Tuesday, February 17, 2009

இந்திய steelகளில் கதிரியக்க(radioactive) பொருட்கள் கலப்படம்

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் steelகளில் கதிரியக்க பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது.முதலில் ரஷ்யாவில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய பட்ட பொருட்களில்(steel) கதிரியக்க அளவு அதிகம் இருப்பது கண்டுபிடிக்க பட்டது.ஒரு வருடத்துக்கு அனுமதிக்கபடும் கதிரியக்க அளவை ஒரே நாளில் இந்திய steelகள் வெளியிடுவது கண்டுபிடிக்கபட்டது.உடனடியாக அது இந்தியாவிற்கு திரும்பி அனுப்பபட்டுள்ளது. அந்த steel முறையாக அழிக்கபட்டுள்ளதா? அல்லது அது இந்திய சந்தையில் விற்க பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.

ரஷ்யாவிற்கு அனுப்ப பட்ட steelகளில் மட்டும் இவ்வகை கதிரியக்க பொருள் இல்லை. ஜெர்மனிக்கு அனுப்பபட்ட steelலும் கதிரியக்க பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது. கதிரியக்க பொருட்கள் உடல்நலத்துக்கு மிகவும் கேடு விளைவிப்பவை. இவை கேன்சரை கூட விளைவிக்களாம்.

இந்த செய்தியை நான் இது வரை இந்திய செய்தி தளங்களில் காண வில்லை.இது மிகவும் ஆச்சிரியமாக உள்ளது. இந்த steelஐ உற்பத்தி செய்த நிறுவனம் மும்பையை சேர்ந்த Vipras Casting.

மேலை நாடுகளில் இது இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு மிகவும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய இறக்குமதியை எதிர்க்கும் லாபிக்கள் இதை முக்கிய ஆயுதமாக எடுத்துள்ளனர்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது- இத்தகைய அபாயகரமான steelகளை மீண்டும் இந்திய மார்க்கெட்டிலேயே லாப நோக்கில் விற்று விட கூடாது.இது பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்படுவது அவசியம். இது பற்றிய செய்திகளை ஜெர்மனியின் முக்கிய பத்திரிக்கையான spiegel தலைப்பு செய்தியாக வெளியுட்டுள்ளது குறிப்பிட தக்கது.

--

6 comments:

Anonymous said...

post just like this unknown important news.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

தமிழ் மதுரம் said...

நண்பரே நல்ல பயனுள்ள தகவல்களைத் தொகுத்துள்ளீர்கள். தொடருங்கள்!

சதுக்க பூதம் said...

//post just like this unknown important news.
//
sure

சதுக்க பூதம் said...

//நண்பரே நல்ல பயனுள்ள தகவல்களைத் தொகுத்துள்ளீர்கள். தொடருங்கள்//
வாழ்த்துக்கு நன்றி கமல்.நிச்சயம் தொடர்கிறேன்

சதுக்க பூதம் said...

//உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம்//

இணைப்பிற்கு நன்றி