Monday, January 21, 2008

MONOPOLY விளையாட்டில் சென்னை நகரை சேர்க்க வாக்களியுங்கள்

Monopoly விளையாட்டு சிறுவயதில் நம்மில் பெரும்பாலானோரை கவர்ந்த விளையாட்டு ஆகும். பல பெயர்களில் இந்த விளையாட்டு விளையாடப்படும். நான் Trade என்ற பெயரில் இதை விளையாடி இருக்கிறேன்.விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் பொழுதை கழிக்க , இது ஒரு அருமையான விளையாட்டு. Monopoly கம்பெனியினர், இனி வரும் காலங்களில் எந்த நகரை இந்த விளையாட்டில் சேர்ப்பது என்பதை பொதுமக்கள் வாக்களிப்பு மூலம் தீர்மானிக்க முடிவு செய்துள்ளனர்.நம் சென்னை நகரத்தையும் இதில் சேர்க்க இது ஒரு சரியான வாய்ப்பு. நான் சென்னை நகரை இன்று wildcard ரவுண்டில் இனைத்திருக்கிறேன் இந்த தளத்துக்கு சென்று சென்னைக்கு வாக்களிக்கவும்.

10 comments:

கிஷோர் said...

இது ஒரு சிறப்பான விளையாட்டு.
ஆனால் நான் ஒருமுறை கூட முழுமையாக ஆடியதில்லை.
:‍-(

சதுக்க பூதம் said...

கிஷோர், நான் கூட, பலமுறை முயன்றும் ஒரு முறை கூட முழுமையாக விளையாடி முடிக்க முடியவில்லை!

Anonymous said...

even i like this game :)
I dont think anyone could finish this game.
btw is there anyone who have finished this game full?????

Anonymous said...

மீனாட்சி அம்மன் கோவிலை உலக அதிசியமாக்க நடைபெற்ற கேலிக்கூதிற்க்கும் நீங்கள் சொல்வதற்க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

ஏதாவது ஒரு கட்டதில் சென்னை என்று எழுதி ஸ்டிக்கர் போல ஒட்டி விட்டு விளையாடுங்கள் , அது உங்களுக்கு ஒரு அல்ப திருப்தியை தரும் என்றால்.

Anonymous said...

மஸ்கிட்டோ மணி kovapatathiga, ithu oru vilaiyatu thane, vilaiatai vilaiata paka kathukonga

சதுக்க பூதம் said...

மஸ்கிட்டோ மணி,suthan,monopoly king- வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

//மீனாட்சி அம்மன் கோவிலை உலக அதிசியமாக்க நடைபெற்ற கேலிக்கூதிற்க்கும் நீங்கள் சொல்வதற்க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
//
அதற்கும், இதற்க்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. என்பது உலகெங்கும் உள்ள சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. இந்த விளையாட்டில் யை சேர்ப்பதன் மூலம், உலகில் உள்ள பெரும்பாளான சிறுவர்கள் மனதில் சென்னையை பதிய வைக்க முடியும். இதில் பல லாபங்கள் உள்ளன. உதாரணத்துக்கு ஷேக்ஸ்பியர்,wordsworth,Tennyson போன்றோரின் கவிதைகளை பள்ளியில் படித்ததால், இங்கிலாந்துக்கு ஒரு முறையாவது சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்று விருப்பம் வந்தது.

Anonymous said...

//உதாரணத்துக்கு ஷேக்ஸ்பியர்,wordsworth,Tennyson போன்றோரின் கவிதைகளை பள்ளியில் படித்ததால், இங்கிலாந்துக்கு ஒரு முறையாவது சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்று விருப்பம் வந்தது.
//

Monopoly ஒரு நல்ல விளையாட்டு தான் , அதில் சென்னை பெயர் இடம்பெறுவதும் மகிழ்ச்சி தான். ஆனால் இதனால் சிறுவர்கள் சென்னையை பற்றி அறிந்து கொண்டு சுற்றிப்பார்க்க விரும்புவார்கள் என்று நம்புவது கொஞ்சம் ஓவர்.

இன்னமும் Global cities பட்டியலில் இடம் பிடிக்காத நகரம் சென்னை. அதற்கு தொழ்ல் அபிவிருத்தி முதல் சுகாதாரம்வரை பல துறைகளில் கடுமையாக உழைக்க வேண்டும் . Board game இடம்பெறுவது எல்லாம்வெறும் தமாஷுக்கு தான்.

சதுக்க பூதம் said...

//சிறுவர்கள் சென்னையை பற்றி அறிந்து கொண்டு சுற்றிப்பார்க்க விரும்புவார்கள் என்று நம்புவது கொஞ்சம் ஓவர். //
நான் பார்ப்பவர்கள் அனைவரும் உடனே சுற்றிபார்க்க வருவார்கள் என்று சொல்ல வரவில்லை. பன்னாட்டு கம்பெனிகள் செய்வது போன்ற ஒரு branding தான். இதற்கு நாம் ஒன்றும் பணம் செலவு செய்ய போவதில்லை. ஒரு கிளிக் தானே!

சதுக்க பூதம் said...

//அதற்கு தொழ்ல் அபிவிருத்தி முதல் சுகாதாரம்வரை பல துறைகளில் கடுமையாக உழைக்க வேண்டும் //
அதற்கு நான் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது.Atleast இந்த click மட்டும் என்னால் செய்யமுடியும்

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

சதுக்க பூதம்,
உங்களின் படைப்புகளுக்கு நன்றிகள் பல...
உங்களின் உதவி அவசியம் தேவை...
http://vellamai.blogspot.com/

நன்றி...