Sunday, March 01, 2009

தங்கத்தின் விலை தொடர்ந்து உயருமா?


இனி வரும் காலங்களில் தங்கம் விலை எந்த அளவு உயரும்? இதுதான் இன்று உலக பொருளாதார வல்லுனர்கள் மற்றும் மக்கள் முக்கியமாக இந்திய மக்களிடம் அதிகம் விவாதிக்க படும் செய்தியாக உள்ளது?

ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து இந்திய பெண்மணிகளும் விரும்பி அணிவது தங்க ஆபரணங்கள். அப்படிபட்ட தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கான சாத்திய கூறுகளுக்கான காரணங்களை பற்றி பார்ப்போம்.

பொருளாதார வல்லுனர்களில் இரு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் தங்கம் என்பது பணத்தை போல் நினைத்த அளவு அதிகம் உற்பத்தி செய்ய முடியாது.அதை உற்பத்தி செய்யும் செலவும் பணத்தை உற்பத்தி செய்வதை விட மிக அதிகம். மேலும் தங்கத்தின் மதிப்பு பல காலமாக நிலை நிறுத்த பட்டுள்ளது(Stable Price). முக்கியமாக பணத்தை நாடுகள் செய்யும் உற்பத்தியை(Production) விட அதிக அளவு வெளியிடுவதால் பண வீக்கம் அதிகரித்து பணத்தின் மதிப்பு குறைந்து விடும் நேரங்களில், மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை பணவீக்கத்தில் இருந்து காக்க தங்கத்தில் முதலீடு செய்ய முனைவதால் தங்கத்தின் மதிப்பு இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று வாதிடுவர்.

தங்கத்தின் விலை உயராது என்று கூறுகிறவர்கள் தங்கம் என்பது ஆபரண மதிப்பு மட்டுமே உள்ள ஒரு பொருள். தங்கத்தின் மதிப்பு பணத்துக்கு பதிலாக தங்கத்தை மாற்றாக (gold convertibility) அரசுகள் கொடுத்த வரை இருந்தது. அமெரிக்கா 1971ல் இந்த முறையை கைவிட்டதிலிருந்து தங்கத்தின் செயற்கையான மதிப்பு குறைய தொடங்கி விட்டது. மேலும் பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவை அரசாங்கம் அச்சிடும் பணத்தை அடிப்படையாக கொண்டவை,என்வே பணத்தை அடிப்படையாக கொண்ட இவ்வகை சொத்துக்களில் முதலீடு செய்தால் அவற்றின் வளர்ச்சி தற்போது குறைவாக இருந்தாலும் நிச்சயம் பொருளாதார சீர்கேடு சரியான பிறகு , தங்கத்தில் செய்யும் முதலீடு தரும் லாபத்தை விட அதிகமாக இருக்கும் என்பர். இவ்வகை காரணங்களால் தங்கத்தை Anti dollar(பணம்) என்று கூறுவர்


தங்கத்தை பொதுமக்கள் முதலீடு செய்வதற்காகவும் ஆபரணம் செய்வதற்காகவும் வாங்குவார்கள். அரசோ செல்வ கையிருப்புக்காக (Reserve) வாங்குவர். உலகில் உள்ள தங்கத்தில் 19% நடுவண் வங்கிகளில்(Central Banks) சேமிப்பாக உள்ளது. பிற முதலீடுகளில்(அதாவது பாண்டுகள்,பங்கு சந்தை, நிலம் etc) அதிக அளவு லாபம் ஏற்படவிலலை என்றாலும், தங்கள் நாட்டின் நாணய மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடையும் என்று நினைத்தாலும் பொதுவாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய முற்படுவர். உலகிலேயே அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. இதற்கு காரணம் தங்கம் ஒவ்வொரு இந்தியராலும் முதலீடு செய்வதற்காகவோ அல்லது ஆபாரணம் செய்வதற்காகவோ வாங்குவதால் தான்.கடந்த சில வருடங்களாக சீன மக்களும் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்து விட்டனர்.அவர்களுடைய தங்கம் வாங்கும் திறன் அமெரிக்காவை தாண்டி விட்டது.


தங்கத்திற்கு எதிராக கூறப்படும் வாதம்.

1. தங்கத்திற்கு என்று தொழிற்சாலைகளில் பெரிய உபயோகம் கிடையாது. கச்சா எண்ணெய் போன்ற commodityகளுக்கு அனைத்து துறைகளிலும் உள்ள உபயோகம் போல் தங்கத்திற்கு இல்லை.டாலரை கொடுத்து தங்கத்தை திருப்பி பெற(convertibility to gold) வாய்ப்பு முன்பு இருந்ததால்(விவரத்திற்கு டாலர் அரசியல் படிக்கவும்) தங்கத்திற்கு மதிப்பு இருந்தது. ஆனால் இன்று அவ்வாறு இல்லாததால் தங்கத்திற்க்கு மதிப்பு எப்போதும் இருக்கும் என்று சொல்ல முடியாது.

