சுதந்திரம் பற்றி சே குவாராவின் மகள் அலெய்டா குவராவின் கருத்தை Sicko படத்தின் special featureல் பார்த்தேன்.
அவர் கியுபாவில் மருத்துவராக பணி புரிகிறார். அவர் சுதந்திரம் பற்றி ஒரு வரியில் கூறியது உலகில் நடக்கும் பல உண்மைகளை வெளி கொணர்வதாக உள்ளது.
படத்தின் டைரக்டர் மைக்கேல் மூர் சுதந்திரம் பற்றி அவரது கருத்தை கேட்டத்ற்கு, குவாரவின் பதில்: நாம் நினைப்பவற்றை தைரியமாக வெளியில் சொல்ல முடிவதுதான் சுதந்திரம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையான சுதந்திரம் என்பது நாம் கூறும் கருத்துகள் பிறறால் கவனிக்க பட்டு மதிப்பளிக்க பட வேண்டும் அது தான் உண்மையான சுதந்திரம் என்றார்.
"But have somebody to consider your opinion".
அதாவது மக்களின் கருத்துகளை அதிகாரத்தில் இருபவர்கள் மதித்து அதன் தேவையை ஆராய்ந்து அதற்கேற்ப முடிவுகள் எடுக்க வேண்டும்.அமெரிக்கா போன்ற நாடுகளில் முழுமையாக கருத்து சுதந்திரம் இருந்தாலும் கடைசியில் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள் மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து அதன்படி செயல்படுகிறார்களா என்பது கேள்விக்குறியே. எந்த் கட்சியினர் ஆட்சிக்கு வந்தாளும் வெளியில் எப்படி பேசினாலும்,கடைசியில் அதிகார பீடத்திற்கு வரும் போது எந்த முக்கிய முடிவுகளையும் கட்டு படுத்துவது பணபலம் உள்ள அதிகார மையங்களே.அமெரிக்காவில் இந்த முடிவுகள் Lobby என்ப்படும் அதிகார குழுக்கள் மூல்ம் கட்டுபடுத்த படுகிறது.இந்தியாவில் கூட மக்களால் தேர்ந்தெடுக்கபடும் பிரதிநிதிகள் உண்மையிலேயே மக்களுக்காக தான் குரல் கொடுக்கிறார்களா என்பதும் கேள்விக்குறியே? அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் அல்லது இடைதரகர்களிடம் பணம் வாங்கி அவர்களது கருத்துகளை நடைமுறை படுத்துகிறார்கள் அல்லது ஒருசில அரசியல்வாதிகள் மக்கள் நலனுக்காக எடுக்கும் முடிவுகளை நடைமுறை படுத்த வேண்டிய அரசு அதிகார்கள் முட்டுகட்டை போட்டு அதை நடக்க விடாமல் செய்கின்றனர்.
மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அவர்களின் தேவைக்காகவும், மக்களின் அடிப்படை தேவையை நிறைவேற்றவும் உதவும் அரசை மக்களால் தேர்ந்தெடுத்தால்தான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். மக்களும் பல கட்சியினரை தேர்ந்தெடுத்து பார்த்துதான் வருகின்றனர். எந்த் கட்சியினர் வந்தாலும் விளைவு ஒன்றே. அவர்கள் பாடுபட போவது பணக்காரர்களின் வளர்ச்சிக்கு தான். இப்படி நிலமை இருந்தால் இங்கு ஜனநாயகமும் சர்வாதிகாரமும் ஒன்றே.இந்த நிலை ஓட்டு பெட்டியாலும் மாறபோவது இல்லை. நக்சல்பாரி போன்ற இயக்கங்களும் தனி மனித சர்வாதிகாரத்திற்கு வழி வகுத்து கடைசியில் பொலிட்பீரோ அல்லது வேறு பெயரில் ஒரு அதிகார வர்க்கத்தை உருவாக்கி அவர்களின் நன்மைக்கும் அவர்களின் செல்வ செழிப்புக்குமே கொண்டு செல்கிறது.
இந்த நல்ல மாற்றத்தை கொண்டு வர வேறு என்னதான் வழி?