Thursday, February 05, 2009

சிதம்பரம்- இன்னொரு சுனாமியை தமிழகம் தாங்குமா?

இலங்கை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிவதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு தற்போது தமிழ் நாட்டில் வசிக்கும் ஒட்டு மொத்த தமிழர்களையும் கூண்டோடு கைலாசம் அனுப்ப புதிய சதி வேலையில் ஈடுபட்டுள்ளது. இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இதுவே உண்மையான செய்தி. கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமியால் பல்லாயிரம் தமிழ் மக்கள் இறந்தது நினைவிருக்களாம். இந்த துயர சம்பவத்துக்கான காரணத்தை கமல் போன்ற நோபல் பரிசு பெற தவறிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்து தசாவதாரம் படத்தில் தெளிவாக விளக்கி உள்ளார். தில்லை வாழ் அந்தணர்கள் கோவிலில் செய்யும் ஆன்மீக பணிகளில் அரசியல்வாதிகள்(சோழ மன்னர்கள் ) தலையிட்டதுதான் சமீபத்திய சுனாமிக்கு காரணம் என்ற அறிவியல் உண்மையை அறிவியல் உலகின் சமீபத்திய கண்டு பிடிப்பான String Theoryயின் மூலம் சிறு குழந்தைக்கும் புரியும் வகையில் கமலகாசன் அவர்கள் நிருபித்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு நீதி துறையின் உதவியோடு நடராஜரையும்,கோவிலையும் அங்கு வரும் வருமானத்தையும் தீட்சிதர்களிடமிருந்து விடுவித்து தன் பொறுப்பில் எடுத்து கொண்டுள்ளது. அன்று ஒரு அந்தணரை வெளியேற்றியதற்கே இன்று மாபெரும் சுனாமி தாக்கி உள்ளது. இன்று அனைவரின் அதிகாரத்தையும் பிடுங்கியதால் உலகில் என்ன என்ன அழிவுகள் ஏற்படும் என்பதை கற்பனையில் நினைத்து பார்த்தாலே படு பயங்கரமாக உள்ளது. இதன் விளைவு தமிழகத்தின் அழிவோடு விட்டு விடுமா அல்லது ஒட்டு மொத்த இந்தியா அல்லது உலகத்தையே அழிக்குமா என்பதுதான் இப்போதைய கேள்விகுறியாக உள்ளது. இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று ஆச்சாரியார்கள் கண்டறிந்து அதை நிறைவேற்றினால் உலகை காக்கும் புண்ணியமாவது கிடைக்கும்.

--

6 comments:

Anonymous said...

poda fool.

Anonymous said...

தீட்சிதர்களுடைய கொழுப்பு குறைக்கப்படத்தான் வேண்டும். திருவாசகம் பாட போராடிய அந்த பெரியவரை கை ஒடித்தவர்களாயிற்றே இவர்கள். தமிழில் பாட வேண்டும் என்ற ஆணையை நிறைவேற்ற போலீசோடு மல்லுக்கு நின்றார்களே! உண்டியல் காசை தின்பதற்கு தானே!

சதுக்க பூதம் said...

//poda fool.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அறிவாளி

sivanadiyar said...

happa oru valiya Nataraja temple is saved frm these Stupid thichadargal

Anonymous said...

தீட்சதர்கள் அம்மனி(யி)டமே
வேறே சொல்லீட்டா!
என்ன நடக்கப் போறதோ?
நூல் போட்டவால்லாம் பேசாம
சு.சுவாமியோட டில்லிக்கிப் போயிடுவோம்.
வர்ரேளா,மாமி,ஹைதரபாத் வேண்டாம்,டில்லி தான் தூரம்,போயிடலாம்.

சதுக்க பூதம் said...

//தீட்சிதர்களுடைய கொழுப்பு குறைக்கப்படத்தான் வேண்டும். திருவாசகம் பாட போராடிய அந்த பெரியவரை கை ஒடித்தவர்களாயிற்றே இவர்கள். தமிழில் பாட வேண்டும் என்ற ஆணையை நிறைவேற்ற போலீசோடு மல்லுக்கு நின்றார்களே! உண்டியல் காசை தின்பதற்கு தானே!//

அவ்வாறு நினைப்பதை விட சிதம்பரம் கோவிலில் பக்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நிர்வாகத்தை செம்மை படுத்தி,கோவிலை மேலும் அழகு படுத்தி, தமிழ் வழி வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

//
happa oru valiya Nataraja temple is saved frm these Stupid thichadargal//

அவர்களே திருந்தி உண்மையான பக்தி வழிக்கு மாறினால் தான் உண்டு. பக்தி இயக்கத்திற்கெல்லாம் மூலவராக கருத படும் ஆதி சங்கரரே கடவுள் அவரிடம் தோன்றி முறையிட்ட பின் தான் அனைத்து மனிதர்களையும் சமமாக கருத வேண்டும் என்று உணர்ந்தார்.

//
தீட்சதர்கள் அம்மனி(யி)டமே
வேறே சொல்லீட்டா!
என்ன நடக்கப் போறதோ?
நூல் போட்டவால்லாம் பேசாம
சு.சுவாமியோட டில்லிக்கிப் போயிடுவோம்.
வர்ரேளா,மாமி,ஹைதரபாத் வேண்டாம்,டில்லி தான் தூரம்,போயிடலாம்.
//

ஒட்டு மொத்த அதிகார வர்க்கமே அவர்களது கையில் தான் உள்ளது.எனவே இந்த மாற்றம் நிலைப்பது கடினம் தான். இந்த குறுகிய காலத்தில் அரசு கோவில் நிர்வகத்தில் செம்மையாக செயல்பட்டு உண்மையான பக்தியை நிலை நாட்டி, கோவில் தூய்மையில் கவனம் செலுத்த வேண்டும். மற்ற கோவிலில் உள்ளது போன்ற ஊழல் அதிகாரிகளை நியமித்து கோவில் பணத்தை கழகங்கள் கொள்ளையிட முயன்றால், இதை காரணம் காட்டி அனைத்து கோவில்களில் இருந்தும் அரசு வெளியேற வேண்டும் என்று ஊடகங்களின் மூலம் பெரிய பிரச்சாரம் நடை பெற வாய்ப்புள்ளது