Sunday, November 21, 2010

சோனியா, ராகுலுக்கு எதிராக E.V.K.S.இளங்கோவன் போர்கொடி!

தி.மு.க அல்லது அதிமுக என எந்த கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் , தி.மு.க/அதிமுக போன்ற கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்தி காங்கிரஸ் கட்சியினுள்ளே ஓர் கம்யூனிஸ்ட்டாக செயல் பட்டு வருகிறார் E.V.K.S இளங்கோவன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!

ஆனால் தற்போது அவர் காங்கிரஸின் அகில இந்திய தலைமைக்கு எதிராக முக்கியமாக ராகுல் மற்றும் சோனியாவிற்கு எதிராக போர்கொடி தூக்கி நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ஆச்சரியத்தை தூண்டியுள்ளார்.இதோ அவர் பேசியுள்ள பேச்சின் ஒரு பகுதியை நீங்களே இங்கு பாருங்களேன்!( பேச்சை புரியாதவர்களுக்கு நான் சில விளக்கத்தை பிராக்கெட்டில் கொடுத்து உள்ளேன்).

தலைப்பு:

(சோனியா மற்றும் ராகுல் போன்றோரின்)குடும்ப ஆட்சியிலிருந்து தமிழக மக்களை காக்க வேண்டும்-ஈவிகேஎஸ் இளங்கோவன்
காங்கிரஸ் கட்சியில் பல பேருக்கு திறமை இருந்தாலும் வாய்ப்புகள் இல்லாமல் போய் விடுகிறது(காங்கிரஸ் கட்சியில் குடும்ப ஆட்சியின் விளைவாக ஒரு குடும்பத்தினரே ஆதிக்கம் செலுத்தி வருவதால் இது போல் திறமை வாய்ந்த பலருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை).

தமிழகத்தில் மீண்டும் பரம்பரை ஆட்சி வந்து விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.(தமிழகத்திலேயே பரம்பரை ஆட்சி வர இப்படி கோபபடுபவர் இந்தியாவில் வருவதை கண்டு தீபிழம்பாக மாறி கொண்டு உள்ளார்) தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படுகின்றனர். நீயும் இதையே செய். ஜால்ரா போடு என்கின்றனர். நான் யாருக்கும் ஜால்ரா போடுகிறவன் இல்லை.

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை நீடிக்க விடக்கூடாது. இதன் பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியாக வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள் என்றார்.("தமிழகத்தில் " என்ற வார்த்தையை எடுத்து விட்டு இந்தியாவில் என்று போட்டு படித்து பாருங்கள்)

தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி சோனியாவை எதிர்த்து போர் கொடி தூக்கியுள்ள இந்த சூழ்நிலையில் தமிழகத்திலிருந்து இளங்கோவன் சோனியாவை எதிர்த்து பேசி உள்ளதால் இருவருக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்பு இருக்களாம் எனவும் , சோனியாவை எதிர்த்த புதிய கோஷ்டி அகில இந்திய அளவில் உருவாகி வருவதையும் காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த ஆண்டுக்குள் ராகுலை பிரதமாராக்க நினைக்கும் சோனியாவின் முயற்சிக்கு இது ஒரு பெரிய பின்னடைவாகவே கருத படுகிறது.

ஆனால் உண்மையில் அவருடைய பேச்சு அவரை எதிர்த்து அவரே பேசி கொண்டதாகவும் காங்கிரசின் எதிர் கோஷ்டியினர் கூறுகின்றனர். என்ன கேட்பதற்கே ஆச்சர்யமாக உள்ளதா?அதுவும் உண்மைதான். ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியலில் அடி மட்டத்திலிருந்து உழைத்து உயர்ந்தவர் இல்லை. அவரும் ஒரு வாரிசு அரசியல்வாதி தான். அவர் பெரியாரின் குடும்பத்தை சேர்ந்த E.V.K.சம்பத்தின் புதல்வராவார். E.V.K.சம்பத் திக, திமுக,தமிழ் தேசிய கட்சி என்று பல கட்சிகளில் இருந்து விட்டு காங்கிரசில் ஐக்கியமானவர்.

மனசாட்சியின் படி தன்னை எதிர்த்து தானே அறிக்கை விடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்டாயம் ஒரு தனி தன்மை வாய்ந்த அரசியல்வாதிதான்!


--

7 comments:

Anonymous said...

Super Politics Post!
Tamilians should avoid/ wipeout Congress and Congree man from Tamil Nadu particularly for Congress reveenge Tamil Nadu in Mullai periyar, cauvery, Paalaar, Katcha theevu, Fishermans Attck and SriLankan Tamils rehabilitaion issues.

Lets start the countdown from us!

சதுக்க பூதம் said...

//Tamilians should avoid/ wipeout Congress and Congree man from Tamil Nadu //

அப்படி நினைப்பதை விட காங்கிரசுக்கு காமராஜர், சி.சுப்ரமணியம் போன்ற நல்ல தலைவர்கள் வரட்டும் என்று எதிர்பார்ப்போம்.

பொன் மாலை பொழுது said...

கொரங்கு ஆப்பு மேலேயே குந்திகிச்சு................
--

Unknown said...

அந்தாளு ஒரு டம்மி பீசு...

சதுக்க பூதம் said...

வாங்க கக்கு - மாணிக்கம் ,கே.ஆர்.பி.செந்தில் .
இலங்கை தமிழர் விஷயத்தில் வட இந்திய அரசியல்வாதிகளை விட மோசமாக நடந்தவர் இளங்கோவன். அது ம்ட்டுமன்றி அமைச்சராக இருந்து தமிழகத்துக்காக பெரிதாக ஒன்றும் செய்யாதவர்.

Unknown said...

இந்த ஆளு ஒரு காமடி பீசு. விட்டுத் தள்ளுங்க!

Anonymous said...

அந்த ஆள் அ .தி மு. க விற்குப் போக அட்வாண்ஸ் வாங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டன அதற்கு தக்கவாறு ஆட்டம் போடுகிறார் அவர்கள் அம்மவிற்கு சுலொச்சனா சம்பத்திற்கும் வயதாகி விட்டது அல்லவா?