Friday, September 21, 2007

கேரள பெருஞ்சுவர் - கேரள CPM அதிரடி

கடந்த சில வருடங்களாக தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகள் பலவற்றை கேரள அரசு எதிர்த்து போராடி வருவது அனைவரும் அறிந்த்தே. முல்லை பெரியாறு அணையின் உயரத்தை அதிகமாக்கும் பிரச்சனை மற்றும் சேலம் ரயில்வே கோட்ட பிரச்சனை போன்றவை இதில் அடங்கும்.
இதன் அடுத்த பரிமாணமாக கேரளா மாபெரும் புதிய திட்டத்தை பரிசீலிப்பதாக தெரிகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வரும் காற்று கொண்டு காற்றிலிருந்து மின்சாரம் எடுக்கும் காற்றாலைகள் நிறைய உள்ளன. எனவே இவற்றுக்கு வரும் காற்றை தடுக்க சீன பெருஞ்சுவர் போல பல மடங்கு பெரிதாக, ஆனால் மிக உயரமாக கேரள பெருஞ்சுவரை மேற்கு தொடர்ச்சி மலை கணவாய் பகுதியில் கட்ட உள்ளது. இவ்வாறு பல மடங்கு உயரமான சுவர் எழுப்புவதன் மூலம் கேரளாவிலிருந்து வரும் காற்றை தடுக்க முடியும் என கேரள அரசு கணக்கிடுகிறது.
இது குறித்து கேரள பொதுபணிதுறை அமைச்சர் கூறும் போது இந்த திட்டத்தை தடுக்க தமிழக அரசு நிதிமன்றம் சென்றால், தாங்கள் நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மற்றும் சீத்தாராம் எச்சூரி ஆகியோரை கொண்டு கட்ட பஞ்சாயத்து செய்து தடுத்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதையும் மீறி நீதிமன்றம் சென்றால் கூட நிதி மன்ற முடிவுகளை காவிரி பிரச்சனையில் கர்நாடகம் உதாசீன படுத்தியது போல் தாமும் உதாசீன படுத்தி விடுவோம் என்றார். இந்த அளவு பிரச்சனை நடப்பது தெரிந்தாலும் தமிழக பொதுபணிதுறை அமைச்சர் துரை முருகன் கேரளாவில் அவ்வாறு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே நாளை மறுநாள் நடக்க இருக்கும் கட்டை பஞ்சாயத்தில் கேரளா இந்த திட்டத்தை கைவிடவும் அதற்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த கன்யாகுமரி மற்றும் நாகர்கோவில் முதலிய மாவட்டங்களை கேரளாவிற்கு கொடுத்து விடவும் ஒப்பந்தம் ஏற்படுத்த நிர்பந்திக்க படும் என்று தெரிகிறது. இதை திமுக,அதிமுக, காங்கிரஸ் எம.பிக்கள் சம்மதித்து கையெழுத்திட்டுவிட்ட பிறகு கண் துடைப்பிற்கு மறியல் நடத்துவார்கள் என்று தெரிகிறது.
கேரளாவின் இந்த திட்டத்தை திராவிட கட்சிகள் பெயரளவுக்கு எதிர்த்தாலும் CPM கட்சி மட்டும் தனது முழு ஆதரவை தெரிவித்து உள்ளது. தமிழக CPM கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இந்த திட்டத்துக்காக சம்பளமே வாங்காமல் உழைக்க போவதாக கூறியுள்ளது. இதனை இந்திய ஒருமைபாட்டிற்க்கு ஒரு உதாரணமாக பிற்கால சரித்திரம் சொல்லும் என CPM மாநில தலைவர் வரதராஜன் கூறினார். மேலும் அடுத்த தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பெருஞ்சுவரை உடைக்க தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டி தொட்டிகளிலும் தெருமுனைகளிலும் போராட்டமும், பொது கூட்டமும் நடத்த படும் என்று கூறினார். இதன் மூலம் தாங்கள் தமிழ் மக்களுக்காக பாடுபடுவது உறுதி படுத்த படும் என்றார். சீனாவின் நன்மைக்காக மத்திய பொலிட்பீரோ 123 ஒப்பந்தத்தை எதிர்ப்பது போல், கேரள கம்யுனிஸ்ட்களின் நன்மைக்காக இந்த திட்டத்தை ஆதரிப்பதாக அவர் கூறினார்.
பின் குறிப்பு: இது ஒரு கற்பனை செய்தி(இன்று வரை).

9 comments:

குமரன் (Kumaran) said...

சதுக்க பூதம்,

நகைச்சுவை நையாண்டின்னு நீங்க போட்டிருந்ததைக் கவனிக்கலை. ஆனாலும் நன்கு சிரித்தேன். :-)

கோவி.கண்ணன் said...

"சதுக்க பூதம்" இது மணிமேகலையில் சாத்தனார் ஆக்கிய ஒரு பாத்திரம், முறைகேடாக நடப்பவர்களை பிடித்து உண்ணும்.
:))
நீங்க கேரளாவை பிடித்து உண்கிறீர்கள் !

சதுக்க பூதம் said...

தங்கள் வருகைக்கு நன்றி குமரன்

சதுக்க பூதம் said...

வாருங்கள் கண்ணன். எனக்கு தெரிந்து இது சிலப்பதிகாரத்தில் வரும் பாத்திரம். இது மணிமேகலையிலும் வருமா கண்ணன் அவர்களே?

கோவி.கண்ணன் said...

//சதுக்க பூதம் said...
வாருங்கள் கண்ணன். எனக்கு தெரிந்து இது சிலப்பதிகாரத்தில் வரும் பாத்திரம். இது மணிமேகலையிலும் வருமா கண்ணன் அவர்களே?

10:18
//

இரண்டும் இரட்டை காப்பியங்கள் தானே. வரலாம். நான் மணிமேகலையில் சதுக்க பூதம் இருப்பதாக படித்திருக்கிறேன்.
:)

சதுக்க பூதம் கெட்டவர்களைத்தான் அழிக்குமாம்.

சதுக்க பூதம் said...

தகவலுக்கு நன்றி கண்ணன். அதே தான் நானும் நினைத்திருந்தேன்

சதுக்க பூதம் said...

//சேலம் கோட்டம் பிரச்சனை தொடர்பாக சமீபத்தில் கேரள எம்.பி.க்கள் சீதாராம் யெச்சூரி தலைமையில் பிரதமரை சந்தித்துப் பேசினார்கள். இதே பிரச்சனை தொடர்பாக தமிழக எம்.பி.க்களும் பிரதமரை சந்தித்தனர். ஆனால் இந்தக் குழுவில் தமிழக மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.//

நன்றி www.keetru.com

TBCD said...

குளிர்பான் பெட்டியில வச்ச யாரும் கெட்டு போக மாட்டாங்க..அப்ப பூதத்திற்கு பிடிச்சி தின்ன ஆள் கிடைக்காது...

சதுக்க பூதம் said...

Good comment tbcd. Thank u