Friday, September 28, 2007

டாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்

சென்ற பதிவில் டாலரின் முக்கியத்துவம் எவ்வாறு சர்வதேச சந்தையில் நிலை நிறுத்தப்படுகிறது என்று பார்த்தோம். இந்த பதிவில் இந்திய பொருளாதாரத்தை உலகின் முன்னனியில் நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று பார்போம்.
பத்திரிக்கைகள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் மூலமாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் இந்தியா படைத்து வரும் சாதனைகளை எண்ணி பூரிப்படைகிறோம். இந்தியாவின் ஏற்றுமதி பல மடங்கு உயர்ந்து வருவதை கண்டு பெருமை கொள்கிறோம். இன்னும் சிறிது காலத்தில் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறிவிடும் என்று கனவு காண்கிறோம். இத்தனை நல்ல செய்திகள் வரும் பத்திரிக்கையில் வரும் ஒரு சிறு செய்தியை பெரும்பாலானோர் கண்டு கொள்வதே இல்லை. இன்றைய இந்திய பொருளாதாரத்தின் நிதர்சனத்தை காட்டும் அந்த செய்திதான் என்ன?
இந்தியாவின் எற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை கடந்த ஆண்டு மட்டும் 40சதவிகிதம் உயர்ந்து 57 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதாவது கடந்த ஆண்டு எற்றுமதி 125 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2005ஆம் ஆண்டை விட 21 சதவிகிதம் அதிகம். ஆனால் இறக்குமதி 26 சதவிகிதம் அதிகமாகி 181 பில்லியன் டாலர்களாக உள்ளது. நாம் 181 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்கி 125 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை விற்கிறோம். தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் பெரு வளர்ச்சி அடைந்து உலக பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா முன்னேருவதாக நினைத்தாலும் நிகர கணக்கு நமக்கு நட்டம் தான். இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், நமது இறக்குமதியில் பெரும்பான்மையாக இருப்பது பெட்ரோல் தான். அதாவது நாம் மிகவும் கஷ்டபட்டு தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் ஏற்றுமதி செய்து வாங்கிய டாலரை பெட்ரோல் வாங்கவே செலவிடுகிறோம். பெட்ரோல், அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத முக்கியமான பொருள். இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருமே தவிர குறைய போவதில்லை.
இந்த பெட்ரோல் இறக்குமதியை குறைக்க என்னதான் வழி உள்ளது? இதற்கு தீர்வு காண நமக்கு கிடைத்துள்ள ஆயுதம் தான் எத்தனால். எத்தனாலை தாவரத்திருந்து பிரித்து எடுக்கலாம். இவ்வளவு நாட்களாக எத்தனால் உற்பத்தி செலவு அதிகம் என்பதால் கவனிப்பாரற்று இருந்தது. இன்று பெட்ரோல் விலை பேரலுக்கு $70 தாண்டி விட்டதால், உலகமே எத்தனாலின் மீது அதன் பார்வையை செலுத்த தொடங்கி உள்ளது.
எத்தனாலை முழுமையாக பெட்ரோலுக்கு மாற்றாக கொண்டுவருவது கடினம். ஆனால் இறக்குமதி செய்யும் பெட்ரோலின் ஒரு பகுதியை எத்தனாலை கொண்டு சமாளிக்கலாம். ஏற்கனவே பிரேசில் போன்ற நாடுகள் எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து உபயோக படுத்தி பெரும் சாதனை படைத்துள்ளனர். எத்தனாலின் விலையை மட்டும் பெட்ரோலுடன் சம்மந்த படுத்தி பார்க்க கூடாது. எத்தனாலை உபயோக படுத்துவதனால் எற்படும் பிற நன்மைகளையும் கணக்கில் கொள்ளவேண்டும். எத்தனாலை கரும்பு சக்கை, நெய்வேலி காட்டாமணக்கு, மக்காசோளம் மற்றும் பல பயிர்களிருந்தும் தயாரிக்கலாம். இவற்றில் சில பயிர்கள் வறண்ட பூமியில் வளர கூடியது. இத்தகைய பகுதிகளில் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள் மிகவும் பின் தங்கி உள்ளனர். எத்தனால் உற்பத்தி செய்வதன் மூலம் இந்த விவசாயிகள் மற்றும் தொழிளாளர்களுக்கு சிறிதலவு நிலையான வருமானம் கிடைக்கும். ஒரு கார் தொழிற்சாலை வந்தால், அதன் மூலம் சில ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்த எத்தனால் திட்டம் அமல் படுத்தப்பட்டால் பல கோடி பேருக்கு மேல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். கரும்பு