Monday, December 24, 2007

சுதந்திரம் பற்றி சே குவாராவின் மகள் அலெய்டா குவாராவின் கருத்தும் சில நடைமுறை உண்மைகளும்

சுதந்திரம் பற்றி சே குவாராவின் மகள் அலெய்டா குவராவின் கருத்தை Sicko படத்தின் special featureல் பார்த்தேன்.அவர் கியுபாவில் மருத்துவராக பணி புரிகிறார். அவர் சுதந்திரம் பற்றி ஒரு வரியில் கூறியது உலகில் நடக்கும் பல உண்மைகளை வெளி கொணர்வதாக உள்ளது.
படத்தின் டைரக்டர் மைக்கேல் மூர் சுதந்திரம் பற்றி அவரது கருத்தை கேட்டத்ற்கு, குவாரவின் பதில்: நாம் நினைப்பவற்றை தைரியமாக வெளியில் சொல்ல முடிவதுதான் சுதந்திரம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையான சுதந்திரம் என்பது நாம் கூறும் கருத்துகள் பிறறால் கவனிக்க பட்டு மதிப்பளிக்க பட வேண்டும் அது தான் உண்மையான சுதந்திரம் என்றார்.
"But have somebody to consider your opinion".
அதாவது மக்களின் கருத்துகளை அதிகாரத்தில் இருபவர்கள் மதித்து அதன் தேவையை ஆராய்ந்து அதற்கேற்ப முடிவுகள் எடுக்க வேண்டும்.அமெரிக்கா போன்ற நாடுகளில் முழுமையாக கருத்து சுதந்திரம் இருந்தாலும் கடைசியில் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள் மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து அதன்படி செயல்படுகிறார்களா என்பது கேள்விக்குறியே. எந்த் கட்சியினர் ஆட்சிக்கு வந்தாளும் வெளியில் எப்படி பேசினாலும்,கடைசியில் அதிகார பீடத்திற்கு வரும் போது எந்த முக்கிய முடிவுகளையும் கட்டு படுத்துவது பணபலம் உள்ள அதிகார மையங்களே.அமெரிக்காவில் இந்த முடிவுகள் Lobby என்ப்படும் அதிகார குழுக்கள் மூல்ம் கட்டுபடுத்த படுகிறது.இந்தியாவில் கூட மக்களால் தேர்ந்தெடுக்கபடும் பிரதிநிதிகள் உண்மையிலேயே மக்களுக்காக தான் குரல் கொடுக்கிறார்களா என்பதும் கேள்விக்குறியே? அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் அல்லது இடைதரகர்களிடம் பணம் வாங்கி அவர்களது கருத்துகளை நடைமுறை படுத்துகிறார்கள் அல்லது ஒருசில அரசியல்வாதிகள் மக்கள் நலனுக்காக எடுக்கும் முடிவுகளை நடைமுறை படுத்த வேண்டிய அரசு அதிகார்கள் முட்டுகட்டை போட்டு அதை நடக்க விடாமல் செய்கின்றனர்.
மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அவர்களின் தேவைக்காகவும், மக்களின் அடிப்படை தேவையை நிறைவேற்றவும் உதவும் அரசை மக்களால் தேர்ந்தெடுத்தால்தான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். மக்களும் பல கட்சியினரை தேர்ந்தெடுத்து பார்த்துதான் வருகின்றனர். எந்த் கட்சியினர் வந்தாலும் விளைவு ஒன்றே. அவர்கள் பாடுபட போவது பணக்காரர்களின் வளர்ச்சிக்கு தான். இப்படி நிலமை இருந்தால் இங்கு ஜனநாயகமும் சர்வாதிகாரமும் ஒன்றே.இந்த நிலை ஓட்டு பெட்டியாலும் மாறபோவது இல்லை. நக்சல்பாரி போன்ற இயக்கங்களும் தனி மனித சர்வாதிகாரத்திற்கு வழி வகுத்து கடைசியில் பொலிட்பீரோ அல்லது வேறு பெயரில் ஒரு அதிகார வர்க்கத்தை உருவாக்கி அவர்களின் நன்மைக்கும் அவர்களின் செல்வ செழிப்புக்குமே கொண்டு செல்கிறது.
இந்த நல்ல மாற்றத்தை கொண்டு வர வேறு என்னதான் வழி?

