சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் கலைமாமனி திரு.அப்துல் காதர் அவர்கள் தலைமையில் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி டப்ளின் நகரில் பிப்ரவரி மாதம் 16ம் தேதி மிக சிறப்பாக நடைபெற்றது.
வற்றாத நதிகள் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. பெண்ணின் கண்ணீர், தியாகியின் ரத்தம்,உழைப்பாளியின் வியர்வை ,விண்ணின் மழைதுளி மற்றும் எழுத்தாளனின் மைத்துளி என்ற தலைப்புகளில் மிக அருமையான கவிதைகளை வாசித்தனர்.
அதனை தொடர்ந்து மகிழ்ச்சியும் நிறைவும் அதிகம் கிடைப்பது திருமணத்துக்கு முன்பே! திருமணத்துக்கு பின்பே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.தலைப்பே மிக சுவையாக இருந்தாலும் பட்டிமன்றத்தில் பேசிய பேச்சாளர்கள் அதிரடியாகவும்,மிகவும் சுவையாகவும், தலைப்புக்கு பொருந்தும் படியும், அனைவரும் ரசிக்கும் படியும் பேசி மக்களை மகிழ்வித்தனர்.
கவியரங்க மற்றும் பட்டிமன்ற நடுவர் திரு. அப்துல் காதரின் உரையும், நிகழ்ச்சி நடு நடுவே நாவண்மையுடனும், நகைச்சுவையுடனும் அவர் செய்த குறுக்கீடுகளும் நிகழ்ச்சிக்கு முத்தாய்பாக இருந்தது. குடா பகுதியில் பட்டிமன்றம் மற்றும் கவி அரங்கத்தில் பேசியவர்களின் நாவன்மையை பாராட்டிய திரு.அப்துல் காதர், பட்டிமன்றத்தில் பேசியவர்கள் அருமையாகவும், கண்ணியத்துடனும் அனைவரும் ரசிக்கும் படியும், மிகுந்த தரத்துடன் பேசியதாகவும் அவரக்ளின் புகழை ராஜ் டிவி அகட விகடம் மூலம் அனைவருக்கும் கொண்டு செல்லபோவதாகவும் கூறினார்.
80க்களிலும் 90க்களிலும் தமிழ் இளைஞர்களிடையே எழுச்சியை உருவாக்கிய அமரர் M.S. உதயமூர்த்தி அவரகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தி கூட்டம் தொடங்கபட்டது.
அறுபது வயதிற்கு மேலும் திரு அப்துல் காதர் போன்ற தமிழ் பெரியோர் அலுப்பில்லாமல் வெளிநாடுகளில் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கனிவுடன் வருவது வெளி நாடுகளில் வாழும் தமிழர்களின் தமிழார்வத்தை தொடர ஏதுவாக இருக்கிறது என்றால் மிகையில்லை.
அதுமட்டுமன்றி திரு.அப்துல் காதர் அவர்கள் தனக்கு வரும் வருவாய் அனைத்தையும் தமிழகத்தில் அவர் தொடங்கியுள்ள ஊனமுற்றோர் நலவாழ்வு மையத்துக்கு கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.
திரு.அப்துல் காதர் அவர்களின் திறமைகளை உலகுக்கு வெளி கொணர்ந்தது கவியரசு கண்ணதாசன் என்பது குறிப்பிட தக்கது. அவருடைய இருபத்தி ஓராவது வயதில் நரைகள் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையை கண்ட கண்ணதாசன் , அந்த கவிதையை தன் புத்தகத்தில் வெளியிட்டதோடு நின்று விடாமல் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு கடிதம் எழுதி மிக திறமை வாய்ந்த இந்த இளைஞரை கவனித்து வளர்க்குமாறு கூறி இருக்கிறார். பிறகு அப்துல் ரகுமான் அவரை சந்தித்து வாணியம்படி இஸ்லாமிய கல்லூரியில் ஆசிரியர் பதவி பெற உதவி இருக்கிறார்.
இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளை சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் தொடர்ந்து நடத்த முயற்சி எடுக்கும் வளைகுடா பகுதி தமிழ் மன்றம் மிகவும் பாராட்டுக்குறியது.
தமிழை கொண்டு தம் குடும்பத்தை வளர்க்கும் மனிதரக்ளுக்கு நடுவில் வருங்காலத்தில் தமிழை வளர்க்க, திறமையுள்ள இளயதலைமுறையினரை கண்டெடுத்து அவர்களை வளர்க்க உதவிய கண்ணதாசன் போன்ற தமிழ் அறிஞர்களை இந்த தலைமுறையில் காண்பது அறியது.

3 comments:
nalla pakirvu...
nantri!
bootham 'devai-LLaml' 'Vabbukk-LLkkadu' Tamilkkathin Thanai Thalaivan *89* old****Tamillkkarnuk 'olaikkum *****oyyuvari sooriyan********BOOTHAM ----NEEE AVVEEE---ya MELAPOOVAAAAAAA
நன்றி Seeni
Post a Comment