Thursday, December 27, 2007
CNNன் இந்த செய்திக்கு என்ன அர்த்தம்?
CNNல் உள்ள் இந்த செய்தியை பாருங்கள். பாக்கிஸ்தானில் தீவிரவாதிகள் எண்ணிக்கையும் செயல்பாடும் அதிகம் உள்ளது எனவே அணு ஆயுதங்கள் அவர்கள் கைக்கு போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது அபாயகரமானது என்று சொன்னால் அது சரியாக இருக்கும். ஆனால் அனைவரும் படிக்கும் தலைப்பு செய்தியிலே "Pakisthan is the ONLY ISLAMIC STATE with nuclear arsenal." என்று கூறி உள்ளது.
இதில் "ISLAMIC STATE" என்று பொதுவாக கூறுவதன் அர்த்தம் என்ன? அப்படி என்றால் அனைத்து islamic stateம் அமெரிக்காவின் எதிரிகள். பாக்கிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பதால் அமெரிக்கா மிகவும் கவலை கொள்கிறது என்று அர்த்தமா? முன்பெல்லாம் சோவியத் யூனியன் கம்யூனிச நாடு. எனவே எதிரி என்று அறிய பட்டது. இப்போது கம்யூனிசத்திற்கு பதில் இஸ்லாம் வந்து விட்டதா?
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
கம்யூனிசம் காணமல் போய்விட்டு என்று மறைமுகமாக சொல்கிறார்களோ என்னவோ.
:)
எப்போதுமே ஒரு எதிரி இருப்பது பலவகையிலும் நல்லது தானே கோவி கண்ண்ன்?
ஹிஹி ... அது இஸ்ரேல்-ஐ இன்னும் அதிகமாக அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் வாங்குவதற்காக விடப்பட்ட செய்தி
வருகைக்கு நன்றி களபிரர் அவர்களே. இஸ்ரேலுக்கு மட்டுமா?. உங்கள் பெயரை பார்த்தவுடன் என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் நினைவுக்கு வருகிறது. களபிரர்கள் எந்த பகுதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
எங்கோ ஒரு இடத்தில் ( தமிழுக்கும் நிறம் உண்டு - வைரமுத்து என்று நினைவு ) களப்பிரர் ஆட்சி மனு நீதிக்கும் பார்ப்பன நீதிக்கும் எதிராக நின்றதாக ஒரு வரி படித்தேன். ஆதலால் இந்த பேரை தேர்வு செய்தேன். மேலும் அறிய எனக்கும் அவா. தெரிந்தால் சொல்லுங்களேன் .
தகவலுக்கு நன்றி களபிரர். என்க்கு தெரியும் போது நிச்சயம் உங்களிடம் சொல்கிறேன்
களப்பிரர் கி.பி ஒன்றாம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை வட தமிழகத்தை ஆண்டவர்கள்.பூர்வ தமிழ்குடிகள்.சமணத்தை வளர்த்து பிராமண ஆதிக்கத்தை ஒழித்து கல்வியை எல்லா ஜாதி மக்களுக்கும் கொண்டு சென்றவர்கள்.விரிவாக அறிய க.ப அறவாணன் அவர்கள் எழுதிய 'தமிழர் வரலாறு ' (அயலார் முதல் களப்பிரர் வரை)
கருத்துக்கு நன்றி கோவை சிபி. களபிரர்கள் வெளி நாட்டிலிருந்து வந்து தமிழகத்தை ஆண்டதாகவும், அவர்களது எது என்று கண்டற்யபடவில்லை, எனவே அவர்களது ஆட்சியை இருண்ட காலம் என்ற் கூறபடுவதாகவும் நான் பள்ளியில் படித்ததாக ஞாபகம்.
அவர்கள் சமணர்கள் என்பதாலும் வருணாசிரமத்தை ஆதரிக்காததாலும் அவ்வாறு வரலாற்று அறிஞர்களால் கூற பட்டதாகவும் சில புத்தகத்தில் படித்திருக்கின்றேன்
கோவை சிபி அவர்களுக்கும் சதுக்க பூதம் அவர்களுக்கும் நன்றி. அந்த புத்தகத்தை தேடி புடிக்க முயற்சி செய்கிறேன்..
வருணாசிரமத்தை ஆதரிக்காததால் வரலாற்றில் அவர்களுடைய காலம் இருட்டடிக்கப் பட்டது.இதைத்தான் நூல் ஆசிரியர் பல ஆதாரங்களுடன்
களப்பிரர்களின் ஆட்சியை சூத்திரர்களின் எழுச்சியாக குறிப்பிடுகிறார்.மேலும் அவர்களின் காலத்தில் எழுதப் பட்ட பல சமண நூல்கள் பிறகு வந்த பல்லவர் ஆட்சியில் பிராமண தூண்டுதலால் அழிக்கபட்டு, வரலாறு திரிக்கப்பட்டு களப்பிரர்கள் அயலாராக்கப்பட்டனர்.
அவர்களது பூர்வீகம் எது என்று கூறுவதற்கு பதில் "அவர்களது எது" என்று type செய்து விட்டேன்.
கருத்துக்கு நன்றி சிபி,களபிரர்.எனக்கும் சிபியின் கருத்தில் உண்மை இருக்கும் என தோன்றுகிறது.நானும் முடிந்த வரை வரலாற்றை தோண்டி பார்க்கிறேன். நீங்கள் அது பற்றி எங்கும் படித்தால் தயவு செய்து இங்கு பகிர்ந்து கொள்ளவும்.
Post a Comment