12 comments:

சாலிசம்பர் said...

நல்ல கேள்வி.

இரண்டாம் உலகப்போர் நடந்த போது உலகின் மிகவும் மலிவான பொருளாக மனித உயிர் இருந்ததாம்.அந்த நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இன்று நாம் நல்லதொரு நிலைமையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அணு ஆயுதங்களின் உற்பத்தி ஓரளவு சமாதானத்தை கொண்டு வந்துள்ளது.இருந்தாலும் ஆதிக்க,அதிகார வெறியர்கள் உலகெங்கும் நிறைந்து இருக்கிறார்கள்.

இன்னும் 50 ஆண்டுகளில் இப்போது உள்ளதை விட நல்ல மாற்றம் உருவாகலாம்.காலம் தான் மனிதனுக்கு உள்ளிருக்கும் மிருகத்தை அழிக்கமுடியும்.

சதுக்க பூதம் said...

நீங்கள் நினைப்பது போல் நல்லதாகவே நடந்தால் நன்றாக இருக்கும் ஜாலிஜம்பர்

ராஜ நடராஜன் said...

"போரில்லா உலகம் காண்போம்" கேட்க நன்றாக இருக்கிறது.ஆனால் நடைமுறை வாழ்க்கை அதனை பிரதிபலிப்பதில்லை.காரணம் உலகெங்கும் தொடரும் போர்கள்.இரண்டு யுத்தங்களை வெறும் பார்வையாளனாக மட்டும் நோக்கியதும் காரண காரியங்கள் ஆய்ந்து ஓய்ந்து போனதும் மனதில் வரட்சியை ஏற்படுத்துகிறது.இருந்தும் சுதந்திரம் என்ற வார்த்தையின் இனிமைக்கும் புதிய உலகம் கனவுக்கும் எனது வணக்கங்கள்.

சதுக்க பூதம் said...

நம்மால் செய்ய முடிவது நம்பிக்கை வைப்பது தானே நட்டு அவர்களே. அதையே நாம் செய்வோம்

K.R.அதியமான் said...

////எந்த் கட்சியினர் வந்தாலும் விளைவு ஒன்றே. அவர்கள் பாடுபட போவது பணக்காரர்களின் வளர்ச்சிக்கு தான்.///

இல்லை. இது பழைய சோசஇயலிச வெற்று கோசம். (gross generalisation). புது தொழில் அதிபர்கள் நேர்மையான முறையில் உருவாகுவது நாட்டின் பொருளாதார வளர்சிக்கு மிகவும் தேவை. ஏர்டெல் மிட்டாலின் வளர்ச்சியால் டெலிகாம் சேவை மிக மிக மலிவானது ஒரு உதாரணாம். 1990க்கு முன் பி.ஸ்.என்.எல் சேவை எப்படி இருந்தது என்ற ஞாபகம் இருக்கிறதா ? பணக்காரர்களுக்கு மட்டும் சலுகை, வரி சலுகை என்பது வெறும் மாயயை. அதிக வரி விதிப்பை, வாங்குபவர்கள்தான் சும்க்க வேண்டும் என்பதே அடிப்ப்டை பொருளாதார விதி. (டீசல் மிது 100 % வரிகள் இப்போதும் உண்டு). 1991க்கு பின் வரி விகுதங்களும், முட்டாள்தனமான கட்டுப்படுகளும் குறைக்ப்பட்டதால் தான் இன்று இவ்வளவு வளர்ச்சி, வேலை வாய்ப்பு. முன்பு வறுமையும், வேலை இல்லா தின்டாட்டமும் மிக மிக அதிகம்..

