல் வணிகம் அனைத்தும் டாலரில் விற்பனை செய்யப்பட்டது. அதன் விளைவு ஒரு புறம் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளிடம் டாலர் கையிருப்பு அதிகரித்தது. அந்த நாடுகளிடம் தேவைக்கு மிக அதிகமான பணம் இருந்ததால் அந்த டாலரை வைத்து ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தன. அதற்கு அமெரிக்கா அந்த நாடுகளிடம் உள்ள பணத்தை முதலீடு செய்ய treasury bond வெளியிட்டு அதில் முதலீடு செய்ய வைத்தது. அவர்கள் பணத்தை மேன்மேலும் அமெரிக்காவின் bondல் முதலீடு செய்தனர். மற்றொரு பக்கம் பெட்ரோல் உபயோகப்படுத்தும் நாடுகள் பெட்ரோல் கிடைக்க டாலர் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. டாலரை உற்பத்தி செய்யும் ஒரே நாடு அமெரிக்கா. எனவே அமெரிக்காவுக்கு தேவையான பொருள்கள் எவையோ, அவற்றை உற்ப்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பொருளை வாங்க வேண்டுமானால் விலை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வேண்டும்.அந்த நாடுகளில் உற்பத்தி செலவை குறைக்க முடியாது. அதற்கு ஒரே வழி, நாட்டின் நாணயத்தின் மதிப்பை குறைக்க ஆரம்பித்தன. அதாவது தனது மக்களின் உழைப்பு மற்றும் கனிம வளங்களை மலிவாக மாற்றி அமெரிக்க மார்க்கெட்டில் மலிவான விளைக்கு பொருள்களை ஏற்றுமதி செய்தன. அந்த நாடுகள் தங்கள் சுய தேவை என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு எற்றபடி முன்னேற்ற திட்டங்கள் வகுப்பதை விட்டு விட்டு, டாலர் கிடைக்க எந்த பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று சிந்திக்க தொடங்கின. தனது முழு உழைப்பையும் செலவிட்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருள்களை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் லாபங்களை அரசாங்கங்கள், மீண்டும் அமெரிக்க வங்களிடம் Bond வாங்கி சேமித்து வைக்க தொடங்கின. பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளும் அமெரிக்காவிடம் முதலீடு செய்கிறது. பெட்ரோல் வாங்கும் நாடுகளும் அமெரிக்காவிடம் முதலீடு செய்கிறது. பெட்ரோல் வாங்கும் நாடுகள் தனது சக்தி(energy),மனிதவளம், மற்றும் பொருளாதார வளங்களை கொண்டு உற்பத்தி செய்த பொருட்களை கொடுத்து டாலர் வாங்கி மீண்டும் அதனை அமெரிக்காவிடமே குறைந்த வட்டிக்கு பத்திரமாக முதலீடு செய்கிறது. இதன் விளைவாக டாலருக்கு சர்வதேச சந்தையில் அதிக தட்டுப்பாடு ஏற்படுகிறது.ஆசிய மற்றும் பிற நாடுகளின் கையிருப்பில் 2.2 டிரில்லியன் டாலர் அளவுக்கு treasury bond உள்ளது. இதில் சைனா மட்டுமே 350 பில்லியன் டாலர்கள் வைத்துள்ளது.
அமெரிக்காவை பொருத்தவரை அது உற்பத்தி செய்யும் டாலருக்கு உலக மார்கெட்டில் என்றுமே தேவை இருக்கும். அந்த டாலரை எந்த ஒரு நாடும் அமெரிக்காவிடம் திருப்பி கொடுத்து அதற்குரிய பொருளை கேட்க போவதில்லை. அதன் விளைவாக அமெரிக்கா உற்பத்தியை மீறி நிறைய டாலரை வெளியிட ஆரம்பித்தது. அதன் விளைவாக வருமானத்தை மீறி அமெரிக்கா செலவு செய்ய ஆரம்பித்தது. மாபெரும் தொகையை தன் இராணுவ ஆராய்ச்சி மற்றும் பிற நாடுகள் மீது படையெடுப்பு போன்றவற்றுக்கு செலவு செய்ய ஆரம்பித்தது. பிற நாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்ய தொடங்கியது. அமெரிக்க நிறுவனங்கள் மலிவான வெளிநாட்டு இறக்குமதி பொருள்கள் மூலம் பெரும் லாபம் சேர்க்க ஆரம்பித்தன. அமெரிக்கா கடந்த ஆண்டு மட்டும் எற்றுமதியை விட 811 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் மிக அதிக அளவிற்கு லாபம் ஈட்ட தொடங்கின.
அதன் விளைவு, அதிக பணத்தை ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கு செலவிட முடிந்தது. இனி WTO சட்டதிட்டங்கள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டால், எந்த புதிய மருந்து/கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கும் கம்பெனிகளுக்கும் முழுமையாக உரிமை கிடைத்துவிடும். அந்த உரிமம் மூலம் உலகம் முழுதும் உள்ள நாடுகளில் அவற்றை விற்று பெருத்த‌ லாபம் ஈட்டமுடியும். அவ்வாறு கிடைக்கும் லாபம் மூலம் மேலும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். சிறு கம்பெனிகள் அனைத்தையும் விலைக்கு வாங்கமுடியும். இவ்வாறாக ஒவ்வொரு துறையிலும் ஒன்று அல்லது இரண்டு கம்பெனிகள் ஏகபோக(monopoly) உரிமை தாரர்களாக ஆகி விடுவர். இன்று அமெரிக்க நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபங்கள் மூலமாக, இந்த நிறுவனங்கள் உலக அளவில் ஒவ்வொரு துறையிலும் ஏகபோக உரிமையாளர்களாக மாறி, உலகின் அனைத்து செல்வங்களையும் அமெரிக்காவிற்கு கொண்டு வரும். இதற்கிடையில் அமெரிக்கா அதிக அளவு இராணுவ தொழில்நுட்பத்திற்கு செலவு செய்து உலக பொருளாதாரத்தையும் இராணுவ பலம் மூலமாக கட்டுப்படுத்த தொடங்கலாம். அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியாக பாதகமாக செயல்படும் நாடுகளை இராணுவ பலம் கொண்டு அடக்கும். இதன் விளைவாக உலக நாடுகளுக்கு எத்தனையோ இழப்புகள் ஏற்பட்டாலும், இந்தியா போன்ற நாடுகளுக்கு இதன் மூலம் நிறைய நன்மை கிடைக்கிறது. இந்தியாவிற்கு கிடைகும் குறுகிய கால நன்மை என்ன என்பது பற்றியும் அந்த நன்மைகளை நீண்ட கால ஆதாயமாக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் அடுத்த பகுதியில் காண்போம்.