சக்கையிலிருந்து எத்தனால் எடுத்தால் கரும்பு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். நம் அரசாங்கம் ஒரு புறம் தனக்கு கிடைக்கும் டாலர் பணத்தையெல்லாம் பெட்ரோல் வாங்க செலவு செய்து வருகிறது, இதனால் மிகபெரிய டாலர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மறுபக்கம் கிராமத்தில் வாடும் மக்களின் வழ்க்கை தரம் உயர பல கோடி டாலரை உலக வங்கியில் கடன் வாங்கி, அதில் பெரும் பகுதியை அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சமாக கொடுத்து சிறு பகுதியை கிரமத்து மக்கள் நல திட்டங்களுக்கு கொடுக்கிறது. இதனால் இரு புறமும் டாலரின் தேவை அதிகரிக்கிறது.
அதற்கு பதில் அரசாங்கம் எத்தனாலுக்கு வரி விலக்கு அளித்து, மானியம் கொடுத்து இந்த தொழிலை ஊக்கப்படுத்தினால் இறக்குமதிக்கு செலவு செய்யும் டாலரின் செலவை குறைக்கலாம். உலக வங்கியிடம் வாங்கும் டாலர் கடனையும் குறைக்கலாம்.வறுமை ஒழிப்பையும் எளிதில் அமல்படுத்தலாம். கிராம புற மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதால் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். அதனால் ஒட்டு மொத்த பொருளாதாரமுமே வளரும். இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக போராடும் அரசியல்வாதிகள் எவருமே இல்லாததால் இந்த திட்டத்தை கனவு திட்டமாக எடுத்து முழுமையாக நிறைவேற்ற எந்த அரசியல்வாதியும் முன் வரவில்லை.
அடுத்து நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது மக்கள் தொகை பெருக்கம். இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகைதான் இன்றைய வளர்சிக்கு முக்கிய காரணம் என்று நினைக்க தோன்றும். உலக அரங்கில் இரண்டாம் உலகபோரிலிருந்து கடந்த நூற்றாண்டின் முடிவு வரை அலசி பார்த்தோமானால் ஒரு உண்மை புரியும்.உலகில் எந்த தொழில் துறையும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் நூற்றுகணக்கான நிறுவனங்கள் வருடம் தோறும் தொடங்கபட்டு வளர்ச்சி அடைந்துள்ளன. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அந்த நாடுகளின் வளர்ச்சி விகிதத்தை விட குறைந்து விட்டது. எனவே அந்த நாடுகளில் மிகப்பெரிய தொழிலாளர் பற்றாக்குறை எற்பட்டுள்ளது, இதன் விலைவாக தங்களுக்கு தேவையான பொருள்களை வெளிநாடுகளில் உற்பத்தி செய்து தங்கள் நாடுகளுக்கு இறக்குமதி செய்ய தொடங்கினர் அல்லது தொழிலாளர்களை வெளி நாடுகளிருந்து தங்கள் நாடுகளுக்கு வரவழைத்து கொண்டனர். கல்வி மற்றும் தொழிற்துறையில் நன்கு கவனம் செலுத்தி முன்னேற துடித்த இந்திய மற்றும் சீனா போன்ற நாடுகள் இதை நன்கு பயன் படுத்தி கொண்டனர்.
அனால் இந்த நூற்றாண்டில் நிலமை அடியோடு மாற தொடங்குகிறது. Meger மற்றும் Acquisition மூலமாக பெரிய நிறுவனங்கள் ஒன்று சேர ஆரம்பித்துள்ளன. இந்தநிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை வாங்க தொடங்கி விட்டன. எனவே ஒவ்வொரு துறையிலும் oligopoly அல்லது monopoly என்ற நிலை வர தொடங்கியுள்ளது. WTO இந்த மாற்றத்தை துரித படுத்தியுள்ளது. இதன் விளைவு தொழிலாளர்களின் தேவை இந்த நிறுவனங்களுக்கு குறைய தொடங்கியுள்ளது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், கணிணி மயமாக்கலாலும் மற்றும் இயந்திர மயமாக்களாலும் தொழிலாளர்களின் தேவை பெருமளவு குறைய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் மக்கள் தொகை இதே வேகத்தில் வளர்ந்தால் அவர்களுக்கு உள்நாட்டு வேலை கிடைப்பதும் அரிதாகிவிடும், வெளி நாட்டு வேலை வாய்ப்புகளும் குறைந்துவிடும். உதாரணமாக Retail துறையில் பெரு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்துள்ளதுதான். இந்த நிறுவனங்களால் லட்சகணக்கானோர் வேலை இழக்க போவதை கண் கூடாக காண்கிறோம். இந்த நிலை நாளை அனைத்து துறைகளிலும் உலகளவில் வரத்தான் போகிறது. இதையெல்லாம் எதிர்கொள்ள நாம் என்ன ஏற்பாடு செய்துள்லோம் என்பது கேள்விக்குறியே. எனவே அரசாங்கம் உடனடியாக கவனிக்க வேண்டிய விசயம், இந்த மக்கள் தொகை பெருக்கம்.

