Monday, September 07, 2020

தமிழ் மொழியும், தத்துவமும், அறிவியலும்,கணிதமும்

 உலகம் தோன்றியது எப்படி, உலகை கடவுள் படைத்தாரா? முதற்பொருள் எது என்பது குறித்த அராய்ச்சிகள்  தத்துவ ரீதியாகவும் , அறிவியற் ரீதியாகவும் தனித் தனியே பன்னெடுகாலமாக உலகெங்கிலும் நடைபெற்று வந்தன.  அறிவியற் ரீதியாக அராய்பவர்கள் முதலில் கோட்பாடுகளை முன் வைத்து , பிறகு கணித, இயற்பியல் தத்துவங்கள் மூலம் நிரூபனம் செய்து, தற்கால அறிவியற் மேற்பாட்டால் கிடைக்கப்பட்ட கருவிகள் மூலம் உறுதி படுத்தி வருகின்றனர். 


தத்துவ ரீதியாக விடை காண முயன்ற தமிழ் மரபினர், "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற அடிப்படையில்  உள் நோக்கிய சிந்தனையில் ஆழ்ந்து அது பற்றிய தனது அறிவுத்தேடல்களை தொடர்ந்தனர். அவர்களின் கருத்தும், அவர்கள் வாழ்ந்த பிறகு பல்லாண்டு காலம் பிறகு தோன்றிய அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்போடு சில இடங்களில் ஒத்து போவது ஆச்சர்யமே. அந்த சொல்லாடல்களின் வேர்ச்சொல்லும், பயன்பாடுகளும் எந்த மொழியில் அடிப்படையாக இருக்கிறது என்று பார்த்தால் அந்த தத்துவங்கள் தோன்றிய இடம் எங்கு இருக்க வாய்ப்பு உள்ளது என்று என்று கண்டுபிக்க முடியும்


உலக மதங்களெல்லாம் நன்மை - தீமை, தேவர் - அசுரர், சொர்க்கம் - நரகம் என்று கடவுளை பற்றி  சிந்தித்து கொண்டு இருந்த போது , ஒன்றுமற்ற எச்சார்பும் அற்ற வெறுமை குறித்து  சிந்தித்து வந்தது தமிழரின் சித்தர் பாரம்பர்யம். ஒன்றுமற்ற வெறுமையிலிருந்து உலகம் தோன்றியது என்று கூறிய அவர்கள்,  "வெட்ட வெளி", "பாழ்" என்ற சொல்லாடல்களில் இறைத்தன்மையை "ஒன்றுமற்ற வெறுமை " (Null in Compuer science) யாக பார்த்தனர்.


ஒன்றும் இல்லாவெளிக் குள்ளேபல் லண்டத்தை

நின்றிடச் செய்தானடி குதம்பாய்

நின்றிடச் செய்தானடி.

வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை

இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்

இட்டமாய்ப் பார்ப்பாயடி.

------ குதம்பை சித்தர்


இது போல் பல்வேறு சித்தர் இலக்கிய பாடல்களில் வெட்ட வெளி, பாழ் பற்றிய குறிப்பு உள்ளது.

இதை குவாண்டம் இயற்பியலும் கீழ் காணுமாறு குறிப்பிடுகிறது

https://www.npr.org/sections/13.7/2013/03/26/175352714/the-origin-of-the-universe-from-nothing-everything


// The best answer we have at this point is that the Universe emerged spontaneously from a random quantum fluctuation in some sort of primordial quantum vacuum, the scientific equivalent of "nothing."//


தமிழும் கணிதமும்

மனித கண்டுபிடிப்புகளில் மொழிக்கு அடுத்ததாக முக்கியமான ஒன்று பூஜ்ஜியம் கண்டுபிடிப்பு என்பார்கள் அறிஞர்கள். முன் தத்துவ ரீதியாக "ஒன்றுமில்லாத "  ஒன்றை பாழ் என்று பெயரிட்டு அழைத்ததை முன் கண்டோம். அதே கண்டுபிடிப்பை "0"(Zero)  என்ற எண்ணுக்கு  முதன் முதலில் சங்க இலக்கியத்திலேயே கணித எண் வரிசையில் பயன்பாட்டுக்கு  வந்ததை கீழ் காணும் பாடல் விளக்குகிறது.


'பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,

இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,

ஆறு என, ஏழு என, எட்டு எனத், தொண்டு என

நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை'

- பரிபாடல் 3 


இங்கு எண்களை பாழ் (0), கால், அரை, ஒன்று,இரண்டு...என்று வரிசை படுத்த படுவதை காணலாம்

முன்பு சொன்னது போல் பாழ் என்பது "ஒன்றும் இல்லாதது.". தத்துவ ரீதியாக ஒன்றும் இல்லாத நிலையில் இருக்கும் மனதினை நல்வினை , தீவினை "பற்றுவது" குறித்த தத்துவம் அனைவரும் அறிந்ததே.  பாத்திரத்தில் உணவு பற்றி இருப்பதை நீக்க "பத்து பாத்திரம்" தேய்ப்பது என்று கூறுகிறோம். அதன் அடிப்படையில்


-- ஒன்று பாழை பற்றும் போது பத்து பிறக்கிறது

- இரண்டை பாழ் பற்றும் பாது  இருபது பிறக்கிறது

- மூன்றை பாழ் பற்றும் போது முப்பது பிறக்கிறது.


தமிழ் எண்களுக்கு வேர்சொல்லுடன் விளக்கும் ஆதாரம் இருப்பதாலும், சங்கப்பாடல்களிலே சொல்லாடப்பட்டுள்ள ஆதாரம் இருப்பதாலும் , இன்றைய 0, தமிழ்நாட்டில் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது.  தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சியில் உருவான பல்லவ கிரந்த எழுத்து மூலம் தான் கம்போடிய மொழிக்கு எழுத்துரு உருவானது  . உலகின் முதல்    சுழியம் (0) எழுத்து கண்டுபிடிக்க பட்டது கம்போடிய நாட்டில் உள்ள அங்கோர்வாட்டில் உள்ள K- 127 கல்வெட்டு என்பது குறிப்பிடத்தக்கது. (AD 683)

Pallava Grantha

https://en.wikipedia.org/wiki/Pallava_script


First Zero

https://www.sciencealert.com/search-for-the-world-s-first-zero-leads-to-the-home-of-angkor-wat



1 comment:

பெஞ்சமின் said...

பயனுள்ள பதிவு. மிக்க நன்றி