ஜனனாயக அமைப்பு சரியாக செயல் பட்டால் சுபிட்சமும் நன்மையும் விளையும்.
ஜப்பன், நெதர்லாந்து, ஷ்விஸர்லாந்து போன்ற நாடுகளின் ஜனனாயக முறைகளை பார்க்கவும்.

சேகுவாராவின் மகள் இந்த கேள்வியை கூபா நாட்டு தலைமையிடம் கேட்க்கவேண்டும்.

Anonymous said...

பத்தி பத்தியாக(para) இடைவெளிவிட்டு எழுதினால் படிப்பதற்கு மிக இலகுவாக இருக்கும்.

சதுக்க பூதம் said...

அதியமான் அவர்களே. வருகைக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்கும் நன்றி


என்னை பொருத்த அளவில் அனைத்து மக்களுக்கும் உணவு,உடை,இருப்பிடம்,கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற்வற்றுக்கு உத்திரவாதம் அளிப்பது தான் அரசாங்கத்தின் கடமை. இந்த பணியை முதலாலித்துவ அரசு செய்தாலும் சரி. கம்யூனிச அரசு செய்தாலும் சரி.சோசியலிச அரசு செய்தாலும் சரி. உலகின் பெரும்பான்மை செல்வங்கள் அமெரிக்காவிடம் இருந்தாலும், அவர்களால் மேற்கண்டவற்றை அனைத்துவகை மக்களுக்கும் அளிக்க முடியவில்லை.ஆனால் ஏழை நாடாக கருதப்படும் கியூபாவால் கொடுக்க முடிகிறது. ( Sicko என்ற படத்தை பார்க்கவும்)


// 1991க்கு பின் வரி விகுதங்களும், முட்டாள்தனமான கட்டுப்படுகளும் குறைக்ப்பட்டதால் தான் இன்று இவ்வளவு வளர்ச்சி, வேலை வாய்ப்பு. முன்பு வறுமையும், வேலை இல்லா தின்டாட்டமும் மிக மிக அதிகம்..
//
அதியமான், நீங்கள் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் பணக்கார மக்களை மட்டும் பார்க்கிறீர்கள். எழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்களின் தற்கொலை நீங்கள் கூறும் 1991 பிறகு அதிகமாக ஆகி உள்ளது.1997-2005 ஆண்டுக்குள் 1.5 லட்சம் எழைகள் வறுமையின் காரணமாக தற்கொலை செய்துள்ளனர்.
ஆதாரம்-
http://www.zmag.org/content/showarticle.cfm?ItemID=14253

//ஏர்டெல் மிட்டாலின் வளர்ச்சியால் டெலிகாம் சேவை மிக மிக மலிவானது ஒரு உதாரணாம்.//
நடுத்தர மற்றும் பணக்கார மக்களுக்கான சேவைகள் நிச்சயம் அதிகமாக உள்ளது. நான் அதை மறுக்கவில்லை. இதன் பயன் எந்த அளவு ஏழை மக்களை சென்று அடைந்துள்ளது?இந்தியா போன்ற ஏழை நாட்டில் அரசாங்கத்தின் முக்கிய கடமை என்ன?

