Wednesday, November 28, 2007

தட்ஸ்தமிழ் சிவாஜி படத்துக்கு கொடுக்கும் ஓவர் பில்டப்

பொதுவாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் நாட்டு செய்தியை உடனுக்குடன் கொடுப்பது தட்ஸ்தமிழ் தளம். நான் தினமும் தவறாமல் பார்க்கும் தளம் இது. சிவாஜி படம் பற்றி எப்போதுமே ஓவர் பில்டப் கொடுக்கும். ஆனால் தற்போது வந்துள்ளா செய்தியை பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. நீங்களும் படித்து பாருங்களேன்.

"ரஜினி 'பர்ந்து பர்ந்து' சண்டை போடுவதை ரசித்த அவரது ரசிகர்கள் இனிமேல் பறந்து கொண்டே அவரது படத்தைப் பார்க்கலாம். அதாவது சிவாஜி படத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது விமானங்களில் திரையிட தீர்மானித்துள்ளதாம்.

உலகிலேயே ஒரு விமான நிறுவனம், ஒரு இந்தியப் படத்தை, அதிலும் தமிழ்ப் படத்தை தனது விமானங்களில் திரையிடுவது இதுவே முதல் முறையாகும்.

டிசம்பர் 1ம் தேதியிலிருந்து அனைத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களிலும் சிவாஜி திரைப்படத்தை பார்க்கலாம். இதற்காக இருக்கைகளின் பின்புறம் படத்தைப் பார்ப்பதற்கேற்ற வசதி செய்யப்படவுள்ளது.

முழு செய்திக்கு தட்ஸ்தமிழ் செல்லவும்.

அந்த செய்திக்கு வந்த கமெண்ட்ஸ் ரசிக்கும் படி உள்ளது.

8 comments:

கோவி.கண்ணன் said...

சிங்கப்பூர் விமானங்களில் தமிழ்படம் போடுவது பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது, சிவாஜி முதல் முறை என்று சொல்வது ஓவர் 'பில்','டப்பு' தான் பேச வைக்குது தட்ஸ்தமிழை, ஷங்கரோ, ஏவிஎம்மோ நன்றாக கவனித்து இருப்பார்கள் போல.
:)

சதுக்க பூதம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன் .ஒரு செய்தியை போடுவதற்க்கு முன் அதை சரி பார்க்க மாட்டார்கள் போலிருக்கிறது

Anonymous said...

I have travelled in Lufthansa from chennai to Frankfurt. They will show tamil movies in that.So Tamil movie in international flight is not new

சதுக்க பூதம் said...

You are correct. It is just build up.

Anonymous said...

படுமோசமான தமிழின அழிப்பு செய்யும் ஸ்ரீலங்கா அரச விமானமான ஏர் லங்காவில் கூட பல வருடங்களாக தமிழ் படம் போடுகிறார்கள். ஒருவேளை கீழ்த்தரமான இந்த தமிழ் படங்களைப் போட்டாவது தமிழை அழித்துவிடலாம் என நினைக்கிறதோ ஏர் லங்கா? :( :( :(

சதுக்க பூதம் said...

//ஒருவேளை கீழ்த்தரமான இந்த தமிழ் படங்களைப் போட்டாவது தமிழை அழித்துவிடலாம் என நினைக்கிறதோ ஏர் லங்கா? :( :( :(
//
They are getting very good business from tamil people

Unknown said...

'உலக ஏர்லைன்ஸ்லேயே முதல்முறையாக'னு சொல்றதெல்லாம் சும்மா தமாசு.
சிங்கப்பூர், மலேசியன், சிரீலங்கன் விமானங்கள் நிறைய வருடங்களாகவே தமிழ் படங்களை போட்டு வருகிறார்கள். பொதுவாக, ஒன்னுக்கும் உருப்புடாத படங்களதான் போடுவானுங்க. ஒருவேளை, அதனாலேதான் இந்தப் படத்தை போடப் போறானுங்களோ என்னமோ?

சதுக்க பூதம் said...

//பொதுவாக, ஒன்னுக்கும் உருப்புடாத படங்களதான் போடுவானுங்க. ஒருவேளை, அதனாலேதான் இந்தப் படத்தை போடப் போறானுங்களோ என்னமோ?//

Nice