பொருளின் மதிப்பும் உற்பத்தி செலவும்:
கடந்த நூற்றாண்டில் ஒரு பொருளின் மதிப்பு அதன் தேவை மற்றும் உற்பத்தி (Demand and supply) பொருத்தும், உற்பத்தி செலவு பொருத்தும் தான் இருந்தது. எந்த ஒரு புதிய பொருளை மக்கள் அதிகமாக விரும்புகின்றனரோ அந்த பொருளையே பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு உற்பத்தி செய்து விற்க்கும். எனவே பொருளின் விலை பெரும்பாலும் உற்பத்தி செலவை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையை முதலில் மாற்றியது Branding கலாச்சாரமே. அதாவது ஒரு பொருளை முதலில் தரமாக மார்க்கெட்டில் வெளியிட்டு தங்கள் நிறுவனத்தின் பெயரை மக்கள் மனதில் பதியவைத்து நுகர்வோர் மதிப்பை பெறுவதன் மூலம், அந்த பொருள் சந்தையில் அதிக விலைக்கு விற்க்கப்படும். அதிக அளவு விளம்பரம் மூலம் தங்களது கம்பெனியின் பெயரை நிலை நாட்டிய பின், அவர்கள் விற்பனைக்கு கொண்டுவரும் அத்தனை பொருட்களையும் அதிக விலைக்கு விற்பார்கள். இதன் மூலம் உயர் மற்றும் மேல் நடுத்தர வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்வார்கள். WTO வந்தபின்பு நிலைமையே மாற தொடங்கின. WTO சட்டங்கள் முழுமையாக நடை முறை படுத்தப்பட்டால், எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிக்கும் கம்பெனிக்கு மட்டுமே குறிப்பிட்ட காலம் வறை உற்பத்தி செய்யும் உரிமம் வழங்கப்படும். இதன் விளைவாக வேறு எந்த கம்பெனிகளும் இந்த பொருளை தயாரிக்க முடியாது. ஆகையால் அந்த பொருளின் விலை அந்த பொருளுக்கு மக்களிடையே உள்ள அவசியத்தையோ அல்லது விளம்பரம் மூலமாக அது மக்களிடம் எற்படும் தாக்கத்தையோ கொண்டு மட்டும் நிர்ணயிக்கப்படும், உதாரணமாக IPhone 4GB ஒன்றின் விலை $500 என்றால் அதை உற்ப்த்தி செய்யும் ஆசிய கம்பெனிக்கு $230 விலை மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால் அதை Apple நிறுவனம் விளம்பரம் மற்றும் இதர செலவுகளை மட்டும் செய்து ஒரு IPhoneக்கு 270 டாலர்கள் லாபம் அடைகிறது. அந்நிறுவனம் அதனுடைய முதல் IPhone தயாரிப்புக்கு பல மில்லியன் டாலர்கள் செலவு செய்திருக்கும். பிறகு அதற்கு உரிமம் வாங்கி அதில் சில மாறுதல்களை செய்து அடுத்தடுத்து version வெளியிட்டு பலமடங்கு லாபம் அடைகிறது. அதில் கிடைக்கும் லாபத்தை கொண்டு அடுத்த கண்டுபிடிப்பை தொடர்கிறது. இதை எதற்கு கூறுகிறேன் என்றால் மூல பொருட்களை வாங்கி அதிக ஊழியர்களை வேலைக்கு வைத்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிறிய அளவே லாபம் பெறுகிறது. ஆனால் ஆராய்ச்சிக்கு செலவிட்டு புதியவற்றை கண்டுபிடிக்கும் நிறுவனம் பெரிய அளவில் லாபம் அடைகிறது.
இன்று இந்தியாவின் உற்பத்திதுறை பெருமளவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உற்பத்தி மட்டும் செய்து கொடுத்து புதியன கண்டு பிடிப்பில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. மேலும் சர்வதேச அளவில் Brand பெயர் உருவாக்கவும் பெரிதாக முயற்ச்சி செய்வது இல்லை. உலக சந்தையில் இந்திய கம்பெனிகள் நிலைபெற வேண்டுமானால் இதுபோல் கண்டுபிடிப்பு மற்றும் Brandingல் கவனம் செலுத்த வேண்டும். இதற்கான சில முயற்சிகள் இன்றும் நடந்து வருகின்றன. டாடா