//ஜனனாயக அமைப்பு சரியாக செயல் பட்டால் சுபிட்சமும் நன்மையும் விளையும்.
//
இந்த விஷயத்தில் நான் உங்கள் கருத்தோடு 100% ஒத்து போகிறேன். இந்த பதிவின் கருவே, ஜனநாயக அமைப்பு சரியாக வேலை செய்யவில்லை என்ற ஆதங்கம் தானே! அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிளும் சரி, இந்தியா போன்ற வளரும் நாடுகளிளும் சரி, மக்கள் பிரதிநிதிகள் யாரும் மக்களுக்காக குரளல் கொடுப்பதில்லை. EU என்ற பெயரில் ஜனநாயகம் அழிக்க பட போகிறது.
//ஜப்பன், நெதர்லாந்து, ஷ்விஸர்லாந்து போன்ற நாடுகளின் ஜனனாயக முறைகளை பார்க்கவும்.
//
ஜப்பான் இதன் கதையே வேறு. இரண்டாம் உலக போருக்கு பின் அமெரிக்க உதவியினால், வருமையை ஒழிக்கபட்டு சமசீரான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று,அந்த நாடு அளவில் சிரியது. மக்கள் தொகையும் குறைவு. ஒரு சிறிய பகுதியை கவனித்து வளர்ப்பது எளிது.(கியுபாவில் அடிப்படை உதவிகள் கிடைப்பது கூட இது காரணமாக இருக்கலாம்)
நெதர்லாந்து, ஷ்விஸர்லாந்து -அய்ரோப்பாவில் சோசியலிசம் ஒரளவுக்கு நன்றாக உள்ளது. அதுவும் தற்போது மாறி வருவது வருத்தத்திற்குறியது.EUவின் முழுமையான வருகை அதையும் மாற்றி விடும்.

//சேகுவாராவின் மகள் இந்த கேள்வியை கூபா நாட்டு தலைமையிடம் கேட்க்கவேண்டும்//

எனக்கு தெரிந்தவரை கியூபா அரசு அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசிதிகளை சரியாகவே செய்கிறது.

சதுக்க பூதம் said...

கிராமத்து கருப்பன் - வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி. இனி அவ்வாறு type செய்கிறேன்

K.R.அதியமான் said...

Cuba is in doldrums. yes, its health care is one of the best. but millions ae ready to emigrate to US if given a chance. I have had some discussions with 'leftist' Charu Nivedita, who has many contacts there. poverty and shortages are too rampant in cuba (mainly due to fall of USSR subsidie, economic blockade of US and most serious over production of sugar everywhere.) Lots of myth about Cuba. there is widespread humanrights abuse and hence no one wants to emigrate INTO cuba from latin america where poverty is higher...

the argument of small nation size doesn't jell. Many African nations are indeed small in size and population while rich in mineral wealth and water resources. but most of them are in dire straits due to dysfunctional govt and other organisations.

Absolute povery can never be abolsihed completely. but relative poverty can b reduced and the standard of living of the poorest of poor can be raised to tolearable levels (like in Scandinavian nations).

Cellphones are most useful to landless labour and other labourers in India (incomming only, with lifetime prepaid). it is easy for them to get jobs on a daily basis as employers and foremen can reach them easily. the incomes of many tempo drivers, masons, even kuppaikaararhal has improved dramatically due to cellphones. the kuppaikaarar who drives the local vandi in our area has a cell !!. all this possible only when BSNL monopoly was broken and private players were allowed to compete since 1991.

the data about sucides is disputed. and the interpretation (by journalists like P.Sainath) is even more wrong. Suppose if LPG has not been intiated since 1991, would things have been far better ? We would have become bankrupt like Zimbawe by now if we had stuck to socialism or whatever that went by that name then. that we could generate this much employment for 1.1 billion is itself a acheivement when compared to 70s (pls see the 1979 film varumain niram sihappu)

The govt spends billions on welfare and poverty allevation schemes every year. the core issue is leakages in the delivery system where the major portion is siphoned off by corrupt officials and their cronies. and govt deficts result in inflation which makes life more miserable for the poor.

more in my blog.

சதுக்க பூதம் said...

//but millions ae ready to emigrate to US if given a chance//

Lots of people are immigrate to canada even from USA. THis will not be a criteria. USA is now run by petro dollar, not due to its inherant strength of economy.

//I have had some discussions with 'leftist' Charu Nivedita,//

Charu Nivedita-Leftist: GRAET JOKE. Lots of pseudo leftist(Hindu N.RAM etc) like him are there. Just for popularity, they pretend to be leftist.

