Monday, February 23, 2009

ஆஸ்கார் விருது சந்தோஷமும்(A.R.Rahman) ,வருத்தமும்(MIA)




இரண்டு ஆஸ்கார் விருதை பெற்று A.R.Rahman சரித்திரம் படைத்த செய்தி உண்மையிலேயே உலக தமிழர்களுக்கு எல்லாம் மாபெரும் சந்தோஷம் கொடுக்கும் செய்தியாகும். அதுவும் இளம் வயதில் இவ்விருது பெற்றதாலும், அவருக்கு ஹாலிவுட்டில் பெரிய அளவில் அறிமுகம் கிடைத்ததாலும் அவருக்கு ஹாலிவிட்டில் மிகப்பெரிய பிராஜெக்ட்களில் இனி வாய்ப்பு கிடைத்து உலகலவில் அவர் பல சாதனைகளை படைக்க போகிறார் என்பதும் நிச்சயம்.அவருடைய வெற்றி பயணம் தொடர நாம் எல்லோரும் வாழ்த்துவோம்.

இந்த ஆஸ்காரில் வருத்தம் அடைய வைத்த செய்தி, விருது பெற பரிந்துரைக்க பட்டவர்களில் ஒருவரான MIAக்கு இந்த முறை விருது கிடைக்க வில்லை என்பது. ஹிப் ஹாப் படகர்களில் உலக அளவில் கலக்கி கொண்டிருக்கும் தமிழர் MIA. இலங்கையில் நடைபெரும் இன அழிப்பு பற்றி தைரியமாக மேல் நாட்டு மீடியாக்களில் எடுத்து கூரியவர் .அவருக்கு இந்த ஆண்டு கிராமி விருது பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தும் அது கிடைக்க வில்லை. இந்நிலையில் ஆஸ்கார் விருதும் கிடைக்காமல் போய்விட்டது பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் நிச்சயம் அவர் பல ஆஸ்கார் மற்றும் கிராமி விருது பெறுவார் என்பது நிச்சயம்

3 comments:

Anonymous said...

MIAக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருந்தால், மேடையிலேயே இலங்கை தமிழர் அவலத்தை பற்றி பேசி உலகெங்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பார்

Anonymous said...

maybe that's why...it was a bland oscar for most

but seriously, hoping many tamil people in future strive to become great entertainers like rahman

-kajan

சதுக்க பூதம் said...

//but seriously, hoping many tamil people in future strive to become great entertainers like rahman
//
நிச்சயமாக. ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனங்கள் பாலிவுட் நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளதால் அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவாவது நிறைய இந்தியர்களுக்கு இனி ஆஸ்கார் விருது கிடைக்க வாய்ப்புள்ளது