இந்த பதிவை கீற்று இணய தளத்திலிருந்தும் படிக்கலாம்

டாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்


டாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்கள்?

எங்கே போனது பணம்? - டாலர் அரசியல்- 4

--

40 comments:

சதுக்க பூதம் said...

I started writting this article long back. But few days before, I saw a article about the same topic by sasi.Any way, I hope that this article will give clear picture about current economic scenario

முரளிகண்ணன் said...

Eagerly waiting for forthcoming parts

சதுக்க பூதம் said...

முரளி கண்ணண்- வருகைக்கு நன்றி.நிச்சயம் கூடிய விரைவில் பதிவிடுகிறேன்

Anonymous said...

Hi Sathokapootham,
really an excelent article, now i have a clear view on pertrodollar. waiting to read the next part.
Vanthana.

Anonymous said...

hello sathukabootham
Very good article writen in a lucid style. (without any economic jargons and easily understandable by common man). waiting for your second part eagerly.
ssmk

சதுக்க பூதம் said...

Thank you Vanthana. I will publish the next part soon

சதுக்க பூதம் said...

Thank you ssmk. I will write the second part soon

அரை பிளேடு said...

நல்ல பதிவு...

அமெரிக்காவின் வாங்கும் திறனும்... டாலரின் மதிப்பும் எப்போதும்.... ஆச்சரியப்படுத்தும் விஷயங்கள்.