2. உலகில் மிக பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது பணத்தின் மதிப்பு குறையும் என்பதால் தங்கத்தின் மதிப்பு கூடும் என்பர், ஆனால் பொருளாதார விழ்ச்சியின் போது அடிபடை பொருட்களின் தட்டுபாட்டாலும், மக்கள் வாங்கும் திறன் குறைவதாலும் அதன் மதிப்புதான் கூடுமே தவிர தங்கத்தின் விலை கூடபோவதில்லை.

3. பொருள்களுக்கு மதிப்பு உள்ளது.அனால் பணத்திற்கு? (டாலருக்கு) பணம் என்பது வெறும் பேப்பர் தான்.அதன் மதிப்போ மக்கள் அதன் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் உள்ளது. இதே போல் தான் தங்கதிற்கும். நாம் நம்பிக்கை வைத்துள்ளவரை தான் அதற்கு மதிப்பு. எனவே தங்கம் மற்றும் டாலர் இரண்டும் ஒரே நிலையில் தான் உள்ளது
‘Confidence is the most important thing, more important than gold or currency’

4. கடந்த கால வரலாற்றை பார்த்தால் பங்கு சந்தை மற்றும் Bondல் செய்த முதலீடு தங்கத்தை விட அதிக லாபத்தை தந்துள்ளது. உதாரணமாக 1801ம் ஆண்டு ஒரு டாலர் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு $8.8 மில்லியனாக பெருகியிருக்கும். அதையே Bondல் முதலீடு செய்திருந்தால் அது $14,000 அகியிருக்கும். அதையே தங்கத்தில் முதலீடு செய்தால் அது இன்று $150 ஆக மட்டுமே ஆகியிருக்கும்.

தங்கத்திற்கு ஆதரவாக கூறப்படும் வாதம்

1. தங்கத்தையும் பணத்தையும் ஒப்பீடு செய்பவர்கள் 1700ஆம் ஆண்டிலிருந்து கணக்கை எடுப்பர். ஆனால் 1971 வரை தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யபட்டதாக(Fixed Price) இருந்தது.அது முதலீடாக பார்க்க பட்டதை விட பணமாக தான் பார்க்க பட்டுள்ளது. அது போல் 1700ல் இருந்த எந்த கம்பெனியும் தற்போது இல்லை.எனவே தங்கத்தின் விலையை 1970க்கு பிறகுதான் பார்க்க வேண்டும் 1968- 80 க்குள் தங்கதின் விலை 230% உயர்ந்துள்ளது. ஆனால் பங்கு சந்தை அந்த அளவு உயரவில்லை. மேலும் பங்கு சந்தை வளர்ச்சியை, மூடிய நிறுவனங்கள் மற்றும் தோல்வி அடைந்த நிறுவனங்களை நீக்கி செயற்கையாக உயர்த்தி காண்பித்தும் தங்கதின் வளர்ச்சி அளவுக்கு அது இல்லை.

2. உலகின் சேமிப்பு செல்வமாக அதிக அளவில் இருப்பது டாலர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அமெரிக்க நிதி நெருக்கடியும் , அதன் அதிகரித்து வரும் பற்றாக்குறை பட்ஜெட் காரணமாகவும் அது அதிக அளவில் டாலரை அச்சடித்து வினியோகம் செய்வதால் டாலரின் மதிப்பு நீண்ட கால அளவில் எவ்வாறு நீடிக்கும் என்பது கேள்விக்குறியே. டாலருக்கு மாற்றாக கருதபட்ட யூரோவும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. எனவே உலக அளவில் அனைவரின் கவனமும் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் அதிக பணத்தை அடிப்பதால் பண வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.என்வே பணத்தின் மதிப்பு மிக அதிக அளவில் குறையலாம். அவ்வாறு குறையும் போது தற்போது உள்ள செல்வத்தை மதிப்பிழக்காமல் பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்தால் தான் முடியும்.எனவே தங்கத்தில் அதிக அளவு மக்கள் முத்லீடு செய்வர்(Gold is best inflation hedge). இதன் மூலம் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது.