நிறுவனம் Tetley என்ற இங்கிலாந்து டீ Brand ஐ விலைக்கு வங்கியுள்ளது. விஜய்மால்யாவின் நிறுவனம் Whyte & Mackay Brand ஐ விலைக்கு வங்கியுள்ளது. இத்தகைய முயற்ச்சி ஒவ்வொரு துறையிலும் தொடர வேண்டும். ஆராய்ச்சிக்கு அதிகம் செலவு செய்து மக்கள் விரும்பும் புதிய பொருட்களை கண்டு பிடித்து உரிமம் பெற வேண்டும். அத்தகைய வளர்ச்சிதான் உண்மையாக அதிக நாட்கள் நிலை பெறும் வளர்ச்சியாக இருக்கும். மேலை நாடுகளில் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த இடம் எது என்று பார்த்தால் அது பல்கலை கழகங்களாக தான் இருக்கும். ஆனால் இந்தியாவில் பல்கலைகழகங்கள் அந்த அளவிற்கு முதிர்ச்சி பெறவில்லை. பல்கலைகழகங்களில் நடக்கும் ஆராய்ச்சியின் தரம் பல மடங்கு உயர வேண்டும்.
இந்திய மருந்து கம்பெனிகள் தற்போது Generic Drug எனப்படும் உரிமம் பெறாத அல்லது உரிமம் (patent) காலாவதியான மருந்துகளை உற்பத்தி செய்து அதிக லாபம் அடைகிறனர். அந்த கம்பெனிகள் இந்தியாவில் மலிவாக கிடைக்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள், கல்லூரி மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஆகியவற்றை கொண்டு புதிய மருந்து பொருட்களை கண்டு பிடிக்கும் வேலையிலும் ஈடுபட வேண்டும்
இந்திய IT கம்பெனிகள், இந்தியாவில் ஆங்கிலம் பேச தெரிந்த மற்றும் மலிவான தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு பெரு வளர்ச்சி அடைகின்றன. நாளை இதே ஆங்கிலம் பேச தெரிந்த தொழில் நுட்ப வல்லுனர்களை, மிகவும் மலிவாக சீனா போன்ற நாடுகள் உருவாக்கினால் பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களை நோக்கி சென்றுவிடுவர். அது மட்டுமன்றி இந்திய நிறுவனங்களும் பிற நாட்டு வல்லுனர்களை கொண்டு வளர்ச்சியடைய தொடங்கிவிடும். இதனால் இந்தியா ஒரு பெரும் சரிவை சந்திக்கும். இந்த நிலை மாற வேண்டும் என்றால் இந்திய நிறுவனங்கள் Services தொழிலில் மட்டும் கவனம் கொள்ளாமல் IT Product செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். நல்ல தரமான Productகளை தயார் செய்வதன் மூலம் நிலையான சந்தையை பெற முடியும். இந்தியாவில் உலகதரத்துடன் Product செய்த ஒரே கம்பெனியான iFlex நிறுவனத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமான Oracle நிறுவனம் முழுமையாக வாங்க அமெரிக்க அரசே இந்திய அரசை நிர்பந்தித்ததாக செய்திகள் வந்தது. இதிலிருந்து Product தொழிலின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள மிகபெரும் IT நிறுவனங்கள் அனைத்தும் தரமான Product செய்ய முன்வர வேண்டும்.
அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதி பெருக்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து தொழில் தொடங்குவோருக்கு உதவியாக இருக்க வேண்டும். நல்ல சாலை, விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போக்குவரத்து வசதிகள், நவீன துறைமுகம், தகவல் தொடர்புதுறை, கல்வி, சுகாதாரம், போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலே கண்ட நிகழ்வுகளுக்கான தொடக்கத்தை நாம் இன்று செய்தால்தான் இந்தியா கி.பி. 2020ல் வல்லரசாகும் என்ற கனவை நாம் காண தொடங்கலாம்

இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசயம், சிறு தொழில் போன்றவற்றின் நிலை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

இந்த பதிவை கீற்று இணய தளத்திலிருந்தும் படிக்கலாம்

16 comments:

Anonymous said...

Thanks for the good article and keep going.

I am of same opinion about unnecessary importing of dirty & expensive oil. With over 75$ a barrol ,it is most economical to go for local ehthonol and other alternate fuels (our leaders really lack long term vision)and allow the currency to appreciate marginally against the dollar so that our companies & people would be able to aquire high technology & products (not raw materials like oil) from advanced countries at an affordable cost like what singpore,malasia have done ,they did not make every high tech product indigeniusly they simply import and thier currency value allow it to happen.


There is no need to repeat products/porcess(except strategic) everything locally instead we must go for new inventions as you have suggested to get patents in WTO regime.In the name of getting Foriegn investment we are keeping our currency devalued and finally draining the money in volatile oil market, we are losing in two ways as you have pointed out. Over Rs 100000 crore is spent to import oil every year. If atleast half of that is invested in local bio fuel (like Brasil)millions of jobs will be created including farmer/permanent farm workers.And we will be pushed to efficiently use our resources like water,land and all sort of secondary good effects will trickle down. We should develop big manufacturing base like china in partnership with MNCs who have know hows, our present scale is not sufficient to give jobs for growing population and we end up with few people getting good salaried jobs leaving majority in monsoon dependent farming with subsistence means and creating huge inequity and potentially seeding the social unrest.


We are all addicted to middle east oil and indirectly funding islamic,wahabic,jehadi terrorism which are mainly funded by madrasas coming from sudi-arabia,iran and countries like that.(money is coming to isalmists in pakistan from oil rich countries) Now US seem to have understood this link(their double speak is another thing) and they are making heavy investment in alternate & renewable energy technolgy/R&D to get energy security and after Bush's exit they will come around the post Kyto protocal to cut green house gas emissions, after all they are polluting 25% and will no longer morally tenable for them shed the responsbility. Global warming is deeply divided between republicans & democrats, so if democrats come they will probably reverse the decesion on kyto agreement and Bush's oil lobby will be countered.


Therefore making progress in alternative/renewable energy mean not just combating global warming alone but also undermining the religious terrorism funded by oil money and remember the clash arising from intolerance of faith is the biggest threat to world peace after the cold war.


I requested the references in your previous post. pls provide.

Thanks.

முரளிகண்ணன் said...

