Tuesday, September 22, 2009

உலக வங்கி பிடியில் மாட்ட போகும் இந்திய வங்கிகள்?



தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா தப்பித்ததற்கு முக்கிய காரணம் இந்திய வங்கி துறை வெளி நாடுகளின் தலையீடு இல்லாமல் தனி தன்மையாக இருப்பது என்பது பெரும்பான்மையானவர்களால் ஏற்று கொள்ள பட்ட உண்மை.அதற்கு ஆப்பு வைத்து விட்டது தற்போதைய மன்மோகன் அரசாங்கம். உலக வங்கியிடமிருந்து வங்கிகளுக்கு $2 பில்லியன் கடன் வாங்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

இதன் விளைவாக இனி பன்னாட்டு வங்கிகள் மற்றும் வெளி நாடுகளின் தலையீடு வங்கி துறையில் அதிகம் இருக்க போகிறது. இந்தியாவின் வங்கி துறையும் மேல் நாட்டு வங்கி துறை போன்று நிச்சயமற்ற நிலையை நோக்கி போக போகிறது. பிற் காலத்தில் அடுத்த பொருளாதார நெருக்கடி வந்தால் அதன் விளைவு இந்தியாவில் அதிகம் உணர பட வாய்ப்புள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக வங்கிகளின் மூலதனத்தில் பிரச்சனை இருப்பது உண்மை தான். ஆனால் அதை தீர்க்க பிற வழிகள் உள்ளது. அதை விடுத்து நாட்டின் ஜீவாதாரமாக விளங்கும் வங்கி துறையை உலக வங்கியிடம் பணயம் வைப்பது மிகவும் அபாயகரமான செயல்.

இதற்காக உலக வங்கியிடம் கடன் பெற போவது $2 பில்லியன் மட்டுமே. இதை எளிதாக நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பிலிருந்து எடுத்து கொடுக்கலாம்.இந்தியாவிடம் இருக்கும் $250 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பில் இருந்து நாட்டின் ஜீவதாரமாக இருக்கும் வங்கிகளுக்கு $2 பில்லியன் கொடுப்பதால் பெரிய பாதிப்பு எதுவும் வந்து விட போவது இல்லை. அது மட்டுமின்றி ஒரு சில கணிப்புகளின் படி இந்திய அன்னிய செலாவணி தர்போது வட்டியாக சம்பாதித்து கொடுக்கும் பணம் 2 - 3%. ஆனால் உலக வங்கியிடம் வாங்கும் கடனுக்கு வட்டி 10 - 12%(இது உறுதி படுத்த படாத தகவல்). ஆயுதம் வாங்கவும் அதற்கு லஞ்சம் கொடுக்கவும் ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியை இதற்கு உபயோகித்தால் இப்பிரச்சனையை தீர்த்து விடலாம்.

--

8 comments:

Anonymous said...

//ஆயுதம் வாங்கவும் அதற்கு லஞ்சம் கொடுக்கவும் ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியை இதற்கு உபயோகித்தால் இப்பிரச்சனையை தீர்த்து விடலாம்.
//

nethi adi thalaiva
nalla pathivu

ram said...

//இந்தியாவிடம் இருக்கும் $250 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பில் இருந்து நாட்டின் ஜீவதாரமாக இருக்கும் வங்கிகளுக்கு $2 பில்லியன் கொடுப்பதால் பெரிய பாதிப்பு எதுவும் வந்து விட போவது இல்லை.//

then why is our gov. getting loan from World Bank ???
is there any poilitics behind this ???

சதுக்க பூதம் said...

வாங்க அனானி மற்றும் ராம்.
//then why is our gov. getting loan from World Bank ???
is there any poilitics behind this ???
//
எனக்கும் அதுதான் புரியவில்லை. உலக மயமாதலை ஆதரிக்கும் சித்தாந்தம் சார்ந்த முடிவாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.அல்லது வெளியிலிருந்து கொடுக்கபடும் அழுத்தம் காரணமாக கூட இருக்கலாம்

ram said...

//எனக்கும் அதுதான் புரியவில்லை. உலக மயமாதலை ஆதரிக்கும் சித்தாந்தம் சார்ந்த முடிவாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.அல்லது வெளியிலிருந்து கொடுக்கபடும் அழுத்தம் காரணமாக கூட இருக்கலாம்
//

what is the profit for them by doing this ?

Thomas Ruban said...

//பொருளாதார நெருக்கடியின் விளைவாக வங்கிகளின் மூலதனத்தில் பிரச்சனை இருப்பது உண்மை தான். ஆனால் அதை தீர்க்க பிற வழிகள் உள்ளது. அதை விடுத்து நாட்டின் ஜீவாதாரமாக விளங்கும் வங்கி துறையை உலக வங்கியிடம் பணயம் வைப்பது மிகவும் அபாயகரமான செயல்//

சாதரண பொது மக்களக்கு தெரிவது கூட ஏன் இந்திய அரசல்வதிகளுக்கு தெரிவது இல்லை. இந்தியாவை வெளி நாடுகளில் அடகு வைக்காமல் இருந்தால் சரி!!

பதிவுக்கு நன்றி சார்.

சதுக்க பூதம் said...

//what is the profit for them by doing this ?//

இது பற்றி விளக்க தனி பதிவு தொடர் தான் எழுத வேண்டும். பிறகு இது பற்றி எழுதுகிறேன்

சதுக்க பூதம் said...

//சாதரண பொது மக்களக்கு தெரிவது கூட ஏன் இந்திய அரசல்வதிகளுக்கு தெரிவது இல்லை. இந்தியாவை வெளி நாடுகளில் அடகு வைக்காமல் இருந்தால் சரி!! //

நன்றி தாமஸ் ரூபன். அது பற்றி யார் கவலை பட போகிறார்கள். ஆளும் கட்சி எதிர் கட்சி - இருவருக்குமே ஒரே கொள்கை தானே

Unknown said...

// தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா தப்பித்ததற்கு முக்கிய காரணம் இந்திய வங்கி துறை வெளி நாடுகளின் தலையீடு இல்லாமல் தனி தன்மையாக இருப்பது என்பது பெரும்பான்மையானவர்களால் ஏற்று கொள்ள பட்ட உண்மை.அதற்கு ஆப்பு வைத்து விட்டது தற்போதைய மன்மோகன் அரசாங்கம்.//
பெரும்பாலோர்களால் ஏற்று கொல்லப்பட்ட இந்த முக்கியமான உண்மை மிகப்பெரிய பதவியில் இருக்கும் ( பிரதமர் ) மன்மோகன் சிங்க்கு தெரியவில்லையா? பெரும் புதிராக இருக்கிறது. இத்தனைக்கும் நமது பிரமதர் பொருளாதாரம் படித்தவர் . இதை எல்லாம் படிக்கவும் , கேட்கவும் மட்டும் தான் நம்மால் முடியுமா? மனது வலிக்கிறது.
---பிரபு ----