3. தங்கத்தை நல்ல முதலீடாக கருதுபவர்கள் அதன் விலை பெருமளவுக்கு உயராமல் இருப்பதற்கான காரணம் தங்கத்தின் விலையை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த முதலீட்டு வங்கிகளும், மேல்நாட்டு மத்திய வங்கிகளும் நேரடியாக/மறைமுகமாக செய்த பரிவர்த்தணை காரணமாக செயற்கையாக குறைத்து வைத்து இருந்தது தான் என்கிறார்கள். இது நாள் வரை தங்கத்தின் விலை டாலரின் மதிப்பை சார்ந்து ஏற்ற இறக்கமாக இருந்தது.அதாவது இரண்டின் விலையும் ஒன்றை ஒன்று சார்ந்ததாக கருத பட்டது.தற்போது ஏற்பட்ட முதலீட்டு வங்கிகளின் வீழ்ச்சியால், இனி அவர்களால் இது போல் செய்வது கடினம் என்று கருதுகிறார்கள். அவர்களின் கருத்தை ஆமோதிப்பது போல் சர்வ தேச சந்தையிலும் தங்கத்தின் மதிப்பு கடந்த சில காலமாக டாலரின் ஏற்ற இறக்கத்திர்கு மதிப்பளிக்காமல் சீராக விலை ஏற தொடங்கி உள்ளது

4. Gold convertibility to dollar இல்லாததால் தங்கத்திற்கு மதிப்பு இல்லை என்று சொல்ல படுவது உண்மை என்றால், தங்கத்தின் விலை 1971க்கு பிறகு பெருமளவு குறைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ந்டக்க வில்லை. தங்கத்தின் விலை 1971 க்கு பிறகு gold convertibility to dollar மறைந்த பின்னும் விலை ஏறி கொண்டு தான் உள்ளது. எனவே அந்த கூற்று உண்மையில்லை.


உலக பொருளாதாரத்தில் எது எப்பொழுது நடைபெறும் என்று கணிப்பது இயலாத காரியம். சமீப காலமாக பொருளாதாரத்தின் அடிப்படை விதிகள் களங்கடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரியல் எஸ்டேட் துறை 30% மேல் வீழ்ச்சி அடையாது என்பது அனைவரின் கருத்து.அது பொய்த்து போனது தான் சமீபத்திய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானது. இந்த பதிவை படிப்பவர்கள் தங்கத்திற்கான ஆதரவு மற்றும் எதிப்பு கருத்துகளை படித்து இனி வரும் காலங்களில் எந்த கருத்துக்கு அதிக வாய்ப்புள்ளது என்று முடிவு செய்து அதன் ஏற்றம் பற்றி முடிவு செய்யலாம்.

என்னை பொருத்தவரையில் தற்போதய நிதி நெருக்கடியால் டாலரின் தேவை அதிகம் இருப்பதால் தங்கம் விலை குறுகிய கால அளவில் தொடர்ந்து ஏறி கொண்டிருப்பது கடினம். ஆனால் தற்போது அமெரிக்க அரசு பல்லாயிரம் பில்லியன் பணத்தை வங்கிகளுக்கு கொடுத்துள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலை சரியில்லாததால் வங்கிகள் அவற்றை இன்னும் கடனுக்கு கொடுக்க ஆரம்பிக்கவில்லை. அவற்றை கடன் கொடுக்க ஆரம்பித்தால் அது பல டிரில்லியன் டாலர்கள் பண புழக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும்(பில்லியன் எவ்வாறு ட்ரில்லியன் ஆகிறது என்று அடுத்த பதிவில் விளக்குகிறேன்).அப்போது பண வீக்கம் பெருமளவு அதிகரித்து டாலரின் மதிப்பு குறைய வய்ப்புள்ளது. எனவே அது போன்ற சூழ்நிலை(1-2 ஆண்டுகளில்) வந்தால் அல்லது வரும் என்று யூகம் கிளம்பும் போது தங்கம் விலை பெருமளவு உயர வாய்ப்புள்ளது. அதேசமயம் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் 1971 ல் Convertibility to gold எடுத்தது போன்ற தார்மீக ரீதியாக தவறான மற்றும் யாரும் எதிர் பார்க்காத unconventional ந்டவடிக்கை ஏதேனும் எடுத்து தங்கத்தின் விலையை குறைத்து டாலரின் மதிப்பை தக்க வைக்க முயலலாம்.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் மேலை நாடுகளின் வங்கிகள் தங்களிடம் உள்ள தங்கத்தை சிறிது சிறிதாக விற்க தொடங்கி உள்ளது.அதற்கு காரணம் அரசுகளின் பணத்தை(டாலர்) அடிப்படையான முதலீடுகளின் லாபம், தங்கத்தினால் கிடைக்கும் லாபத்தை விட அதிகம் என்று கூற பட்டாலும், உலகலவில் தங்கத்தை சேமிப்பு செல்வமாக இருக்கும் பழக்கத்தை சிறிது சிறிதாக அழித்து நாடுகள் அடிக்கும் பணத்திற்கு மற்றாக பெரிய அளவில் எந்த செல்வமும்(govt reserve) முக்கியமாக தங்கம் வந்து விட கூடாது என்பதே என்று கருத பட்டது. (இங்கிலாந்து சுமார் 400 டன் தங்கத்தை 1999- 2002 ல் விற்று, தற்போதைய தங்க விலை ஏற்றத்தால் $10 பில்லியன் நட்டத்தை சந்தித்துள்ளத்து என்பது வேறு விஷயம்! )தற்போது உலகில் உள்ள பல பெரிய வங்கிகள் வீழ்ந்து உலக அளவில் விரல் விட்டு எண்ண கூடிய அளவில் மிக பெரிய வங்கிகள் உருவாவதால், இது போன்ற குறுக்கு வழி மற்றும் தார்மீகத்திற்கு அப்பாற்பட்ட வழிகளை உலக நாடுகளும் வங்கிகளும் சேர்ந்து பின் பற்றுவது மிகவும் எளிதாகலாம்.