இந்தியாவில் பல துறைகளில் fundamantal research செய்வதற்க்கு போதிய உபகரணங்கள் இல்லை. அமெரிக்கா மற்றும் முக்கியமாக ஜெர்மன் போன்ற பிற அய்ரோப்பிய நாடுகளில் இருந்து முக்கிய கருவிகள் மற்றும் technical literature பெற வேண்டியுள்ளது. எனவே பின் தங்கியே இருக்கிறோம். தகுதியான நல்ல மாணவர்கள் IT, analysis போண்ற துறைகளுக்கு சென்று விடுகிறார்கள். அதற்க்கு அடுத்த நிலை மானவர்கள் research க்கு வருகிறார்கள். research scholar க்கு சமுதாயத்திலும் மதிப்பில்லை. it take four to five years for a reserach scholar to achieve some reasonable success. at that time he demoralised by the society. In school level also the lateral thinking and studying fundamental concepts not poroperly motivated in our country. Many people talk about Jetroba (காட்டாமணக்கு)and ethanal but in reality they not supported by the govt. and the society.
\\ஆனால் ஆராய்ச்சிக்கு செலவிட்டு புதியவற்றை கண்டுபிடிக்கும் நிறுவனம் பெரிய அளவில் லாபம் அடைகிறது.
\\மறுபக்கம் கிராமத்தில் வாடும் மக்களின் வழ்க்கை தரம் உயர பல கோடி டாலரை உலக வங்கியில் கடன் வாங்கி, அதில் பெரும் பகுதியை அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சமாக கொடுத்து சிறு பகுதியை கிரமத்து மக்கள் நல திட்டங்களுக்கு கொடுக்கிறது. இதனால் இரு புறமும் டாலரின் தேவை அதிகரிக்கிறது.
\\
nice points.

சதுக்க பூதம் said...

Thanks Venkat.Really very good analysis.I accept your views except for your view on terrorism.

As you told, if we allow currency marginally appreciate against dollar, we have lots of other advantages also. Companies involved in manufacturing,services and other sectors but focus on local indian market can benefit well. Because through export, we servicing around few percentage need of 10%(US&Europe) of population. But india contains 16% of population.If indian money value appreciated to some level, Since indian companies are servicing 90% need of 16% world population, they can get more profit and they can easily becoming MNC.That will boost indian economy.
If india saves few percent of money in oil import and spent it on biofuel, that will accelerate rural growth
I feel that terrorism can be stopped completely only when Pak,Afgan,african and other countries "rich and poor divide " shrinks
Regarding references, I am really sorry.I started writing these 2 articles very long back and i didn't note down references.I am noting nown references for currently writing articles(about Indian Agriculture research). Definitly, i can add it in future.
Actally i referred lots of article for the previous article.But for this article, most of them are my views and i referred articles for some statistics.

Thank you very much for your encouragement

சதுக்க பூதம் said...
This comment has been removed by the author.
சதுக்க பூதம் said...

//இந்தியாவில் பல துறைகளில் fundamantal research செய்வதற்க்கு போதிய உபகரணங்கள் இல்லை. அமெரிக்கா மற்றும் முக்கியமாக ஜெர்மன் போன்ற பிற அய்ரோப்பிய நாடுகளில் இருந்து முக்கிய கருவிகள் மற்றும் technical literature பெற வேண்டியுள்ளது.//
இது உண்மையான நிலை. மேலும் பல்கலை கழகங்கலில் பல கோடி ரூபாய் பெருமானமுல்ல ஒரு project கிடைத்தவுடன் உபகரணங்கள் வாங்குகிறார்கள். அந்த project முடிந்தவுடன் அந்த உபகரணங்கள் பழுதானால் அதை சரி செய்ய பணம் இருப்பதில்லை. அதற்கு உபயோகபடுத்த படும் chemicals விலையை கூட அவர்களால் செலவிட முடியவில்லை. அந்த உடன் அந்த உபகரணங்களும் இறந்து விடுகிறது.

