பொதுவாக ஒவ்வொரு புகைபடத்திற்கு பின்னும் ஒரு சுவாரசியமான நிகழ்வு இருக்கும். நாம் புகைபடங்களை எடுக்கும் காலங்களில் அதை பற்றிய நினைவு நன்கு இருக்கும். காலப்போக்கில் அந்த புகைப்படம் மட்டும் நம்மிடம் இருக்கும்.ஆனால் அந்த சுவரசியமான நிகழ்வு மறந்து விடும்.
மேலும் நாம் புகைபடத்தை பிறரிடம் பகிர்வு செய்து கொள்ளும் போதும் புகைப்படம் மட்டும் பகிர்ந்து கொள்ள படும். அந்த நிகழ்வுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.
இதற்க்கு நாம் வீடியோ எடுத்து நிகழ்வுகளை சேமிக்கலாம். ஆனால் வீடியோ எடுக்கும் போது அனைத்து செய்திகளையும் சொல்வது கடினம். அதற்கு எடிட்டிங் மென்பொருள் உபயோக படுத்த வேண்டும். அதை பகிர்தலும் கடினம். அனைவரிடமும் வீடியே எடுக்க வசதி இருப்பதும் இல்லை.
புகைபட ஆல்பம் தயாரிக்க பிகாசா போன்ற மென்பொருள்கள் உள்ளன. ஆனால் புகைபடத்தோடு செய்திகளை நம் குரளில் பேசி ஆல்பத்தில் இணைத்து அனுப்ப முடியாது.பகைபட ஆல்பத்தை தயாரித்து நம் சொந்த குரளில் வர்ணணை கொடுத்து அதை பிறரிடம் பகிர்ந்து கொள்ள உதவுவதுதான் Goldmail .
Goldmail மூலம் நம்முடைய சொந்த குரளில் வாழ்த்துமடல் அனுப்பவும் ,Blog பதிவுக்கும் கூட உபயோக படுத்தலாம்.
நீங்களும் Goldmail பயன்படுத்தி உங்களுடைய நினைவுகளையும் நிகழ்வுகளையும் பத்திரபடுத்தி வைத்து பிறரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.இது ஒரு இலவச சேவை.
5 comments:
useful site thankyou
Radhae
voice record pani photos share paninen, romba nalayiruku sathukapootham avargale
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி radhaee,kannan
பூதமே தோண்டிக்கொடுத்திடுக்கு,நன்றாகத்தான் இருக்கும். :-)
பகிர்ந்தமைக்கு நன்றி.
நீங்களும் try பண்ணி பாருங்கள் வடுவூர் குமார்
Post a Comment