தங்கள் கட்டுரையில் இதற்கான விடை இருக்கிறது.

தொடருங்கள்.. நன்றி.

சதுக்க பூதம் said...

தங்கள் வருகைக்கு நன்றி அரை பிளேடு

Anonymous said...

Hi, this is simple and excellent article.Pls continue and give references.

மு மாலிக் said...

இப்பதிவின் மூலம் அண்ணியச் செலாவணி பற்றி பல பொருளாதார நுணுக்கங்களைப் புரிந்து கொண்டேன். நன்றி.

சதுக்க பூதம் said...

மாலிக் வருகைக்கு நன்றி.

சதுக்க பூதம் said...

Thanks Venkat. I will do the same for future articles

K.R.அதியமான் said...

USD remains the reserve currency of the world (until WW 2, it was British pund sterling) and the world trade is done in USD. if and when Euro or something else replaces USD, then there will be a turmoil.

but other nation's currecy doesn't depricate / aprreciate because world trade is in USD. each currecy's inherent value reflects the strenght of the nation issuing it and interset rates in those nations. it is a complex phenomena.
and many currecnices appreciates or deprcriciated at the same period due to such internal reasons.

and there is thing called carry-trade thru Japanese yen ; as there is free convertiblity of yen, USD and Euro, and since due to delfation in JApan since 90s, Japanese interst rates are about 1 % or less, billions in yen were borrowed and invested in higher interest yielding securities or markets around the world. this too is waiting to unwind.

சதுக்க பூதம் said...

Thanks for the info Athiyaman. But some countries are artifically depreciating their currency value.China is the best example.Since they export AtoZ goods to US, they want to be competitive and because of that they need to buy lots of US$ n treasury bond to maintain their strength of reserve(which is $)

Thiagarajan.S PMP said...

keep going. I am expecting more from you

மாயன் said...

நல்ல பதிவு

சதுக்க பூதம் said...

வருகைக்கு நன்றி மாயன்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

Hello,
There is an underlying point of difference in the article.
Why the oil consuming countries need to export goods for the sake of getting dollar.
As you said they need dollar to buy oil,which they can straight away buy from treasury markets..
Why they need to choose a distant route of exporting at the terms of USA & get dollar?
Don't you think it is a bit unacceptable view?
It is on the other way actually..Countries like china & Japan has lot of productivity.For their commercial vilability they have to llok for markets..
During Second world war USA sell lot of arms and infrastructure for europian countries and in turn had made lot of wealth.
Aftermath they concentrate mainly on technology,arms & scientific inventions whereas common things like cloths,toys were taken from countries who offer them...
Here comes China & japan's part to sell things to have their commerce good..

Give me your opinion..

தென்றல் said...

அருமையான கட்டுரை!

தென்றல் said...

அருமையான ..விளக்கமான கட்டுரை!

சதுக்க பூதம் said...

Arivan, I posted my reply in corporatocracy article

சதுக்க பூதம் said...

தென்றல், உஙகள் பாராட்டுக்கு நன்றி

Unknown said...

சதுக்கபூதம்,

மிக அருமையாக, எளிதாகப் புரியும் வகையில் விளக்கியிருக்கிறீர்கள்! அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்!

நன்றி!

சதுக்க பூதம் said...

தஞ்சாவூரான்,
பாராட்டுக்கு நன்றி. இதன் அடுத்த பகுதியை முன்பே பதிவிட்டு விட்டேன்.

http://tamilfuser.blogspot.com/2007/09/blog-post_28.html

மூன்றாவது பகுதியை விரைவில் எழுத உள்ளேன்.

Anonymous said...

அருமையான ஆய்வுக்கட்டுரை. பதிவிற்கு நன்றிகள் பல.