// தகுதியான நல்ல மாணவர்கள் IT, analysis போண்ற துறைகளுக்கு சென்று விடுகிறார்கள். அதற்க்கு அடுத்த நிலை மானவர்கள் research க்கு வருகிறார்கள். research scholar க்கு சமுதாயத்திலும் மதிப்பில்லை. it take four to five years for a reserach scholar to achieve some reasonable success. at that time he demoralised by the society. In school level also the lateral thinking and studying fundamental concepts not poroperly motivated in our country. //

This is 200% true.
Indian society respect people who got their job in campus interview with MNC. Even if you publish article in Science or Nature, they won't respect you.Pe
ople are evaluated based on earnings.
If you want to finish P.HD in india, it will take 5 more years after P.G. In most of the universities, you can not choose your guide.University will assign them. Most of the old aged professor never updated their knowledge and they used give research topic of 30 years old.If some interested person joined P.HD with enthusiasm, he will be demotivated by guide and lots of politics will be there and he will get very bad research topic.
Finally he will loose the interest in research. If he finishes research in india, he won't get job quickly. That is the fate of research in india

Anonymous said...

நல்லதொரு பதிவு சதுக்க பூதம் (மதுரைததனே நீங்க?:) பேரை வச்சு கேட்டேன் :))எத்தனால் ஆராய்ச்சி பற்றி இப்பொழுது அரசாங்கம் கொஞ்சம் விழித்துக் கொண்டுள்ளது..மெது மெதுவாக போக்குவரத்துக் கழகங்கள்(பெங்களூர்,மும்பை)10 முதல் 15 சதவிகித எத்தனால் கலந்த டீசலை உபயோகித்து வெஹிகிள் ரன்னிங் காஸ்ட்டை குறைத்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.இப்போது எத்தனால் சதவிகிதத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்..இது காலத்தின் கட்டாயமாகிவிட்ட படியால் அரசாங்கமும் விழித்துக் கொண்டு இந்த திசையில் தன் கவனத்தை செலுத்தியே தீரவேண்டும்..அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே துவங்கி விட்டன.:) இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப் போகிறார்கள்.துறை சார்ந்த கம்பனிகளும் அரசை நிர்பந்தித்து வருகின்றன.

சதுக்க பூதம் said...

தகவலுக்கு நன்றி அணானி.Railways கூட இது போன்ற முயற்சி எடுத்ததாக கேள்வி.
நான் படித்தது எல்லாம் Maduraiல் தான்

Anonymous said...

//இந்தியாவில் பல துறைகளில் fundamantal research செய்வதற்க்கு போதிய உபகரணங்கள் இல்லை. அமெரிக்கா மற்றும் முக்கியமாக ஜெர்மன் போன்ற பிற அய்ரோப்பிய நாடுகளில் இருந்து முக்கிய கருவிகள் மற்றும் technical literature பெற வேண்டியுள்ளது.//
இது உண்மையான நிலை. மேலும் பல்கலை கழகங்கலில் பல கோடி ரூபாய் பெருமானமுல்ல ஒரு project கிடைத்தவுடன் உபகரணங்கள் வாங்குகிறார்கள். அந்த project முடிந்தவுடன் அந்த உபகரணங்கள் பழுதானால் அதை சரி செய்ய பணம் இருப்பதில்லை. அதற்கு உபயோகபடுத்த படும் chemicals விலையை கூட அவர்களால் செலவிட முடியவில்லை. அந்த உடன் அந்த உபகரணங்களும் இறந்து விடுகிறது//

This abysmal situation is mainly due to the following reasons.

Lack of motivation both moral(parents want their kids to be either software prof or urge them to go medecine no one encurage to do basic science. Since our employers think only these people are capable but in west there is not descrimination between eng or science while one go to job market) and financial to do basic science & tech resulting in brain drain from premier institutions.

Weak currency - unable to upgrade high tech capital intensive research eqiupments(eg 500MZ NMR spectrometer costs few crores and service cost hundreds of thousands)

However there are few cases of exceptions like DRDO,DAE,ISRO institutions. Due to strategic nature/importance of the work these institutions invoved, dececnt level of govt support is provided besides some dedicated researchers things are moving in much better way like lanching if sattelites,nuclear power/detterence
etc.

K.R.அதியமான் said...

விலைவாசி ஏன் உயர்கிறது ?

நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும்.

சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.

மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.

வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.