//poverty and shortages are too rampant in cuba (mainly due to fall of USSR subsidie, economic blockade of US and most serious over production of sugar everywhere.) //

Even after that, cuba ranks high in HDI. They has world class free health care system accessible to everyone. In cuba, education is compulsary. So they have 100% literacy with respect to younger generation. Even after blockade by US and Soviet disaster, they are feeding whole population. As I told, they can able to provide FOOD,EDUCATION and HEALTHCARE facility to all population.
I feel that the above criteria is more important to judge govt rather than calculating number of people having CAR AND MOBILE PHONE.


//Cellphones are most useful to landless labour and other labourers in India (incomming only, with lifetime prepaid). it is easy for them to get jobs on a daily basis as employers and foremen can reach them easily. //

India is not well mechanised agri/indutrialised country like US/Europe where number of workers are very less.They will be distributed sparsely.Here most labours are in same /neigbour village. We have very good mechanism to mobilise labours.We may not need mobile phone for that purpose!

//the kuppaikaarar who drives the local vandi in our area has a cell !!. //

You are talking about mobile to kuppaikarar". Still human waste are removed by human beings in india.

//the argument of small nation size doesn't jell. Many African nations are indeed small in size and population while rich in mineral wealth and water resources. but most of them are in dire straits due to dysfunctional govt and other organisations.//

Even after economic blockade, cuba provides basic necessities to all people.

//the data about sucides is disputed. and the interpretation (by journalists like P.Sainath) is even more wrong. Suppose if LPG has not been intiated since 1991, would things have been far better ? We would have become bankrupt like Zimbawe by now if we had stuck to socialism or whatever that went by that name then. that we could generate this much employment for 1.1 billion is itself a acheivement when compared to 70s (pls see the 1979 film varumain niram sihappu)//


I think that you will accept present reality if some body took film like "varumaiyin niram sikappu". Current situation is more worse than 1979. You are noticing developed middle class in country side. Nobody(like you) cares about vast unemployed educated rural mass. It is slowly coming out as naxalite movement


//the data about sucides is disputed. and the interpretation (by journalists like P.Sainath) is even more wrong. //

That is not data from sainath. IT IS OFFICIAL STATISICS.

//Suppose if LPG has not been intiated since 1991, would things have been far better ? We would have become bankrupt like Zimbawe by now if we had stuck to socialism or whatever that went by that name then. that we could generate this much employment for 1.1 billion is itself a acheivement when compared to 70s (pls see the 1979 film varumain niram sihappu)
//

1991 failure mainly because of, soviet disaster and our links with russia, failure of autocratic style indra govt and oil crisis.

//The govt spends billions on welfare and poverty allevation schemes every year. the core issue is leakages in the delivery system where the major portion is siphoned off by corrupt officials and their cronies. and govt deficts result in inflation which makes life more miserable for the poor.
//

That is the core theme of this article. DEmocracy is failing.

PLEASE read the article. I clearly said how democracy and communism fails.I am not the full supporter of communism. But cuba achieved in health, education and basic necessity front.It is a truth.

K.R.அதியமான் said...

You have misunderstood me. i quoted about cellphone useage by poor workers simply to underline the point that without the rise of Mittals or Ambanis, (that they are dishonest in some matters is a different issue), breaking the govt monopoly after 1991, such cheap services would have become inimgainable.

after liberalisation, gross govt revenues have jumped by more than FIVE times and we have more than 200 billions in foreign exchange reserves. no need to beg from IMF anymore (like until the 90s). suppose if the socialistic polices were still followed, then there is no way that we could have solved and overcome the 1991 CRISIS that engulfed us. there was a strong possiblity of India going bankrupt resulting in stagflation or even hyperinflation like present day Zimbawe..

I agree that there is still too much poverty and farm crisis. the point is what should and could we and govt do about it ? to start with we can drastically reduce our defence budget. People can/should decide whether they want nuclear weapons, missiles or basic needs. there is price for everything and all govt programs cost the people.
we are pouring about 1,00,000 crores per annuam on defence. (For what and whom is a moot question).