Warren Buffett on Gold:
It gets dug out of the ground in Africa, or someplace. Then we melt it down, dig another hole, bury it again and pay people to stand around guarding it. It has no utility. Anyone watching from Mars would be scratching their head.



--

10 comments:

Anonymous said...

I just popped in attracted by the title
I all most spent 30 mins reading all the articles tht u had given as links
You have written the pros and cons in a nice way in this article

keep up the work

சதுக்க பூதம் said...

நன்றி goldlover.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

நல்ல அலசல்.
இதில் இவ்வளவு விசயம் உள்ளதா???

//தங்கத்தையும் பணத்தையும் ஒப்பீடு செய்பவர்கள் 1700ஆம் ஆண்டிலிருந்து கணக்கை எடுப்பர்//

எதற்க்காக 1700ல் இருந்து எடுக்க வேண்டும் ?

சதுக்க பூதம் said...

//எதற்க்காக 1700ல் இருந்து எடுக்க வேண்டும் ?
//
நான் வலையில் தேடிய வரை அந்த கால கட்டத்திலிருந்து எடுத்த புள்ளி விவரம் உல்ளது. அதற்கான linkஐயும் பதிவில் இட்டுள்ளேன்

Suresh said...

சூப்பர் நண்பரே :-) நானும் ஒரு பதிவு செய்து உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)

Suresh said...

வாழ்த்துக்கள் ! நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு செய்து உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)

Maximum India said...

நல்ல அலசல். வாழ்த்துக்கள்.

தங்கம் மற்ற சந்தை (வாழ்க்கை) அபாயங்களில் இருந்து தற்காலிகமாக பாதுகாத்துக் கொள்ள (To moderate the Investment Risk) உதவும் ஒரு உபமுதலீடாக மட்டுமே இருக்க முடியும்.

பொன்னகையைக் கொண்டு புன்னகையை பெற முடியும் என்று நம்புவோர் குறிப்பிட்டத் தொகையை ஆபரணங்களாக முதலீடு செய்யலாம். மற்றவர்கள், தங்க பரஸ்பர நிதிகள் மூலமாக முதலீடு செய்யலாம்.

தமது மொத்த முதலீட்டில் (Investment Mix) சுமார் ஐந்திலிருந்து பத்து சதவீதம் வரை மட்டுமே தங்கம் வைத்துக் கொள்ளலாம்.

சதுக்க பூதம் said...

//வாழ்த்துக்கள் ! நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு செய்து உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)//
வாழ்த்துக்கு நன்றி. தங்கம் பர்றிய உங்களது பதிவை தேடி பார்த்தேன்.காணவில்லை. தெரிய படுத்துகிறீர்களா?

சதுக்க பூதம் said...

dara//நல்ல அலசல். வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கு நன்றி
//தங்கம் மற்ற சந்தை (வாழ்க்கை) அபாயங்களில் இருந்து தற்காலிகமாக பாதுகாத்துக் கொள்ள (To moderate the Investment Risk) உதவும் ஒரு உபமுதலீடாக மட்டுமே இருக்க முடியும்.
//

அதை முதலீடாக கருதி செய்தால் மார்கெட் நிலவரத்தை பார்த்து அதை சரியான நேரத்தில் விற்று வேறு முதலீட்டில் செலுத்த தயாராக இருக்க வேண்டும்.இதை hedge against inflation என்று சொல்லியிருந்தேன்
//தமது மொத்த முதலீட்டில் (Investment Mix) சுமார் ஐந்திலிருந்து பத்து சதவீதம் வரை மட்டுமே தங்கம் வைத்துக் கொள்ளலாம்.
//
மிகவும் சரி