1930களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன. பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990கல் வரை பணவீக்கமும். விலைவாசியும், வட்டிவிகிதமும் தொடர்ந்து ஏறின.

ஊதியம் போதாதால், தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். ஏழைகள், தங்கள் குழந்தைகளை தொழிலாளர்களாக அனுப்புகின்றனர். அதிக வட்டி விகிததில், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள் உய்ரவு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, விலைவாசி மேலும் உயர்கிறது. சம்பளம் போதாமல் அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் வாங்க முற்படுகின்றனர்.

ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.

அரசின் வெட்டி செலவுகளுக்காக, பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.

லார்டு கீய்யினஸ் சொன்னது : "..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...." ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?

http://nellikkani.blogspot.com/

K.R.அதியமான் said...

//எத்தனாலை முழுமையாக பெட்ரோலுக்கு மாற்றாக கொண்டுவருவது கடினம்///

no. the fact is that ministers and IAS officers are minting a huge amount as bribe in licensing and transporting ethonal from sugar factories. it is a highly and stringently controlled product and is a gold mine to the ruling parties and corrupt officers. if it is (partially atleast) decontrolled, then petroleum marketing companies can source ethanol from sugal mills directly and the blending and marketing can began. but hundreds of crores of bibe money is at stake and hence no one is ready for loosing it, eventhough the central govt has in principle decided to blend ethanaol. as it is a state subject, the centre is powerless.

all this info, i got it from a JMD of a private sugar factory, who is our family friend.

சதுக்க பூதம் said...

Thanks for the productive comments venkat. You are corrrect. Lack of motivation in moral as well as financial side forces students to move away from research. Especially the amount of social pressure that the some of the Basic science researach students getting are huge. They can not settle(In indian angle, settling is getting good job) before the age of 30 yrs.They will get frustrated quickly.
DRDO/DAE/ISRO are doing really good job.only very few people gets the opportunity to work for them

சதுக்க பூதம் said...

Thanks for your comment athiyaman.

//ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.//

Don't forget the fate of south american countries who opted for full fledged open economy durin 1990's. Always there should be a balance between right and left

Govt should reduce spending.But it should concentrate on welfare of poor people

சதுக்க பூதம் said...

//no. the fact is that ministers and IAS officers are minting a huge amount as bribe in licensing and transporting ethonal from sugar factories. it is a highly and stringently controlled product and is a gold mine to the ruling parties and corrupt officers. if it is (partially atleast) decontrolled, then petroleum marketing companies can source ethanol from sugal mills directly and the blending and marketing can began. but hundreds of crores of bibe money is at stake and hence no one is ready for loosing it, eventhough the central govt has in principle decided to blend ethanaol. as it is a state subject, the centre is powerless.
//


Thanks for the info. I don't know about ground realities. These facts are really shocking. We are loosing a great opportunity because of this corruption. Media should bring this fact to public

K.R.அதியமான் said...

///Don't forget the fate of south american countries who opted for full fledged open economy durin 1990's. Always there should be a balance between right and left

Govt should reduce spending.But it should concentrate on welfare of poor people//////


But the problem in sudden liberalisation of thoses economies was due to the inherent structural welaness and corrupt regimes.
the "import-substitution" economic models follwed in the heydays of socialism ruined them.

After intial hiccups, most nations of S.America are on the firm road to market economics. Chile is an excellent example. Pls see :

http://en.wikipedia.org/wiki/Miracle_of_Chile

http://en.wikipedia.org/wiki/Economic_history_of_Chile#The_Military_Government.27s_Free-Market_Reforms.2C_1975-81

And Peru is also faring better now than ever before.

Cuba is nearly bankrupt, mainly due to crash is sugar prices and excess world wide production and due to US embargo. also Cuba suffers from typical problems faced by communist central planning, human rights suppression, etc.

Pls read about N.Korea and present Zimbawae where there is near total collapse of the economy due to over centralised dictatorsip, etc..

Thiagarajan.S PMP said...

Very good article. keep going.

Anonymous said...

ha, I am going to experiment my thought, your post get me some good ideas, it's truly amazing, thanks.

- Murk