Decentralisation of govt is a must.
the rural schools and hospitals can be controlled by village panchayaths and absentee staff should have 'loss of pay' for absentee days (instead of the present no work but full pay system)..

there is too much repression and tough times in present Cuba. even in the 80s when USSR aide and sugar boom was helping Cuba, thousands of boat people tried to escape from Cuban paradise.

சதுக்க பூதம் said...

Athiyaman, Thanks for the constructive argument

//You have misunderstood me. i quoted about cellphone useage by poor workers simply to underline the point that without the rise of Mittals or Ambanis, (that they are dishonest in some matters is a different issue), breaking the govt monopoly after 1991, such cheap services would have become inimgainable.//
I accept it. Accessibility to cheap service from rich people to middle class achieved through liberalisation. It is a good sign. But govt propagates it as a "It is the ONLY job for govt ". They do not care about agriculture,people living in poverty line. But showing growth in share market and suicide of lakhs of farmers is not real growth.

//after liberalisation, gross govt revenues have jumped by more than FIVE times and we have more than 200 billions in foreign exchange reserves. no need to beg from IMF anymore (like until the 90s). suppose if the socialistic polices were still followed, then there is no way that we could have solved and overcome the 1991 CRISIS that engulfed us. there was a strong possiblity of India going bankrupt resulting in stagflation or even hyperinflation like present day Zimbawe..//
Above achieved because of the following reason also
1. INDIAN MONVEY VALUE DEVALUED.OUR EFFORTS BECAME CHEAPER TO WORLD. OUR ECONOMY WAS MADE IT AS A SERVICING ECONOMY FOR USA/EUROPE. WHO EVER WORKS FOR PRODUCT/SERVICE USED FOR INDIAN MARKET BECOME CHEAPER (LOST THEIR VALUE) .WHOEVER WORKS FOR WESTERN COUNTRIES BECAME RICHER.

2.GOVT SOLD THIR ASSETS THAT THEY ACCUMILATED OVER PAST 50 YEARS.

3.AMERICA'S STRATEGY CHANGED. IT STARTED RELYING ON POWER OF PETRO DOLLAR INSTEAD OF INHERANT STRENGTH OF ECONOMY

4.FAILURE OF SOVIET UNION.

5,.THIS IS NOT A REAL GROWTH. IT IS A SWELLING.IT CAN BURST ANYTIME AS HAPPENED IN SOUTH AMERICA

//I agree that there is still too much poverty and farm crisis. the point is what should and could we and govt do about it ?///
What should govt do about it?
Thats what i told. In my perspective, job of govt is to provide basic needs like food, education and health. I will not agree in your view in this regard (helping the rich people to get luxary services like car , mobile etc to upper middle class and rich people).
Govt can provide food processing units/post harvest techniques/direct market accessibility to farmers/technology etc.

//we can drastically reduce our defence budget. People can/should decide whether they want nuclear weapons, missiles or basic needs. there is price for everything and all govt programs cost the people.
we are pouring about 1,00,000 crores per annuam on defence. (For what and whom is a moot question).
//
Nuclear weapon/missle doesn't play constitute chunk. Govt purchase of warheads from western govt makes a major chunk. 1000's of crore money is going to politicians. Democracy fails here.


//Decentralisation of govt is a must.
the rural schools and hospitals can be controlled by village panchayaths and absentee staff should have 'loss of pay' for absentee days (instead of the present no work but full pay system)..
//
I accept this.

//there is too much repression and tough times in present Cuba. even in the 80s when USSR aide and sugar boom was helping Cuba, thousands of boat people tried to escape from Cuban paradise.//

I don't know what exactly u mean by "repression". USA poured billions of $ to lots of countries(like pakistan etc) to fight against soviet block. But mone of the countries achieved the good HDI than cuba. Cuba has very good HDI. I am not a communist/socialist/right. But i admire the cuba's achievement.

Personally i liked liberal democrats of UK. They have very good blend of right and left views.