Monday, September 03, 2012

குஜராத் புரட்சியும் ஹசாரேக்கு மோடி கொடுத்த ஆப்பும்


குஜராத் முதல்வர் மோடி பற்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக புதிய புதிய புரட்சி செய்திகள்  ஊடகங்களில் வந்து கொண்டுள்ளன. அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் வளர்ச்சியை கணக்கிடும்  மனித வள மேம்பாட்டு குறியிடில் (Human Developmentபெரிய  முன்னேற்றமின்மை  மற்றும் சிறிய மற்றும் குறு தொழில்களின் வளர்ச்சியில் பெரிதாக சாதிக்காதது  போன்ற தேவையற்ற  செய்திகளுக்கு போதிய முக்கியத்துவம் தராமல் மோடியின் பிற புரட்சிகளை பற்றி ஊடகங்கள் "பாராட்டும் " படியே செய்திகளை வெளியிடுகிறது.

தற்போது வளர்ந்த நாடுகளில் கூட நடக்காத மாபெரும் புரட்சி குஜராத் மக்களிடையே நடந்து கொண்டிருக்கிறது. அந்த புரட்சி பற்றிய செய்தியை நம் நாட்டு ஊடகங்களில் மட்டும் செய்தியாகி அழிந்து விடாமல் அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிக்கைக்கு  கூறி ஒட்டு மொத்த உலக மக்களையே திகைப்பில் ஆழ்த்தி விட்டார் மோடி. அந்த புரட்சியை நடத்துபவர்கள் மூன்று வயதுக்கும் குறைவான குஜராத் மாநில சிறுமிகள் என்றால் ஆச்சரியமாக உள்ளது அள்ளவா?.மோடி பதவி ஏற்றதிலிருந்தே குஜராத்தில்
 பிறக்கும் குழந்தைகள் மிகவும் அறிவு கூர்மையுடன் பிறப்பது "அனைவருக்கும் தெரிந்ததே". ஆனால் அனைவருக்கும் தெரியாத ," மூன்று வயதிற்கும் குறைவான கைகுழந்தைகளுக்கு தங்களுடைய அழகு பற்றி அளவிற்கதிகமான அக்கறை உள்ளது" என்ற பகீர் உண்மையை அமெரிக்கர்களுக்கும் உலகுக்கும் தெரிய படுத்தியுள்ளார் மோடி. எப்படி என்று கேட்கிறீர்களா?குஜராத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு அதிகம் இருப்பது பற்றி மோடியிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில்: குஜராத்தில் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் உணவை அள்ளி கொடுக்கும் போது குழந்தைகள் தாங்கள் குண்டாகி விடுவோம். அழகு குறைந்து விடும் என்று சொல்லி உணவை உண்ண மறுத்துவிடுகிறார்கள் என்பது!

தேசிய குடும்ப சுகாதார கருத்தாய்வு முடிவு படி பெரும்பான்மையாக மோடி பதவியில் இருந்த காலத்தில் குழந்தைகளின் ஊட்டசத்து குறைபாடு 45% சதத்தில் இருந்து 47% சதமாக உயர்ந்தது.இது இந்திய சராசரியை விட அதிகம் என்பது குறிப்பிட தக்கது.இது மூன்று வயதுக்கும் குறைவான குழந்தைகள் பற்றி எடுக்க பட்ட புள்ளிவிபரம்! பச்சிளம் குழந்தைகள் கூட அழகுணர்ச்சி அதிகம் கொண்டு தன் தாய் பால் கொடுக்க, தான் குண்டாகி விடுவோம் என்று சொல்லி குடிக்க மறுத்து விடுவதால் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து குறைந்து
காணபடுவதாக கூறியுள்ளார்.இந்த புரட்சி குஜராத்தில் மட்டும் தான் நடக்கும்!.

அந்த பேட்டியில் ஹசாரேவுக்கும் ஒரு ஆப்பு வைத்துள்ளார். குஜராத்தில் மக்கள் சத்து குறைந்து  சோகையாக இருப்பதற்கு காரணம் அங்கு பெரும்பான்மையான மக்கள் சைவ உணவு பழக்கம் கொண்டு இருப்பது தான் என்றார். ஏற்கனவே ஹசாரே மகாராஷ்டிர
மாநிலம் ராலேகான் பகுதியில் அசைவ உணவு சாப்பிட கூடாது என்று  சட்ட விரோதமாக கட்டை பஞ்சாயத்து செய்து வருவது உலகறிந்தது. ( Dalit families were compelled to adopt a vegetarian diet. Those who violated these rules — or orders — were tied to a post and flogged.)அவருக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக சைவ உணவு பழக்கம் தான் குஜராத்தின் சத்து குறைபாடிற்கு காரணம் என்று கூறியுள்ளார். எந்த முடிவையும் இரும்பு கரம் கொண்டு நடைமுறை படுத்தும் மோடி, குஜராத் மக்கள் அனைவரையும் கட்டாயம் அசைவ உணவு உண்ண ஆனையிட்டு விடுவார் என்ற பயம்  RSS இயக்கத்துக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது!

--

6 comments:

வவ்வால் said...

பூதம் செம நையாண்டி.

நமிதா,ஹன்சிகா எல்லாம் குஜராத் தான் ஆனால் கம்மியா சாப்புட்டா போல தெரியலை :-))

தமன்னாவும் குஜராத்தி தான் கொஞ்சம் ஊட்டம் குறைவா இருக்கு ஒரு வேளை மோடி டயட் ஃபார்முலா போல :-))

சதுக்க பூதம் said...

வாங்க வவ்வால்.நன்றி.
//நமிதா,ஹன்சிகா எல்லாம் குஜராத் தான் ஆனால் கம்மியா சாப்புட்டா போல தெரியலை :-))

தமன்னாவும் குஜராத்தி தான் கொஞ்சம் ஊட்டம் குறைவா இருக்கு ஒரு வேளை மோடி டயட் ஃபார்முலா போல :-))//
இந்த ஆங்கில்ல எனக்கு யோசிச்சு பார்க்க தோனலையே!

விவேகானந்தன் said...

Is this is right or wrong?

சதுக்க பூதம் said...

வாங்க விவேகானந்தன். எதை சரியா அல்லது தவறா என்று கேட்கிறீர்கள்?

விவேகானந்தன் said...

குஜராத் முதல்வர் மோடி சொல்லியிருக்கும் ஊட்டசத்து பற்றிய கருத்து? கொஞ்சம் முட்டாள் தனம் ஆனா கேள்வி தான். ஆனால் தாய்ப்பால் கொடுப்பதை தாய்மார்கள் சரிவர செய்வதில்லையோ?
அந்த அழகு உணர்ச்சி..!?!?!?

சதுக்க பூதம் said...

//குஜராத் முதல்வர் மோடி சொல்லியிருக்கும் ஊட்டசத்து பற்றிய கருத்து? கொஞ்சம் முட்டாள் தனம் ஆனா கேள்வி தான். ஆனால் தாய்ப்பால் கொடுப்பதை தாய்மார்கள் சரிவர செய்வதில்லையோ?
அந்த அழகு உணர்ச்சி..!?!?!?//
இல்லை விவேகானந்தன். பெரும்பான்மையான் ஏழை மக்களுக்கு வறுமையின் காரணமாக ஊட்ட சத்து மிக்க உணவு கிடைப்பதில்லை. அது தான் பிரச்ச்னை. அதை மறைக்க மோடி உளறிய உளரல் தான் இது.