//1970களின் ஆரம்பத்தில் அமெரிக்க அரசாங்கம் சவுதிஅரேபிய அரசாங்கத்திடம் ஓர் ஒப்பந்தம் போட்டது. அதன்படி சவுதிஅரேபியா தனது எண்ணை விற்பனை அனைத்தையும் டாலர் அடிப்படையில் செய்வது என்று சம்மதித்தது. இதுதான் உலகபொருளாதாரத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதன் விளைவாக உலக பெட்ரோல் வணிகம் அனைத்தும் டாலரில் விற்பனை செய்யப்பட்டது. //

சவுதிஅரேபிய அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தால் மட்டுமே உலக பெட்ரோல் வணிகம் அனைத்தும் டாலரில் விற்பனை செய்யப்பட்டது என்றால் சவூதியை தவிர மற்ற பெட்ரோல் உற்பத்தி நாடுகளின் விற்பனை எந்த கரன்சியில் இருந்தது?

- சுல்தான்

சதுக்க பூதம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுல்தான்.
இந்த ஒப்பத்தத்துக்கு முக்கிய கரண கர்த்தாவாக இருந்தது .
சவுதி அரேபியாவிடம் ஒப்பந்தம் இட்டது. ஆனால் அதன் மூலம் ஓPஏC எனப்படும் எண்ணெய் விற்கும் நாடுகளினின் குழுமம் முழுவதையும் எண்ன்ணயை டாலரில் விற்க முடிவு செய்ய வைத்தது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Thriyadha pala vishayangal therindhukkondane.
Nanri

சதுக்க பூதம் said...

வருகைக்கு நன்றி T.V.Radhakrishnan .

Anonymous said...

very nice post. it was really informative, really enjoyed this article. keep up the work

சதுக்க பூதம் said...

nallakannu ,உஙகள் பாராட்டுக்கு நன்றி

ஆட்காட்டி1 said...

0

Anonymous said...

wow. superb article. Very interesting.

Kalaiyarasan said...

தமிழில் இதுபோன்ற கட்டுரைகள் வருவது மிக அரிது. நல்ல முயற்சி. பாராட்டுகள்.

-கலையரசன்

சதுக்க பூதம் said...

பாராட்டுக்கு நன்றி கலையரசன் மற்றும் அனானி

K.R.அதியமான் said...

pls read this link fully for a alternative viewpoint :

http://web.nps.navy.mil/~relooney/Rel_MEJ_S04.pdf

priyamudan said...

குறை சொல்வதாக என்ன வேண்டாம், உபயோகமான பதிவு ஆனால் எழுதுருவும் பத்தி பிரிப்பதும் மாறினால் இன்னும் படிக்க எளிமையாக இருக்கும்.

priyamudan said...

குறை சொல்வதாக என்ன வேண்டாம், உபயோகமான பதிவு ஆனால் எழுதுருவும் பத்தி பிரிப்பதும் மாறினால் இன்னும் படிக்க எளிமையாக இருக்கும்.

சதுக்க பூதம் said...

தங்களுடைய மேலான ஆலோசனைக்கு நன்றி. நிச்சயம் இனி வரும் பதிவுகளில் எழுத்துரு மற்றும் பத்தி பிரிப்பதில் கவனம் செலுத்துகிறேன்.

Nasar said...

தோழரே ....
இதுதான் என் முதல் விஜயம் மற்றும் கன்னி கருத்துமிடுதலும்
நன்றாக இருக்கிறது தங்களுடைய " பெட்ரோல் VS டாலர் கட்டுரைகள் . இப் பணி தொடர என் வாழ்த்துக்கள்

//1970களின் ஆரம்பத்தில் அமெரிக்க அரசாங்கம் சவுதிஅரேபிய அரசாங்கத்திடம் ஓர் ஒப்பந்தம் போட்டது. அதன்படி சவுதிஅரேபியா தனது எண்ணை விற்பனை அனைத்தையும் டாலர் அடிப்படையில் செய்வது என்று சம்மதித்தது. இதுதான் உலகபொருளாதாரத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதன் விளைவாக உலக பெட்ரோல் வணிகம் அனைத்தும் டாலரில் விற்பனை செய்யப்பட்டது //
சரி 1970 முன்னால் உலக பெட்ரோல் வணிகம் எப்படி நடைபெற்றது என்பதை அறிய ஆவல் ....
--